Tuesday, May 25, 2010

பாடல்கள்......பாடகர்கள்........

                                                                     இந்த''பிடித்த பாடகர்கள் ''தொடர் பதிவிற்கு சென்ற வருடம் அழைத்த     அபுதாபி அநன்யா  அவர்களுக்கு நன்றி  .....

பாடகர்கள் என்றால் அன்று   டி.ம். எஸ் .... முதல் இன்று கார்த்திக் வரையிலும் , எம் .எஸ்  அம்மா முதல்  இன்று  மஹதி  வரையிலும்  அனைவரும்   பல பாடல்களில் பிடிக்க படுகிறார்கள் ..... ரசிக்க வைக்கிறார்கள்.  

என் போன்று சராசரி தமிழ்ரசிகர்களுக்கு ,ஐந்தே ஐந்து என்பது மிக கடினமான சவால் ...... நினைவகத்திலிருந்து   தனியாக பிரித்து எடுக்க     ....இன்றும்  ரசித்து வருவதில் இப்பதிவிற்க்காக   ஐந்து மட்டுமே ...... பாடல்களும்  ,பாடகர்களும்  சொந்த அனுபவங்களுமாக..... 

1 .  சொல்லத்.....தா...ன் ......... நினைக்கிறேன் ...ஜானகி அம்மாவின்  அற்புதமான குரலில்   இனிமையான பாடல் ... இதில் உச்சஸ்தாய்  உற்சாக துணைக்குரல்  கொடுத்து   மெல்லிசை மன்னர்  தேனாக  இசைஅமைத்து  வடித்து எடுத்த பாடல் ..... கோவையில் ஒரு ஞாயிறன்று நானும் தங்கமணியும் எங்கள் இரு குட்டி பசங்களை  அழைத்து கொண்டு அப்போதைக்கு எங்களூரின் ஒரே பூங்காவான வ .உ .சி  பூங்காவிற்கு சென்றிருந்தோம் ... வழக்கமான  ரவுண்ட் அப்  செய்து கொண்டிருக்கும் பொழுது, வீடியோ கேமிரா சகிதம் இரண்டு மூன்று பேர் எங்களை முற்றுகை இட்டனர். ``என்னப்பா விஷயம்`` என்று கேட்டால், அவர்கள் விஜய் டிவியிலிருந்து வருவதாக அடையாள அட்டை காட்டினார்கள்  ``நிங்கள் விரும்பிய பாடல் `` நிகழ்ச்சிக்கு   ஒரு சின்ன பேட்டி எடுக்கபோகிறோம் ..உடனே கர்சிப் பவுடர் மேக்-அப் முடித்து தயாரானோம் .. வழக்கக்கேள்விகள் முடிந்து , விருப்பபாடல் என்னவென்று பேட்டியாளார் கேட்க, இப்பாடலை ஒருமனதாக நினைத்ததை  சொன்னோம்..  பேட்டி மரபின் படி இரு வரி பாட சொல்ல , ரொம்ப தயங்கி, தயங்கிஆசை பொங்குது பால்  போலே ... அவன் அனலாய் பார்க்கும் பார்வையிலே''   என்று கோரஸ் போட்டோம்..வரும் வெள்ளி போய்
அடுத்த வெள்ளி இரவு 10 மணிக்கு  ஒலி/ஒளி பரப்படும் என்று சொன்னார்கள்.. நாங்கள் பாடியது சொதப்பியதால் நண்பர் /உறவினர்களுக்கு நிகழ்ச்சி பற்றி சொல்லவில்லை.. அந்த நாளும் வந்தது ..அப்போது எங்கள் விட்டில் கருப்பு-வெள்ளை தொலை காட்சி தான். தேர்வு செய்த பாட்டும் கருப்பு வெள்ளை, படத்தில் உள்ளபடியே ரசிக்கபோகிறோம் என்று 9.30 மணியிலிருந்தே தொலை காட்சி முன் அமர்ந்து கொண்டோம்.  சரியாக 9.45 க்கு கேபிள் காரரின் வீட்டில் கரண்ட் கட்..அப்புறம் அன்று வரவேயில்லை. எங்கள் வீட்டில் கரண்ட் இருந்தும் பயனில்லை.. தொலை பரப்பினார்களா என்றும் தெரியவில்லை. அன்று எங்களிடம் தப்பிய பாட்டு .... இன்றும் மனதிலும், யு -ட்யுப் லியும் பத்திரமாக இருக்கிறது... இனிக்கிறது ....





