Monday, February 27, 2012

வாத்தியாருக்கு வந்தனம் ..

முதலில்  வாத்தியாரின்  ஒரு அருமையான  ஆல்பம்…. 
ஆல்பம் படங்கள்...ஆனந்தவிகடன்....ஆனந்தவாசிப்பின் நன்றி....

நம்ம வாத்தியார் பற்றி  ஒரு அருமையான கட்டுரை …
    இது புதிய தலைமுறை தீபாவளி மலரில் வந்த மனுஷ்யபுத்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை…..  தாம்பரத்தில்  வால்போஸ்ட் பார்த்தவுடன் வாங்கினேன் … படித்தவுடன்  வண்ண மென்நகல் எடுத்து வாத்தியாரின் எனக்கு தெரிந்த வாசக நட்பு வட்டங்களுக்கு மின்னஞ்சலினேன்… இப்பொழுது வலைப்பூ வட்டத்திற்காக….
 புதிய தலைமுறை இதழுக்கும், இக்கட்டுரையாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் நன்றி...


 இந்த வருடம் …புது வாசிப்பும் மறு வாசிப்புமாக பத்து புத்தகங்கள்,.வீட்டு அலமாரியிலிருந்தும் ஹிக்கிம் அலமாரியிலிருந்தும் இறங்கி  என்னுடன் கூடவே பயணம் செய்தன….உங்களோடும் பயணித்திருக்கும்….. அந்த பத்து புத்தகங்கள்…..பத்தில் பெரும்பாலனவை வலைப்பூ நட்புகள்..நினைவுபடுத்த எடுத்து படித்தவை….
                                                                                           வாரம் ஒரு பாசுரம்…..
             அவரே சொன்ன மாதிரி, சில பாசுரங்களை அடையாளம் காட்டும் பொழுது பல பாசுரங்களை தேடி படிக்கவைக்கும் …இந்த வருடம் மார்கழியில் பயணித்தது,, பாடல்..எளிதாக அதன் பொருள், விருத்தமென்றால் விருத்தம் வெண்பாவென்றால் வெண்பா எனப் பாடல்களை ஆழ்வார்கள் அமைத்தவிதம் பற்றிய சிறுகுறிப்பு என அமர்க்களப்படுத்தியிருப்பார்….. நாலாயிரத்திற்கும் இப்படி விளக்கம் எழுதி படிக்கவேண்டும் எனும் பேராசையில் நானும்  நண்பர் சந்திரமெளீஸ்வரன் அவர்களோடு சேர்ந்துகொள்கிறேன்….
இதில் ஒரு பாடல்..... இப்பாடல் இனிய நண்பர் அப்பாதுரைக்கு டெடிகெட்
(காரணத்தை பின்னூட்டத்தில் வைத்துக்கொள்ளலாம்)
அன்றே, நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்,
இன்றே, நாம் காணாது இருப்பதுவும்-- என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சு என்னும்
உட்கண்ணால் காணும் உணர்ந்து
                           இரத்தம் ஒரே நிறம்....
முன்னுரைக்காக படிக்க ஆரம்பித்து முழுக்க மீண்டும் படித்தேன்...என்பதுகளில் சர்ச்சையை கிளப்பிய இதன் முன் கதை ....அதன் பின் தலைப்பு மாறி சிறப்பாக வலம் வந்தது.. .இக்கதை அன்புக்குரிய பதிவர் ரத்தினவேல் அவர்களின் வலைப்பக்க தலைப்பை படித்தவுடன்  நினைவுக்கு வந்த கதை,,,,எம்லி...ஆஷ்லி..இவர்களுடன் முத்துக்குமரன் ,பூஞ்சோலை..
                        விபரீத கோட்பாடு..
   என்னுடைய சமிபத்திய காடம்பாறை நாட்களில் படித்தது.... பொள்ளாச்சியிலிருந்து காடம்பாறை செல்ல முன்று மணி நேரம்..ஆனால் பேருந்திற்க்கு நான்கு மணி நேரம் காத்திருக்கவேண்டும் (  வரு....ம் வராது )..காத்திருப்பை கதை எளிதாக்கியது... இக்கதை அப்பாதுரை அவர்களால் சுட்டி காட்டப்பட்டது... 
                       பதினாலு நாட்கள்.... 
                 எங்கள் ப்ளாக் ‘’ ஸ்ரீ’’ , வாத்தியார் கதைகளை தன்னுடைய நினைவகத்திலே ... ’’அந்த கதை மாலைமதியில் படித்தது’’ இது குமுதத்தில் வந்தது.. அது விகடனில் வந்தது என  அழகாக அடுக்கி வைத்திருக்கிறார். இந்திய -பாக் போர்பற்றி சுஜாதா எழுதியிருக்கிறாரே என அப்பாதுரை ஒரு பின்னூட்டத்தில் கேட்க உடனே பதினாலு நாட்கள் என ஸ்ரீ அடுத்த பின்னூட்டத்தில் சொல்ல , விமான சாகசங்கள் நிறைந்த இந்த கதையை மீண்டும் படிக்க ஆவல் கூடியது,, இக்கதையின் தாக்கம் வாத்தியார் வசனம் எழுதிய மணிரத்னத்தின் ’’ரோஜா’’ படத்தில் நிறைய இருக்கும்.
                             ஜே.கே
   வாத்தியாரின் ரசிகன் என இரட்டை விசிலடித்து சொல்லும் என் இனிய நண்பர் ஆர்.வி.எஸ் ஒரு அழகான கதையை எழுதிவிட்டு... ஜே.கே எனும் வாத்தியார் கதைதான் அந்த கதையை எழுத வைத்ததாக சொல்லி, உசுப்பி எனக்கு இக்கதையை நினைவு படுத்தினார். 1971ல் எழுதிய கற்பனை அதுபோல் சம்பவம் 1991ல் நம் நாட்டில் நடக்க, முழுக்க முழுக்க கற்பனை கதை எழுதும் சாத்தியமின்மை பற்றி வாத்தியார் பின் அட்டை குறிப்பு கொடுத்திருப்பார்.


