Saturday, December 11, 2010

பாரதிஜெயந்தி

                                                  


கவியரசன் பாரதி இந்த பூமியில் பிறந்த நாள் இன்று.. அந்த சக்திதாசனை, ஞானத்தை , பக்தியை, விடுதலை வேட்கையை, காதலை , யாமறிந்த தமிழில் வற்றாக்கவிகளாய் கொடுத்த கவிப்பேரரசனை  மீண்டும் நினைவு பதிவாக்குவதில் மகிழ்வு...

பாரதி பிரபஞ்சத்தோடு கலந்த நாள் நினைவு போற்றி ஒரு பதிவு  ஆனந்தமாக வாசிக்கப்பட்டது...
இன்று யுக கவியின் நினைவாக எழுத்தில் சில கவிகளும்,இனிய இசை பாட்டாக மாறிய சில கவிகளும்......

மெய்ப்பொருள்:
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாதிசையிலுமோ ரெல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியம்செய்தருள் நாயகன்
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி.....
சூரியன்
கடலின் மீது கதிர்களை வீசி
கடுகி வான்மிசை எறுதி யையா
படரும் வானோளி இன்பத்தை கண்டு
பாட்டு பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொரு நுண்டுளியும் விழியாகச்
சுடரு நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே........


தான்
தேடி ச்சோறுநிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடி துண்பமிக வுழன்று – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் –பல
வேடிக்கை மனிதரைப் போலே-  நான்
வீழ் வே நென்று நினைத்தாயோ..


இனி பாரதியோடு இசைப் பயணம்...


நித்யஸ்ரீ அவர்கள் பாடிய சின்னஞ்சிறு கிளியே பாடல்..... உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரங்கொட்டுதடீ....




பதிவர் நாஞ்சிலார் அவரது சமிப பதிவில், ஜேசுதாஸ் அவர்கள் தெய்வீகக்குரலில் நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி பாடல் போட்டிருந்தார். இனிமையாக இருந்தது . அதே பாடல்  வேறோரு இசை நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டு இங்கே கிழே..... இதுவும் வித்யாசமாகவும் இனிமையாகவும் இருந்தது ...கேட்டுபாருங்க உற்சாகம் உத்திரவாதம்.. கண்பாராயோ....வந்து சேராயோ....



அடுத்து மஹாநதி ஷோபனாவின் குரலில் தீராத விளையாட்டுப்பிள்ளை..இந்த நிகழ்ச்சியில் முக்கிய எழுத்தாளர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் குறிப்பாக சுஜாதா அவர்களும் ........என்னப்பன் என்னய்யன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான்..

பாரதியும் தமிழும் யுகம் யுகமாய் இருக்கப்போகிறது..... அதில் பக்கத்து கொஞ்ச காலத்திற்கு நாமும் இருக்கிறோம் ...  இருந்திருக்கிறோம் .

173 comments:

RVS said...

வாத்தியார் தரிசனம் மகாநதி ஷோபனா பாடலில்.. மிக்க நன்றி..
பாரதிஜெயந்தி நல்ல தலைப்பு பத்துஜி. வார்த்தை விளையாட்டில் வித்தகர் நீங்கள்! ;-)

//
வேடிக்கை மனிதரைப் போலே- நான்
வீழ் வே நென்று நினைத்தாயோ..// கவிதைகளில் வாழ்கிறான் அந்த முரட்டுப் பயல் !!!

RVS said...

சின்னஞ் சிறு கிளியே - நித்யஸ்ரீ மாமி வெர்ஷன் போட்டதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். ;-)

இங்ஙனம்
அகிலஉலக நித்யஸ்ரீ ரசிகர் மன்றம்.
செயலாளர்: தக்குடுபாண்டி.
கடைநிலை ஊழியர்: ஆர்.வி.எஸ்.

Prathap Kumar S. said...

நன்றி பத்மநாபன்,
பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்ந்ததற்கு நன்றி.

Aathira mullai said...

//இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!//

அவனைக் கொண்டாடும் விழா பாரதி ஜெயந்தி..

ஆஹா.. பாரதி ஜெயந்தி அருமையான தலைப்பு... அசத்திட்டீஙக பாரதி ஜெயந்தியை நித்யஸ்ரீ பாட்டைப் போட்டு.. பாட்டிக்குப் பின் பேத்தி பாரதி புகழ் பாடுகிறார்கள்....தொடர்ந்து..

உரிய காலத்தில் நினைவு கூர்ந்து இட்ட பதிவுக்கும் தங்களின் என் பாசமிகு தமிழ் வந்தனம்..

பத்மநாபன் said...

கிருஷ்ண ஜெயந்தி , காந்தி ஜெயந்தி யெல்லாம் சொல்கிறோமே ஏன் பாரதிக்கு ஜெயந்தி சொல்லக்கூடாதுன்னு தோன்றியது ..தலைப்பிட்டுவிட்டேன்..

வாத்தியாரின் புன்னகை பார்த்தது மிக சந்தோஷமாக இருந்தது..

நாங்களும் நித்யாக்காவின் ரசிகமணிகள் தான்.

பத்மநாபன் said...

நாஞ்சிலாரின் வருகைக்கு நன்றி..உங்க பாரதி வெண்பா பதிவும் என்னை விரைவு படுத்தி பதிவு போட வைத்தது...

பத்மநாபன் said...

ஆதிரா ..நீங்கள் நித்தமும் பாரதி கவிதையை அருமையாக உங்கள் பதிவுகளில் நினைவு படுத்திவிடுகிறிர்கள்.. நான் வருடம் இரண்டு முறையாவது பாரதி பதிவு போட முயல்கிறேன்..

நித்யஸ்ரீ...பாரதிபாட்டுக்கென்றே பிரத்யேகமான குரலும் பாட்டும் வெளிப்படுத்துவார்.

சிவகுமாரன் said...

///பாரதியும் தமிழும் யுகம் யுகமாய் இருக்கப்போகிறது..... அதில் பக்கத்து கொஞ்ச காலத்திற்கு நாமும் இருக்கிறோம் ... இருந்திருக்கிறோம்//

........ஆம் என்னும் போதே கர்வம் கொள்கிறது மனது.
தொகுப்பிற்கு நன்றி

பத்மநாபன் said...

நன்றி சிவா , உங்களை போன்ற கவிஞர்களோடு சேர்ந்து நாங்களும் பாரதியின் பெருமையை போற்றுகிறோம்.

ஸ்ரீராம். said...

நல்ல பாடல்கள். நித்தியஸ்ரீ வீடியோ எதிர்பார்த்து ஏமாந்தேன்.

Unknown said...

//தேடி ச்சோறுநிதந்தின்று //
மிகவும் பிடித்த பாடல்..
வேடிக்கை மனிதரைப் போலே-
மனம் கலங்கும் போதெல்லாம் இதன் "வீழ் வே நென்று நினைத்தாயோ.." என்ற வரிகள் செறிவூட்டும்.

Unknown said...

பாரதிக்கு எம் வீர வணக்கங்கள்..

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஸ்ரீ...

வீடியோவை எதிர்பார்த்து, ஆடியோ மட்டும் இருந்த ஏமாற்றமா.. ..ஆர்.வி.ஸ் உதவியோடு நித்யஸ்ரீயின் நல்ல விடியோவை பிடித்து விடுவோம்.

பத்மநாபன் said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி பாரத்..பாரதி.

படத்திலும் பெயரிலும் பாரதியை கொண்ட உங்கள் வருகையும் பெரும் சிறப்பு...

பெருங்கூற்றுக்கிரையெனப் பின் மாயாமல் இன்றும் நம்முடன் இருக்கும் பாரதத்தின் பாரதியை போற்றி வணங்குவோம்.

மோகன்ஜி said...

பாசமிகு பத்மநாபன்! பாரதி பற்றிய நெஞ்சையள்ளும் பதிவு. இரண்டு நாட்களாய் அந்த பெருமகன் பற்றிய நினைவுகள்...அவன் வாழ்ந்த இடமெல்லாம் தேடித்திரிந்து நெஞ்சு விம்மிய காலங்களை அசைபோட்டபடி.. அந்த நினைவுப் பொக்கிஷத்தை மூடு முன்னர், தற்போதே உங்கள் பதிவை பார்த்த நிறைவோடு அமைவேன்.
நீங்கள் மாதமொருமுறையாவது பாரதியின் கவிதை ஏதோ ஒன்றைப் பற்றி பதியுங்களேன்.. கூடிக் கூடி அதைக் கொண்டாடுவோம்!
ஆர்.வீ.எஸ்,நீங்கள் மற்றும் ஆதிராவின் பாரதி பதிவுகள் மீண்டும் மீண்டும் பார்க்கவும்,கேட்கவும் குறித்தபடி..

பத்மநாபன் said...

மோகன்ஜிசாமி ,பாரதியின் பேரனை காணாமல் இப்பதிவு
துடித்தது நிஜம்...

இந்த முறை சகவாச தோஷமோ என்னவோ (நல்ல தோஷம் தான் ஆர்.வி.எஸ் ) பாரதியின் இசைப்பாடல்களில் மனம் ரொம்பவே லயித்தது. குறிப்பாக ``நின்னையே ரதியென்று`` நான் / ஆர்.வி.எஸ் போட்ட ரெண்டும் ரெண்டு வகை .. ஒன்று ஜேசுதாஸின் தெய்விகக்குரலினிமை..அடுத்ததில் பாடகரின் அற்புத இசை படைப்பு வெளிப்பாடு மற்றும் இழையோடிய பெண்ணின் குரல் ..நேரமிருந்தால் பஃபர் தொந்திரவில்லாமல் ( யூட்டி டவுன் லோடரில் இறக்கி) கேட்டு இன்புறவும்..அந்த பாட்டை நம்ம கும்மிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . உங்களிடம் நிறைய அருஞ்சொற்பொருள் கேட்க வேண்டும்.

RVS said...

பொன்னையே நிகர்த்த மேனி.. மின்னையே நிகர்த்த சாயல்...
பள பள என மினுக்கும் மேனியும்.... மின்னலை ஒத்த சாயலாம்... ரெண்டே வரியில கொண்டு போய் சாச்சிட்டான்யா...
(எவ்ளோ நாள் கேட்டு கேட்டு "பா..."ன்னு வாயை திறந்து மூடாமல் இருந்திருக்கேன்...)

எனக்கு இசை ராஜா இளையராஜா கவி ராஜா பாரதி பாடல்களுக்கு போட்ட மெட்டுக்கள் எல்லாமே ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்... ;-)

அதுவும் பாரதி படத்தில் வரும் அக்கினி குஞ்சொன்று கண்டேன்... அமர்க்களம்... தத்தரிகிட தத்திரிகிட தித்தோம்... எழுந்து ஆடலாம் போல இருக்கும்... ;-)

என்னைவிட மோகன்ஜி இன்னும் நிறைய பொழிப்புரை வழங்கக் கூடும்..

நானும் கொஞ்ச கொஞ்சமா கும்மியில் ஐக்கியமாரேன்.. ;-)

வெங்கட் நாகராஜ் said...

மீசைக்கார பாரதியின் இனிமையான பாடல், பாரதியின் ஜெயந்தி அன்று தந்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மிக்க நன்றி.

பத்மநாபன் said...

ஆர்.வி.எஸ்.. பொன்னையும் மின்னலையும் ஒப்பிட்டதை எடுத்து சொன்னது அருமை...

சாமியிடம் இப்ப இது பேசமுடியாது...யாவுமே சுகமுனிகொர் ஈசனாமெனக்குன் தோற்றத்தை விவரிக்க சொல்லலாம்...

மூலமான பாட்டு இருந்தால் சொல்லவும் , தன்னயே விற்கு அடுத்து சகியா , சசியா ?

பத்மநாபன் said...

வெங்கட்ஜிக்கு நன்றி ... பாரதியின் கவி / பாட்டு என்றால் சலிப்பதில்லை ..கேட்டுக்கொண்டும் போட்டுக்கொண்டும் இருக்கலாம்...

மாணவன் said...

நண்பரே முதலில் இந்த பதிவிற்கு தாமதமாக வந்ததற்கு என்னை மன்னிக்கவும் மகாகவி பாரதியைப் பற்றி சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பத்மநாபன் said...

மிக்க நன்றி மாணவன்... பாரதியின் தமிழ், வாசிப்பதோடு எழுதவும் வைக்கிறது ..இணைப்பில் தொடர நல்வாழ்த்துக்கள்....

அப்பாதுரை said...

இரண்டு 'ஆனந்த வாசிப்பு'களையும் இணைத்த விதத்தை ரசித்தேன். பாரதியை இப்படிக் கொண்டாடும் உங்களை எண்ணிப் பெருமை படுகிறேன். பிளாக் மேய்ந்ததும் தான் எனக்கு இந்த விவரமே புரிந்தது - அத்தனை பாரதி படித்திருந்தும் இதெல்லாம் நினைவுக்கு வருவதில்லை.. :(.

பாரதியின் பாடல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? சரி, நீங்கள் பதில் கேள்வி கேட்பீர்கள் என்று தெரியும் - பிடித்த முதல் மூன்றைப் பற்றி ஒரு பதிவிடுங்களேன்?

பத்மநாபன் said...

அப்பாஜி , பனியில் சுகமா ? வெள்ளி(ளை)ப்பனிமலையின் மீதுலவுவோம் என்று பாடிக்கொண்டிருப்பீர்கள்.

நன்றி..தமிழ் எனும் மொழியை அறிந்தவர் அனைவர்க்கும் பாரதியின் ஒரு பாட்டாவது பிடித்திருக்கும் ..

முதல் மூன்று..இதற்கு எதாவது சிறந்த சல்லடையை தேடிக்கொண்டிருக்கிறேன்.. பதிவுக்காக முன்றை சலித்தெடுக்க பார்க்கிறேன்...

மோகன்ஜி said...

பத்மநாபன்! சுகமுனியை பாரதி இழுத்தவிதம் பற்றி எழுதிய பின் தான் உணர்ந்தேன்... அடுத்ததாய் அவன் சொன்னதொன்றாலேயே அந்த வரிகள் கனம் பெறுகின்றன. பொறுத்ததுதான் பொறுத்தீர்கள்.. இன்னும் கொஞ்ச நாள் தானே?! வடம் பிடிக்க வந்து விட மாட்டேனா?

அப்பாஜி கேட்டபடி, உங்களிடம் பிடித்த மூன்று பாடலுக்காய் சல்லடையில் சலிப்பது இருக்கட்டும்..
பாரதியின் பாடல்களில் பிடிக்காத மூன்றை மட்டும் சொல்வீரா??

பத்மநாபன் said...

புரிந்தது மோகன்ஜி..பாரதித்தேர் எங்கே போகப்போகிறது...காத்திருக்கிறோம்..

அதனால் தான்..சுகமுனி..ஈசன் என பாடத்திட்டத்தை ஒதுக்கினோம்..

எப்படி பிடித்த முதல் மூன்றை மட்டும் தனியாக பிரித்தெடுக்க முடியாதோ..அதே போல் பிடிக்காததையும் காண்பது அரிது..தமிழில் உயிர்,மெய், உயிர்மெய் ஏன் ஆயுத எழுத்துகூட அழகு தானே...அதே போல் பாரதியிலும்...

அப்பாதுரை said...

