Friday, December 31, 2010

ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

மகிழ்ச்சியான  2011  அனைவர்க்கும் அமைய நல்வாழ்த்துக்கள்...

ஆனந்தவாசிப்பும் தனது  ஒரு ஆண்டு நிறைவை முடித்து, இரண்டாம் ஆண்டில் கால் வைக்கிறது.. பதிவுகளை வாசித்து ரசிக்கும்,  ஆனந்த வாசிப்பு தத்தி தத்தி  சில பதிவுகளையும் பதித்தது.

இவ்வலைப்பூவை அன்போடு ஏற்று , வருகை புரிந்து  நேரம் ஒதுக்கி கருத்துரைகள் இட்ட அன்பான உள்ளங்களுக்கு மிகுந்த நன்றி ....
.,வருகை புரிந்து , நேரமின்மையால் வாசித்து மட்டும் சென்ற இனிய இதயங்களுக்கு  மிகுந்த நன்றி....

இந்த ஆண்டிலும் தொடரும் இனிய உறவுகளுக்கும் , வரும் புதிய நட்புகளுக்கும்  மிகுந்த மிகுந்த நன்றி......


ஒரு ஆனந்தமான பாடல் ...........


 

70 comments:

எல் கே said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

பத்மநாபன் said...

நன்றி எல்.கே.. உங்களனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

நூத்துக்குள்ள அடக்கிடுவோம் இந்த முறை.. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

பத்மநாபன் said...

நன்றி ஜீ... உங்கள் குடும்பத்தாரோடு உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

பத்மநாபன் said...

எல்லாம் உங்கள் கையில் தான் இருக்குங்க அப்பாதுரை ..பாரதி போதும் போதும் ன்னு சொன்னாதலே நாளை போட வேண்டிய இப்பதிவை இன்றே போட்டு விட்டேன்.

உங்களுக்கும் குடும்பத்தாரோடு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Aathira mullai said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பத்மநாபன்.

பத்மநாபன் said...

இன்றைய பதிவிற்கும் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஆதிரா..

மீண்டும் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுபத்ரா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!

ஆனந்த வாசிப்பு இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்கும் வாழ்த்துகள்..!

(இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நன்றி!)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

happy new year wishes sir

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடல் ...ஆனந்தம் என்று பாடினாலும் மெல்லிய சோகம் இழையோடும் பாடல்! ஏன் யாருமே சங்கிலி படத்தில் வரும் 'நல்லோர்கள் வாழ்வைக் காக்க...' பாடல் போடுவதில்லை?

கலைஞர் டிவியில் நித்யஸ்ரீ கேட்டுக் கொண்டே எழுதுகிறேன்..!

பத்மநாபன் said...

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சுபத்ரா.உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

பத்மநாபன் said...

வாழ்த்திற்கு நன்றி ஸ்ரீ ...அந்த பாடல் புத்தாண்டை மனதில் கொள்ளாமல் வித்தியாசமாக , பாடலில் விஜய் தவிர மற்றவர்களின் ஆனந்த கொண்டாட்டத்தை ரசித்து இட்டேன் ( குறிப்பாக நாகேஷ் & நம்பியார் ஆட்டம் )

நல்லோர்கள் வாழ்வை காக்க ...இதுவும் புத்தாண்டு பாடல் தான் ..ரொம்ப ராவ்டி பண்ணறதுன்னால ஆர்.வி. எஸ் கூட அடக்கி வாசிச்சுட்டாருன்னு நினைக்கிறேன்...

பத்மநாபன் said...

நன்றி ராஜிவன்..முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

RVS said...

நா...... அடக்கி... வாசிக்கிறேனா .. ... என்னண்ணா .. ஒன்னும் புரியலையே.. புரியலையே.. ???
விஜய் உருப்புடியா நடிச்ச படித்ததை கண்ணால காண விட்டேனா பார்ன்ராறு ஸ்ரீராம்.. :-) ;-)

உங்களை மனசார நிழலாக பின்தொடர்ந்தாலும்.. நீங்க பதிவு போட்டவுடனே என்னோட டாஷ்போர்டுல காமிக்க மாட்டேங்குதே.. யாராவது சூனியம் வச்சுட்டாங்களா.. தெரியலையே..

RVS said...

வயசு ஏற ஏற குழந்தை மாதிரி அப்படின்னு சிம்பாலிக்கா காமிக்கிறீங்களா? ;-)

பத்மநாபன் said...