                          எப்போதும் பெண்..
   தென்றல் மாநகரிலிருந்து, இப்பொழுது தலைநகரில் இருக்கும் சகோ. ஆதிவெங்கட் சிறப்பாக பகிர்ந்த இக்கதை. எப்போதும் பெண் ..இதில் வாத்தியார் கதையாளராக மட்டுமில்லாமல்,பெண்ணிற்கு பலதரப்பட்ட சுழல்களில் நிலைகளில் எற்படும் விளைவுகளை கதைக்குள் கொண்டுவந்த மனோதத்துவ சிந்தனையாளாராக ஒவ்வொரு பக்கத்திலும் தெரிவார். 
                          ஸ்ரீரங்கத்துகதைகள்..
               நமது கவிப்பதிவர் ரிஷபன் அவர்களின் சில கதைகளை படித்தவுடன் ஸ்ரீரங்கம் நினைவுக்கு வர கூடவே ஸ்ரீரங்கத்துகதைகளும் நினைவுக்கு வரும் ..அவ்வப்பொழுது எடுத்துப் படித்து சிரிக்கலாம் பால்யத்திற்கு போய் வரலாம்.. அதில் உச்சகட்ட சிரிப்புக் கதை  எறக்குறைய ஜீனியஸ்....விழுந்து விழுந்து சிரிக்கலாம் .... மாஞ்சு படித்து நெஞ்சுருகலாம்......
                    திசைகண்டேன் வான் கண்டேன்… 
              தமிழில் அறிவியல் புனை கதைக்கு அருமையான உதாரணம் திசைகண்டேன் வான் கண்டேன்.    இக்கதையிலிருந்து  நிறைய விஷயங்கள் ’’எந்திரன் ‘’ படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும்.. கதையையே திரைக்கதையாக எழுதும் வித்தை வாத்தியாருக்கே உரித்தானது... மகத்தான கற்பனை என்று சொன்னாலும்...அடுத்த தடவை கொடைக்கானல் போகும்பொழுது சுடலை மாடன் கோவிலுக்கு போய் ஆண்ட்ரமீடா கேலக்சியிலிருந்து வந்து இங்கேயே தங்கிவிட்ட  உபகுப்தரையும் பேச்சிமுத்துவையும் பார்த்தே ஆக வேண்டும்.....