பாரதி பாடல்களில் பிடிக்காதது 'பத்து' எடுக்கலாமே சார்?!

அப்பாதுரை said...

மோகன்ஜியின் துணிச்சலான சவால் - பதில் சொல்வாரா பத்மநாபன்? விரைவில் எதிர்பாருங்கள் (?)

பத்மநாபன் said...

அப்பாஜி , மோகன்ஜி ஏற்கனவே ஒரு கூட்டம், பாரதியை எங்கெங்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்றலைந்து கொண்டிரிருக்கிறது ... இன்றைய சித்தாந்தங்களையும் , நம் சொந்த கருத்தையும் வைத்துக்கொண்டு குறை என்றில்லாமல் மாற்றங்களை பட்டியல் படுத்தலாம் ...
எனக்கு தமிழ் கொடுத்த ஆசான்கள் பாரதி ,சுஜாதா போன்றோர்களிடம் மாற்றங்களை எடுத்து சொல்லக்கூட மனம் வருவதில்லை ..
இது வளர்ச்சிக்கு வித்தில்லை என வாதமிடலாம் ... பொழைச்சிருப்பதே அவர்கள் தமிழில் எனும்போது வளர்ச்சி இரண்டாம் பட்சம் ஆகிவிடுகிறது

எல் கே said...

பத்து அண்ணா , தாமதமாய் வந்துவிட்டேன். மன்னிக்கவும். நல்ல தேர்வுகள். பாரதி வாழ்ந்த பொழுது கொண்டாடப் படாத ஒரு கவி. இன்றும் அந்த முண்டாசுக் கவியை போற்றுபவர் குறைவு. அவரை எப்படியெல்லாம் மட்டம் தட்டலாம் என்றே அலையும் கூட்டம் ஒன்று உள்ளது

எல் கே said...

//பாரதி பாடல்களில் பிடிக்காதது 'பத்து' எடுக்கலாமே சார்?!//

வாய்ப்பே இல்லை அப்பாதுரை.

எல் கே said...

http://www.youtube.com/watch?v=rrWUkYj2JII&feature=related


ஸ்ரீராம் அண்ணாவிற்காக இந்த வீடியோ

அப்பாதுரை said...

பிடிக்காததைச் சொன்னால் மட்டம் தட்டுவதாகுமா? ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

LK: எது எழுதினாலும் பிடிக்கும் என்ற கட்சியா, பிடிக்காதது எதுவுவே பாரதி எழுதவில்லை என்ற கட்சியா? :)

ஸ்ரீராம். said...

நன்றி LK,

பத்மநாபன் said...

ரொம்ப நன்றி எல்.கே..

அப்பாஜியும் மோகன்ஜி யும் நூல் விட்டு பார்க்க மாதிரி இருக்கு ..நாமெல்லாம் பாமர ரசிகர்கள் அவ்வளவுதான்..
ஸ்ரீ இந்த பாட்டுப்படம் பார்த்து/கேட்டுவிட்டு என்ன சொல்றார்ன்னு பார்க்கணும்.

ஆர்.வி.எஸ் க்கும் , தக்குடுதம்பிக்கும் இந்த பாட்டு என்னோட சேர்ந்து நிச்சயம் ரொம்ப பிடிக்கும்...
மீண்டும் நன்றி...

ப்ளாக் டிப்ஸ் நிறைய கொடுக்கிறிங்க...சீக்கிரம் வர்றேன்..

ஸ்ரீராம். said...

நன்றி சொன்னேனே எல்கேக்கு...காணோம்...
வீடியோ பார்த்து மகிழ்ந்து விட்டேன். அவர் முக, கழுத்து சேஷ்டைகளை ரசித்துக் கொண்டே பாட்டையும் ரசிப்பது ஒரு ரசனை!

பத்மநாபன் said...

அப்படித்தான் ஆரம்பிப்பிங்க அப்பாஜி..அப்புறம் அப்படியே கரைய ஆரம்பிக்கும்...

சில விஷயங்களை நீர்க்க வைக்கவே கூடாது .அதுவும் ஒரு மொழி தன் அழகுருவத்தை இழந்து வரும் இந்த காலத்தில் .விட்டா எங்கெங்கியோ போகும் ..

அதனால எல்லாம் பிடிக்கும்ங்கற எங்க கட்சிக்கு வந்துருங்க மேலிடத்தில சொல்லி உங்களுக்கு பிடிவாத செயலாளர் பதவி வாங்கி கொடுத்துவிடுகிறோம்..

அப்பாதுரை said...

சாமர்த்தியமான பதில். உங்க கருத்தை மதிச்சு மௌனமாகிறேன்.

அப்பாதுரை said...

இன்னொன்று. பிடிக்காததை எழுதுவதாலோ, பிடித்ததை எழுதுவதாலோ பாரதியின் புகழுக்கு இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நம் விவாதம், நம் கருத்துப் பரிமாற்றத்துக்கு மட்டுமே, we are not judgmental என்கிற ஒரு பக்குவம் இருப்பதால் தானே எழுதுகிறோம் இல்லையா?

சலவைக் கணக்கு எழுதியது வாசகரைக் கேவலப் படுத்தியது போல் என்று குறை சொல்வதால் சுஜாதாவுக்கு ஒரு குறையும் வந்துவிடப்போவதில்லை. அவரை மட்டம் தட்ட எண்ணமுமில்லை. சலவைக் கணக்கில் கூட ரத்தக்கறை - கில்லாடியா வாத்தியார் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுவதால் சுஜாதாவின் புகழ் கூடப்போவதுமில்லை.

குறையும் நிறையும் அவரவர் மனதில் ஏற்பட்டு விட்டது - மாற்ற முடியாது. ஏற்பட்ட குறையோ நிறையோ - எண்ணத்தை எடுத்துச் சொல்கிறோம் அவ்வளவு தான். கருத்துப் பரிமாற்றத்தின் பலனை விரும்பி அனுபவிக்கும் அதே நேரத்தில் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதால் பயனில்லாத காலவிரயம் என்பது என் கருத்து. மட்டும் தட்டாமல் உரையாட முடியும் என்று நம்புகிறேன். (பிடிவாதம் எல்லாம் இல்லை சார். judge பண்ணுகிறீர்களே? நியாயமா judge?)

பத்மநாபன் said...

சாமர்த்தியம்னு நறுக்குனு கிள்ளிட்டிங்களே..வலிக்குது...மெளனத்தை மதித்து நானும் மெளனமாகிறேன் ( தலை தப்பிச்சுது )..
இதுக்கு பதிலா,

நிஜாம் விரதம் முடிஞ்சு வரட்டும் ...கண்ணன் , கண்ணம்மா பாட்டுக்களை பரவசமா எடுத்து கும்மியடிக்கலாம்.

RVS said...

கும்மிக்கு ஆஜர்.
மொதல்ல "சின்னஞ்சிறு கிளியே" நித்யஸ்ரீ மாமி வீடியோ URL பார்த்து பரவசம் ஆனேன். தக்குடுவும் நிச்சயம் அதே பரவச நிலை கொள்ளக் கூடும். நன்றி ;-)

அப்பாஜி என்ன சொல்ல வரார். We are not judges for Bharati's Tamil. கரெக்ட்டுதான். எதுவுமே நம்மளோடதுன்னு சொல்லும் போதுதான் துக்கம், சந்தோஷம் எல்லாம். பத்துஜி சொல்றாமாதிரி எங்களைப் போன்ற பாமர ரசிகர்களை தமிழை ரசித்து படிக்க வைத்த பெருமை இவர்களை சாரும். எங்களுக்கு பிள்ளைத் தமிழ் சொல்லிக்கொடுத்தது இவ்விருவரும். விவாதிப்பதில் தவறில்லை தான், ஆனால் நெட்டில் ஒரு கும்பல் உலவுகிறது. பாரதியை எப்போதும் தவறாகவே சித்தரிப்பவர்கள் அவர்கள். அப்பாஜி மோகன்ஜி போன்ற ஆழ்ந்த தமிழ் அறிவு உள்ளவர்கள் ஒரு விவாதத்திற்காக கொடுக்கும் கருத்துக்கள் அவர்களுக்கு வெறும் வாயில் இட்ட அவல் போல் ஆகிவிடும். Highly Dangerous!!

பத்மநாபன் said...

பாமரசங்கத்தின் கருத்தை எடுத்துவைத்ததற்கு நன்றி ஆர்.வி.எஸ்

//We are not judges for Bharati's Tamil.// இன்னமும் நம்புகிறேன் அப்பாஜி தமிழை வைத்து பிடிக்காதவைகளை பற்றிச் சொல்லவில்லை என்று..ஆழ்ந்த கருத்துகளில் எதாவது உள் விவகாரங்கள் இருக்கலாம் ..

நாம ``பின்னலை பின்னின்றிழுப்பான், தலைபின்னே திரும்புமுன்னே சென்று மறைவான் `` கண்ணன் பாட்டிலேயே சொக்கி நிற்கிறோம் ..

அப்பாஜியும் மோகன்ஜியும் நம்மைப்பற்றி `` என்னப்பா ஆட்டத்துல ஒப்புக்கு சப்பானதாவே மாட்டுது ``` நினைப்பாங்க..

ஜீக்களே, நாங்களும் தேறிவருகிறோம் கொஞ்சம் பொறுமையா இருங்க....

அப்பாதுரை said...

இணையத்தில் ஒரு கும்பல் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள், LK சொல்கிறார், இப்போ RVS... என்ன கும்பல் விவரம் தெரிஞ்சா சொல்லுங்களேன்.. அப்படி என்ன தான் மட்டம் தட்ட நினைக்கிறாங்க பார்ப்போமே? மட்டம் தட்டுறது பாரதியாரின் பாட்டையா, பாரதியார் என்கிற மனிதரையா? ஆர்வத்தைக் கிளப்பி விட்டுட்டீங்களே?

எனக்கு பாரதி பாட்டு பிடிக்குமே தவிர மத்தபடி எதுவும் தெரியாதுங்க.. எங்கள் பிளாகுல பாரதி நினைவு நாள்ல வித்தியாசமா எழுதினதா ரசிச்சு கமென்ட் போட்டேன் - 'இது பாரதி பிறந்த தினம்'னு பதில் சொன்னாங்க பொட்ல அறஞ்ச மாதிரி.

ஒரு உள்குத்தும் இல்லை பத்மநாபன். (உள்குத்து சொல் கற்றது எங்கள் பிளாக் ஸ்ரீராமிடம்). ஆழ்ந்த விவகாரம் எதுவுமே தோண்டத் தோண்டத் தானே வரும்? முதலிலேயே ஆழமாக இருக்கும் என்று தோண்டாமலே இருப்பதா?

ஒரு பேச்சுக்கு நானே ஆரம்பிச்சு வக்கட்டுமானு தோணுது. பாரதி பாட்டுல பிடிக்காதுனு எனக்கு சட்டுனு தோண மாட்டேங்குது - ஆனா அவர் கவிதை புத்தகத்தைப் படிக்குறப்ப நிறைய கவிதைகள் டப்பாக் கவிதைகள் போல எனக்குத் தோன்றியதுண்டு. பிடிச்சவை தான் நினைவில நிக்குது. அதான் எல்லோருக்குமே காரணம்னும் எனக்கு தோணுது.

அப்பாதுரை said...

உங்க மதிப்புக்கு மிகவும் நன்றி பத்மநாபன். என்னுடைய தமிழறிவு ரொம்ப கம்மி. ஆசையும் ஆர்வமும் இருக்குற அளவுக்கு அறிவு கிடையாது என்பது எனக்கு ஒரு நிமிசத்துல தெரியும். அடுத்தவங்களுக்கு அஞ்சு நிமிசத்துல தெரிஞ்சு போயிறும். அந்த நாலு நிமிச இடைவெளியில தான் சமாளிச்சிட்டு வரேன் - இதான் உண்மை. இருந்தாலும் 'ஆழ்ந்த தமிழறிவு'னு நீங்க சொல்லும்போது கிக்கா இருக்கு. நன்றி.

அறிவு இருக்கோ இல்லியோ ஆர்வம் திடீர்னு பெருகியிருக்குங்க. என்னுடைய பரம்பரையில் என் தலைமுறையில் என்னோடு தமிழ் முடியும் என்கிற ஒரு சின்ன வலி பெரிசாகிட்டும் வருது. அதுவே காரணமாகவும் இருக்கலாம்.

பத்மநாபன் said...

//நீங்கள் சொல்கிறீர்கள், LK சொல்கிறார், இப்போ RVS... என்ன கும்பல் // கும்பல் அளவுக்கு கூட்டம் இல்லை என்றாலும், ஓரிருவர் போதுமே ...மூன்று குறிப்புகள் கீழே நீங்கள் புரிந்து கொள்ள..

1. இன்னாப்பா , இன்னா நினைச்சினு கீறே.. இது அக்மார்க் தமிழ்.இவர் தமிழையும் அதன் வளத்தையும் பல தளங்களுக்கு அழைத்து செல்வார்.
2. தமிழன் காட்டுமிராண்டி, தமிழ் காட்டு மிராண்டி மொழி - இவர் தமிழ்த்தந்தை .

3. செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - இதை பாடியவன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அந்நியன் ...

இப்படி அரிப்பரசியல் நடத்தும் கூட்டம்.. வன்புணர்ச்சியிலிருந்து இந்தியாவை பாயாக சுருட்டும் ஊழல் வரை ஜாதியத்தை வெட்டியாக இழுக்கும் கூட்டம்..பாரதிக்கும் ஜாதியமுத்திரை குத்தி வன்மமாக பார்க்கும் கூட்டத்திடம் பாரதி பொக்கிஷத்தை, தமிழின் ..ழ் உச்சரிப்பு சரியாக உச்சரிக்கும் அனைவரின் கடமை.

பத்மநாபன் said...

//நிறைய கவிதைகள் டப்பாக் கவிதைகள்// அப்பாதுரை இப்படி வந்து இப்படி டப்பாக்கவிதை ன்னு சொல்வாருன்னு தெரிஞ்சிருந்தா ஒரே இடத்தில சிக்கி இப்ப காணாம போயிருப்பாரு..

அவர் கண் முன் இருந்த களம் வேறு...

பாப்பாவில் ஆரம்பிக்கிறார்...பாமரனயும் விட முடியவில்லை ...சாதி ஒழிப்பு...மொழி .இலக்கணம்..இலக்கியம்.பக்தி.பெரிய கடவுள்..சின்ன கடவுள்.ஞானம் .முக்கியமாய் விடுதலை வேட்கை இப்படி பல பொருள்களை எடுத்தாளுகிறான்...இதில் இக்கால சூழலுக்கு அவரவர் பார்வையை பொறுத்து ஒன்றிரண்டு ஒவ்வாமல் போகலாம்.

பத்மநாபன் said...

//என்னோடு தமிழ் முடியும் என்கிற ஒரு சின்ன வலி பெரிசாகிட்டும் வருது.// முடிய விடக்கூடாது இதுக்கு மொதல்ல எதாவது செய்யுங்க

பத்மநாபன் said...

ஸ்ரீ யின் நன்றியோடு என்னுடைய நன்றியும் எல்.கேக்கு

ஸ்ரீ...இனி நித்யஸ்ரீ பாட்டு என்றாலே விடியோவோடு தான் ..

