Tuesday, May 25, 2010

பாடல்கள்......பாடகர்கள்........

                                                                     இந்த''பிடித்த பாடகர்கள் ''தொடர் பதிவிற்கு சென்ற வருடம் அழைத்த     அபுதாபி அநன்யா  அவர்களுக்கு நன்றி  .....

பாடகர்கள் என்றால் அன்று   டி.ம். எஸ் .... முதல் இன்று கார்த்திக் வரையிலும் , எம் .எஸ்  அம்மா முதல்  இன்று  மஹதி  வரையிலும்  அனைவரும்   பல பாடல்களில் பிடிக்க படுகிறார்கள் ..... ரசிக்க வைக்கிறார்கள்.  

என் போன்று சராசரி தமிழ்ரசிகர்களுக்கு ,ஐந்தே ஐந்து என்பது மிக கடினமான சவால் ...... நினைவகத்திலிருந்து   தனியாக பிரித்து எடுக்க     ....இன்றும்  ரசித்து வருவதில் இப்பதிவிற்க்காக   ஐந்து மட்டுமே ...... பாடல்களும்  ,பாடகர்களும்  சொந்த அனுபவங்களுமாக..... 

1 .  சொல்லத்.....தா...ன் ......... நினைக்கிறேன் ...ஜானகி அம்மாவின்  அற்புதமான குரலில்   இனிமையான பாடல் ... இதில் உச்சஸ்தாய்  உற்சாக துணைக்குரல்  கொடுத்து   மெல்லிசை மன்னர்  தேனாக  இசைஅமைத்து  வடித்து எடுத்த பாடல் ..... கோவையில் ஒரு ஞாயிறன்று நானும் தங்கமணியும் எங்கள் இரு குட்டி பசங்களை  அழைத்து கொண்டு அப்போதைக்கு எங்களூரின் ஒரே பூங்காவான வ .உ .சி  பூங்காவிற்கு சென்றிருந்தோம் ... வழக்கமான  ரவுண்ட் அப்  செய்து கொண்டிருக்கும் பொழுது, வீடியோ கேமிரா சகிதம் இரண்டு மூன்று பேர் எங்களை முற்றுகை இட்டனர். ``என்னப்பா விஷயம்`` என்று கேட்டால், அவர்கள் விஜய் டிவியிலிருந்து வருவதாக அடையாள அட்டை காட்டினார்கள்  ``நிங்கள் விரும்பிய பாடல் `` நிகழ்ச்சிக்கு   ஒரு சின்ன பேட்டி எடுக்கபோகிறோம் ..உடனே கர்சிப் பவுடர் மேக்-அப் முடித்து தயாரானோம் .. வழக்கக்கேள்விகள் முடிந்து , விருப்பபாடல் என்னவென்று பேட்டியாளார் கேட்க, இப்பாடலை ஒருமனதாக நினைத்ததை  சொன்னோம்..  பேட்டி மரபின் படி இரு வரி பாட சொல்ல , ரொம்ப தயங்கி, தயங்கிஆசை பொங்குது பால்  போலே ... அவன் அனலாய் பார்க்கும் பார்வையிலே''   என்று கோரஸ் போட்டோம்..வரும் வெள்ளி போய்
அடுத்த வெள்ளி இரவு 10 மணிக்கு  ஒலி/ஒளி பரப்படும் என்று சொன்னார்கள்.. நாங்கள் பாடியது சொதப்பியதால் நண்பர் /உறவினர்களுக்கு நிகழ்ச்சி பற்றி சொல்லவில்லை.. அந்த நாளும் வந்தது ..அப்போது எங்கள் விட்டில் கருப்பு-வெள்ளை தொலை காட்சி தான். தேர்வு செய்த பாட்டும் கருப்பு வெள்ளை, படத்தில் உள்ளபடியே ரசிக்கபோகிறோம் என்று 9.30 மணியிலிருந்தே தொலை காட்சி முன் அமர்ந்து கொண்டோம்.  சரியாக 9.45 க்கு கேபிள் காரரின் வீட்டில் கரண்ட் கட்..அப்புறம் அன்று வரவேயில்லை. எங்கள் வீட்டில் கரண்ட் இருந்தும் பயனில்லை.. தொலை பரப்பினார்களா என்றும் தெரியவில்லை. அன்று எங்களிடம் தப்பிய பாட்டு .... இன்றும் மனதிலும், யு -ட்யுப் லியும் பத்திரமாக இருக்கிறது... இனிக்கிறது ....