                          கண்ணீரில்லாமல்…
              ஒரு சின்ன தொகுப்பு .... அழகான ஒரு பாடப்புத்தகம் .. யாப்பு பற்றி ஒரு நீண்ட நெடும் விளக்கம் .. கொஞ்சம் கூட தொய்வில்லாமல் தமிழ் இலக்கணம்... நேர் நிறை என அசைகளை இசையாக மீட்டிருப்பார்.. கூடவே இசை வகைகளையும் எடுத்திசைத்திருப்பார்... கர்னாடக சங்கிதத்தில் பாடல்கள் இனிமையாக இருந்தாலும் முழுமையாக ரசிக்கும் இசையறிவு இல்லையே எனும் ஏக்கத்தை போக்கும் இசைப்பாடம்... இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது நினைவுக்கு வந்தவர் இனிய இயற்பியல் பதிவர் சமுத்ரா. அவருக்கு இப்பொழுது இயல்பாக வரும் வாத்தியார் பாணி எழுத்து அவ்வளவு எளிதாக வந்துவிட்டதாக நினைக்கவில்லை..வாத்தியார் அறிவுரைத்த மாதிரி.சமுத்ரா நிறைய படித்துக்கொண்டிருக்கிறார் , சிந்திக்கிறார்.. அந்த உழைப்போடு சலிக்காமல் எழுதவும் செய்கிறார் ..இந்த சந்தர்ப்பத்தில் சமுத்ரா மேன் மேலும் வளர வாழ்த்துவதில் மகிழ்ச்சி...
                       இன்னும் சில சிந்தனைகள்….
   தமிழ், இணையத்தில் இப்பொழுது நிறைய விளையாடுகிறது.... பல  வருடங்களுக்கு முன்னமே மின்னம்பலம் எனும் இணைய இதழ் நடத்தி அதில் பல சுவாரசியக் கட்டுரைகளை தட்டியிருக்கிறார் ... அதன் தொகுப்புதான் இந்த இ.சி.சி புத்தகம்... அதில்படித்தும் சிரித்தும் மகிழ நிறைய சுவாரசியங்கள்.. ’’க்ளுக்’ என்று உடனடியாக சிரிப்பு வரும் அவரது சின்ன வயது ப்ளாக் அனுபவக் கட்டுரையின் ஒரு பகுதியை வெட்டி ஒட்டியிருக்கிறேன் கிழே...
   
  வருகைக்கு நன்றி... இந்நாளில் நீங்களும் வாத்தியாரின் கதைகளை / எழுத்துக்களை பகிரலாம்

68 comments:

வெங்கட் நாகராஜ் said...

மிக ஸ்வாரசியமான இடுகை நண்பரே.... இப்படி ஓர் அசத்தலான பகிர்வுடன் மீண்டும் வந்ததற்கு உங்களக்கு எனது நன்றி....

வாத்தியார் வாத்தியார் தான்!

RVS said...

தலைவா!!! (ரஜினி படத்தின் முதல் காட்சியில் ஓலமிடும் ரசிகர்கள் பாணியில் படிக்கவும்)

எனக்கு இந்த வருஷம் எழுத நேரமில்லை. போன வருடம் எழுதியதை முகப்புஸ்தகத்தில் பகிர்ந்துகொண்டேன்.
அதையே இங்கேயும்...

http://www.rvsm.in/2011/02/blog-post_27.html

பத்மநாபன் said...

மிக்க நன்றி வெங்கட்ஜி... நீங்கள் கொடுத்த விருதை பட்டுத்துணி சுத்தி பத்திரமாக வைத்துள்ளேன்.. கொஞ்சமாவது எழுதிவிட்டு வெளியே எடுக்கிறேன்...மீண்டும் நன்றி...

பத்மநாபன் said...

தலைவா ( அப்படியே நீங்களும் படிக்கவும் ).. இப்ப நேரம் இல்லாவிட்டாலும்..உங்கள் இந்த வருடக்கதைகள் நிறைய வாத்தியாரை நினைவுபடுத்தின..வாழ்த்துகள்.... முகப்புத்தகத்தில் முதல் லைக் போட்டுவிட்டேன்....

ADHI VENKAT said...

நீண்ட நாட்களுக்குப் பின் அருமையான பகிர்வோடு வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

ஆல்பம் ரொம்ப அழகா இருந்தது. இதுவரை பார்க்காத சில படங்களுடன்...

நேற்று உலக புத்தக கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் சுஜாதா அவர்களின் நிறைய புத்தகங்களை பார்த்து வந்துள்ளேன். வாங்க வேண்டுமென...அங்கு விற்பனை இல்லையாம்..:(

ஸ்ரீராம். said...

மறந்து போனது பத்துஜி... எப்படி மறந்தது.... எனினும் நீங்கள் என்னையும் குழுவில் சேர்த்திருப்பது சந்தோஷம். நன்றி. நல்ல பகிர்வு. நானும் பதினாலு நாட்கள் மறுபடி எடுத்துப் படித்தேன். வானமெனும் வீதியிலே கூட மறுபடி எடுத்துப் படித்தேன். அவர் பதில்கள் மூன்று பாகம் வைத்திருக்கிறேன். மிக மிக ரசிக்கத் தக்க பதில்கள். அப்புறம், அவ்வப்போது பகிர்வேன். .

பத்மநாபன் said...