2. கேள....டி ... கண்மணி.. பாடகன் சங்கதி ...  நீ இ....தை கேட்பதால்  நெஞ்சிலோ.....ர்  நிம்மதி .பாலு அன்றிலிருந்து இன்று வரை இளைநர்களுக்கு குரல் தெய்வமாகாவே விளங்கி வருகிறார் ...  கல்லூரி காலத்தில் ஏவிம் ஸ்டியோவில் சக மாணவர்களோடு  அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ( அக்காலத்தில் தொழில் நுட்ப சுற்றுலா என்று அங்கேல்லாம் அழைத்து செல்லுவார்கள்)  அவரிடம் ``லவ் பாலு `` என்று ஆட்டோ க்ராப் பெற்ற ஆட்டோ க்ராப் மனதில் இருக்கிறது.  இந்த பாடல் பிடிக்க இன்னமும் பிரத்யேக காரணம் ..ஒரு வெள்ளி மாலை  கோனியம்மன் கோவிலுக்கு சென்று  தரிசனம் முடிந்து , மரபிற்க்காக சற்று உட்கார்ந்து இருந்த சமயத்தில் ..வெளியில் எங்கிருந்தோ இப்பாடல் சன்னமாக ஒலி பரப்பிக்கொண்டிருந்தது.. இதை கேட்டுகொண்டிருந்த தங்கமணி, ''பராக்'' பார்த்து கொண்டிருந்த என்னிடம் , ``இந்த பாட்டை கேட்டிங்களா?, வார்த்தைக்கு வார்த்தை அம்மன் கிட்ட  பாடற மாதிரியே இருக்கல்ல.`` அப்படித்தான் இருந்தது ஒவ்வொரு வரியும்.  அன்றிலிருந்து  இப்பாடல் கேட்கும்பொதெல்லாம் ஒரு பரவசம். நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான், நான் தேடும் சுமை தாங்கி நீ அல்லவா... .......நீ என்னை தாலாட்டும் தாய் அல்லவா..பாலு அப்படி வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து பாடி இருப்பார்.




3.கண்கள் இரண்டால் ...கண்கள் இரண்டால்.....  தொலைக்காட்சியில் அழகாக தமிழில் பேசி பரிசு போட்டிகள்  நடத்தி, பேட்டிகள் எடுத்து கொண்டிருப்பவர்  என்றவகையில் தெரிந்த ஜேம்ஸ் வசந்தன் இவ்வளவு அழகான பாடலை கொடுப்பார் என்று யாரும் எதிர் பார்த்திருக்கமாட்டார்கள்.  அதுவும் புத்தம்புதிய பாடகர்களை கொண்டு, திரை காண் தமிழ் மக்களை அவர் பக்கம் திரும்ப வைத்த பாட்டு..அந்த புதிய பாடகர்கள் தீபாமிரியம் ,பெல்லீ ராஜ் நிறைய பாடவேண்டும்.. கூடவே என்னை மலரும் நினைவுகளாக , பெல்ஸ் நாயகனும், தாவணிப்பெண்ணும் 80 களுக்கு இழுத்து சென்றார்கள். அந்த நாட்களில், பெல்ஸ் பேன்ட் அடிப்பாகம் ஒன்றரை அடிக்கு ஒரு இன்ச் குறைந்தாலும் கிண்டலடிக்கப்படுவோம்..அதே போல் சைக்கிள் ஒட்டுவதற்கு கைகள் தேவைப்படாத விஷயம்.  இனி பாட்டு....உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை .......




