Saturday, January 30, 2010

வாழ்க்கை விதி ---- 90 / 10






''திறமையே அதிர்ஷ்டம் '' இது நம் சிந்தனை எழுத்தாளர் எஸ் ..ரா , இந்த வார விகடனில் நம் மீது ''சிறிது வெளிச்சமாக '' அடித்த பெரிய வெளிச்சம் ....

 இதை படித்து முடித்தவுடன் ,என் மின்னஞ்சலை நிரவியதில்.....நண்பரின்   மின்னஞ்சல் ஒன்று 90 / 10 Principles - Written by Stephen covey
writer of 7 Habits of Highly effective people ...

ஸ்டிபன் கோவி , வாசிப்பவர்களின் இனிய நண்பன் , இழுத்து உட்கார வைத்து முழுதும்  வாசிக்க வைப்பார் .. எஸ் ..ரா , மாதிரியே ....

ஸ்டிபன் கோவி, என்ன சொல்றார்னு பார்ப்போம் .....

முதல் திறமை , நிலைமையை எப்படி கையாள்வது ........

  தொண்ணூறுக்கு பத்து விதி ... இந்த விதிதான் நம் தலை விதி என்கிறார் .
  ( இதை படிப்பது அதில் சேர்த்தி இல்லை )

  நம் வாழ்க்கையை மாற்றும் , குறைந்த பட்சம், நிலைமையை சீராக
  கையாளும் வித்தையை கற்று கொடுக்கும் இந்த விதி....

 அதென்ன தொண்ணூறு ? அப்புறம் பத்து ?

நம் 100 சதவிகித வாழ்க்கையில் , 10 சதவிகிதம் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நம்மை தாக்கவரும் சம்பவங்கள், பிரச்சினைகள் ... 90 சதவிகிதம் நம் கட்டுப்பாட்டிலும் ஆளுமையிலும் உள்ள அதற்க்கான தீர்வுகள் , அதை கையாளும் முறைகள் .


போக்குவரத்தில் சிவப்பு விளக்கு எரிவது நம் கட்டுபாட்டில் இல்லை .. ஆனால் அதற்க்கு கட்டுப்பட்டு செல்வது நம் ஆளுமையில் தானே .....


ஸ்டிபன் கோவி சொன்ன உதாரணத்தை , நம்ம ஊர் பாணியில் பார்ப்போம் ...

ராம் , ராஜி , அவர்களது செல்லமகள் அபி சேர்ந்து காலை சிற்றுண்டிக்கு அமர்கிறார்கள் ....வேலைக்கு , பள்ளிக்கு செல்லும் பரபரப்பு ...
அபி , தண்ணீர் கோப்பையை எட்டி எடுக்கும் பொழுது , கை தவறுதலாக காப்பி கோப்பை தட்டி விட ராமின் அலுவலக சட்டையில் காப்பி  சிந்தி வழிகிறது... வந்ததே ராமிற்கு கோபம் , கன்னாபின்னாவென்று அபியை திட்டி, அதோடு அடங்காத கோபம் , குழந்தைக்கு நான்கைந்து பளார் பளார் ... செல்லுமிடத்து சினம் .

குறுக்கே வந்த   ராஜிக்கும் சரியான திட்டு ... நல்லா வளர்த்தியிருக்க ......வாக்கு வாதங்கள் ..... நிமிடங்கள் தொலைந்தன ... குழந்தை அழுது ஓயவில்லை ... உணவு மறுத்தாள்... பள்ளி பேருந்து போயே போய் விட்டது... ராம் பதட்டமாக மாடிக்கு ஓடிச்சென்று , அலமாரியில் எல்லாம் கலைத்து , மற்றொரு சட்டையை எடுத்து , பொத்தான்களை மாற்றி மாற்றி ஒரு வழியாக சரியாக போட்டு கொண்டு , அழும் மகளை காரில் போட்டு,, அலுவலகம் போகும் வழியில் பள்ளியில் விட்டான் .. அபி திரும்பி கூட பார்க்காமல் .... இவனும் வற்றாத கோபத்தோடு , 50 இல் செல்லும் வேக பாதுகாப்பு பகுதியில் 100 இல் செல்ல , போக்குவரத்து காவல் '' அதி வேகம் '' என்று தண்டம் வைத்தது.... அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்து விட்ட அலுவலகத்தில் இறங்கியவுடன் பார்கிறான் ... அலுவலக ''சுருக்'' பெட்டியும் , மடி கணினியும் வீட்டிலேயே மறந்து வந்துள்ளான் ... மோசம் .... தொடர்ச்சியாகி ---மிக மோசத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது ...