மிக்க நன்றி கோவை சகோ... லிஸ்ட்ட தலைவர்கிட்ட கொடுத்திருங்க எப்படியாவது பிடிச்சிட்டு வந்திருவாரு..கிழக்கில் வாத்தியாரின் கதைகளை புதுப் பொலிவுடன் பதிப்பிக்கிறார்கள்.. கிழக்கில் இல்லாதது சில உயிர்மை யிலிருந்து வருகிறது.. விசா பப்ளிகேஷன்ஸ் நிறைய போடுகிறார்கள்.. புத்தகம் போடுபவர்களுக்கு வாத்தியார் என்றும் அமுதசுரபியாக இருக்கிறார்.. விரைவில் கிடைக்க வாழ்த்துகள் சகோ..

பத்மநாபன் said...

அதனால என்னங்க ஸ்ரீ .. நீங்க தான் வருஷம் முழுவதும் வாத்தியாரோட ட்ரெண்டை பிடித்து புதிது புதிதாக எங்களில் போட்டுக்கொண்டே இருக்கிறீர்களே... வானமென்னும் வீதியிலே நினைவு படுத்தியதற்கு நன்றி....

அப்பாதுரை said...

நினைவு நாள் ஞாபகம் வச்சு தரமா எழுதியிருக்கீங்க. என்னையும் கொஞ்சம் பின்னோக்கி இழுத்துச் போச்சு.. அம்பேசடர் கார், தொப்பிக் குழந்தைகள் படங்கள் மிகவும் சுவாரசியம்.
இன்னொரு கதை - பெயர் ஞாபகம் வர மறுக்குது - போலி எம்பிஏ சான்றிதழ் கொடுத்து பெரிய கம்பெனியின் பெரிய பதவிக்குப் போகும் வழியில் தடுக்கி விழும் ஒருவனின் கதை. கடைசி வரி தான் கதை. சுஜாதாவின் கதைகளில் சுவாரசியமான திரைப்படமாக எடுக்கக் கூடிய கதைகளின் ஒன்று. யாராவது ஏற்கனவே (கெ)எடுத்திருக்காங்களானு தெரியாது. கதைப் பெயர் இன்னும் ஞாபகம் வரலே. படிச்சிருந்தா பேர் சொல்லுங்க. படிக்கலின்னா நேரம் கிடைக்குறப்போ படிங்க.

பத்மநாபன் said...

அந்த கதை சிவந்தகைகள்....படமெடுத்தமாதிரி தெரியலை..படிப்படியாக முன்னேறி சிவந்தகையோடு மாட்டும் நாயகன் நல்ல விறுவிறுப்பான கதை..அலமாரியில இருக்கு..இந்த வருட 1/10.. நினவு படுத்தியதற்கு நன்றி...
தொப்பிக் குழந்தையில் ஒருவர் உங்க நாட்டுல தான் இருக்கார்ன்னு நினைக்கிறேன்..

சரி பாசுரம் படிச்சிங்களா....

அப்பாதுரை said...

பாசுரம் படிச்சேன்.. காரணத்தைப் பின்னூட்டத்துல தேடினேன்.. காணோமே? தேடினா காண முடியாதது காரணம் மட்டும் தானா?

அப்பாதுரை said...

சிவந்த கைகள்! நன்றி பத்மநாபன். சிவந்த கைகள் part 2 எழுதினாரில்லே?

சமுத்ரா said...

உண்மையில் அவர் எல்லாருக்கும் 'வாத்தியார்' தான். நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wonderful post with precious pictures... also nice sharing of blog pages about Vaadhiyaar..:)

பத்மநாபன் said...

காரணம் பெரிசா இல்லைங்க... அம்மா சொல்லிக் கொடுத்த கடவுளை மறுத்து பிள்ளைகளுக்கு புது கடவுளை தேடும் அப்பாதுரை அவர்களுக்கு இப்பாசுரம் டெடிகேட் னு முதலில் எழுதிவிட்டு எடிட் செய்தேன்.
// தேடினா காண முடியாதது காரணம் மட்டும் தானா?// இந்த கேள்விக்கு நேர் மறையான அணுகு முறையில் பதில் சொன்னால் ’’தேடுவதோடு கொஞ்சம் உணரவும் செய்யவேண்டும் ‘’
வாத்தியார் சுஜாதாவுக்கு அவருடைய வயது 70 களில் தான் கடவுள் பிடிப்பு கூடியது...

so இன்னமும் நேரமும் காலமும் நிறையவே இருக்கு ..

ஸ்ரீராம். said...

//சிவந்த கைகள் part 2 எழுதினாரில்லே?//

கலைந்த பொய்கள்.

பத்மநாபன் said...

ஆமாங்க அப்பாதுரை சிவந்தகைகளுக்கு பார்ட்-2 கலைந்த பொய்கள் எழுதிய ஞாபகம்..அதை இன்னமும் ஒரு முறைகூட படிக்கவில்லை.. நன்றி

பத்மநாபன் said...

