Saturday, December 31, 2011

ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துகள் ...







என் இனிய வலை நட்பான சொந்தங்களுக்கு ஆனந்த மயமான புத்தாண்டு  வாழ்த்துகள் ..  புதியதாய் பிறக்கும் வருடத்தின் ஒவ்வொரு நாளும் இனியதாய் இருக்க நல்  வாழ்த்துகள் ..

சென்ற ஆண்டில்  பல  மாதங்கள் வலைப்பக்கமே வர முடியாத அளவில்  பணியும் பணி மாற்றங்களும் அமைந்தன ...அரசு பணியில் விடுப்பு எடுத்து  அரபு நாடு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தது...... 


அரசா?  அரபா? ....அரபா?அரசா?   என   முடிவெடுக்க வேண்டிய  நிலையில்  முன்னின்ற சாதக பாதகங்களை கூட்டி  கழித்து  பெருக்கி  வகுத்து பார்த்தேன் ..  அரசு பணியில்  விடுப்பில் இருந்த  நாட்களை விட  அரபு பணியில்  கூடுதல்  விடுப்பு  எனும் கவர்ச்சியுடன் , தமிழ்நாட்டில்   பணியமர்த்தப்பட்ட / பணியமர்த்தப்படும் பகுதிகளிலிருந்து பயணப்பட்டு வருவதை விட  சென்னைக்கு  ஓமன் நாட்டிலிருந்து  விரைவில் வந்து போகலாம் எனும்  வசதியும்  சேர   அரபே என  முடிவான முடிவு எடுத்துவிட்டேன் . 


கணிசமாக மலை பகுதிகளில்  பணிபுரிந்த எனக்கு அப்பணியிலிருந்து விடுபடும்  காலமும் மலைபகுதியிலேயே   அமைந்தது இனிய நிகழ்வு .. என் வலைப்பூ நண்பர்களுக்காக காடம்பாறை மலைப்பகுதியில் எடுத்த படங்கள்    படங்கள் கிழே...

















இவ்வாண்டு இனியதாய் பிறக்கிறது  ...  பாரதியின் பாடலோடு வரவேற்போம்  '''பொழுது புலர்ந்தது '' ஐந்து நிமிடம் ஒதுக்கி கேட்டுபாருங்கள் இப்பாடலினால் நிச்சயம் புத்துணர்வு பெறுவீர்கள் ...
அண்ணன் அக்கா தம்பி தங்கையரே ..  வரும் வருடமாவது வலைப்பூவிற்கு  அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு கிடைக்க விழைகிறேன்.. ....மீண்டும்  நல்வாழ்த்துகள் ...





42 comments:

இராஜராஜேஸ்வரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...

ஆனந்த வாசிப்புக்கு
"ஆனந்தமான புத்தாண்டு வாழ்த்துகள்

பத்மநாபன் said...

மிக்க நன்றி ராஜி மேடம் ... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ...

சீலன் said...

உங்களுக்கும் என் இனிய‌ ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பத்மநாபன் said...

மிக்க நன்றி சீலன் .... வருகைக்கும் வாழ்த்திற்கும் ...

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.... நண்பரே... இந்த வருடம் இன்னும் நிறைய பதிவிட முயற்சியுங்களேன்.....

எல் கே said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .

Anonymous said...

பாரதியின் பாடல் ஜெயஸ்ரீயின் குரலில் அருமையாய் விடிகிறது பொழுது. இவர் குரலில் எப்பொழுதுமே எனக்கு ஒரு தனி கவர்ச்சி உண்டு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
மீண்டும் உங்களை பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி!

அப்பாதுரை said...

காடம்பாறையா - எங்கிருக்கிறது? படங்களைப் பார்த்தால் அங்கே பத்து நாள் தங்கியிருக்க ஆசை வருதே?

புத்தாண்டு வாழ்த்துக்கள் பத்மநாபன்.

(ஆமா.. அரசுப் பணியில் ஐந்து வருட விடுப்பா? எப்படித் தவறவிட்டேன் இதை!! :)

பத்மநாபன் said...

நன்றி வெங்கட்ஜி ... முயற்சி திருவினையாக்கும் எனும் நம்பிக்கையில் முயற்சி செய்கிறேன் .... இவ்வருடமும் வழக்கமாய் உங்கள் பதிவு வலைபூக்கள் பூத்துக் குலுங்க வாழ்த்துகள் ..

பத்மநாபன் said...

நன்றி எல்கே .. இனிமைபொங்க தொடரட்டும் இவ்வருடம்

பத்மநாபன் said...

மீனாக்ஷி அவர்களுக்கு மிக்க நன்றி .. பாட்டு ரசிப்பென்றால் வலைபூக்களில் மீனாக்ஷி தான் ,, அப்பாதுரை அவர்களின் பதிவுகளில் உங்கள் ரசனை பின்னூட்டங்களை தொடர்ந்து வாசிப்பேன் ....

பத்மநாபன் said...