( உங்கள் பின்னுட்டம் ..எனோ ஜி.மெயிலில் அலர்ட் செய்யாதாதல் தாமதம்...ப்ளாக் எல் போர்ட் நான் எல்.கேயிடம் கற்றுக் கொள்ள வேண்டும்

அப்பாதுரை said...

(அரைகுறை:) விவரங்களுக்கு நன்றி பத்மநாபன். சுட்டி தெரியாம எப்படி படிச்சுப் பாக்குறது? நீங்க சொல்றத வச்சு தமிழ் ஓவியா மாதிரி பதிவுகள்னு தோணுது.

நீங்களும் RVSம் LKம் சொல்ல வருவது புரியுது. பாரதி என்ற தனிமனிதரைத் தாக்குவதற்கும் அவருடைய படைப்பை விமரிசனம் செய்வதற்கும் வித்தியாசம் கிடையாது. விமரிசனம் கூட இல்லை, வெறும் கருத்து பரிமாற்றம் - அவ்வளவு தான். ஏனென்றால் விமரிசனம் செய்ய பெரும்பாலானோர்க்குத் தகுதி இல்லை. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

போற்றுவார் இருக்கும் பொழுது தூற்றுவாருக்கு இடம் தருவது தானே முறை? தூற்றுவார் இலக்கு புரியாமல் தூற்றினால் அது அவர்கள் பாடு! பாரதியைப் பார்ப்பான் தமிழன் என்று தேவையில்லாத கண்ணோட்டத்தில் பார்த்துப் பழி சொல்கிறவர்களின் அறிவும் அவ்வளவு தான் என்று விட வேண்டியது தான்.

'செந்தமிழ் நாடெனும்' - இந்தியாவுக்கே அந்நியன் சரியாகப் புரியவில்லை. பிராமணன் ஆரிய மாயை சமாசாரமா? அப்படிப் பார்த்தால் நம் வம்சாவளியில் எத்தனை கலப்பு இருக்கிறது தெரியுமோ? பாரதியார், ராஜாஜி, பெரியார், கருணாநிதி, வைரமுத்து, அப்பாதுரை - எல்லார் பாரம்பரியத்திலும் ஆரிய திராவிட இன்னும் என்னென்னவோ விந்தெல்லாம் கலந்திருக்குதுடா சாமி! இதிலே கலவரமென்னடா சாமி!
அதற்கும் அவர் தமிழுக்கும் என்ன சம்பந்தண்டா சாமி!

காட்டுமிராண்டி மொழி - இதற்குக் கலைஞர் கருணாநிதியின் விளக்கத்தைப் படிக்க வேண்டும். முத்துக்குளியல் முதல் பாகம். தமிழ் காட்டுமிராண்டி மொழியே என்று மிக அருமையாகச் சொல்கிறார் கருணாநிதி. so called 'ஒரே குட்டையில் ஊறிய மட்டை' 'பெரியார் பள்ளி' மாணவர் சொல்லியிருப்பதைப் படிக்க வேண்டும்.

போங்க பத்மநாபன்.. என்னவோ சீரியஸ் டேஞ்சர்னு நாக்கைத் தொங்கப் போட்டுகிட்டு வந்தா நான் எழுதுற கவிதையாட்டம் உப்புசப்பில்லாம ஒரு கூட்டத்தைக் காரணமா சொல்றீங்களே?! உங்க எல்லார் பேச்சும் டூ.

அப்பாதுரை said...

இனியேதும் ஆகப்போவதில்லை பத்மநாபன். என் குடும்பத்தில் இப்போது எவருக்கும் தமிழ் சு.பொ.வ. இறக்கும் பொழுது தமிழுக்கும் ஒரு நன்றி சொல்லி கண்மூட வேண்டியது தான்.

பத்மநாபன் said...

போன தடவை பின்னூட்டமிடும் போது , இப்படி அப்பாவிதுரையா இருக்கிங்களே ஆரம்பிச்சேன் அப்புறம் எதோ உள்ளுணர்விலே அதை அடிச்சிட்டேன்..அடிச்சது சரியாத்தான் போச்சு...இவ்வளவு விவரமா தெரிஞ்சு வச்சிருக்கிங்க.. இனி எதுக்கு சுட்டி...
சில சுட்டிகள் சுட்டலாம் ..ஆனால் அவர்கள் செம்மொழியை(?) தவிர வேறெதுவும் பிரயோகிப்பதில்லை என்று தம் தலைவர்களுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்கள்.

நமக்கு சாதா தமிழ் போதும் செம்மொழி அலர்ஜி...

கலப்பு பத்தி சரியா சொன்னீங்க...

பின்லேடன் அளவுக்கு எதோ எதிர் பார்க்கவைத்து விட்டோமா ...

அப்பாதுரை said...

"தனிமனிதரைத் தாக்குவதற்கும் அவருடைய படைப்பை விமரிசனம் செய்வதற்கும் வித்தியாசம் கிடையாதா"னு கேட்டு எழுத நினைச்சது, "வித்தியாசம் கிடையாது"னு எழுதி பொருளையே உல்டிட்டேன். மன்னிக்கவும்.

பத்மநாபன் said...

//என் குடும்பத்தில் இப்போது எவருக்கும் தமிழ் சு.பொ.வ.// பொடுசுக கிட்ட டீல் பேசுங்க ஒரு குறளுக்கு ஒரு சாக்லேட்டு.... அப்புறம் பாரதி கவிதைக்கு ஐஸ்கீரிம் இப்படி தமிழை வளர்த்திப் பாருங்க....

ஒரு வகையில சவுகரியம் , வரிக்கு வரி கமெண்டு வராது....அந்த சுதந்திரம் உங்களுக்கு இருக்கு...

அப்பாதுரை said...

பாடியவர் பெயர் ஷோபனாவா? இப்போது தான் கேட்கிறேன் குரலை - அற்புதம்!

அப்பாதுரை said...

ஷோபனா முழுப்பெயர் என்ன? வேறே ஏதாவது பாடியிருக்காங்களா?

பத்மநாபன் said...

மகாநதி படத்துல கமலுக்கு மகளா நடித்த பொண்ணு.அதனால மகாநதி ஷோபனா..அப்புறம் தையா தக்கா குதிக்காமா மியுசிக் பக்கமா போய் அழகா பாடீட்டு இருக்காங்க...

பத்மநாபன் said...

ஷோபனா விக்னேஷ் என்று போட்டிருக்கிறார்கள்...அவர் பக்தி சைடு தான் அதிகம் பாடி இருக்கிறார்கள்..குறிப்பாக அம்மன் பாடல்கள்...

சிவகுமாரன் said...

///என்னுடைய பரம்பரையில் என் தலைமுறையில் என்னோடு தமிழ் முடியும் என்கிற ஒரு சின்ன வலி பெரிசாகிட்டும் வருது.///
படிக்கும் போதே பகீருண்ணுது அப்பாஜி..
அடிச்சாவது படிக்க வைக்கணும் பிள்ளைகளை. என் பிள்ளைக்கு ஒன்றரை வயது இருக்கும் போதே என் அப்பா இறந்து போனார். அவரைப் பற்றிக் கூட நான் அதிகம் சொன்னதில்லை பாரதியை சொன்ன அளவுக்கு. அவன் பேசத் தொடங்கியதுமே சொல்லிக் கொடுத்து அச்சமில்லை அச்சமில்லை தான்.

பத்மநாபன் said...

ஆமாங்க சிவா...பகீர் விஷயம் தான் அது...

பாரதி அளவுக்கு பசங்கள கொண்டு போகலை ..என்ன மாதிரியே படத்தையும் பார்த்து படிக்க விகடன் அளவுக்கு தான் விட்டிருக்கிறேன்.

பின்னாடி பிடிச்சுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு ..சொன்னா இப்ப யாரும் கேட்பதில்லை..முடிஞ்ச வரைக்கும் நடந்து ( வாசித்து ) காட்டிவிடுவதுதான் வழி...புத்தககங்களையும் வாங்கி அடுக்க வேண்டியதுதான்..

எல் கே said...

@அப்பாதுரை

பதிவுலகில் எப்படி நீங்கள் இதை தவரவிட்டீர்கள் என்றுத் தெரியவில்லை. அவரை பற்றி ஒரு அறிவு ஜீவி புத்தகத்தை எழுதியது. இன்னும் அது இணையத்தில் உள்ளது. அந்த லின்கை இங்கே கொடுத்து இந்தப் பதிவை கெடுக்க விரும்பவில்லை . விரும்பினால் தனி மடல் அனுப்புகிறேன். இதை பற்றி நான் ஒரு ஆறு மாதங்களுக்கு முன் பதிவு எழுதினேன். அப்பொழுது எத்தனை பேர் வந்து சண்டை போட்டனர் . அந்த சமயத்தில் என் வலைப்பூவில் பரபரப்பான பதிவு அது . அதிகம் பின்னூட்டம் வந்தது அதற்க்குத்தான். தமிழ் விரும்பிகள் என்றும் தமிழை தவிர வேறு மொழியை படிக்க மாட்டேன் (???) என்று சொல்பவர்கள் கூட பாரதியை தாக்கினர். இன்னும் சொல்லப் போனால் தமிழ் தாத்தா என்று அழைக்கப் படும் உ வே சா அவர்களையும் சாடினர்

எல் கே said...

@அப்பாதுரை
தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் .

அப்பாதுரை said...

நன்றி LK.. உங்க வலைப்பூவில தேடிப்பார்க்கிறேன். முடிஞ்சா msuzhi@ymail.com சுட்டி அனுப்புங்க.

தமிழ் ஓவியா எனக்குப் பிடிச்ச ஒரு தளம். அவருடைய position பற்றிக் கருத்து வேற்றுமை இருந்தாலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் பதிவுகளைத் தொடர்ந்து செய்வதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கடவுள் மத சடங்கு பற்றிய கருத்தைச் சொல்லாமல் அதைக் கடைபிடிக்கும் மனிதரைச் சாடுவது pure sensationalism. சில சமயம் அது இயற்கையாக வருகிறது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒபாமாவின் கொள்கைகளும் செயல்களும் செயலற்ற மெதுக்குத்தனமும் நாட்டைக் கெடுக்கின்றன என்று சொல்ல நினைத்து - ஒபாமா ஒரு லூசு என்று அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கித் தொலைக்கிறேன். சொல்ல வந்த செய்தியே மாறிவிடுகிறது. ஒபாமா ஒரு லூசோ அரை லூசோ அல்லது ஞானியோ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் - அவர் பொறுப்பாக நடந்து கொள்கிறாரா என்பதைத் தான் சொல்ல வேண்டும். வீட்டிலும் அப்படித்தான். பிள்ளை கணக்கைப் பிழையாகப் போட்டால் - கணக்கைப் புரிந்து கொள், முறை புரியவில்லையா என்று கேட்கவோ கண்டிக்கவோ தெரியாமல், முதல் வேலையாக "முட்டாள், லூசு, இது கூடவா தெரியவில்லை?" என்று தனிப்பட்டத் தாக்குதலைத் தொடங்கி விடுவேன். இது இயல்பு - வெட்கப் பட வேண்டிய இயல்பு. பிள்ளை, மனைவி, நண்பன், அலுவல், வாடிக்கையாளர் - எல்லாரிடமும் இப்படித் தான். தனிநபர் - அவர் செயல்/சொல் இவற்றிற்கான வரம்புகளை நம்மை அறியாமலே மீறுகிறோம்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் - இந்த இயல்பைப் புரிந்து கொண்டு நபரையோ நபரின் செய்கைகளையோ பார்க்க முடிந்தால் தெரியும் பார்வை இருக்கிறதே - அபாரம். என் வாழ்நாளில் நான் கற்றுக் கொண்ட சில பாடங்களில் இது முதல் தட்டு ஐட்டம். 'சொர்க்கவாசல் திறப்பு' பற்றி த.ஓ பதிவில் எழுதியிருப்பதை ரசிக்க முடிகிறது. உண்மையாக இருக்குமோ என்று பதைக்க முடிகிறது. நாமக்காரன் அவன் இவன் என்ற தனிப்பட்டத் தாக்கலுக்கு அப்பால் போக முடிகிறது.

தாக்குதலுக்கு பயந்து ஒதுங்குவதால் யாருக்கு இழப்பு? தாக்குங் கூட்டத்துக்கு அல்ல. ஒதுங்கும் கூட்டத்துக்குத் தான் என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

சிவகுமாரன், பத்மநாபன்.. உங்கள் கரிசனத்துக்கு மிகவும் நன்றி. சில பயணங்களில் வெகு தூரம் வந்தபின் திரும்பச் செல்வது கடினம் மட்டுமல்ல, விரயமும் கூட.

உங்கள் சிந்தனைக்குச் சில கருத்துக்கள்:

மொழியின் சிறப்பைப் புரிந்து கொண்டவர்ள் இரண்டு வகை என்பேன். மொழி என்பது பேச்சு வார்த்தைக்கு என்றே முதல் தரப்பினர் நம்புகிறார்கள். முதல் வகையினரே பெரும்பாலானோர் (90%?) என்றும் நம்புகிறேன். அதில் தவறில்லை. இரண்டாவது வகையினரோ மொழியின் இன்னொரு பரிமாணத்தை - உயிரைத் தொட்டு விளையாடும் பரிமாணத்தைப் புரிந்து கொள்கிறார்கள். அந்த இரண்டாம் தரப்புச் சிலருள் நான் ஒருவன் என்பது எனக்கு என்றைக்கோ தெரிந்திருந்தது - எனக்குப் பெருமை தான்.

ஆயிரம் செல்வம் இருந்தாலும் தனிப்பட்ட ஒரு கணத்தில் மிகச் சாதாரண ஒலியிலிருந்து நயத்தைப் பிரித்து ரசிக்க மொழி தேவைப்படுகிறது. "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு அதில் உலகம் சுழலுதடி பல ரவுண்டு" - தேர்ந்த கல்வி பெறாத பாமரனும் (மொழியின் பரிமாணம் புரிந்த பாமரர்கள் பலருண்டு) இந்த வரிகளின் ஓசையை ஒதுக்கி உள்ளிருக்கும் கருத்தை எண்ணி எண்ணி மகிழக்கூடும். இத்தகைய உணர்வைத் தொடும் இயல்பினது மொழி. சாதாரணத் தெருப்பாட்டுக்கே இப்படி என்றால், சற்று ஆய்ந்து ரசிக்கக்கூடிய திறமையும் பொறுமையும் இருந்தால் இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கலாம். திருவாசகம் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டால் கீழே வைக்க முடிவதில்ல பல நேரம்! அந்த வகையில் எனக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி நான் கண்கலங்காத நாளே இல்லையெனலாம்.

ஆனால் இத்தோடு நிறகவில்லையே?

மொழியின் மேன்மையறிந்த 'பத்து' சதவிகிதச் சிலரையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பாதிபேர் மொழியின் அந்தப் பரிமாணத்தைத் தொடர்ந்து வளர்க்கிறார்கள்; தான் பெற்ற இன்பம் தன் சந்ததியும் சுற்றமும் பெறட்டும் என்று உண்மையிலேயே பதைத்து ஏதாவது செய்கிறார்கள். மற்ற பாதியோ தான் அனுபவித்துவிட்டு தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் புரிந்து கொள்ளாமலே சாகிறார்கள். நான் இரண்டாம் வகை என்பதில் எனக்குப் பெருமை இல்லை. மிகுந்த வருத்தம். காலங்கடந்து புரிந்த வருத்தம். வேகும் போது வேகும்.