   மோசங்களுக்கும் பின் தொடர்ந்த மோசங்களுக்கும் என்ன காரணம் ?

அ ... சிந்திய காப்பி .

ஆ ... தவறுதலாக தட்டிவிட்ட அபி .

இ ... ராம் ..ராமின் எதிர் வினை

எல்லோர்க்கும் தெரிந்த பதில் தான் '' இ ''

காப்பி தவற விடப்பட்ட சம்பவம் ராமின் கட்டுபாட்டில் இல்லை .

  அப்படி இருந்தாலும், அன்று அவன் மீது திணிக்கப்பட்ட பிரச்சினையின்
  தாக்கம் 10 சதம் தான் .. ஆனால் அப்பிரச்சினையின் தீர்வும் ,  
  பின்விளைவுகளுமான 90 சதம் முழுக்க முழுக்க அவன்
  கட்டுப்பாட்டில் ,ஆளுமையில் தான் இருந்தது

   என்ன செய்திருக்கலாம்? ....அதே சூழ்நிலையில்......

   காப்பி தவறுதலாக தட்டிவிடப்படுகிறது ,அபி குரலெடுத்து    
   அழ ஆரம்பிக்கிறாள் .. ராம் அரை வினாடிக்குள் சுதாரித்து ,
   தன் மகளை  '' செல்லம் , ஒண்ணும் இல்லடா ... கூல்.....  கூல் ,
   அப்பா  பார்த்துக்கிறேன் , நீ   சாப்பிட்டிட்டு,, ஸ்கூல் க்கு  
    கெட் ரெடி ... கெட்  ரெடி ...    '' எந்த நேர இழப்பும் இல்லை .

நிதானமாக , சட்டையை மாற்றிகொள்கிறான்... '' சுருக்'' பெட்டியும் , மடிக் கணினியும் எடுத்து கொண்டு ஜன்னல் வழியாக பார்க்கிறான் .
அபி மகிழ்ச்சியாக, தன் பள்ளி தோழிகளை பார்க்கும் உற்சாகத்தில் செல்கிறாள் ...எதேச்சையாக திரும்பும் அவள் , அப்பாவை பார்க்கிறாள்
அழகான கையசைப்பு .. இவனும் பூரிப்பாக மகளுக்கு, பறக்கும் பாச முத்தம் கொடுக்கிறான் ... கார் எடுக்கிறான் , இனிமையான இசையோடு
10 நிமிடம் முன்னமே அலுவலகம் வந்து சேர்கிறான் ... அலுவலகத்தில் சுகம் ... சுகம்... எல்லாம் சுகம் ..

ஒரே சம்பவம் , இரு வேறு அணுகு முறைகள்,
இரு வேறு முடிவுகள் ..
ஒன்று சிக்கலான மோசமான முடிவு,
மற்றொன்று சுலபமான சுகமான முடிவு.

எல்லா பிரச்சினைகளையும் 90 - 10 விதியில் புடம் போட்டு சுக தீர்வு காணலாம் ... சாதிப்போம்..

நம் கட்டுப்பாட்டில் இல்லா 10 சதம் வாழ்க்கை பிரச்சினைகள் , 90 சதம் நம் கட்டுப்பாட்டிலே உள்ள வாழ்க்கை தீர்வுகள்....

  திறமையை வளர்த்து கொள்வோம் . அதற்கு பெயர் வேண்டுமென்றால் ''அதிர்ஷ்டம் '' என்று வைத்து கொள்ளலாம் ....


Powered By Blogger