2. கேள....டி ... கண்மணி.. பாடகன் சங்கதி ...  நீ இ....தை கேட்பதால்  நெஞ்சிலோ.....ர்  நிம்மதி .பாலு அன்றிலிருந்து இன்று வரை இளைநர்களுக்கு குரல் தெய்வமாகாவே விளங்கி வருகிறார் ...  கல்லூரி காலத்தில் ஏவிம் ஸ்டியோவில் சக மாணவர்களோடு  அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ( அக்காலத்தில் தொழில் நுட்ப சுற்றுலா என்று அங்கேல்லாம் அழைத்து செல்லுவார்கள்)  அவரிடம் ``லவ் பாலு `` என்று ஆட்டோ க்ராப் பெற்ற ஆட்டோ க்ராப் மனதில் இருக்கிறது.  இந்த பாடல் பிடிக்க இன்னமும் பிரத்யேக காரணம் ..ஒரு வெள்ளி மாலை  கோனியம்மன் கோவிலுக்கு சென்று  தரிசனம் முடிந்து , மரபிற்க்காக சற்று உட்கார்ந்து இருந்த சமயத்தில் ..வெளியில் எங்கிருந்தோ இப்பாடல் சன்னமாக ஒலி பரப்பிக்கொண்டிருந்தது.. இதை கேட்டுகொண்டிருந்த தங்கமணி, ''பராக்'' பார்த்து கொண்டிருந்த என்னிடம் , ``இந்த பாட்டை கேட்டிங்களா?, வார்த்தைக்கு வார்த்தை அம்மன் கிட்ட  பாடற மாதிரியே இருக்கல்ல.`` அப்படித்தான் இருந்தது ஒவ்வொரு வரியும்.  அன்றிலிருந்து  இப்பாடல் கேட்கும்பொதெல்லாம் ஒரு பரவசம். நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான், நான் தேடும் சுமை தாங்கி நீ அல்லவா... .......நீ என்னை தாலாட்டும் தாய் அல்லவா..பாலு அப்படி வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து பாடி இருப்பார்.
3.கண்கள் இரண்டால் ...கண்கள் இரண்டால்.....  தொலைக்காட்சியில் அழகாக தமிழில் பேசி பரிசு போட்டிகள்  நடத்தி, பேட்டிகள் எடுத்து கொண்டிருப்பவர்  என்றவகையில் தெரிந்த ஜேம்ஸ் வசந்தன் இவ்வளவு அழகான பாடலை கொடுப்பார் என்று யாரும் எதிர் பார்த்திருக்கமாட்டார்கள்.  அதுவும் புத்தம்புதிய பாடகர்களை கொண்டு, திரை காண் தமிழ் மக்களை அவர் பக்கம் திரும்ப வைத்த பாட்டு..அந்த புதிய பாடகர்கள் தீபாமிரியம் ,பெல்லீ ராஜ் நிறைய பாடவேண்டும்.. கூடவே என்னை மலரும் நினைவுகளாக , பெல்ஸ் நாயகனும், தாவணிப்பெண்ணும் 80 களுக்கு இழுத்து சென்றார்கள். அந்த நாட்களில், பெல்ஸ் பேன்ட் அடிப்பாகம் ஒன்றரை அடிக்கு ஒரு இன்ச் குறைந்தாலும் கிண்டலடிக்கப்படுவோம்..அதே போல் சைக்கிள் ஒட்டுவதற்கு கைகள் தேவைப்படாத விஷயம்.  இனி பாட்டு....உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை .......
4. தொலை காட்சியில் எத்தனை நிகழ்ச்சி, ''சங்கிதம்'' பற்றி வந்தாலும், எனக்கு இன்னமும் பிடிபடாத விஷயமாகவே இருந்து வருகிறது..    என்னை பொறுத்தவரை, சரணம் என்றால் அய்யப்பா சரணம், முருகா சரணம்  தான்....அனு, பல்லவியெல்லாம் சினிமா / சிரியல்  நடிகைகள். ..இப்படி ஞானமே  இல்லாதபோதும்  சுதா ரகுநாதன் அவர்களது பாடல்கள் பிடிக்கும். சங்கிதத்தில் கரை கண்ட சுதா அவர்களாகட்டும் , பாம்பே ஜெ ஆகட்டும் , சினிமா பாடல்களை வெகு அனாயிசமாக (கொஞ்சம் அண்டர் பிளெ செய்தும் ) பாடி ரசிகர்களை அசத்தி விடுகிறார்கள் . அனல் மேலே பனித்துளி, அலை பாயும் ஒரு கிளி ... சுகந்த தென்றலாக  அமைந்த இந்த பாட்டை மேலும் பிடிக்க காரணம் நம்ம `சூர்யா தான் ....எந்த காற்றின் அளா...வலில் மலரிதழ்கள் விரிந்திடுமோ...