சிவகுமாரன் said...

ரசிகமணி-2 சார்
நம்ம வலைப்பக்கம் கொஞ்சம்
வாங்களேன் . உங்க பின்னூட்டம் இல்லாம அடுத்த பதிவுக்கு போக மறுக்குது மனசு.

பத்மநாபன் said...

நன்றி சிவா... இவ்வருமையான கவிதை தாமதமாக படித்ததனால் , காத்திருந்து மூக்கின் மேல் ஒரு குட்டி உதையை கேட்டு வாங்கி வந்துவிட்டேன்..

பத்மநாபன் said...

அப்பாஜி இன்றைய தமிழ்நாட்டில் பகுத்தறிவு என்றழைக்கப்படும் பகுத்தறிவில் பேசி எழுதும் அளவிற்கான வக்கனை நடைமுறையில் இல்லை ..கூடிய வன்மத்தோடு , கொள்ளைக்கு தயாரான கொள்கைக்கு தடையான கோட்பாடுகளை உடைத்தெறிவதிலே தான் இருக்கிறார்கள்...பொடியர்களை மட்டும் சொல்லவில்லை ...மாப்பெரியவர்களே அப்படித்தான் இருக்கிறார்கள்...

ஆன்மிகம் போலித்தனம் இல்லாத பகுத்தறிவு.. ..விதிவிலக்காக நடைபெறும் தவறுகளை பிடித்து தொங்கிக்கொண்டிராமல் பார்த்தோமேயானால் , வழி வழியான மரபணு சுத்திகரிப்புக்கு ஆன்மீகத்தில் உள்ள பாடத்திட்ட அளவிற்கு பகுத்தறிவில் (என்றழைக்கப்படும் ) சுத்தமாக இல்லை..நட்டாத்தில் விடும் வெறுமை தான் மிஞ்சுகிறது.

எனவே சரியான ஆன்மீகத்தை தேடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை ...நீங்கள் எழுத்தில் தேடுகிறீர்கள்..நான் வாசிப்பில் தேடுகிறேன்...

நீங்கள் சொன்ன பதிவை நல்லவேளை என் வலைக்கோளாறில் நெருங்க முடியவில்லை.. வன்மத்திற்கு எதிர்வினை வன்மத்தில் தான் முடியும் ...

பத்மநாபன் said...

மொழியை பற்றிய உங்கள் ஆய்வை உங்கள் கருத்தை படித்தவுடன்..தாழ்வு மனப்பான்மை கலந்து வெட்கி எங்கு என்னை பொருத்திக்கொள்வது என யோசித்து வருகிறேன் ..

திருவாசகம் கொஞ்சம் படித்ததிலேயே பிரமிப்பு கூடி நிற்கிறேன்...இப்ப ஆண்டாளின் திருப்பாவை மொழி சுகம் தந்து கொண்டிருக்கிறது...

`திரு` என்று நம் பெரியவர்கள் காரணத்தோடு தான் சொல்லியிருக்கிறார்கள்...

எல் கே said...

@அப்பாஜி
இது தமிழ் ஓவியா சொன்னது அல்ல. அவராவது முரண்படாமல் கருத்துக்களை தெரிவிப்பவர். நான் சொன்ன புத்தகத்தின் சுட்டியை உங்களுக்கு மடலில் அனுப்புகிறேன்

அப்பாதுரை said...

"போலித்தனம் இல்லாத ஆன்மீகம்", "மரபணு சுத்திகரிப்பு"... இதெல்லாம் பயமூட்டுது பத்மநாபன்.

அப்பாதுரை said...

நன்றி LK. புத்தகத்தைப் படித்தேன். என் கருத்தைப் பொதுவில் வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பத்மநாபன் said...

போலித்தனம் இல்லாத பகுத்தறிவு தான் ஆன்மீகம் . ஆன்மிகத்தை , திருநீறு, காவி , சாமியார் இதுக்குள்ள மட்டும் தேடுபவர்களுக்கு பகுத்தறிவும் பிடிபடாது ஆன்மீகமும் பிடிபடாது அதையும் தாண்டி..... அதுதான் நசிகேதனால் புட்டு புட்டு வைக்கப்பட்டு வருகிறதே...

மரபணு சுத்திகரிப்பு .... ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கோட்பாடு ஒட்டிக்குது . எனக்கு ஒட்டிய கோட்பாடு, இந்த ஒட்டுமொத்த பரிணாமவளர்ச்சியே சுத்தத்தில் ஆரம்பித்து சுத்தத்தில் முடியும் நீண்டநெடும் பிரமாண்ட வட்டம் ..அந்த வகையில் இன்னமும் ஐந்தை கடக்காத ஜந்துவாகவே இருக்கிறோம் ..சுத்திகரிப்பு ஆக ஆக ஆறை நெருங்குவோம் ...

இதை நீங்க எளிதா சொல்றிங்க ...நான் பயப்படுத்துறேன்.

இப்ப பயம் தெளிஞ்சுதா , கூடிவிட்டதா....

அப்பாதுரை said...

ஆன்மீகம்னு கண்ணால படிச்சும் சட்டுனு ஆஸ்திகம்னு மனசுல பதிஞ்சிடுச்சு - 'போலித்தனம் இல்லாத ஆஸ்திகம்'னு படிச்சுட்டேன், அதான் பயம். ஆன்மீகத்தில் குழப்பம் உண்டே தவிர, எனக்குப் பயம் இல்லை. தவறுக்கு வருந்துகிறேன், மன்னிச்சுருங்க.

எல் கே said...

@அப்பாஜி

ஒரு முறைக்கு பலமுறை யோசித்து உங்கள் கருத்தை எழுதுங்கள் பொதுவில். இங்கு எழுத்துத் தீவிரவாதிகள் அதிகம்

பத்மநாபன் said...

கடைக்கண் பார்வையோடு கள்ளத்தனம் பயில்வது பாகுபாடு இல்லாமல் எல்லா ஈகத்திலும் இருக்கிறது... கள்ளத்தனம் எங்கிருந்தாலும் தவிர்க்கவேண்டியது தான் . பயம் தேவை இல்லை

ஆஸ்தீகம் , நாஸ்தீகம் சொல்லாட்சியிலேயே பயப்படக்கூடிய வார்த்தை எது என்று எல்லோர்க்கும் தெரியும்...

விநாயகர் சிலைக்கு அருகில் இரண்டு அருகம்புல் வைத்து , அல்லல் போம் வல்வினை போம் எனச்சொல்லி ஆஸ்திகம் பயில்வது என் மனதிற்கு இதமாக இருக்கிறது...

வலிய ச்சென்று சிலைக்கு செருப்பு மாலையிட்டு நாயே ,பேயே என்று திட்டி நாஸ்திகம் பயில்வது பயம் தாண்டிய பரிதாபம் மிஞ்சுகிறது...

அப்பாதுரை said...

வசதிக்கேற்ற ஒப்பிடுகையோ?

ஆஸ்திகத்தின் பட்டினி, பலி, புரியாத மந்திரம், சடங்கு, இன்னும் பல கண்மூடித்தன வெளிப்பாடும், நாஸ்திகத்தின் செருப்பு மாலையும் சரி.

ஆஸ்திகத்தின் அருகம்புல் அமைதியும் நாஸ்திகத்தின் சிந்தனை அமைதியும் சரி.

ஆஸ்திகம் என்ற சொல்லில் எத்தனை பயம் உண்டோ அத்தனை பயம் நாஸ்திகத்திலும் உண்டே? சொல்லுக்குப் பயப்படுவதென்றால் இரண்டும் ஒன்று தான்.

RVS said...

பெரியவர்கள் பேசிக்கொள்வதை தினமும் வந்து பார்க்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ;-)

பத்மநாபன் said...

இதெல்லென்னங்க வசதி இருக்கு...பட்டினி , பலி இத்யாதிகளின் சாரத்தை எடுத்து சொல்லி சடங்கிலிருந்து வெளிக் கொணர முயற்சியாவது செய்யலாம்..செருப்பு மாலை கலவரங்களை திருத்த வாய்ப்பே இல்லை...

சரி ஒலக நாயகனின் பல்டி பார்த்திங்களா...

பத்மநாபன் said...

ஆர்.வி.எஸ்...பார்த்தால் மட்டும் போதுமா பங்கும் பெறலாம்...

அப்பாஜி கிள்ளியெல்லாம் வைக்க மாட்டார் ..( ஜி ..கூட்டுக்குழு கூடி கூப்பிடு பெயரை மாற்றும் வரை பொறுத்துக்கொள்ளுங்கள் ஜி ... சாமி வர்ற வரைக்கும் )

தக்குடு said...

முதல்ல எங்க கடையத்து மாப்பிள்ளைக்கு ஒரு வணக்கம் போட்டுக்கறேன். பாரதியோட சின்னஞ்சிறு கிளியை அதே அழகோட உச்சரிப்பு சுத்தமா பாடக்கூடிய நித்யஷ்ரீ அக்காவோட குரலுக்கு தக்குடு என்னிக்குமே பாமரரசிகன் தான்...:)

நான் இல்லாட்டியும் என்னை வாஞ்சையோட நினைவு கூர்ந்த RVS அண்ணா & பத்துஜிக்கு ரொம்ப நன்னியோ நன்னி!..:) அதுவும் இப்ப எல்லாம் RVS அண்ணா எங்க போய் ஜொள்ளினாலும் "தக்குடுவும் ரசிப்பார்!"னு ஒரு துண்டை போட்டு எனக்கும் இடம் பிடிச்சு வைக்கரார்...:)

தக்குடு said...

நின்னையே கதி!னு பாடராரே இவர் திருவனந்தபுரம் ராஜபரம்பரையை சேர்ந்த ராமவர்மா ராஜா! இந்த பரம்பரைல எல்லாருக்குமே கச்சேரி பாடர அளவுக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. இவரோட தாத்தா ஸ்வாதி திருனாள் மஹாராஜா சொந்தமா கீர்த்தனையே இயற்றி பாடி இருக்கார்.

பத்மநாபன் said...

ஆஹா தக்குடு... நித்யா அக்காவை பார்க்க வரலியேன்னு பார்த்தேன்... எங்க யுக புருஷன் உங்க ஊர் மாப்பிள்ளையா.. பெருமையான ஊர்தான்..

நம்ம ஆர்.வி.எஸ்க்கு தக்குடு பாசம் தாஸ்தி.. வழித்துணைக்கு ஆள் வேணுமில்லையா ( ஆர்.வி.எஸ்..நோட்...வழின்னு தான் எழுதியிருக்கேன் )

தக்குடு said...

//நம்ம ஆர்.வி.எஸ்க்கு தக்குடு பாசம் தாஸ்தி// பாசம் மட்டும் இல்லை, தக்குடுவை கேடயமா காட்டலைன்னா ஆத்துல அப்புறம் "தித்தரிகிட தித்தரிகிட தித்தோம்!" ஆயிடும் அதான்!...;)

பத்மநாபன் said...

அருமை தக்குடு... நீயாவது ராம வர்மா பாட்டை கேட்டது சந்தோஷம்..சங்கித பிரம்மாக்கள் பரம்பரையா... இந்த பாட்டை கூட பாடியவர்களுடன் அழகாக பகிர்ந்து நன்றாக பாடியிருந்தார்.. கண்ணம்மா, கண்ணம்மா, கண்ணம்மா என்று முறை சொல்லி நிறைவு செய்ததும் அருமையாக இருந்தது...

தக்குடு said...

முரட்டு மீசைக்காரருக்கு செல்லம்மாவுக்கு அடுத்தபடியா உயிருக்குயிரான வார்த்தை "கண்ணம்மா!" தான். அதான் ராஜாவும் நிறையா தடவை அதை சொல்லறார் போலருக்கு...:)

அப்பாதுரை said...

நான் சரியா சொல்லலை பத்மநாபன், மீ த கன்ப்யூசியஸ். (ஹிஹி, அவரு பேரைப் போட்டுக்குவோம்)

நீங்க ஆஸ்திகத்துக்கு அருகம்புல்லைச் சொல்லிட்டு அதே வரில செருப்பு மாலையை நாஸ்திகத்துக்கு உதாரணமா சொன்னதைத் தான் unrelated comparison சொல்ல வந்தேன் (தமிழ் தகராறுல விசயமே மாறிடுச்சு).

அருகம்புல்லோட compare பண்றதுக்கு நாஸ்திகத்தின் objective thinking ஏற்றது. நாஸ்திகத்தின் செருப்பு மாலை (actually,அது நாஸ்திகம் இல்லை - பொறுப்பில்லாத கூட்டத்தின் extremism, ஆத்திக மதவாதிகள் சடங்குகள் போலவே தான்) comparisonக்கு ஆஸ்திகத்தோட பலி பாவ புண்ணிய பாசாங்கு ஒத்துவரும்னு சொல்ல வந்தேன். ரெண்டுலயும் கண்மூடித்தனம் இருக்கு. அதான் சொல்ல வந்தது. மூக்கைத் தொட்டு கை ரொம்ப நீளமாயிடுச்சு.
கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு நீங்க சொல்றது - ஒரு கண்மூடித்தனத்தை வெளிக்கொண்ரலாம்னு சொல்றீங்க, இன்னொரு கண்மூடித்தனத்தைத் திருத்த வாய்ப்பே இல்லைன்றீங்களே? அறிவு வளரும் பொழுது ரெண்டுமே மாறும், திருந்தும்னு தோணுது.

அப்பாதுரை said...

நீங்க சொல்றது சரி, LK. cautionக்கு நன்றி.

point taken. நல்ல தருணம் கிடைக்குறப்ப பொதுவுல வைக்கிறேன் என் கருத்தை.

அப்பாதுரை said...

தெரியாதே? என்ன பல்டி?

>>>ஒலக நாயகனின் பல்டி பார்த்திங்களா

அப்பாதுரை said...

எங்கே போகிறார் ஆர்வீஎஸ் வழித்துணைக்கு - ஆப்பிரிக்காவா? :)

பத்மநாபன் said...

ஆன்மீகம் தேவையான விஷயம் என்று நீங்களே கூறி விட்டபடியால் .. அதிலிருந்தே செல்லலாம்.. சரி வேண்டாத செ.மாலையையும் மண்டிகிடக்கும் மூடநம்பிக்கைகளையும் விட்டு தள்ளிவிடலாம்..

ஆன்மீகம் எனும் வாழ்வின் ஒற்றைக் குறிக்கோளுக்கு எது நெருங்க பார்க்கிறது.. ஆத்தீகமா, நாத்தீகமா எது முன்னிலை ( உங்களுக்காக போடப்பட்ட வார்த்தை ) வகிக்கிறது என்று பார்த்தால் ஆத்திகம் தான்.

எதோ ``ஒன்று`` என ஆன்மீகத்தை தேடப்போனது ஆத்தீகம் தான் .... பயணத்தில் இருக்கும் ஆத்திகப்படகின் சிறு சிறு ஒட்டைகளை அடைப்பதற்கு பதிலாக அதை இடித்து முன்னேற விடாமல் தடுக்கும் வேலையே குறிக்கோளாக கொண்டது நாத்திகம் ...
( நாத்திகம் ..நேர் தமிழ்ப்பொருளை சொல்லுங்களேன் உண்மையாக தெரியாது உடனே ஆத்தீகம் ன்னா என்ன பொருள் என்று என்னை மடக்காதிர்கள்..வார்த்தைப்பொருள் விடயத்தில் முறிந்துவிடுவேன் ..உட்பொருள் இதாகத்தான் இருக்கும் என்று ஓட்டி கொண்டிருக்கிறேன் ....)