4. தொலை காட்சியில் எத்தனை நிகழ்ச்சி, ''சங்கிதம்'' பற்றி வந்தாலும், எனக்கு இன்னமும் பிடிபடாத விஷயமாகவே இருந்து வருகிறது..    என்னை பொறுத்தவரை, சரணம் என்றால் அய்யப்பா சரணம், முருகா சரணம்  தான்....அனு, பல்லவியெல்லாம் சினிமா / சிரியல்  நடிகைகள். ..இப்படி ஞானமே  இல்லாதபோதும்  சுதா ரகுநாதன் அவர்களது பாடல்கள் பிடிக்கும். சங்கிதத்தில் கரை கண்ட சுதா அவர்களாகட்டும் , பாம்பே ஜெ ஆகட்டும் , சினிமா பாடல்களை வெகு அனாயிசமாக (கொஞ்சம் அண்டர் பிளெ செய்தும் ) பாடி ரசிகர்களை அசத்தி விடுகிறார்கள் . அனல் மேலே பனித்துளி, அலை பாயும் ஒரு கிளி ... சுகந்த தென்றலாக  அமைந்த இந்த பாட்டை மேலும் பிடிக்க காரணம் நம்ம `சூர்யா தான் ....எந்த காற்றின் அளா...வலில் மலரிதழ்கள் விரிந்திடுமோ...





 5. இசையையும் தமிழையும் சினிமாவில் ஒன்று சேர்த்ததோடு மட்டுமல்லாமல் தானே பாடியும் நடித்த டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியே ஆக வேண்டும்...இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை .... மிகப்பழைய பாடலாக இருந்தாலும் , சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் என்னில் ஊற ஆரம்பித்தது..தொடர்ந்து காலை `ஜெயா` விலோ `விஜய்`யிலோ பரப்பபட, நித்தம் கேட்கும் பாடலாக இருந்தது ..உருக்கவைக்கும் குரல்....நடிப்பிலும் உருக்கம்.. அன்று புரட்சித்தலைவர் முதல் , தலதளபதிகள் தொடர்ந்து இன்று கோரிப்பாளையம் ராம்கி வரை தங்கள் படக்காதலிகளை கண்டவுடன் இரு கை விரித்து பாடுதலும் ,சடார்,சடாரென்று முழந்தாள் இடுதலும் டி.ஆர்.ம் அவர்களிடமிருந்து தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்... இப்பாடல் தமிழிசைக்கு வந்த ஆபத்திற்க்கு ...சிவனிடம் இரைஞ்சும் அருமையான வரிகளோடு தனக்கே உரித்தான வெண்கல  குரலில்.... பேசும் தமிழ் அழைத்தும்  வாராதிருப்பதென்ன...... 




இன்னமும் எத்தனையோ பாடகர்களும் பாட்டுக்களும் இருக்கிறது,,, இது போல் மிண்டும் ஒரு சுற்று அடுத்த வருடம் வராமலா போகும் ?... அடுத்த தொடர் சுற்றில் பார்க்கலாம்....

சொந்தப்பாட்டாக இருந்தாலும், இதுவும் பாட்டு பற்றியது தான்...நாங்கள் சென்னையில் புதிதாக குடியெறிய அடுக்ககத்தில் நேர் மேல் மாடியிலும், பக்கத்திலுமாக இரு பாட்டு டீச்சர்கள் குடி வந்துள்ளார்கள்..அடுத்த விடுப்பில் ஊருக்கு செல்லுமுன் தங்கமணி சரள / ஜண்ட வரிசையோடவோ அல்லது  நேர் பாட்டாகவோ..எம்.எஸ்  அம்மாவின்...குறை ஒன்றுமில்லை பாட்டையும், நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்  நிறைந்த சுடர் மணிப்பூண் பாட்டையும். கற்று கொண்டுவிடுவார்கள் எனும் நம்பிக்கை உள்ளது...பார்ப்போம் ..எங்கள் ப்ளாக்கின்  அதிர்ஷ்டத்தை.......

நண்பர்கள்  தொடர நினத்தால் தொடரலாம்


33 comments:

Ananya Mahadevan said...