 5. இசையையும் தமிழையும் சினிமாவில் ஒன்று சேர்த்ததோடு மட்டுமல்லாமல் தானே பாடியும் நடித்த டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியே ஆக வேண்டும்...இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை .... மிகப்பழைய பாடலாக இருந்தாலும் , சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் என்னில் ஊற ஆரம்பித்தது..தொடர்ந்து காலை `ஜெயா` விலோ `விஜய்`யிலோ பரப்பபட, நித்தம் கேட்கும் பாடலாக இருந்தது ..உருக்கவைக்கும் குரல்....நடிப்பிலும் உருக்கம்.. அன்று புரட்சித்தலைவர் முதல் , தலதளபதிகள் தொடர்ந்து இன்று கோரிப்பாளையம் ராம்கி வரை தங்கள் படக்காதலிகளை கண்டவுடன் இரு கை விரித்து பாடுதலும் ,சடார்,சடாரென்று முழந்தாள் இடுதலும் டி.ஆர்.ம் அவர்களிடமிருந்து தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்... இப்பாடல் தமிழிசைக்கு வந்த ஆபத்திற்க்கு ...சிவனிடம் இரைஞ்சும் அருமையான வரிகளோடு தனக்கே உரித்தான வெண்கல  குரலில்.... பேசும் தமிழ் அழைத்தும்  வாராதிருப்பதென்ன...... 
இன்னமும் எத்தனையோ பாடகர்களும் பாட்டுக்களும் இருக்கிறது,,, இது போல் மிண்டும் ஒரு சுற்று அடுத்த வருடம் வராமலா போகும் ?... அடுத்த தொடர் சுற்றில் பார்க்கலாம்....

சொந்தப்பாட்டாக இருந்தாலும், இதுவும் பாட்டு பற்றியது தான்...நாங்கள் சென்னையில் புதிதாக குடியெறிய அடுக்ககத்தில் நேர் மேல் மாடியிலும், பக்கத்திலுமாக இரு பாட்டு டீச்சர்கள் குடி வந்துள்ளார்கள்..அடுத்த விடுப்பில் ஊருக்கு செல்லுமுன் தங்கமணி சரள / ஜண்ட வரிசையோடவோ அல்லது  நேர் பாட்டாகவோ..எம்.எஸ்  அம்மாவின்...குறை ஒன்றுமில்லை பாட்டையும், நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்  நிறைந்த சுடர் மணிப்பூண் பாட்டையும். கற்று கொண்டுவிடுவார்கள் எனும் நம்பிக்கை உள்ளது...பார்ப்போம் ..எங்கள் ப்ளாக்கின்  அதிர்ஷ்டத்தை.......

நண்பர்கள்  தொடர நினத்தால் தொடரலாம்