அடக்கின்னா ...ரொம்பவே அடக்கி..அதாவது , எதாவது விஷெசம் கண்டா சர சரன்னு பத்து பாட்டாவது எறக்கிருவிங்களே ..புத்தாண்டுக்கு அப்படி எறக்கியிருந்தா ஸ்ரீ யின் நல்லவர்க்கெல்லாம் பாட்டும் மாட்டியிருக்குமேன்னுதான் சொன்னேன்

(வாஷிங் பவுடர் தீர்ந்து போச்சு ஆர்.வி.எஸ் )

// நீங்க பதிவு போட்டவுடனே என்னோட டாஷ்போர்டுல காமிக்க மாட்டேங்குதே.. //

நம்ம வலைப்பூ தொழில் நுட்ப பிஸ்தா எல்.கே யின்அறிவுரை : ஒரு தடவை அன்ஃபாலோ பண்ணி திருப்பி ஃபாலோ பண்ணினா சரியாய்டும் ..எனக்கு அவருடய பதிவுகள் அப்படித்தான் தெரிய ஆரம்பிச்சுது....

என்னோட பதிவுகளுக்கு நீங்க சிரமமே படவேண்டாம்..ஆடிக்கு ஒருதடவை வந்து பாருங்க அப்புறம் அமாவசைக்கு ஒரு தடவை வந்து பாருங்க ..ஒரு பதிவு மாட்டுனாலும் மாட்டும்...

பத்மநாபன் said...

//வயசு ஏற ஏற குழந்தை மாதிரி அப்படின்னு சிம்பாலிக்கா காமிக்கிறீங்களா? // இந்த வலைப்பூவின் வயதை காட்டுவதற்கு அந்த படம்..
குழந்தையை வாழ்த்தி மொய் வைங்க..

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆனந்த வாசிப்பு இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்கும் வாழ்த்துகள்.

RVS said...

இந்தாங்க பிடிங்க லட்சம்கட்டிவராகன் ;-)

பத்மநாபன் said...

மிக்க நன்றி வெங்கட்.... இனிய வாழ்த்திற்கு

பத்மநாபன் said...

கல்யாணத்தில வாத்தியாருங்க சொல்ற மாதிரியே சொல்றிங்க... வராகன் எல்லாம் இப்ப செல்லாது செல்லாது...

( உங்க தங்கமான மனசுக்கு நன்றி..நன்றி )

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

balutanjore said...

dear padmanabhan
wishing you and your family a happy and prosperous new year
balu vellore

பத்மநாபன் said...

புலவரிடம் கிடைத்த புத்தாண்டு தமிழ் பூச்சூடி பொட்டிட்டு பவனி வருகிறது..இங்கும் அழைத்து வந்ததற்கு நன்றி சிவா..

பத்மநாபன் said...

மிக்க நன்றி பாலு... இனிய முதல் வருகைக்கும் அன்பு வாழ்த்திற்கும்...

உங்களூக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய நல் வாழ்த்துக்கள்...

geetha santhanam said...

இரண்டாம் ஆண்டில் அடி அடுத்து வைக்கும் ஆனந்த வாசிப்புக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சுவையான விவாத மேடைகளை உங்கள் பதிவுகள் உருவாக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தக்குடு said...

'பாரதி' புகழ் பத்மனாபன் அண்ணா, ஒரு வருட நிறைவுக்கு நிறைவான வாழ்த்துக்கள். அந்த கட்டம் போட்ட சட்டை அழகா இருக்கு, நீங்க வரிசைல எங்கையாவது நின்னாக்க, ஹலோ Mr.கட்டம் போட்ட சட்டைனு யாராவது கூப்பிடாமல் இருக்க வேண்டும்..:P

Unknown said...

அன்பு பத்மநாபன்,
எல்லா வளமும் பெற்று இனிதுற வாழ இப்புத்தாண்டில் வாழ்த்துகிறேன்!!

நியூ இயர் ஈவை நிறைவாக கழித்தவர்கள், மறுநாள் காலையில் லேட்டாக எழுந்து ரொம்ப லேட்டாக எல்லாருக்கும் வாழ்த்துக்கள் சொல்வார்கள் - காரணம் ஹேங் ஓவர்தான்!
எனக்கு அப்படியெதுவும் இல்லை :)) வாழ்த்துவதை வருஷம் முழுதும் செய்யலாம் என்ற எண்ணம்தான்!!