அருமையான செலக்‌ஷன்ஸ் பத்து அங்கிள். அதிலும் கேளடி கண்மணி பாட்டைப்பத்தி ஆண்ட்டி ஜி யின் பார்வை ரொம்ப வித்தியாசமானது! ரொம்ப ரசித்தேன். ஆமாம். உண்மை தான். எந்தக்கஷ்டம் வந்தாலும் ஆதரவு நமக்கு கடவுள் தானே. அருமையான வார்த்தைகள். பாலு அவர்கள் கிட்டே ஆட்டோகிராஃப் வாங்கி இருக்கீங்களா? ஜூப்பர். ஸ்”கான் பண்ணி எனக்கு அனுப்பி வைக்கவும். பூஜை அறையில் ஃப்ரேம் செஞ்சு மாட்டணும். :)) விஜய்டீவீ மேட்டர் இவ்ளோ சோகமா ஆயிடுத்தா? ப்ச்! நம்ம ஜாதகமும் இதே டைப்பு தான். இருந்திருந்து சிரிப்பொலி அரவிந்த் ரோபோ ஷங்கர் நிகழ்ச்சியில பேசினா, நான் பேசின உடனே கரண்டு கட். அப்புறம் வேற ஒரு நாள் அதே நிகழ்ச்சியின் ரீ டெலிகாஸ்டு பார்த்தேன். நிம்மதி!

Ananya Mahadevan said...

எங்கள் ப்ளாக் கட்டாயம் கண் திறப்பார்கள். அவங்க இருக்கறதே அதுக்குத்தானே? ஹீஹீ.. என்னையெல்லாம் கூட ஊக்கப்படுத்தி இருக்காங்க!

எல் கே said...

அருமையான தேர்வுகள். விரைவில் உங்கள் தங்கமணி குரலில் பாட்டு கேட்கக் காத்திருக்கிறோம்

engalblog said...

இந்த பதிவு நன்றாக இருக்கின்றது. ஐந்து பாடல்களில் நான்கு எங்களுக்கும் பிடிக்கும். எங்கள் ப்ளாக் என்ன செய்யவேண்டும்? உத்தரவிடுங்கள், உதவுகிறோம்.
அன்புடன்
எங்கள் ப்ளாக்.
engalblog@gmail.com

geethasmbsvm6 said...

அருமையான தொகுப்பு, ஒரே ஒரு பாடல் தவிர மற்றவை கேட்டவையே. உங்கள் தங்கமணி சீக்கிரம் பாட்டுக் கற்றுக்கொண்டு பாடவும் வாழ்த்துகள். எங்கள் ப்ளாகில் இப்போவே பாடிக் கொடுக்கலாமே? கொடுத்ததும் சொல்லுங்க, கேட்கிறேன்.

பத்மநாபன் said...

நன்றி அநன்யா..தொடர் பதிவு அழைப்பிலிருந்து,தொடர் ஊக்கமளிப்பிற்க்கும்...நம்ம தங்ஸ் பாடல்களை வெகு ரசனையோடு ரசிப்பார்கள்..பாலு ஆட்டோ க்ராப், அம்மா கொடுத்த ட்ரன்க் பெட்டியில் இருக்கிறது தூசி தட்டி எடுத்து அனுப்புகிறேன்... அரவிந்த்,ரோபோ எனக்கு பிடித்த நகைச்சுவை ஜோடி.

எங்கள் ப்ளாக்கின் சேவை அருமை...

பத்மநாபன் said...

ரொம்ப நன்றி எல்.கே. உங்கள் வலைப்பூவில் நீங்கள் கொடுத்த அறிமுகம் மற்றும் ஊக்கம்,கொஞ்சம் விரைவில் பதிவு போட வைத்தது . தங்ஸ்..பாடவைத்து பதித்து அனுப்ப முயற்சி எடுக்கிறேன்..மீண்டும் நன்றி..

பத்மநாபன் said...

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி `` எங்கள் ப்ளாக் ``. உங்கள் சேவை பிரமிக்கவைக்கிறது. பதிவர்களின் நிறைய திறமைகளை வெளிக்கொண்டு வருகிறிர்கள் . உண்மை யில் `` எங்கள் ப்ளாக் ``, `` எங்கள் `` ப்ளாக் தான்.

பத்மநாபன் said...