பத்மநாபன் said...

அவ்வளவு கஷ்டப்பட்டு திரிஷாவுக்கு உச்சரிப்பு சொல்லிக் கொடுத்து, தானும் மிக கஷ்டப்பட்டு அழுத்திப்பாடிய கவிதையை படத்திலிருந்து எடுத்து விட அவருடைய பகுத்தஅறிவு முடிவு செய்துவிட்டதாம் ... அது தான் பல்டி...

பத்மநாபன் said...

வழித்துணையிலேயே ஆர்.வி.எஸ் சுற்றும் ஊரை சொல்லிட்டேன்.. அப்பாதுரையாரே..

(ஒரு ஜீ க்கு இரண்டு நெடில் தேவைப்படுது ..கூட்டுகுழுக்கூடும் வரை இடைக்காலப்பெயர் )

இன்னமும் நீங்க ஆப்பிரிக்காவை மறக்கல .. இப்ப டி.ஆர் ன்னா யார்ன்னு கேட்கிறார் ஆர்.வி.எஸ்

பத்மநாபன் said...

தக்குடு ..பாரதியின் கண்ணம்மா பாடல்களை கேட்பவர்களுக்கு கல்மனதாய் இருந்தாலும் காதல் சுரக்கும்..

அது சரி, தக்குடு எப்ப காதலடி நீ யெனக்கு காந்தமடி நானுனக்கு பாட்டு பாடப்போற?

அப்பாதுரை said...

ஆன்மீகத் தேடலுக்கு ஆஸ்திகம் தேவையில்லை - நாஸ்திகமும் தேவையில்லை. ஆன்மீகத் தேடலுக்கு ஆஸ்திகம் தேவையென்பது ஆஸ்திகர்கள் கட்டி விட்டக் கதை.

ஆன்மீகம்: சுயதேடல் (ஓரளவுக்கு தமிழ்). உறையுளை, ஆன்மாவைத் தேடும் வழி, ஆன்மீகம்?

ஆஸ்திகம், நாஸ்திகம் - இரண்டும் உண்டு இல்லை என்ற கட்சிகள். (அஸ்தி, ந அஸ்தி)

இப்போது சொல்லுங்கள், ஆன்மீகத்துக்கும் இரண்டு கட்சிகளுக்கும் என்ன தொடர்பு? ஆன்மீகத்தையும் ஆஸ்திகத்தையும் கலந்து குட்டையைக் குழப்பி வைத்து இப்போது ஆன்மீகமென்றாலே ஆஸ்திகமென்றாகி விட்டது. அதனால் தான் ஆஸ்திகர்களின் பிடியில் ஆன்மீகம் சிக்கித் தவித்து உருக்குலைந்து போனது - இது நம்பள் சொல்றான்.

அப்பாதுரை said...

அப்பாதுரை போதுமே, யாரே என்று கேட்பானேன்?

அப்பாதுரை said...

வேறே பதிவு போட்டிருக்கலாம் நீங்க. அழகான பாரதி பாட்டுப் பதிவுல எங்கேயோ புகுன்து எங்கேயோ கொண்டு போய்விட்டேன். மன்னிக்கணும்.

பத்மநாபன் said...

//ஆன்மீகத் தேடலுக்கு ஆஸ்திகம் தேவையென்பது ஆஸ்திகர்கள் கட்டி விட்டக் கதை. //

இப்பொழுது ஆஸ்திகம் எளிதில் பிழைக்கும் வழியாக சிலர் மாற்றிவிட்டதால் ஆன்மிகத்திற்கு தேவையில்லை எனக் கூறிவிடலாம்..

ஆனால் உண்மையான ஆஸ்தீகத்தின் மூலப் பயணம் ஆன்மிகத்தேடல் என்று நம்பள் சொல்றான் ..

பாரதியும் இதைப் பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து பல கவிகள் பாடியதால் ..நமது எழுத்துக்களும் பொருத்தமாக த்தான் இருக்கும்...

தக்குடு said...

சுடர்மிகும் அறிவுடன் படைக்கப் பட்டவர்கள் வேண்டுமானால் நேரடியாக தேடலுக்கு போகும் அளவுக்கு ஆதம ஞானம் அடையப் பெற்று இருக்கலாம். ஆனால் சாதாரணமான ஒருவருக்கு முதலில் ஆஸ்திகம் அவசியமாகிறது.

நிலக்கடலையை நேரடியாக பச்சையாக நாம் உண்ண முடியாது, அதே சமயம் தனியாக அதை இரும்புச் சட்டியில் இட்டு பக்குவப்படுத்தினால் யாருக்கும் பயன்படா வண்ணம் கருகும் நிலையை அடையும், அதே போல் ஜீவாத்மாவானது பக்குவ நிலையை அடைய சடங்குகள்/ஸம்ப்ரதாயங்கள் எனும் மணலுடன் சேர்த்து பக்குவப் படுத்தப்படுகிறது. மணலுடன் கடலை இருந்தாலும் அது ஒட்டாமல் அதன் தனித்தன்மையுடன் தான் விளங்குகிறது. உண்பதர்க்காக பரிமாறும் பொழுதும் அது தனியாகவே பரிமாறப்படும், எல்லோரும் அறிந்த வரையில் மணலுடன் எங்கும் பரிமாறப்படுவதில்லை.

மணலுடன் சவகாசம் என்பது ஜீவனுடைய பயணத்தில் ஒரு நிலை, அதுவே நிலையல்ல!! இவ்வாறாக சேர்த்து இடப்படும் பொழுதும் அந்த மணலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்(சரியான சம்ஸ்காரமாக இருக்க வேண்டும்). மணலுடன் சேர்ந்து நான் பாத்திரத்தில் கடலையை இடாத பட்சத்தில் கடைசி வரையிலும் பக்குவம் இல்லாத கடலையுடன்(ஆத்மாவை)பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன். எனவே ஆஸ்திகம் என்பது இழி நிலையல்ல என்பது எனது தாழ்மையான எண்ணம்.

RVS said...

மன்மதன் அம்பில் பாட்டை எடுத்தது நாஸ்திக கமல் எவ்ளோ ஸ்ட்ராங் ஆன ஆள்ன்னு தெரிஞ்சிகிட்டோம்..

எதைப் பற்றியும் விஞ்ஞானப் பூர்வமாக ஆராயாமல், மிகவும் கடினப் பட்டு தர்க்க அறிவோடு வாதங்களில் ஈடுபடாமல் "பகவானே சரணம்" என்று மனதை ஒருமித்து அந்தப் பரம்பொருளை சரணாகதி அடைபவன் வாழ்வில் முன்னேறுவான் என்று சொல்கிறார்கள். பின்பற்றி நிறைய பேர் அந்தப் பேறு பெற்றிருக்கிறார்கள். நீங்க என்ன சொல்றீங்க அப்பாஜி?

ரெண்டு நாள் லேட்டா வந்தா ஆளைக் காலி பண்ணிடுவீங்க... கொஞ்சம் டயம் கொடுங்க...தக்குடுவைக் கட்டிப் போட்டு வைங்க... சில சில ஆணி புடுங்க வேண்டியிருக்கு.. வந்து கவனிச்சுக்கறேன்.. திரும்ப வரேன்...

அப்பாதுரை said...

மன்மதன் அம்பு பாட்டுக்கும் ஆஸ்திக நாஸ்திக பல்டிக்கும் தொடர்பு புரியலை - வரலக்ஷ்மி நமோஸ்துதேனாலயா?

அந்தப் பாட்டு சகிக்கலை. கமல்காசனும் சரி அந்தம்மாவும் சரி, கொடுமையோ மகா கொடுமையா தமிழ் பேசறாங்க. கமல்காசன் பத்துப் படி இறங்கி வந்து தமிழ் பேசியிருக்காரு அந்தப் பாட்டுல. அதுக்கு மேலே அந்த சீன்ல கமல்காசனோட ட்ரெஸ். அதுக்காகத் தான் எடுத்திருக்கணும். நல்லதா போச்சு.

அப்பாதுரை said...

ரொம்ப rare RVS. மனதை ஒருநிலைப்படுத்தறதுனால வெற்றியே தவிர ஆஸ்திகமோ நாஸ்திகமோ காரணமில்லைனு நினைக்கிறேன். இரண்டுமே சாதனங்கள் - அவரவர் விருப்பத்தைப் பொறுத்து. ஒரு சாதனத்துனால மேன்மை அடைஞ்சவங்க இருக்குறாப்புல அடுத்த சாதனத்துனால மேன்மை அடைஞ்சவங்களும் உண்டு.

'பகவானே சரணம்'னு மட்டுமே சொல்லி முன்னேறினவங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க ஆசை. அதுவும் சமீப நூறு ஆண்டுகள்ள யாராவது இருந்தா சொல்லுங்க RVS.

அப்பாதுரை said...

பாரதியோட உள்குத்துப் பாட்டெல்லாம் நீங்க சொல்ற 'எளிய பிழைப்பை'த் தேடிக்கொண்ட ஆஸ்திகரை வைத்துத்தான் பத்மநாபன். தன்னுடைய பிழைப்பையும் நலனையும் மட்டுமே நம்பிய அந்த ஆஸ்திகர்கள் நூற்றாண்டுக் கணக்கில் மற்ற சமூகத்துக்கு, சிலர் அறிந்தும் பெரும்பாலானோர் அறியாமலும், செய்த கொடுமையினால் தான் ஒரு ஆஸ்திக சமூகம் தன் அந்தஸ்தையே இழந்து விட்டது என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

தவறாக நினைக்க வேண்டாம் பத்மநாபன், RVS, தக்குடு...
என்னை வைத்துச் சொல்கிறேன். எனக்குப் பூணல் போட்டதன் காரணம் என்ன தெரியுமோ? அப்பாவுக்கும் மற்றப் பித்ருக்களுக்கும் தொடர்ந்து செய்ய வேண்டிய கர்மாக்களுக்கு பூணல் ஒரு நுழைவுவாயிலாம். பூணல் போடாவிட்டால் பெற்றவர்களுக்கு 'கடன்' செய்ய முடியாதாம். வாட்டுதபக்குன்னேன்!

இந்த மாதிரி ஒவ்வொரு திணையிலயும் கண்மூடித்தனம் நிறைஞ்சிருக்கு என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை - இன்னும் அதை விடாம பிடிச்சிட்டிருக்குறது தான் ஆச்சரியம், வருத்தம். ஒரு மந்திரத்துக்காவது பொருள் தெரிஞ்சு சொல்றோமா?

என் பெற்றோரின் கண்மூடித்தனங்கள் என் சொத்தாயின - அவை என் சந்ததிக்கும் சொத்தாகின்றன. இதே சுழற்சியில் சிக்க்ட்டிருக்கோம். திடீர்னு லைட் எரிஞ்சு 'தோடா டேய்!'னு கண் திறந்து பார்ப்பாங்க எல்லாரும் - அந்தக் காலம் வரும்.
ஆஸ்திகம் நாஸ்திகம் விவாதமும் கட்சியும் மறைந்து போகும்.

பத்மநாபன் said...

நிலக்கடலை, மணல் , பதமான வாட்டல் புதிதாகவும் எளிதாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது தக்குடு..

இந்த உதாரணம் இப்பொழுது தான் கேள்விப் படுகிறேன்...

பத்மநாபன் said...

கருத்துக்கு நன்றி ஆர்.வி.எஸ்.
கேள்வி கேட்காத பக்தி என்பதாக சொல்ல வந்தது, நீண்ட நெடும்கால ஆராய்ச்சியில் இன்னின்னதற்கு இதிதிது என்று எல்லா பிரச்சினைக்கும் தீர்வு வைத்துள்ளார்கள்...அதன் முகவரிகளை தொலைத்து விட்டோம்.அதனால் பக்தியை விட, இப்பொழுது பார்வைக்கு பக்தியின்மை பச்சையாக தெரிகிறது..

சிவகுமாரன் said...

தக்குடுவின் விளக்கம் ( கடலை, மணல்) அருமை

அப்பாதுரை said...

தக்குடு கமென்டுக்கு பின்னூட்டம் போட்டனே - என்ன ஆச்சு?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எல்லாமும் அருமையான படால்கள்... பகிர்வுக்கு நன்றி

பத்மநாபன் said...

தக்குடுக்கான உங்கள் பதில் பின்னூட்டம் டேஷ் போர்டிலும் இல்லை ,3 மெயில் அலர்ட்டிலும் இல்லை..எங்காவது நடுவில் மாட்டி இருக்கும் .. மன்னிக்கவும் தயவு செய்து மீண்டும் அனுப்பவும் .

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி அப்பாவி தங்கைமணி.

பத்மநாபன் said...

சிவா, தக்குடுக்குள் அழகான ஆழமான ஆன்மீக வாதி உட்கார்ந்திருக்கிறார்.. தற்போதய வலைக் கலாச்சாரத்தில் மக்கள் அவரின் காமெடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அளவுக்கு அவரின் ஆன்மிகஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை...முப்பதாவது தாண்டட்டும் என காத்திருக்கிறார்களோ என்னவோ...

பத்மநாபன் said...

அப்பாஜி ( இது தான் செளகரியமா இருக்கு பொறுத்தருள்க )...

முதலில், அப்பா, பித்ரு,கர்மா, கடன்கள் இந்த கோட்பாடுகளை ஒத்துக்கொள்பவர்களுக்குத்தான் எல்லாம்..

இந்த கோட்பாடுகளையே ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பூணூல் எதற்கு ? அவசியமில்லை ..
இங்கு எதுவுமே கட்டாயமில்லை ..அதுதான் பலமும் பலவீனமும்

இந்த பொருள் ஜாதீய வறட்டிழுப்பு கூடியது ..எனவே அதிகம் செல்லவில்லை..ள்

RVS said...

அப்பாஜி... நான் படித்ததில் சில...

//ஒரு மந்திரத்துக்காவது பொருள் தெரிஞ்சு சொல்றோமா?//

தெய்வத்தின் குரல்ல பரமாச்சார்யார் ஒரு இடத்தில சொல்றார்...
"பல பேருக்கு நாம சொல்ற ஸ்லோகத்து அர்த்தம் தெரியலை.. ஆனா சொல்லிண்டு இருக்கோமோன்னு... அப்படியாவது இதை சொல்லனுமான்னு நினைக்கறா... ஒரு பாஷையில் நாம பேசும்போது யார்ட்ட பேசறோமோ அவாளுக்கு அது புரியணும்.. அதுதான் முக்கியம்... அது மாதிரி நீங்க அர்த்தம் தெரியாம ஸ்லோகம் சொன்னாலும் கேட்கற பகவானுக்கு அது என்னதுன்னு புரியும்... அதனால புரியலைன்னு கவலைப்படாம சொல்லிண்டு வாங்கோ.... உங்களுக்கு புரிஞ்சிக்க நேரம் வாய்க்கும் போது அதைப் பற்றி தெரிஞ்சிக்கோங்கோ...." அப்டிங்கறார். ;-)

சாய்ராம் கோபாலன் said...