எப்போதும் ஊக்கமூட்டும் தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றிகள்!!

பத்மநாபன் said...

வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கீதா மேடம்...

பத்மநாபன் said...

மிக்க நன்றி தக்குடு ...கட்டம் போட்ட சட்டை இப்ப ரொம்ப பெரிசாய்டுச்சு...

பத்மநாபன் said...

ஜெகன்.மிக்க நன்றி.. நீண்ட நாள் ஆகிவிட்டது..இவ்வருடமும் வ்லையின் உதவியில் மேன் மேலும் சுவையாக கருத்து பரிமாறிக்கொள்வதற்கு வாழ்த்துக்கள்...

அப்பாதுரை said...

ஸ்ரீராம்.. எனக்கு அந்தப் பாட்டு பிடிக்கும்.. எம்எஸ்வியின் டப்பா இசை (லொட்டு லொட்டு என்று ட்ரம்ஸ்) என்றாலும் கேட்கும்படி பாடியிருந்தார் டிஎம்எஸ். சாய்ராமுக்கு அனுப்பி வைத்தேன் - அதற்குப் பிறகு சரியாகப் பேசுவதில்லை அவர்.

ஸ்ரீராம். said...

அப்பாதுரை,
எனக்கு அபபடி ஒன்றும் விருப்பமான பாடல் இல்லை அது. புத்தாண்டைக் கொண்டாட பெரும்பாலும் எல்லோரும் ஓரிரண்டு பாடல்களையே தயார் செய்யுமிடத்தில் இன்னொரு சாய்ஸ் கொடுத்தேன்!

மோகன்ஜி said...

என் அன்பிற்கினிய பத்மநாபன்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இப்போதுதான் உங்கள் புகைப்படத்தைப் பார்க்கிறேன்.. கொஞ்சம் வயசுல சின்னவரா தெரியறீங்க.

தை பிறந்தால் வழிபிறக்கும்.. வானவில்லின் வண்ணமும் தெறிக்கும்.

உங்களுக்கு கூடைகூடையாய் என் அன்பு...

பத்மநாபன் said...

எந்த படம்ன்னு தெரியல... ப்ளாக் பையனுக்கு ஒரு வயசு ஆகிருக்கு அவ்வளவு தான்...எங்களுக்கும் சேர்த்தான உங்கள் ஆன்மீக ப்பயணம் எல்லா வளங்களையும் அளிக்கவல்லதாய் அமைய அய்யன் அய்யப்பனை வேண்டுகிறேன்... வானவில்லின் வண்ணத்தெறிப்புக்கு கண்களை தயார் செய்து கொள்கிறேன்... அன்பிற்கு மேல் அன்பாக.....

Porkodi (பொற்கொடி) said...

என்ன விந்தைன்னு புரியலை, போன வாரமே ஃபாலோயரும் ஆனேன், பாரதி பதிவில் கமெண்டும் போட்டேன்.. முண்டி அடிச்ச கூட்டத்துல எல்லாமே காணாம போயிடுச்சா?!! :O கட்டம் சட்டை போட்ட குட்டி பையன் பதிவுக்கு பதிவு சென்சுரி விளாசிக்கிட்டு இருக்காப்புல.. நாங்க ஒரு கும்பல் (அதே சமீபத்தில் 2006ல் தான்) புளியோதரை வடைன்னு கூவி கூவி அடிச்ச சென்சுரியை நீங்க அநாயாசமா அடிக்கறீங்க, best wishes மேலும் கலக்கவும்! happy new year!

பத்மநாபன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பொற்கொடி... வாத்தியாரோட மாணவி வந்தது பெரு மகிழ்ச்சி . ( சுஜாதா எழுத்தை ரசிப்பதும் அதை உள்வாங்கி எழுதறதும் இந்த தலைமுறையில் கிரேட் ..எழுத வைத்த அவரும் டபுள் கிரேட் )


வாசிக்கற அளவுக்கு பேசிக்கற மாதிரி பதிவெல்லாம் போடலைங்க ...அப்பாதுரை தயவுல ஆனந்த கும்மி நடந்தது ... நட்பு வட்டம் இனிமையை தருது ..கமென்ட் காணாம போனது எப்படின்னு புரியல ..( அந்த கமெண்ட்டுக்கும் மிக்க நன்றி ).. இப்பக் கூட கூகிள் குரோம் க்கும் பிளாக்கருக்கும் பங்காளி சண்டை பஞ்சாயத்து பண்ணி பப்ளிஷ் பண்ணவேண்டியதாச்சு ...