உங்கள் மேலான வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி கீதாசாம்பசிவம் அவர்களே....கண்டிப்பாக தகவல் அளிக்கிறேன் சுட்டியின் ஒரு க்ளிக் தூரத்தில் தானே உள்ளீர்கள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் சூப்பர் சூப்பர்.. பழமையும் புதுமையும் கலந்த அழகான தேர்வுகள். இனி கேளடி கண்மணி பாட்டை எங்க கேட்டாலும் உங்க மனைவி சொன்ன விளக்கம் நிச்சியம் கண்ணு முன்னால வரும். சீக்கரம் அவங்க பாட்டை கேட்க ஆவலாய் இருக்கிறோம்... சூப்பர் (அனன்யா...சரியான ஆளை தான் தொடர் பதிவுக்கு கூப்ட்டுக்க...)

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்.தங்ஸ்...இப்படி பல பாடல்களை குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தமாறி ஃபிட்டப் பண்ணுவாங்க நம்ம தங்ஸ்..ஊருக்கு போய் பாடவச்சுருவோம்..

சாமக்கோடங்கி said...

நல்ல பாடல்கள்... தொகுத்த விதம் அருமை..

நன்றி..

பத்மநாபன் said...

வாழ்த்திற்கு நன்றி பிரகாஷ்....

sury siva said...

இதுவரை இந்தத் தலைப்பில் எழுதிய அனைத்து ( கிட்டத்தட்ட) பதிவாளர்களின் பதிவுகளையும்
படித்துவிட்டேன்.
உங்கள் பதிவும் பாடல்களும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன.

//சூப்பர் சூப்பர் சூப்பர்.. பழமையும் புதுமையும் கலந்த அழகான தேர்வுகள். இனி கேளடி கண்மணி பாட்டை எங்க கேட்டாலும் உங்க மனைவி சொன்ன விளக்கம் நிச்சியம் கண்ணு முன்னால வரும். சீக்கரம் அவங்க பாட்டை கேட்க ஆவலாய் இருக்கிறோம்...//

அப்பாவி சொன்னது போல
இப்பாவி சுப்பு தாத்தாவும்
அதே அதே !!!

வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

பத்மநாபன் said...

நன்றி சுப்பு சார் .`` சுப்பு தாத்தா``ன்னா தான் உங்களுக்கு பிடிக்கும் னா..நன்றி சுப்பு தாத்தா.. பாட்டுக்காரரே வந்து வாழ்த்தியது மிகுந்த ஊக்கம் கொடுக்கிறது...வந்தனம்..நன்றி..

Matangi Mawley said...

very nice choices... :) i also like "isai thamizh nee seitha".. ammmazing music.. KV mahadevan.. i guess so!

very well chosen!

பத்மநாபன் said...

பாராட்டுக்கிற்கு மிக்க நன்றி மாதங்கி...ஆமாம் கே.வி.எம் அவர்களே தான்... திருவிளையாடல் படம்..அந்த படத்தின் பாடல்கள் முழுவதும் இப்பொழுது கேட்டாலும் புத்துணர்வாக இருக்கும்...

ஷர்புதீன் said...

அருமை
:)

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஷர்புதீன்....முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

தாராபுரத்தான் said...

வாழ்த்துக்கு நன்றிங்க..மகிழ்ச்சியா ..நலமா..வளமா..நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க...

Nathanjagk said...

தேர்ந்த லைப்ரரியன் மாதிரி கச்சிதமாக மனசுக்குப் பிடித்த புத்தங்களை எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் பாடி, ஒளிப்பரப்பில் கேட்க முடியாத பாடலின் மென்சோகம் கவிதையா இருக்கு!
வாழ்வில் முதன் முறையாக திருப்பித் திருப்பிக் கேட்டப் பாடல் கேளடிக் கண்மணி.
டி. ஆர். மகாலிங்கம் பற்றி குறிப்பிட்டது ஆச்சரியம்!
எங்கள்-பிளாக் பக்கம் காதைத் திருப்பி வைத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் பத்மநாபன்!

பத்மநாபன் said...