//அப்பாதுரை said... பாடியவர் பெயர் ஷோபனாவா? இப்போது தான் கேட்கிறேன் குரலை - அற்புதம்!//

இங்கே எடிசனில் இருக்கும் என் நண்பனின் அம்மா வழி சித்தி மகள். வாஷிங்டன் டி.சி.யில் கல்யாணம் செய்துக்கொண்டு கச்சேரிகள் பண்ணிக்கொண்டு வாழும் சமத்து பெண்.

சாய்ராம் கோபாலன் said...

பத்மநாபன் அருமை. அப்பாதுரையை உசுபேத்தி விட்டுவீட்டீர்கள். அவர் தமிழே சரிவர தெரியாது என்று சொல்லி சொல்லியே பலதும் எழுதும் (அபிராமி அந்தாதி, இப்போது நசிகேத வெண்பா, விதவிதமாக கதைகள்) தமிழ் மகாமுனி.

தக்குடு said...

//இந்த உதாரணம் இப்பொழுது தான் கேள்விப் படுகிறேன்...//

பெங்களூர் BTM பஸ் ஸ்டாண்ட் பக்கம் பஸ்ஸுக்கு ரொம்ப நேரமா ஒரு கடலை வண்டி பக்கத்துல நின்னதால வந்த விளைவு தான் இது!...:)

@ சிவா - பத்மனாபன் அண்ணா சொல்லர்தை எல்லாம் காதுல வாங்கிக்காதீங்கோ சார்! தக்குடு ஒரு சாதாரண அரை டிக்கெட்டு அவ்ளோதான்!...:)

பத்மநாபன் said...

//ஒரு மந்திரத்துக்காவது பொருள் தெரிஞ்சு சொல்றோமா?//

அப்பாஜி,
நீங்க வடமொழியை வைத்து சொல்கிறீர்கள்..சரி விட்டுருங்க..வழக்கமாக , பழக்கமாக ..தமிழ் மொழியில் திருப்பாடல்களும் , பாவையும் மந்திரங்களும் சொல்லி மன நிம்மதியோடு தான் இருக்கிறார்கள்.

ஆர்.வி.எஸ்,

அவரின் சிந்தனையை சிந்த்தித்து பார்த்தால் பரமாச்சார்யாரின் தெய்வத்தின் குரல் பக்கம் வந்திருக்கவும் வரவும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

பத்மநாபன் said...

சாய் ,வணக்கம். முதல் வருகைக்கு வந்தனம். நன்றி.

பாடகர் ஷோபனா அவர்களின் தகவல்களுக்கு நன்றி...உங்கள் நாட்டில் ஒரு ரெசிடெண்ட் பாடகர் இருக்கிறார்.. கச்சேரி பிரியர்களுக்கு கவலை இல்லை.

ஆமாங்க சாய்...சில சமயத்துல இவ்வளவு அப்பாவியா இருக்காரேன்னு தோணும் . அப்புறம் தான் புரிந்தது இது காது கொடுத்து கேட்கும் ஒரு சிறப்பு குணம்.. இந்த குணம் ரஜினிக்கு இருப்பதாக பாலகுமாரனிடம் படித்துள்ளேன்.

சக நண்பர்களோடு பாரதி திண்ணையை பயன்படுத்த வந்தமைக்கு மீண்டும் நன்றி...

பத்மநாபன் said...

@தக்குடு ......அவனவன் கடலை போட்டு திரியும் வயதில் , கடலையை வைத்து ஞான ரசத்தையே புழிஞ்சிட்டியே ராசா...

கடலை போட்டால் ஞானம் வராதா? இப்படியான கேள்வியை அப்பாஜி கண்டிப்பாக எடுத்து வைப்பார்.

அப்பாதுரை said...

மாஞ்சு மாஞ்சு எழுதினது சுவாமி! இப்ப நினைவிலிருந்து எழுதணும்னா கஷ்டம். தக்குடுவின் மறுபக்கத்தை அசந்து போய் எழுதினது. பிரமாதம். அதை ரெண்டு வரில சொல்லியிருக்கலாம். அட்டகாசமான சிந்தனை தக்குடு.

(மேலே என்னென்னவோ எழுதி இப்ப சரியா நினைவுக்கு வரவில்லை. ஜெயேன்திராவைப் பத்தியும் நித்தியானந்தாவைப் பத்தியும் கொஞ்சம் எழுதியிருந்தேன் - நல்ல வேளை, பதிவாயிருந்தா RVS TRஐ அனுப்பியிருப்பாரோ என்னவோ?!)

RVS பின்னூட்டத்தைப் படிச்சதும் ஒரு சந்தேகம்: ஒரு வேளை தெய்வம் நம்மிடம் வடமொழியில் பேசிக்கொண்டிருக்கிறதோ, நாம் தான் புரியாமல் இருக்கிறோமோ?

பத்மநாபன் said...

மன்னிக்கவும் அப்பாஜி ..தக்குடுவிடமும்...

இந்த அபார சிந்தனைக்கு கிடைத்த பாராட்டை கூகிள் முழுங்கியது வருத்தம் தான்..மெயிலிலும் பார்த்தேன் இருந்தால் வெட்டியாவது ஒட்டியிருப்பேன்.

//ஒரு வேளை தெய்வம் நம்மிடம் வடமொழியில் பேசிக்கொண்டிருக்கிறதோ /// ஆர்.வி.எஸ் நான் சொன்னேன்ல்ல சொன்னேன்ல்ல ..இது அதையும்
தா ....ண்டியது...

RVS said...

தமிழ் தெரியாதவங்க தெய்வத்தை தேவாரம் திருவாசகம் நெட்று பண்ணி கும்பிடலாம்... அதுவும் தெரியும் அவருக்கு... அவருக்கு லாங்குவேஜ் ஒரு பாரியார் இல்லை.. புரியாத மாதிரியே எங்களை உசுப்பி விளையாடறது உங்களுக்கு பொழுதுபோக்கு.. சரி ஜமாயுங்க ஜி ..... ;-)

(பத்துஜி .... கொஞ்சம் அதிகப்படியா போட்டுட்டேன்.. நான் வணங்கற சாமிதான் என்னை காப்பாத்தணும்.. ;-) )

RVS said...

நா முதல் கமென்ட் போணி பண்ணினேன். 120 க்கு மேலே போய்கிட்டு இருக்கு.. ராசியான கை.. (இதுக்கும் அப்பாஜியின் கருத்து என்னவோ..) ;-)

பத்மநாபன் said...

ராசியான கைக்கு ஒரு கைக்குலுக்கல்..

பாரதி எனும் பெயர் பலகை மாட்டியுள்ள இந்த திண்ணையை , நல்ல அரட்டை அரங்கமாக மாற்றிய அப்பாஜியின் கைக்கும் தான்.

தக்குடு said...

//மாஞ்சு மாஞ்சு எழுதினது சுவாமி! இப்ப நினைவிலிருந்து எழுதணும்னா கஷ்டம். தக்குடுவின் மறுபக்கத்தை அசந்து போய் எழுதினது. பிரமாதம்//

அச்சோ!! அதை படிக்கும் பாக்யதை தக்குடுவுக்கு இல்லாம போச்சே!!..:((

அப்பாதுரை said...

தக்குடு கமென்டுல சொல்ல வந்த இன்னொண்ணு இப்ப நினைவுக்கு வந்தது (அவர் பின்னூட்டத்தை மறுபடி மறுபடி படிக்க முடியுது): ஆஸ்திகம் இழிநிலையே கிடையாது. இருந்திருந்தா ஆதிசங்கரர், மாணிக்கவாசகர், ஆண்டாள் (மகா புத்திசாலி இந்தப் பெண் என்பது வரலாற்றைப் புரட்டினால் புரிந்து போகும்), நம்மாழ்வார், ஔவையார் (எட்டேகால் லட்சணமே ஒன்றே போதும் இந்தப் பெண்ணின் திறமைக்கும் துணிச்சலுக்கும்), அருணகிரிநாதர், சமீப அபிராமபட்டர் ... இவர்களெல்லாம் ஆஸ்திகம் பக்கம் வந்திருக்க மாட்டார்கள். conversely, நான் மதிக்கும் இந்த ஞானிகளெல்லாம் ஆஸ்திகத்தை அப்படி ஆராதித்திருக்கையில் எனக்கு ஏன் பிடிப்பு விட்டுப்போனது, நான் தான் லூசோ என்று அடிக்கடி வியந்திருக்கிறேன்.

அதே வீச்சில், நாஸ்திகமும் இழிநிலை கிடையாது.

ஆஸ்திகம் என்றாலே பூணூல் என்ற ஸ்டெரியோடைப் மாதிரி தான் நாஸ்திகம் என்றாலே செருப்படி என்பதும். உலக வளர்ச்சிக்கு மனித வளர்ச்சிக்கு ஆஸ்திகத்தை விட நாஸ்திகத்தின் பங்கு அதிகம் - வரும் வருடங்களில் இன்னும் அதிகமாகும் என்பது என் கருத்து.

அப்பாதுரை said...

RVS உங்க கை என்ன, உங்க திசையே ராசி தான்.

120 பின்னூட்டங்களா? இது ஏதாவது ரெகார்டா? ரொம்ப இழுத்துட்டனோ? அழகா பாரதி பத்தின பதிவை என்னவோ சொல்லி எங்கியோ கொண்டு போனது தவறோ? கையைக் கட்டி இருந்திருக்கலாம் - எப்படி விழுந்தேன் தெரியவில்லை. கடவுள் ஆஸ்திகம் சடங்கு என்றாலே ஒரு பொறி போல - தெரிந்தும் அடிக்கடி விழுகிறேன்.

அப்பாதுரை said...

RVSஐ சென்னையில் சந்திக்கும் நாளை எதிர்பார்க்கிறேன் :)

தமிழ் தெரியாதவங்க தேவாரம் திருவாசகம் மனனம் பண்ணலாம் என்பது சரிதான் RVS? பேச்சுக்கு வேணும்னா சொல்லலாம், நடைமுறைக்கு ஒத்துவருமா RVS? தமிழ் தெரிஞ்சவங்களே தேவாரம் திருவாசகம் படிக்கறது கிடையாது.

சுவாமிமலை என்று நினைக்கிறேன் - தமிழ் அர்ச்சனை நேரத்தைத் தவிர்த்து புரியாத சம்ஸ்க்ருத அர்ச்சனைக்குப் போகும் கூட்டத்தைத்தான் அதிகம் பார்த்தேன்.

பத்மநாபன் said...

//ஆதிசங்கரர், மாணிக்கவாசகர், ஆண்டாள் (மகா புத்திசாலி இந்தப் பெண் என்பது வரலாற்றைப் புரட்டினால் புரிந்து போகும்), நம்மாழ்வார், ஔவையார் (எட்டேகால் லட்சணமே ஒன்றே போதும் இந்தப் பெண்ணின் திறமைக்கும் துணிச்சலுக்கும்), அருணகிரிநாதர், சமீப அபிராமபட்டர் ... இவர்களெல்லாம் ஆஸ்திகம் பக்கம் வந்திருக்க மாட்டார்கள். conversely, நான் மதிக்கும் இந்த ஞானிகளெல்லாம் /// இப்போதைக்கு இது போதுங்க ... இந்த மாதிரி ஞானிகள் இப்ப இருந்திருந்தா , எழுத்தில் சிலாகிப்பது போல் ( அ.அந்தாதி , ந.வெண்பா ) மனதிலும் சிலாகித்திருப்பீர்களோ ?
நாஸ்திகம் உருவாகாமலேயே இருந்திருக்குமோ ?

அப்பாதுரை said...

அப்படின்னு நீங்க சொல்றீங்க; நாஸ்திகம் தான் நிலைக்கும்னு நான் நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

இப்பவும் ஞானிகளுக்கு குறைவில்லையே பத்மநாபன்? தாகூர், கார்ல் சேகன் சமீப ஞானிகள்.

பத்மநாபன் said...

பாரதி உங்கள் ஞானி லிஸ்டில் உண்டா? என் லிஸ்டில் உள்ளார்.

பெருங்கடலை நீந்தியே கடக்கனும்னு முடிவு செஞ்சுட்டீங்க ...நீந்தலாம் தப்பில்லை..வழியில் பாதுகாப்பு குறைவு சுராக்களையும்,திமிங்கலங்களயும் தாண்ட வேண்டுமே...

RVS said...

//பெருங்கடலை நீந்தியே கடக்கனும்னு முடிவு செஞ்சுட்டீங்க ..//
அப்படி போடுங்க பத்துஜி.. பிறவிப் பெருங்கடல் நீச்சலை உள்ளுக்கு இழுத்துட்டீங்க... ஒருத்தரோட எழுத்தை ரசிச்சு அவங்க மார்க்கத்தை பிடிக்கலைன்னு சொல்ற பக்குவம், முதிர்ச்சி தேர்ந்த ஞானிகளுக்கு தான் வரும். நம்ம அப்பாஜி அந்த வகை. எவ்ளோ சிலாகிச்சு பட்டர், ஆண்டாள், ஔவையார்ன்னு பிரியப்பட்டு ஒவ்வொன்னா சொல்றார். எங்க தாத்த சொல்வார், "நம்மள விட ஸ்வாமி கும்புடாதவாதான் அவரை பத்தி நன்னா தெரிஞ்சிண்டுருக்கா.. அவரையே ஸ்மரிச்சின்டு, தப்பு கண்டுபிடிக்கறதுக்காக ஸ்லோகம் படிச்சுண்டு... அப்படி குறை கண்டுபிடிக்க படிச்சாலும் அதுக்கே ஸ்வாமி அருள் புரிவார். அதனால ஸ்வாமி அணுக்ரஹம் அவாளுக்குத்தான் நிறைய கிடைக்கரது"ன்னு...
உங்களுக்கு சரஸ்வதி கடாக்ஷம் ரொம்ப கிடைச்சிருக்கு!!!.. ;-) ;-)
(எதுவும் அதிகப்படியா இருந்தா தயை கூர்ந்து மன்னிக்கணும்.. )

RVS said...

//நடை முறைக்கு ஒத்து வருமா?//
அப்பாஜி!! ஒத்து வந்ததால்தான் ரொம்ப காலமாக தமிழ், தெலுங்குன்னு எது தாய்மொழியாக இருந்தாலும் குழந்தைகளை வேத பாடசாலையில் சேர்த்து சமஸ்கிருத ஸ்லோகங்களை கனபாடமாக படிக்கவைத்தனர். வேளை வரும் போது அர்த்தம் தெரிந்து கொண்டனர். பரீட்சையில் பாஸ் ஆக வேண்டும் என்று தமிழ் மீடியம் படிக்கும் போது ஆங்கிலப் பாடங்களை உருப் போட்டது இல்லையா... புரியாத அறிவியல் பாடங்களை கடம் போட்டு பரீட்சை எழுதி பாஸ் பண்ணவில்லையா.. பரீட்சையில் வெற்றி வேண்டும் என்கிற போது மனனம் செய்து ஜெயிப்பது போல, வாழ்க்கையில் தோல்வியிலும் துவளாமல் இருப்பதற்கு மொழி மீறிய கடவுள் பக்தி தேவைப்படுகிறது. ஹயக்ரீவர் ஸ்லோகம் சொல்லிவிட்டு போனால் பரீட்சையில் படித்தது எல்லாம் ஞாபகம் வரும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் வெற்றியும் பெறுகிறான். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? நமக்கு மேல் ஒரு சூப்பர் பவர் இருக்கிறது.. அது நம்மை காப்பாற்றும் என்பதே வாழ்வில் நமக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. என் போன்ற நிறைய அஞ்ஞானிகளை அந்த நம்பிக்கைதான் தோல்வி கண்டு துவளாமல் வாழ்வில் உயிரோடு விட்டிருக்கிறது. அதற்காக ஸ்வாமி நமக்காக எல்லாம் செய்யும்ன்னு காலைக் கட்டிண்டு உட்கார்ந்திருக்கிற சோம்பேறியும் கிடையாது. நூறு சதம் முயற்சி செய்வோம்.. அதற்க்கு மேல் ஆண்டவன் விட்ட வழி என்ற சங்கத்தை சேர்ந்தவன் நான். ;-)
(திரும்பி பார்க்கவேண்டாம்... இன்னும் இதுபோல இந்த அசத்துவின் விவாதங்கள் விபரீதமாக வரும்.. நன்றி.. ;-) )

RVS said...