மிக்க நன்றி சமுத்ரா ..உங்கள் சரியான புரிதலோடு கூடிய எழுத்தார்வத்திற்கு மீண்டும் வாழ்த்துகள்...

பத்மநாபன் said...

மிக்க நன்றி தங்கைமணி..வாத்தியார் எழுத்தில் கொடுத்த வாசிப்பு சுகத்திற்கு நன்றியாக எதாவது வலைப்பூவில் செய்யத்தோன்றுகிறது.. அது தான் முன்று வருடங்களாக நினைவுப் பதிவு..

உங்கள் பதிவில் படிக்க வேண்டிய கதைகள் நிறைய இருக்கு ..விரைவில் வருகிறேன்

பத்மநாபன் said...

ஸ்ரீ...நீங்க சுஜாதா என்சைகோளபிடியா..

நான் சந்தேகமா அடிச்சிட்டு பார்த்தா உங்கள் பதில் முன்னமே வந்திருக்கிறது.. நன்றி

அப்பாதுரை said...

பிள்ளைகளுக்கு புதுக் கடவுள் தேடலிங்க.. அது அவங்க பாடு. என்னிடம் படிந்த கடவுள் கறையைக் கழுவுறதைத் தான் புலம்பிட்டிருக்கேன் :)

சுஜாதாவுக்கு எப்போ ஏன் 'வாத்தியார்' பட்டம் வந்தது? தெரிஞ்சா சொல்லுங்களேன்?

அப்பாதுரை said...

இல்லாத ஒண்ணை உணர்வது இயலாத காரியம். தெரியாத ஒண்ணை உணர ஏதோ ஒரு 'பாதிக்கும்' அடையாளம் தேவைப்படும், இல்லாவிட்டால் உணர முடியாது. உணர்ந்தே அறியக்கூடிய சக்திகளுக்கு வரம்பு உண்டு. ஒன்றை உணர்ந்து அறியணும்னா அதை வரம்பில்லாத சக்தினு சொல்ல முடியாது. இதை விஸ்தாரமா பதிவுல எழுத எண்ணம். இங்கே டீசர்.

ஸ்ரீராம். said...

சுஜாதாவுக்கு வாத்தியார் பட்டம் இணையப் பதிவுலகம்தான் தந்தது என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை வாத்தியார் என்றால் அது எம் ஜி ஆர் தான்! எழுத ஆசைப் படுபவர்கள் அவரை ஆசானாக வரித்து வாத்தியார் பட்டம் கட்டி விட்டார்கள் போலும்...அப்பாஜி உங்கள் டீசர் மயக்கிக் குழப்பி யோசிக்க வைக்கிறது!

பத்மநாபன் said...

வாத்தியார் பட்டம் பெரிசா கூடி யாரும் கொடுத்ததா ஞாபகம் இல்லைங்க.. அங்கங்க கூடும் நண்பர் குழாம் பேசி பகிர்ந்த சொல் தான் இது.. எங்கள் கல்லூரி நாட்களில் மதிய உணவு இடைவேளைகளில் அவரது கதை பற்றி கதைப்போம்..அப்பொழுது தான் கொலையுதிர்காலம்...பிரிவோம் சந்திப்போம் தொடராக வந்தது...அந்த காலகட்டத்தில் வாத்தியார் கலக்கிட்டாரு என சிலாகித்த சொல்லாடல்... பிற்காலங்களில் பிரபல எழுத்தாளர்களும் அதை பயன் படுத்தியதை படிக்க மகிழ்வாக இருந்தது....

பத்மநாபன் said...

புதுக்கடவுள் நான் இட்டு கட்டியது கோச்சுக்காதிங்க...
கடவுள் கறை யா ? ஓ அது தான் அபிராமி அந்தாதியையும் நசிகேத வெண்பாவையும் இப்படி எழுத வைக்குதா ..அப்ப ’’கறை நல்லது’’

பத்மநாபன் said...

ஸ்ரீ ...வாத்தியார் எனும் பெயர் வாத்தியாருக்கு வெகுபொருத்தம்..அவரிடம் கிடைத்த வாசிப்பு நிறைய பேர்களை எழுதவைத்திருக்கு.. .

அப்பாதுரை நீங்க விஸ்தாரமா எழுதுங்க..நிச்சயம் நன்றாக இருக்கும் .. உணரவே இயலாத , ஆதாரமே அற்ற சக்தி என நீங்கள்அழகாக எழுதும்போது.. நாங்கள் அணிந்திருக்கும் ஆதாரக்கண்ணாடி இன்னமும் அழகாக காட்டுகிறது

சிவகுமாரன் said...