நன்றி ஜகன் ...உங்கள் தட்டச்சிலிருந்து வரும் எழுத்துக்கள் எனக்கு கோவை தென்றலின் சுகம் ..
தற்போதய கூச்சலில் சற்று ஒதுங்கி அமைதியாக டி. ஆர் . ம் கேட்பதில் ஒரு ஆனந்தம் .
ஊர் சென்று '' பாடடீ கண்மணி '' என்று கேட்டு பார்க்கிறேன்...

Nathanjagk said...

பாடடீ கண்மணி :))
சுஜாதா தலைமை ரசிகர் என்பதை நிரூபிக்கறீங்க சார்!
உங்கள் கண்மணி என்ன பாடுவார் என்பதை யூகிக்க முடியுது:
ஒரு நாள் போதுமா...
ரைட்டா???
:)))

Unknown said...

அனல் மேலே பனித்துளி........இப்போது நானும் அந்த பாட்டுக்கு ரசிகன்..மலரும் நினைவுகள் அருமை.பிளாக் டிசைன் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள் சார்.

Unknown said...

அனல் மேலே பனித்துளி........இப்போது நானும் அந்த பாட்டுக்கு ரசிகன்..மலரும் நினைவுகள் அருமை.பிளாக் டிசைன் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள் சார்.

பத்மநாபன் said...

மீண்டும் நன்றி ஜகன்...

தோடி...எழுந்தோடி..எழுந்தோடீ ..வருவரோ.. போவரோ...பார்க்கலாம்....

பத்மநாபன் said...

நன்றி மின்னல் மஹேஷ்...நிங்களும் சலாலா வந்த பிறகு ஒரு தொகுப்பு போடுங்கள்..எல்லா ரசனையும் கலந்து.
அப்புறம் ப்ளாக் டிசைன் ..ஒரு வேடிக்கை..கைவைத்து க்கொண்டு சும்மா இராமல்..எச்.டி.எம்.எல்..ல் என்னுடய இன்ச் என்ஜினியரிங் புத்தியை காட்ட அது குளம்பிவிட்டது..அப்புறம் ஒரு வழியாக புது டெம்ப்ளட்க்கு போய்
தொந்திரவு கொடுக்காமல் அமைதியாக இருக்கிறேன்...

தக்குடு said...

//...இப்படி பல பாடல்களை குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தமாறி ஃபிட்டப் பண்ணுவாங்க நம்ம தங்ஸ்// ungalooda thangs aachey!!! athaan...:P

பத்மநாபன் said...

ஆஹா முதல் வருகை ,நன்றி தக்குடு . நம்மை வைத்து சில நகைச்சுவை பாடல்களை , அவங்க பிட்டப் பண்ணும்போது கொக்கு மாக்காகி அசடு வழிவதுண்டு .. அப்புறம் புளியோதரை தச்சு மம்முக்கும் (v) , அடுத்த உம்மாச்சிக்கும் வெய்ட்டிங் ....

பத்மா said...

நான் பயங்கர லேட் ..இருந்தாலும் எல்லா பாடல்களும் அருமை ...அனைத்தும் எனக்கும் பிடிக்கும்.


பாடல்களுக்கு விளக்கம் மிக அருமை .ஒரு originality இருக்கு பாஸ்

பத்மநாபன் said...

மிக்க நன்றி பத்மா..நான் இடுகைகள் போடும் வேகத்திற்கு இது லேட் எல்லாம் இல்லை..வாழ்த்திற்கும் வருகைக்கும் மீண்டும் நன்றி.

அ.முத்து பிரகாஷ் said...

பத்மா சார் ...
நீகள் பகிர்ந்த ஐந்து பாடல்களும் எனக்கு பிடித்த ஒன்று தாம் ...
உங்கள் விவரணைகளுக்கு பின்னர் மேலும் அவை பிடித்துப் போகின்றது ...
வருகிறேன் சார் !

பத்மநாபன் said...

நன்றி நியோ..உங்கள மாதிரி இளைநர் களுக்கு புதுப்பாடலோடு பழைய பாடல்களும் பிடிக்கும் என்பதற்க்கு அந்த பாடல்களின் பலம் தான் காரணம்.. வருகைக்கும் நன்றி தோழர்.

Powered By Blogger