தமிழகத்தில் இருந்து அயலகம் சென்ற தமிழை சந்திக்க நானும் மிகவும் ஆவலாக உள்ளேன். அப்பாஜி! ஆசானே!! உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டும். நாஸ்த்திகம் தவிர்த்து!!

அப்பாதுரை said...

RVS, உங்கள் தாத்தா சொன்னதில் நிறைய புராணப் பின்னணி உண்டு. கடவுளைக் கும்பிட்டவனுக்குச் சோதனை மேல் சோதனை. நிந்தித்தவருக்கு கை மேல் லட்டு. இதற்கு எத்தனையோ உதாரணம் சொல்லலாம். (ராஜாஜி இதைப் பத்தி சொன்ன கமென்ட் சுவாரசியமானது: "மாற்றுக் கட்சியை நம்ம கட்சிக்கு இழுக்க இலவசமா நிறைய கொடுக்கறது போலத்தான்" - ஆஸ்திக அரசியல்!)

கடவுளில் நன்மையைத் தேடிக் கண்டுபிடிப்பது எத்தனை அறியாமையோ அத்தனை அறியாமை குற்றம் கண்டுபிடிப்பதும் என்று நினைக்கிறேன். குற்றம் கண்டுபிடிக்க எனக்கு அறிவும் தகுதியும் போதாது என்பது இன்னொரு விஷயம் :)

ஹயக்ரீவ ஸ்தோத்திரம் மட்டும் நம்பிப் பரீட்சை எழுதுவதைப் பற்றி என்ன சொல்வது? வருத்தப்படுகிறேன்,என்றாலும் அது அவரவர் விருப்பம் என்றும் மதிக்கிறேன்.

எங்கிட்டே கத்துக்க ஒண்ணும் இல்லைங்க - நீங்க அப்படிச் சொல்றதே பெருமை தான்.

நான் ஆஸ்திகனாக 'அசைக்க முடியாத' நம்பிக்கையோடு இருந்தவன். புராணங்களைப் படிக்கப் படிக்க எனக்கு நம்பிக்கை குறைந்து மறைந்தது என்பதே உண்மை. இந்தப்பக்கம் வந்ததிலிருந்து ஒரு அதீத சுதந்திரமும் பொறுப்பும் நிம்மதியும் வந்திருக்கிறது. இந்தப் பக்கத்தில காத்து வீசுது; புயலில்லை.

உண்டா இல்லையா என்ற சச்சரவுக்கு ஒரு படி மேலேயே உலாவ விரும்புகிறேன்.

அப்பாதுரை said...

பாரதி அருமையான கவிஞர். சிந்தனையிலும் சொல்லிலும் புயலடித்தவர். 'சொற்கோ' என்பது அவருக்கு மட்டுமே பொருந்தும். அவருடைய சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் 'ஞானி' அவ்வப்போது தென்பட்டதாக நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவரை ஞானிகள் சொல்லொன்று செயலொன்றாக இருந்ததாக நினைவில்லை. பாரதி தனிவாழ்வில் உல்டாவாக நடந்து கொண்டதாகப் படித்திருக்கிறேன். 'கண்ணம்மா', 'பெண் விடுதலை' என்றெல்லாம் பாடிவிட்டு மனைவியை மரியாதை குறைவாக நடத்தியதாகப் படித்திருக்கிறேன். பாரதி, ஜெயேந்திரர் டைப் ஞானியோ என்று சில சமயம் நினைத்திருக்கிறேன். இருந்தாலும் பாரதியின் எழுச்சிக் குரலுக்கு முன் ஞானம் அவசியமில்லாமல் போனதென்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

நாஸ்திகம் கற்றுக் கொள்ளவே வேண்டாம்...அது நமக்குள்ளே இருக்கிறது. ! மேலும் கற்றுக் கொண்டால்தான் என்ன...களவும் கற்று மற என்றும் வைத்துக் கொள்ளலாம். அப்படிக் கூட சொல்ல முடியாது..சாய் சொன்னது போல அப்பாதுரை எனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது என்று சொல்லியே எல்லாவற்றையும் சொல்லி விடுவார். எனகென்னமோ அது நாத்திகமாகப் படவில்லை. நம்மை எல்லாம் தூண்டி விட்டு என்ன சொல்கிறோம் என்று பார்க்கிறார். தமிழில் இருக்கும் எல்லாவற்றையும் படித்து விட்டு அவர் உள்வங்கியவற்றை சொல்வது சுவாரஸ்யம்.

Matangi Mawley said...

Brilliant sir! thanks intha postukaaka-kku ungalukku! inga office-lernthu videos laam paakka mudiyala...

bt chinnanjiru kiliye- manamagal(1957) MLV version thaan enakku pudikkum.. brilliant music!

பத்மநாபன் said...

//பாரதி, ஜெயேந்திரர் டைப் ஞானியோ என்று சில சமயம் நினைத்திருக்கிறேன். // உங்க சுதந்திரத்திற்கு எல்லையே இல்லையா ..யாரை யாரோடு ஒப்பிடறிங்க .... பணி முடித்து வருகிறேன் ..இதுல கருத்து சொல்ல கொஞ்சம் இருக்கு

தக்குடு said...

உம்மாச்சி நரசிம்மாவதாரம் எடுத்தது உண்மைல இரண்டு பக்தாளுக்காக வேண்டி, ஒன்னு பிரஹலாதன் இன்னொன்னு அவனோட அப்பா, ஹிரண்யகசிபுவும் சதா ஸர்வ காலமும் ஹரியை நினைச்சுண்டே(தியானித்து) இருந்தானாம், அதனால தான் உம்மாச்சி மடில வெச்சு அவனோட ஜீவன் முக்தி அடைஞ்சது (அவனோட தேகம் எல்லாம் மாயை தான்). அதை மாதிரி ஆஸ்திகர்களும் நாஸ்திகர்களும்(அப்பிடின்னு நம்பிண்டு இருக்கறவா)தோழமையோட இருக்கர்து தப்பு ஒன்னும் இல்லை..:)

பத்மநாபன் said...

ஆர்.வி.எஸ், நான் சொல்ல நினைத்ததை ஸ்ரீ அப்படியே சொல்லியுள்ளார்.. களவும் கற்றுமற..அனவர்க்குள்ளும் நாத்திக இருப்பு போன்றவைகளை ...

ஸ்ரீ....அப்பாஜி குழந்தைகள் மாதிரி..கேக்கில் க்ரிம், ப்ளம்,இவற்றில் மட்டும் நாட்டமாக இருப்பார்களே அதுபோல , ஆத்திகத்தின் மொழிசுகத்தொடு உள்ளடங்கிய ஞானச்சுவையும் வேண்டும் அதே சமயத்தில் நாத்திகத்தின் மிதமிஞ்சிய சுதந்திரமும் வேண்டும் ...

ஆத்திகம் பயில்பவனுக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் ..எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பான் நாம கடமையில குறியா இருப்போம் என்பதில் பாதுகாப்பான சுதந்திரமிருக்கிறது...

நாத்திகம் பயில்பவனுக்கு..
அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..நாம தான் எல்லாம் என்பதில் கட்டுபாடற்ற சுதந்திரம் கிடக்கபெற்று வாழ்க்கை தாறுமாறாக மாறுகிறது...

பத்மநாபன் said...

நன்றி மாதங்கி.. எம்.ல்.வி அம்மாவின் யூட்டி நெட்டில் கிடக்கிறதா என்று பார்க்க வேண்டும்..

அப்பாதுரை said...

மறுபடியும் ஹோம்ரன் தக்குடு. 'பொதுவில்' வைத்துப் பழகும் நெறி, சுவாரசியமான கருத்து.

பிரகலாதனால அப்பாவுக்கு மோட்சமா, அப்பான்னால பிரகலாதனுக்கு மோட்சமா? யார் இதுல சாதனம்? சுவாரசியமான புராணக்கதை.

ஒழுங்கா வேலையைப் பாத்துண்டு இருந்த ரெண்டு செக்யூரிடி கார்டை கர்வம் பிடிச்ச ஆசாமி தூக்கி எறிஞ்சப்புறம், ஆசாமியை ஒண்ணும் பண்ணாம விட்டுட்டு.. பாவம் மணிக்குக் காலணா வேலை பாத்த செக்யூரிடி ரெண்டு பேரையும் பொறவி பொறவியா துவம்சம் பண்ணிணது கொஞ்சம் யோசிக்க வக்கறது இல்லியா? இந்தக் கதையைப் படிச்சப்புறம் ஆஸ்திகம் கூடறதா கொறையறதா தெரியலியே?

இந்தப் பழக்கம் இன்னும் நம்ம மரபணுல ஊறியிருக்கோ? சமீபத்துல யுஎஸ் வந்திருந்த ஒரு இந்தியத் தூதரகப் பொம்னாட்டி இப்டித்தான் - சாதாரணமா ஏர்போர்டுல செக்கிங்க் பண்ண ஆசாமிங்களைக் கொதறி எடுத்துட்டா - நான் எப்பேர்கொத்தவ, என்னைப் போய் செக் பண்றியேனுட்டு ஒரே ஹூஹூ கொள்ளை அமக்களம்.

தேவையில்லாத சச்சரவு. ரெண்டு நிமிஷத்துல யாருக்கும் தெரியாம நடந்திருக்க வேண்டியதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்காங்க அந்தம்மா. யாருக்கு அவமானம் இதில்?

வேலைவெட்டி இல்லேன்னா இந்த மாதிரி யோசிச்சிண்டிருக்கலாம் - நீதி.

அப்பாதுரை said...

வாழ்க்கைத் தாறுமாறாக மாறிய நாஸ்திகரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை பத்மநாபன்.

ஆஸ்திகத்தில் ஒரு வசதியான கோட்பாடு இருக்கிறது: நல்லதாக முடிந்தால் அது அனுக்கிரகம்; இல்லாவிட்டால் பாவம். இந்தக் கோட்பாடை மிகவும் ரசிக்கிறேன். இந்திய அரசியலின் அடிப்படை இந்தக் கோட்பாடில் இருக்கிறது என்று நம்புகிறேன் - கலாசார ஆய்வறிவும் நேரமும் வசதியும் இருந்தால் இது ஒரு அரிய சமூகப் பரிசோதனை வாய்ப்பு.

இந்தப் பலதரம் நாஸ்திகத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஆஸ்திகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

மாத்திச் சொல்றீங்களே ஸ்ரீராம்.. பாருங்க, நான் தான் தூண்டில்ல மாட்டிக்கிட்டு..

பத்மநாபன் said...

//'பெண் விடுதலை' என்றெல்லாம் பாடிவிட்டு மனைவியை மரியாதை குறைவாக நடத்தியதாகப் படித்திருக்கிறேன்.//

நான் படித்ததில்லை ..இருந்தாலும் நிங்கள் சொன்னதை எடுத்து கொள்கிறேன். இதில் தவறு என்பது காலாத்தால் உள்ளே நுழைகிறது..

அந்த கால கட்டத்தை பொறுத்த வரை பெண்கள் தாங்களே தங்களை வலிய தாழ்த்திக் கொண்டு ஒரு செளகரிய மண்டலமாக , ஒரு பாதுகாப்பு மண்டலமாக நினைத்து இருந்து கொண்டிருந்திருக்கிறார்கள்... ( இன்றும் பல மென் பொருள் பெண்கள் சம்பாதிக்கும் பல லட்சங்களை அப்படியே கணவனிடம் கொடுத்து விட்டு வழிச்செலவுக்கு அவனை நம்பியே இருக்கிறார்கள் )இதற்கு பாரதிகுடும்பமும் தப்பாமல் இருந்திருக்கலாம்..நேரில் பார்த்து சலித்துதான் பெண்விடுதலையை இன்னமும் சீற்றத்தோடு பாடியிருக்கலாம்...

27 December 2010 4:37 AM

ஸ்ரீராம். said...

//"நான் தான் தூண்டில்ல மாட்டிக்கிட்டு."//

சுறாவுக்கு யாராவது தூண்டில் போட முடியுமா?

ஆனாலும் சுவாரஸ்யமான மாட்டல்தான்..நிறைய சத்து உள்ள மீனைத்தானே தூண்டில் போட முடியும்?
பத்மநாபன், கேக் உதாரணம் சுவாரஸ்யம்.
//"எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பான் நாம கடமையில குறியா இருப்போம் என்பதில் பாதுகாப்பான சுதந்திரமிருக்கிறது"//

சுதந்திரமா சோம்பேறித் தனமா என்று தோன்றும் எனக்கு. நாத்திகம் என்று பெயரிட்டுல்லதை பழகுபவர்கள் நாமதான் எல்லாம் என்று நினைக்கிறார்களா என்ன? நம்ம ஊர் அரசியல் நாத்திகம் கதை வேற...ஆத்திகத்தில் சோம்பேறித் தனமா இருக்க வேணாம்னு ஏன்னு கேள்வி கேக்க ஹிரண்யனை உண்டு பண்ணி பிரஹலாதனைத் தூண்டி இந்த சாக்கில் ரெண்டு பேருக்கும் முக்தி..!

//'பெண் விடுதலை' என்றெல்லாம் பாடிவிட்டு மனைவியை மரியாதை குறைவாக நடத்தியதாகப் படித்திருக்கிறேன்.//

நான் படித்ததில்லை ..."//

சகுந்தலா பாரதி எழுதிய புத்தகத்தில் இருக்கிறது. மனைவியை பிறந்த வீடு அனுப்பாமலும் மீறிச் சென்று விட்ட மனைவி சீக்கிரம் திரும்பாதது கண்டு வீட்டில் இருந்த பாத்திரங்களை எல்லாம் தானம் செய்ததும், வேறு திருமணம் செய்யப் போகிறேன் என்று சொன்னதும், திரும்பி வந்த மனைவியிடம் பேசாமல் இருந்ததும், தந்தை இரததற்கு மனைவி மீண்டும் ஊர் செல்ல பயந்ததும்...

geetha santhanam said...