பொக்கிசமான வாத்தியாரின் நினைவுகள். பகிர்வுக்கு நன்றி ரசிகமணி

சிவகுமாரன் said...

கறை நல்லது - ரசித்தேன்

அப்பாதுரை said...

கோவம் எதும் இல்லிங்க பத்மநாபன்.. (இதுக்குப் போயி அலட்டிக்கலாமா தான் :)

கறைன்னதும் அது சுளிக்க வேண்டியதா நினைக்கணுமா? காபி, சாகலேட் கூட கறை தானே? நான் கறைனது 'நினைவுகள்' என்கிற பொருளில். எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ கறை ஒட்டியது ஒட்டியது தானே? எங்கிட்டே இருக்கும் திருவாசகம், நாலாயிரம், மற்றும் புராண புத்தகங்கள் எல்லாம் கறையின் உபயம் தான். இப்பொழுதும் படிக்க சுகமாக இருக்கிறது - mostly..
கறை படிந்த துணியை வேணும்னா தூக்கிப் போடலாம். விடுங்க. கடவுள் இருந்துவிட்டுப் போகட்டும். நானும் இருந்துவிட்டுப் போகிறேன். என்ன சொல்றீங்க?

ஸ்ரீராம் சொன்னது போல எம்ஜிஆரைத் தான் 'வாத்தியார்'னு சொல்வாங்க. அதுகூட எதுக்குனு தெரியாது :) இப்ப எல்லாருமே சுஜாதாவை வாத்தியார்னு சொல்றதைப் பார்க்கிறேன்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி சிவா...வாத்தியாரின் யாப்பு பற்றிய பாடத்தை
படிக்கும் பொழுது காதல் வெண்பா புகழ் சிவாவை நினைத்துக் கொண்டேன்..

கறைநல்லது ... surf excel சரியா பொருந்தியது.. ரசித்ததற்கு நன்றி...

பத்மநாபன் said...

/இப்பொழுதும் படிக்க சுகமாக இருக்கிறது - mostly.// சும்மா வருமா சுகம்... அந்த சுக பின்ணணிக்கு ஒவ்வொருத்தர் ஒவ்வோரு பேர் வச்சுருக்கோம்..பேரெல்லாம் எதுக்குன்னு ஒரு கூட்டம்… பேர் தான் முக்கியம் என ஒரு கூட்டம்…

எம்.ஜி.ஆருக்கு வாத்தியார் எனும் பட்டம் தலைவன் எனும் அர்த்தத்தில் இருக்கும்..

சுஜாதாவுக்கு வாத்தியார் எனும் பட்டம் வாத்தியார் எனும் அர்த்தத்திலேயே.. நிறைய விஷயங்களை கற்க வைப்பதனால் சரியாக பொருந்துகிறது...

பாலராஜன்கீதா said...

வாத்தியாரின் கதைகளில் பிடித்த சில - வானமென்னும் வீதியிலே, நைலான் கயிறு, சொர்க்கத்தீவு, பதவிக்காக, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, சிவந்த கைகள்
அப்பாஜி நீங்கள் சொல்ல நினைப்பது அப்பாவின் ஆஸ்டின் (அம்பாசிடர் அல்ல) என நினைக்கிறேன்.