இனிய வாழ்த்திற்கு நன்றி அப்பாதுரை .. காடம்பாறை, பொள்ளாச்சி யிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் இருக்கிறது ..ஆழியாறு ஆணை கேள்வி பட்டிருப்பீர்கள் ( காதலிக்க நேரமில்லை படம் பிடித்த இடம் ) அதை தாண்டி செல்லவேண்டும் .. அருமையான மலைப்பகுதி .

அரசு வேலையில் இது ஒரு சலுகை ..முன்காலத்தில் வளைகுடா நாடுகள் நமது அரசாங்கத்தை அணுகி தொழில் நுட்ப ஒத்துழைப்புக்காக பொறியாளர்களை கேட்பார்கள் ..நல்லெண்ண நடவடிக்கையாக அரசாங்கமும் அனுப்பிவைக்கும் ..பின் அது நிறுத்தி வைக்கப்பட்டது , தனிப்பட்ட முறையில் செல்பவர்கள் அதிகபட்சம் ஐந்து வருடம் விடுப்பில் சென்று வரலாம் என பல நிபந்தனைகளோடு வெளியே விடுவார்கள் ... அப்படி 2006 ல் மின் வாரியப் பணியிலிருந்து விடுப்பில் வெளியே வந்தவன் , இங்கு எனக்கும் வேலை பிடிக்க இங்கிருப்பவர்களுக்கு என்னை பிடிக்க , வாரியத்திற்கு பிரியாவிடை கொடுத்து வந்துவிட்டேன் ....

geetha santhanam said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார். அருமையான படங்கள். இயற்கையை நன்றாக ரசித்து அனுபவித்திருப்பீர்கள். ஓமான் எப்படியோ, இந்த மாதிரி ஆறு, மலையெல்லாம் குவைத்தில் வாய்ப்பே இல்லை. அதனாலேயே விடுமுறையின்போது இது போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி கிதா மேம் ... ஓமனும் குவைத்து மாதிரிதான் ..பொட்டல் வெளிதான் . நம் மாநிலத்தின் இந்த அழகான மலைப்பகுதிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்......

Matangi Mawley said...

Wish you and your family a very happy New Year!!!

Keep Posting!

ADHI VENKAT said...

புத்தாண்டு வாழ்த்துகள் சார். புகைப்படங்கள் அழகா இருக்கு.
இந்த ஆண்டு நிறைய பதிவுகள் இட்டு எங்களை மகிழ்விக்க வேண்டும்.

பத்மநாபன் said...

நன்றி மாதங்கி .. இந்தவருடம் மாதம் ஒன்றாவது பதிய முயற்சி எடுக்கிறேன் ....

பத்மநாபன் said...

நன்றி சகோ ... இது முழுக்க முழுக்க நம்ம மாவட்டம் தான் ,,, ஊக்கத்திற்கு நன்றி ...

ஸ்ரீராம். said...

எடுத்த முடிவு நல்ல முடிவாக அமையட்டும். படங்களின் வாயிலாக அந்த இடங்களின் அழகு வெளிப் படுகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு வால்பாறை வந்து அங்கு ஒரு லாட்ஜில் தங்கி மேலே முடீஸ் எஸ்டேட் சென்று வந்த அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது!புத்தாண்டு வாழ்த்துகள் பத்மநாபன்.

மனோ சாமிநாதன் said...

இனிய‌ புத்தான்டு வாழ்த்துக்க‌ள்!!

ஆனந்த வாசிப்பில் பாரதியின் பாடலும் ஆலாபனையும் மிக‌ அருமை!!

க‌டைசியில் எங்க‌ள் ப‌க்க‌த்து நாட்டிற்கே வந்து விட்ட‌து மிக்க‌ ம‌கிழ்ச்சி!!

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஸ்ரீ .... பொள்ளாச்சி ஆனைமலைஸ் பசுமை மாறாமல் இருக்கிறது ... வாழ்த்திற்கு நன்றி ... இருவேலை காலத்தை விட ஓரு வேலை காலத்தில் நேரமே கிடைப்பதில்லை ... எப்பவும் வரும் எங்கள் பிளாக்கிற்கே விட்டு விட்டுதான் வரமுடிகிறது ...

பத்மநாபன் said...

மிக்க நன்றி மனோ மேடம் ... ஆமாங்க மலைவனத்திலிருந்து பாலைவனம் வந்தாச்சு

சிவகுமாரன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ரசிகமணி சார்.
காடம் பாறை எங்கிருக்கிறது?
ரம்மியமாக இருக்கிறது.

பாரதியின் பாடல் புத்துணர்ச்சியூட்டுகிறது

கற்பனை செய்து வைத்திருந்த உங்கள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து , புகைப்படத்தில் உள்ள முகம் பதிவாகிக் கொண்டிருக்கிறது மனதில்.

சிவகுமாரன் said...

93 இல் வால்பாறையில் UPASI Tea Resarch Instituteக்கு R&D Chemist நேர்முகத் தேர்விற்காக சென்றேன். வேலை கிடைத்தும் Remote place ஆக இருந்ததால் பணியில் சேரவில்லை. அதை நினைத்து அடிக்கடி வருத்தப்படுவது உண்டு.

அப்பாதுரை said...

ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துற வேண்டியது தான்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி சிவா ..காடம்பாறை வால்பாறை செல்லும் வழியில் அட்டகட்டி தாண்டி இரண்டு கி.மி யில் இடது புறமாக செல்ல வேண்டும் ..இது ரிமோட்டிலும் ரிமோட் பகுதி ....

பத்மநாபன் said...

அப்பாதுரை ரவுண்டோடு ரவுண்டு கட்டும் மலைபகுதிதான் ......

சிவகுமாரன் said...

ரசிகமணியின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

அட! என் பின்னூட்டத்தையும் ரசிக்க ஒருவர் இருக்கிறாரே! :) ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிகவும் நன்றி. இசைதான் எனக்கு மிகச் சிறந்த நண்பன் பத்மநாபன். எனக்கு எந்த சூழ்நிலையிலும், எல்லா விதத்திலேயும் என்னோடவே, எனக்கு ஆறுதலா இருக்கு. இசையில் எனக்கு ஆழ்ந்த அறிவெல்லாம் கிடையாது. ஆனா ரொம்ப ரொம்ப ரசிப்பேன். பிடித்த பாடல்களை எல்லாம் எத்தனை முறை கேட்டாலும், எப்ப கேட்டாலும் அப்பதான் முதல் முறையா கேக்கற மாதிரி அவ்வளவு ரசிப்பேன். இசையை இப்படி ரசிக்கற மனசு எனக்கு இருக்கறதே எனக்கு கிடைச்ச ஒரு வரமா நான் நினைக்கறேன். விட்டா இன்னும் புலம்புவேன். அதனால இத்தோட நிறுத்திக்கறேன். :)

பத்மநாபன் said...

உறுதிமொழிகளுக்கு வந்தேனே சிவா .. காணவில்லை ... மிண்டும் வருகிறேன் .. சிவாவின் கவிதைகள்.அது காதல் வெண்பாவாக இருந்தாலும் , சமுக சாடல் வெண்பாவாக இருந்தாலும் என்றும் ஆதர்சம் தான் எனக்கு

பத்மநாபன் said...

அழுத்தத்தை தகர்ப்பதும் ஆனந்தத்தை பெருக்குவதும் இசைரசிப்பு நிச்சயம் வரம் தான் ...பகிர்வுக்கு மிக்க நன்றி மீனாக்ஷி

சமுத்ரா said...

பொங்கல் வாழ்த்துக்கள் பத்மா

பத்மநாபன் said...

நன்றி சமுத்ரா .... உங்களுக்கும் இவ்வருடம் முழுவதும் வாழ்வு இனிய பொங்கல் போல் சுவையோடு இருக்க வாழ்த்துகள் ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Happy New Year Anna.. Nice pictures. Wishing you to post more in blog this new year...;)

பத்மநாபன் said...

மிக்க நன்றி தங்கை மணி ... படங்கள் நம் மாவட்டத்தின் பெருமைக்குரிய பொள்ளாச்சி மலைகளில் எடுத்தது ...

வெங்கட் நாகராஜ் said...

அன்பு நண்பர் பத்மநாபன் அவர்களுக்கு,

உங்களுக்காக ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில் - வாருங்களேன்....

http://www.venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_14.html

சமுத்ரா said...

என்ன இப்போதெல்லாம் எழுதுவதில்லையா?
அணு அண்டம் அறிவியலுக்கும் ஆப்சென்ட்?:)

பத்மநாபன் said...

மிக்க நன்றி வெங்கட் ஜி ... எனக்கும் விருது கொடுத்து பாராட்டியதற்கு .....
அதற்கான தகுதிக்கு முயற்சி எடுக்கும் உத்வேகமாக நீங்கள் அளித்த விருதிற்கு நன்றி ...

பத்மநாபன் said...

விசாரிப்பிற்கு மிக்க நன்றி ....வலை நேரம் அரிதாகி விட்டது சமுத்ரா ....கிடைக்கும் நேரத்தில் ''உள்ளேன் ஐயா '' சொல்லாமல் அ . அ. அ .. வகுப்புகளுக்கு வந்து ஜன்னல் வழியாக பாடங்களை படித்துக்கொண்டிருக்கிறேன் ..... அ . அ . அ ... படித்து பாராட்டிக்கொண்டே இருக்கலாம் ...

அப்பாதுரை said...

நல்லா இருக்கீங்களா? என்ன ஆளையே காணோம்?

கமெந்ட் போடுறப்ப தான் உங்க கமெந்ட் படிச்சேன்.. பொறுமையா வாங்க.

பத்மநாபன் said...

இப்பதான் கொஞ்சம் வலைப்பக்கம் எட்டி பார்க்க முடிகிறது... தொலைந்த தமிழ் மென்பொருள் இப்பதான் கிடைத்தது..விசாரிப்புக்கு நன்றி அப்பாதுரை..

சிவகுமாரன் said...

\\சிவாவின் கவிதைகள்.அது காதல் வெண்பாவாக இருந்தாலும் , சமுக சாடல் வெண்பாவாக இருந்தாலும் என்றும் ஆதர்சம் தான் எனக்கு//

நன்றி ரசிகமணி சார்

Powered By Blogger