உங்கள் இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் உண்மையிலேயே 'ஆனந்த வாசிப்பு'தான். பெரியவர்கள் கூடி விவாதம் செய்யும் சபையில் சின்னவள் என் கருத்து இது.
கடவுள் இருக்கிறார் என்று நம்புவது ஒரு குழந்தையின் கவலையற்ற, பாதுகாப்பான சூழலை நமக்கு உருவாக்குகிறது. ஒரு சின்ன தொழிற்சாலயின் உற்பத்தியைக் கவனிக்கவே சூப்பர்வைசர் அப்படி இப்படி என்று பலர் தேவையிருக்க இந்த உலகில் மீண்டும் மீண்டும் நடக்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்களின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பை தடங்கலிலாமல் வழி நடத்த ஒரு சக்தி இருந்தே ஆகவேண்டும். அந்த மாபெரும் சக்திதான் கடவுள் என்று நம்புகிறேன்.

பத்மநாபன் said...

//சுதந்திரமா சோம்பேறித் தனமா என்று தோன்றும் எனக்கு. // ஸ்ரீ.... சோம்பேறித்தனம் ஒரு பொதுவான துர் குணம் என்பதால் அதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

மரணம்,மனஅசதி, தொய்வு, பொறாமை, இப்படி பலதுக்கும் அடிமையாய் உள்ள நாம் ஒரு சக்தியால் சுதந்திரம் பெறமுடியும் என்றால் அதற்கு ஆஸ்தீ(ன்மீ)கத்தால் தான் முடியும்.

அப்புறம் , சகுந்தலா பாரதி படிக்கவில்லை . ஆனால் எனக்கு தோன்றுவது . கண்ணம்மாவை வைத்து அவ்வளவு பாடிய பாரதி நிச்சயம் அந்த நிதர்சன கண்ணம்மா செல்லம்மாவின் மீது கடும்பற்றோடு (Highly possessive )இருந்திருப்பார்.
பற்றினால், கொண்ட காதலால் வந்ததை பெரிசு படுத்த வேண்டியதில்லை..

பரமனே பார்வதியை இப்படி படுத்தியவர் தானே.

பத்மநாபன் said...

வாங்க கீதா மேடம்.. பாரதியின் பெயரில் ஒரு கருத்தரங்கம் அமைந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு நல்ல கருத்தை எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்து வைத்துள்ளீர்கள்.மிக்க நன்றி.

ஒரு மூலமான சக்தியில்லாமல் எப்படி இத்தனையும் சாத்தியம் ..அவ்வளவு பெரிய சக்திக்கு நிச்சயம் பல கற்பனைகள் இருக்கத்தான் செய்யும்..அதை நோக்கி நேர்மறையாகத்தான் அணுக வேண்டும்

அதை இல்லை என பொதுவாக சொல்லி ஒதுக்கி ஏன் நூலில்லா பட்டமாக வேண்டும்.

அப்பாதுரை said...

possessiveness is a sign of insecurity. பாரதி insecure என்று தோன்றவில்லை.

வீட்டில் ஒரு முகம் வெளியில் ஒரு முகம் காட்டுவது புதிதொன்றுமில்லை. வீட்டில் நடந்தது அவர் சொந்தப் பிரச்சினை - இரண்டு பக்கமும் தெரியாமல் விவரம் சொல்வது முறையில்லை என்றாலும், பாரதியின் வெளிப்பக்கம் ஒரு ஆதர்சம் என்பதால் அவர் சரியாக நடந்து கொண்டிருக்கலாம். பேச்சே வராமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. வீட்டுப் பாத்திரத்தைத் தூக்கி எறிவது - பரமனே செய்திருக்கும் பொழுது - அடடே, பெண்கள் கடவுளை நம்புவதன் காரணம் இப்போதல்லவா புரிகிறது!

அப்பாதுரை said...

சுதந்திரமா சோம்பேறித்தனமா - பொங்கலுக்கு பட்டிமன்றம் வச்சுடலாம் ஸ்ரீராம். பத்மநாபன் பிளாக் பின்னூட்டத்துலயே நீண்டு போயிட்டிருக்குது. உங்கள் பிளாக்குல வேணா போட்டுறுங்க. சோம்பல் கட்சி சார்பா நான் ரெடி.

அப்பாதுரை said...

//இந்த உலகின் பிறப்பு இறப்புகளைக் கவனிக்க...//

கீதா, அடடே!

அப்பாதுரை said...

கேக் உதாரணம் நன்றாக இருக்கிறது.. ஆஸ்திகத்தில் ஆழமாகப் போனால் சிதம்பர ரகசியம் தான் பத்மநாபன்.. அடிப்படையிலேயே கோளாறு வந்து விடுகிறது - இது என் அனுபவம்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்பாதுரை ( நீங்க விரும்பியபடியே )..

உங்க கருத்தாடலினால்தான் இவ்வளவு கருத்துக்கள் நிரம்பியது.

இலன் எனில் இலன்
உளன் எனில் உளன்

(எடுத்து கொடுத்த வாத்தியாருக்கு நன்றி..)

எல்லாம் இலனாவர்கள் என்பது உங்களை போன்றவர்களின் நம்பிக்கை.

எல்லாம் உளன் உணர்வார்கள் என்பது எங்களை போன்றவர்களின் நம்பிக்கை.

பத்மநாபன் said...

இலன் , உளன் தாண்டிய நிலை பெற வேண்டும் எனது கடவுளும் நானும் 1,2,3 பதிவிலே கோடுகாட்டி விட்டு , இலனுக்கு போகாமல் உளனிலேயே இருக்கிறேன் ...

இலனும் ,உளனும் அடுத்ததளத்திற்கு செல்லும் பாதைகள்...

பரிணாமம் பாதை வகுக்கும் பணியை எடுத்துக்கொண்டதால் ஒவ்வொருவரின் பாதையும் ப்ரத்யேகமாகவே உள்ளது

உளனின் கட்டுப்பாடு சிலருக்கு எரிச்சலாக இருக்கலாம் இலனின் சுதந்திரம் இனிமையாக இருக்கலாம் ..இல்லை இது அப்படியே 180 பாகை மாறி இருக்கலாம்.

இலன்...உளன்... உண்மை

உளன் ..இலன்....உண்மை இரண்டில் எது சிறந்த வழி என்பது அவரவர் பரிணாம செறிவைப்பொறுத்தது... சேருமிடம் ஒன்றுதான் ...

Unknown said...

இப்ப உங்க பதிவு இன்ட்லில பிரபலமாகுது ஒக்கே! :-)
happy new year!

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஜீ... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

எல் கே said...

@padmanaaban

nan potta comment enga?

எல் கே said...

அன்பின் அப்பாதுரை,
ஆஸ்தீகத்தின் துணை இல்லாமல் தேடல் என்பது பலருக்கும் கை கூடாது. மிகக் கடினமான நிலை. தேடலுக்கு ஒரு கருவியாக நாம் அதைக் கொள்ள வேண்டும்.

மந்திரங்களின் உண்மையான அர்த்தம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன பிரச்சனை ? உங்கள் தந்தையிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாமே (சுலோகங்களின் அர்த்தம் ). எனக்கு வந்த சந்தேகங்களை என் தாத்தா/பாட்டி இருவரிடமும் கேட்டுத் தெளிந்து கொண்டேன்(அவர்கள் இருந்த வரை ) இப்பொழுதும் எனக்கு ஒரு ஸ்லோகத்தின் அர்த்தம் தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்து கொள்வேன். சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது தோடகாஷ்டகம்.

உங்கள் அனைவருக்கும் நன்றி. மிக அருமையான விவாதம். இந்த மாதிரி தெளிந்த விவாதத்தை வெகு நாளுக்குப் பிறகு இன்றுதான் வலைப்பூக்களில் காண்கிறேன்.

தக்குடு ஒரு ஆன்மீக பெட்டகம்.

பத்மநாபன் said...

எல் . கே .. வரும் கருத்துரைகளனைத்தும் வெளியிட்டுவிட்டேனே ...எனக்கு வருபவைகள் குறைவான எண்ணிக்கைகள் தான் ,,,என்னுடைய முன்று மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அலர்ட் வரும்.. பார்த்தவுடன் பப்ளிஷ்தான் ... இரண்டுமுறை செம்மொழி கருத்துரை வந்ததால் , ...ஓரு ஸ்டேஜ் க்குமேல் செம்மொழி அலர்ஜி ஆகிவிட்டது அதனால் தான் கமென்ட் மாடரஷன் வைத்துள்ளேன் .. வழியில் எங்காவது மாட்டியிருக்கும் .. மிஸ் ஆனதில் எனக்கும் வருத்தம்..

மந்திரங்களை பற்றிய விளக்கத்திற்கு நன்றி எல்.கே ..

மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்று சொல்வார்கள்..

செம்மையாகும் வரை இந்த கருவிகள் நிச்சயம் தேவை ..

சஹஸ்ரநாமம் கேட்பதிலும் சொல்வதிலும் கிடைக்கும் மன நிம்மதி எனக்கு வேறு கருவிகளில் கிடைப்பதில்லை..வடமொழி தென்மொழி பாகுபாடு உணர்வெல்லாம் அப்பொழுது வருவதில்லை
உச்சரிப்பு சுத்தம் தவிர அர்த்தெமெல்லாம் அதிகம் தெரிந்த கொள்ள முயலவில்லை அர்த்தம் தெரிந்தால் இன்னமும் ஆர்வம் கூடும்

//தக்குடு ஒரு ஆன்மீக பெட்டகம்// மிக உண்மை...நட்பை பராமரித்துக் கொள்ளவேண்டும்..பிற்காலத்தில் பெரிய பெரிய ஆடிட்டோரியங்களில் ஒரு
கார்னரில் நின்று ஆன்மீகம் கேட்க இடம் கிடைக்கும் ...

தக்குடு said...

@ பத்பனாபன் அண்ணா & LK பாஸ் - உங்க ரெண்டு பேருக்கும் இப்ப என்ன வேணும்? ..:P அரைடிக்கெட்டை எல்லாம் பெரிய ஆள் ஆக்கி விட்டுண்டு!!..:) உங்களோட நல்ல வார்த்தைகளுக்கு நன்றி!

பத்மநாபன் said...

தக்குடு ...ஒன்னும் வேண்டாம் ஞாபகம் வச்சுட்டு மண்டபத்துல உள்ள விட கையோ கண்ணோ அசைச்சா போதும்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

Aathira mullai said...

இனிய நட்பை அறிமுகப்படுத்திய 2010 க்கு நன்றி.

இந்த இனிமை தொடர இறையருளை வேண்டி புத்தாண்டில் தங்கள் மனம் போல எல்லா நலமும் குவியவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பத்மநாபன்.

ஸ்ரீராம். said...

பத்மநாபன், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், வாசகர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி ஆதிரா..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

பத்மநாபன் said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸ்ரீ..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும், எங்கள் பிளாக்காருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||RVS பின்னூட்டத்தைப் படிச்சதும் ஒரு சந்தேகம்: ஒரு வேளை தெய்வம் நம்மிடம் வடமொழியில் பேசிக்கொண்டிருக்கிறதோ, நாம் தான் புரியாமல் இருக்கிறோமோ? ||

அடேயப்பா..எவ்வளவு பெரிய த்ரெட்..

ஒரு பாரதி நினைவுப் பதிவில் ஆன்மிகம்,கடவுள் பற்றிய பல அலசல்கள்...

ஆனால் அப்பா சாரின் மேற் கண்ட கமெண்ட் வாய் விட்டுச் சிரிக்க வைத்து விட்டது..

உண்மையில் சிந்தனைக்கு உரியதுதான் இது.

அப்பா சார்,உங்கள் வலை மனையில் படிக்க நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன்..நன்னி.

இப்போதைக்குப் போதும்,நானும் ஒரு பாட்டம் துவங்கினால் பேஜாராகி விடும்.

பத்மநாபன் said...

நல்வரவு அறிவன்...

மோகன்ஜி அவர்களின் பதிவில், அப்பாதுரை அவர்களின் பதில்களை பார்த்ததும் அவர்க்கு சரியான இணையான உங்களின் அறிவான விவாதம் கண்டு மெய்மறந்தேன்.. இங்கு அப்பாதுரைக்கு சரியாக ஈடு கொடுக்கமுடியாவிட்டாலும், பெரிய மனதோடு அவர் தானே இறங்கி விவாதத்தை சீராக கொண்டு சென்றார்..

நமக்கென அருமையான நசிவெண்பா எனும் அருமையான களமைத்திருக்கிறார் ..அங்கு தொடரலாம்..

தக்குடு said...

@ அறிவன் சார் - இப்பவும் ஒன்னும் தாமதம் ஆகலை சார், நல்ல விஷயங்கள் பத்தி எப்ப வேணும்னாலும்,எவ்ளோ வேணும்னாலும் நாம பேசிக்கலாம். ஆனந்த வாசிப்புல இன்னும் கொஞ்சம் உரிமையோட பேசிக்கலாம் அவ்ளோதான் வித்தியாசம்!...:)

பத்மநாபன் said...

ரொம்ப சரி தக்குடு...நன்றி..

அறிவுப்பூர்வமான கருத்துக்களுக்கு தளமாக இருப்பதில் ஆனந்த வாசிப்பு ஆனந்தம் கொள்கிறது....

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

@ தக்குடு
அப்பாதுரை சாரின் கேள்வி பொருள் பொதிந்தது.

இதில் விவாதம் கூடும் போது சமத்கிருதம்,தமிழ் இரண்டின் மொழி வழியாகப் பல விவாதங்கள் வந்தாக வேண்டும்.

அதோடு தமிழ் தெரிந்தவர்கள் எத்தனை பேர் திருப்புகழ் படிக்கிறார்கள் என்ற கேள்வியின் தளத்திலும் விவாதம் செல்ல வேண்டும்.

உண்மையில் கடவுள் சிவனா,விஷ்ணுவா,கிருஷ்ணனா,கணபதியா,முருகனா,அம்பிகையா போன்ற கேள்விகள் வர வேண்டும்..

அத்தனை பேரும் கடவுள்களா எனில் எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும் என்ற கேள்வி வரவேண்டும்...

அல்லது இத்தனை கடவுள்களும் இல்லாத வேறு ஒன்றுதான் கடவுள் என்றால் அது என்ன என்ற கேள்வியும்,பின் ஏன் இத்தனை கடவுள் வடிவங்கள் என்ற கேள்வியும் வர வேண்டும்...

ஒருவழியாக கடவுள் இன்னதுதான் என்று தெளிந்தால்,ஏன் கடவுளை வழிபடவேண்டும் என்ற பொருள் வரவேண்டும்...

வழிபடா விட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்தும் என்ற பயம் காரணமா,அதுதான் பய'பக்தியா என்ற கேள்வி வர வேண்டும்...

வழிபடாதவர்கள் இழப்பது என்ன,வழிபடுபவர்கள் பெறுவது என்ன என்ற விசாரம் வர வேண்டும்...

இவை அத்தனையிலும் தெளிந்து நிற்பது என்ன என்பது தெரியும் போது,அது அதுதானா என்பதற்கான அறிவும்,தெளிவும் கிடைக்க நமக்கு அருள் வேண்டும்...

அதனால்தான் அவனருளாலே அவன்தாள் வணங்கி'ப் பாடிய காரணம் புரிய வேணும்....

எத்தனை இருக்கிறது,ஒரு பதிவில் சாத்தியமா ? !

:))

பத்மநாபன் said...

அன்பு அறிவன்... தத்துவ விசாரங்களை கேள்விகளாக அடுக்கும் பாங்கை பாலகுமாரனுக்கு அப்புறம் உங்களிடம் காண்கிறேன்...

Powered By Blogger