சாய்ராம் கோபாலன் said...

//மோகன்ஜி said... இப்போதுதான் உங்கள் புகைப்படத்தைப் பார்க்கிறேன்.. கொஞ்சம் வயசுல சின்னவரா தெரியறீங்க.//

"வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்ஸில்" கமல் சொல்லுவார் - "குழந்தைங்க டாக்டர் தெரியும் - இன்ன இங்கே குழந்தையே டாக்டராக இருக்கு" என்று ? அதைப்போலவா பத்மநாபன் ??

To all இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பத்மநாபன் said...

பதிவுலகில் ஒரு வருஷம் ஓட்டியதை சிம்பாலிக்கா போட்டேன் சாய்... அந்த நிலை கிடைக்காதா மனசு ஏங்குவது உண்மைதான்...
( ஒரு ரகசியம் ..இந்த மாதிரி எந்த குழந்தை படத்தை பார்த்தாலும் எங்க அம்மா சின்ன வயசுல இப்படியே இருப்பேம்பாங்க என்னிடம்... தாய்க்கு தன் குஞ்சு பொன்குஞ்சு ... நமக்கு தெரியும் நாம கரிச்சான் குஞ்சுங்கறது )

மோகன்ஜி இன்று ஆன்மீக பயணம் தொடங்குகிறார் ..நீங்க எப்போ ?

அங்கும் பேட்டை துள்ளல் எல்லாம் உண்டா? அனுபவத்தை பகிருங்கள்.

அப்பாவி தங்கமணி said...

Happy new year to you too... super paatu... my favourite one... happy blog anniversary too anna

பத்மநாபன் said...

நன்றி தங்கைமணி..உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Porkodi (பொற்கொடி) said...

சாருக்கு எம்மேல என்னா கோவம்? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம், இப்படி கன்னபின்னானு எதையாவது சொன்னா, சுஜாதாவோட மறுபிறவி/ ஆன்மா, அல்லது அவரது வெறியர்கள் எம்மேல குறி வெச்சுருவாங்க..!

பத்மநாபன் said...

அப்படியெல்லாம் செய்யமாட்டோம் கொடி ...கருப்பு நிலா படிச்சிட்டோமல்ல.. எங்கே அனுபமாவை காணோம்?

எல் கே said...

//நம்ம வலைப்பூ தொழில் நுட்ப பிஸ்தா எல்.கே யின்அறிவுரை //

யாரு அது.? சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்

பத்மநாபன் said...

@ எல். கே ...அட... என்னங்க தெரியாதா அவரை ..பிரச்சினைன்ன டாண் ன்னு வந்து கரக்டா நிப்பார் கவலைப் படாதிங்க ...

Unknown said...

புத்தாண்டு வாழ்த்துகள்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்

பத்மநாபன் said...

நன்றி மின்னல் மகேஷ்...உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. நீண்ட நாளாகிவிட்டது... நீங்களும் ஆரம்பியுங்கள்..

சாய்ராம் கோபாலன் said...

//மோகன்ஜி இன்று ஆன்மீக பயணம் தொடங்குகிறார் ..நீங்க எப்போ ?//

நான் 1992 ஒரு முறை விஷு போது சபரிமலை போய்விட்டு பம்பையில் "பீ" மிதப்பதை கண்டு ஓடிவந்தவன் தான் !! இங்கே அமெரிக்காவில் நோவாமல் நோன்பு நுட்பவன். விரதம் இருப்பது / கோவிலுக்கு போவதும் இந்த ஐந்து வருடங்களாக இங்கேயே !! எங்கள் வெப்சைட் www.njayyappa.org

நியூ ஜெர்சியில் இருந்து போகி அன்று விமர்சியாக இருமுடி கட்டிக்கொண்டு லண்ஹம் ஊரில் (மேரிலாந்து மாநிலத்தில்) உள்ள சிவா விஷ்ணு கோவிலுக்கு சென்று பொங்கல் அன்று பதினெட்டு படி ஏறுவோம். http://www.ssvt.org/images/SSVT_w_new_parking_lot72.jpg இதில் உள்ள படத்தில் ஒரு சிறிய வூட்ஸ் (woods) பாதை (கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பது போல் !!)