வலையில் எங்கேயோ கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். விவரங்களில் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
===========================
1 6961
2 24 RUPAI THEEVU
3 3RU NAAL SORGAM
4 aAa..!
5 AAIRATHIL ERUVAR
6 AARYAPATTA
7 ADALINAL KADAL CEIVIR (TMP)
8 ADUTHA NORRANDU (TMP)
9 ANITHA ELLAM MANIVI
10 ANITHAVIN KATHALKAL (TMP)
11 ANUMATHI
12 APPA ANBULLA APPA (TMP)
13 APPAVIN AUSTIN (VAP)
14 APSARA
15 ASTIN ILLAM
16 ATHALINAL KATHAL SEIVEER
17 AYIRAM OLIPPORI VARTHAIKAL (TMP)
18 AYIRATHIL IRUVAR (TMP)
19 CINNAKUYILI (TMP)
20 COMMISIONERUKKU KADITHAM
21 COMPUTARE ORU KATHAI SOLLU
22 EN INIYA IYANDHIRA ( I & II) (KUP)
23 ENINIYA ENDHIRA
24 ENRAVATHU ORU NAAL (TMP)
25 EPPOTHUM PEN
26 ERAKURAYA SORGAM
27 ETHAYUM ORUMURAI
28 GANESH X VASANTH (VAP)
29 GAYATHRI(KUP)
30 GURUPRASADIN KADAISI THINAM (TMP)
31 HOSTAL THINANGKAL
32 ILAMAIKOL
33 IRANDAVATHU KAATHAL KATHAI
34 IRAYIL PUNNAHAI (TMP)
35 IRUL VARUM NERAM
36 IRUPATHTHINANGKU RUPAI THIVU
37 ITHAN PEYARUM KOLAI
38 IYTHAVATHU ATHIYAM
39 J.K.
40 JANNAL MALAR (TMP)
41 KAAGITHA CHANGILIKAL
42 KADUVUL VANDIRUNDAR (TMP)
43 KALAINTHA POIGAL
44 KANAVUTH THOZHIRCHALAI (TMP)
45 KANNAIYAZHIN KADAISI PAKKANGAL(KUP)
46 KANNIKAI
47 KANTHALUUR VASANTHAKUMARAN KADHAI
48 KARAIYELLAM CHENBAKAPPU (TMP)
49 KARUPPU KUTHIRAI
50 KOLAI ARANGAM
51 KOLAIYUDIR KAALAM
52 MADHYAMAR (TMP)
53 MALAI MALIGAI
54 MAN MAGAN
55 MARUPADIYUM GANESH (TMP)
56 MARUTHAL VARUM (TMP)
57 MATHYAMAR KATHAIGAL
58 MAYA
59 MEENDUM JEENO
60 MEENDUM ORU KUTRAM
61 MEGATHAI THURATHINAVAN
62 MERINA
63 MERKE ORU KURRAM (TMP)
64 MISS THAMIZH THAYE NAMASKARAM (TMP)
65 NAILAN KAYIRU
66 NIJATHAI THEDI (TMP)
67 NIL KAVANI THAKU
68 NIL KAVANI THATTU
69 NILA NIZHAL
70 NILLUNGAL RAAJAVE (VAP)
71 NIRAMARRA VANAVIL (TMP)
72 NIRVANA NAKARAM
73 NNRENDHIRANIN VINODHA (KUP)
74 NYLON KAIYIRU
75 ODAATHEE
76 OLAI PATTASU
77 OONJAL
78 OREA ORU THRUROGAM
79 ORU NADUPAGAL MARANAM
80 ORU PIRAYANAM ORU KOLAI (TMP)
81 PAATHI RAJIYAM
82 PATHAVIKAGA
83 PATHINALU NAATKAL (TMP)
84 PATHTHUSECOND MUTHHAM
85 PEN IYANDIRAM
86 PIRIVOM SANTHIPPOM I, II (TMP)
87 POTHU MARATHTHU PUTHU MUKANGKAL
88 PRIYA (KUP)
89 SORGATH THEEVU
90 SRIRANGATHU DEVATHAIGAL
91 SRIRANGKATHU THEVADAIKAL (TMP)
92 THANGA MUDUCHCHU (TMP)
93 THAPPITTHAL THAPUILLAI
94 THEDATHE
95 THEENDUM ENBUM
96 THICAI KANDEN VANKANDEN (TMP)
97 THORANATHU MAAVILAIGAL
98 UNNAI KANDA NERAMELLAM
99 UNYAL (TMP)
100 VAANAM ENNUM VIITHIYILA
101 VAANATHIL ORU MAUNATHARAGAI
102 VACANTHAKALA KURRANGKAL (TMP)
103 VAIMAIYE CILASAMAYAM VELLUM (VAP)
104 VAIRANGAL (TMP)
105 VANAM ENNUM VIITHIYILE
106 VANNATHU POOCHI VETTAI
107 VASANTH! VASANTH!
108 VASANTHA KALA KUTRANGAL
109 VASANTHI X VASANTH (VAP)
110 VAZHKKU (DRAMA) (KUP)
111 VIBAREETHA KOTPADU
112 VIDIVATHARKUL VA
113 VIKRAM
114 VINYNYAPF PARVAIYILIRUNDU (TMP)
115 VIRUMBI SONNA POIGAL
116 VIRUPAMILLA THIRUPPANGAL
117 VIVADHANGKAL VIMARCANANGKAL (TMP)
118 VIZHUNTHA NATCHATHIRAM
119 YAVANIKA
===========================

பாலராஜன்கீதா said...

வலையுலக நண்பர் ஐகாரஸ் ப்ரகாஷ் ( http://icarusprakash.wordpress.com/ ) அவர்கள் வாத்தியார் குறித்து எழுதியதன் (ஏறக்குறைய 8 பக்கங்கள்) சுட்டியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். தேவை எனில் balarajangeetha at gmail dot com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு MS-word கோப்பாக அனுப்புகிறேன்.

பாலராஜன்கீதா said...