நிஜமாகவே காலை பதம் பாத்து விடும். எட்டு / பத்து நிமிட நடை தான் இருந்தாலும் - மைனஸ் எட்டு பத்து டிகிரி செல்சியஸ், தரையில் இருக்கும் பனிப்பொழிவு, ஐஸ் ஆகி இருக்கும் தண்ணி என்று போதாமல் கொஞ்சம் போர்கிபைன் போன்று முள் / மரத்துண்டுகள் வேறு போட்டு வைத்து இருப்பார்கள்.

எங்கள் குருசாமி காலனி அணிய விட மாட்டார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் வெளி பிரகாரத்தில் பனிப்பொழிவின் மேல் மூன்று சுற்று சுற்றி - தேங்காய் உடைத்து பஸ்ஸில் ஏறும்போது காலை வெட்டி எறியலாம் போல் தோன்றும்.

பத்மநாபன் said...

நன்றி சாய் ...விவரமாக எடுத்து வைத்து விட்டீர்கள் அமெரிக்க ஐயப்ப யாத்திரையை .. சிறு துன்பத்தையாவது அனுபவித்து ''மூலமான இறைவனை'' த்தேடு எனும் கோட்பாடு அமெரிக்க பனியாத்திரை வரை சென்றுள்ளது.பனியும் குளிரும் பாதத்துக்கு வெது வெதுப்பு .

உங்கள் ஐயப்ப இணைய தளம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது ...இவ்வருடமும் இனிய புது அனுபவங்கள் கிடைக்கட்டும் ...
சாமியே சரணம் ஐயப்பா ...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

இந்த புத்தாண்டின் துவக்கத்தில் எங்கள் இதய தெய்வத்தின் பாடலை ஒளி/ஒலிபரப்பிய உங்களுக்கு கோடானுகோடி நன்றி, தலைவா....

பத்மநாபன் said...

முதல் வருகைக்கும் , பாடலை ரசித்ததற்கும் மிக்க நன்றி எல்.என்.

இளைய தளபதிக்கு இந்த மாதிரி மெலடிகள் நன்றாக பொருந்தும்..இயக்குநர்கள் விட்டால் தானே..

உங்களுக்கு இனிய ஆங்கில தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

Kurinji said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

குறிஞ்சி குடில்

பத்மநாபன் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி குறிஞ்சி ... உங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

மனோ சாமிநாதன் said...

வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் நிறைவானதற்கு இனிய வாழ்த்துக்கள்!! புத்தாண்டு வாழ்த்துக்களும்கூட!

பத்மநாபன் said...

மிக்க நன்றி மனோ மேடம்... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்களும்....

சுசி said...

புத்தாண்டு வாழ்த்துகள் பத்மநாபன்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி சுசி ..வருகைக்கும் வாழ்த்திற்கும்...

சிவகுமாரன் said...

பொங்கல் வாழ்த்துக்கள் ரசிகமணி அண்ணா

பத்மநாபன் said...

மிக்க நன்றி சிவா... உங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்...

உங்கள் பொங்கல் கவி இன்னமும் சூடு குறையவில்லை...

சமுத்ரா said...

carry on...

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி சமுத்ரா .... சில சமயத்தில் உட்கார்ந்தால் உட்கார்ந்து விடுகிறது

அன்புடன் மலிக்கா said...

ஆனந்த வாசிப்பு ஆனந்தமாய்...

பத்மநாபன் said...

நன்றி மலிக்கா...அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும்....

எல் கே said...

adutha post eppa thalaivaa

பத்மநாபன் said...

நன்றி தலைவா ..... கடப்பாறையா ஆணிகள் சேர்ந்துருச்சு ....பிடுங்கிட்டு சீக்கிரம் பதிவு போடணும்

கோலா பூரி. said...

இன்றுதான் முதல் முறையாக உங்கபக்கம் வந்தேன்.வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோமு ... நீங்கள் வலைப்பூவில் எழுதிய முதல் கதையை வாசிக்க வந்து கொண்டிருக்கிறேன்

அப்பாதுரை said...

சரிதான்.. ஆணி தொல்லை தாங்கலியே!
>>>கடப்பாறையா ஆணிகள் சேர்ந்துருச்சு

பத்மநாபன் said...

ஆமாங்க அப்பாதுரை ஆணி மேலாண்மை ஒன்னு போட்டிங்கன்னா பரவாயில்லை. ஒவர்டைம் போட்டு ஒரு பதிவு தேர்த்தியாச்சு ...நாளான்னிக்கு ரிலிஸ்..