நண்பர் ஐகாரஸ் ப்ரகாஷ் மரத்தடி குழுமத்தில் வாத்தியார் குறித்து எழுதியிருந்த மடல்களின் சுட்டி http://groups.yahoo.com/group/Maraththadi/message/2395

http://groups.yahoo.com/group/Maraththadi/message/2396
(TSCu Parnarn எழுத்துருவில் )

பத்மநாபன் said...

மிக்க நன்றி பாலராஜன்கீதா..வாத்தியாரின் புத்தகங்களை ஆங்கில எழுத்து வரிசையில் அழகாக தொகுத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்...

மரத்தடி குழும மடல்களை படிக்க முடியவில்லை ..எனது கணினியின் எழுத்துரு பொருந்தவில்லை.. வேறுவழியிருந்தால் தெரிவிக்கவும்..

பாலராஜன்கீதா said...

//வேறுவழியிருந்தால் தெரிவிக்கவும்.. //
இன்னொரு பின்னூட்டத்தில் என் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கிறேன்.

Anonymous said...

புகைப்படங்கள் நன்றாக இருந்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நான் நிறைய புத்தகங்கள் படித்தது ஒரு காலம். சுஜாதாவின் கதைகள் தொடர்கதையாக வந்த எதையும் விட்டு வைக்கவில்லை. படித்ததில் கதைகள்தான் நினைவில் இருக்கிறது. பெயர்கள் மறந்து விட்டது. இப்பொழுது சமீபமாக எனக்கு என் சித்தப்பா படிக்க சொல்லி கொடுத்தது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மற்றும்
சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு. இதில் எனக்கு சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு மிகவும் பிடித்தது. பொதுவாக எனக்கு சுஜாதாவின் எழுத்துக்கள் பிடிக்கும் என்றாலும், சரித்திர நாவல்கள், சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி இவர்களின் எழுத்துக்களை இன்னும் விரும்பி படிப்பேன்.
சுஜாதாவின் கதைகளை புத்திசாலிகளால்தான் புரிந்துகொண்டு ரசிக்க முடியும் என்று சுஜாதாவின் அபிமானிகள் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். :)

பத்மநாபன் said...

மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி பாலா...

பத்மநாபன் said...

மிக்க நன்றி மினாக்‌ஷி... வாத்தியார் தொடர்கதை எழுதிய காலம் தொடர்கதைகளின் பொற்காலம் என்று சொல்லலாம்..

அப்பாதுரை said...

வாவ் பாலராஜன்கீதா! பிரமிக்க வைத்தீர்கள்!

பத்மநாபன் said...

ஆமாங்க அப்பாதுரை ... பாலா அவர்கள் நிறைய சுஜாதா செய்திகளை வைத்துள்ளார் ..குறிப்பாக வாத்தியார் பற்றிய பதிவர்கள் பங்களிப்பிற்கு நிறைய சுட்டிகளை சேகரித்தது உண்மையில் பிரமிக்க வைக்கிறது ...

இராஜராஜேஸ்வரி said...

வாத்தியாருக்கு வந்தனம் ..

பத்மநாபன் said...

மிக்க நன்றி ராஜி மேடம்....

வாத்தியாரின் பிறந்த நாளான இன்று அவர் புகழ் போற்றுவோம்....

Aathira mullai said...

வாத்தியாரின் படைப்புகளை ப்டிக்கும் கனவை நெய் ஊற்றி வளர்க்கிறீர்கள் பத்மநாபன். காலம் கைகூடுமா தெரியவில்லை. அசத்தலான பதிவு.

பத்மநாபன் said...

வருகை மிக்க நன்றி ஆதிரா...வாசிப்பிற்கு தேவையான எல்லாம் இருப்பதால் வாத்தியாரின் புத்தகங்களே என்னுடன் அதிகம் பயணிக்கின்றன...

ஸ்ரீராம். said...

சுஜாதா பற்றிய பதிவுகள் தவிர வேறு எதுவும் போடுவதில்லை என்று விரதமா? மற்ற பிளாக்குகள் பக்கமும் காணோம்...? எங்காவது சுஜாதா பெயர் தென்பட்டால் மட்டும் பத்துஜி வாசனை அடிக்கிறது!

பத்மநாபன் said...

ஸ்ரீ....வாத்தியாரை சுத்தியே என் தமிழ் அமைந்துவிட்டது... இப்பக்கூட உங்கள் கில்லி பதிவை படித்தவுடன் நம்ம நினைப்போடு சேர்ந்து வாத்தியார் பம்பரவிளையாட்டு அனுபவங்களை ஒரு கட்டிரையில் எழுதியது நினைவுக்கு வந்தது........

Unknown said...

இது என் முதல் வருகை சகோதரரே. அருமையான பதிவு.. தொடருங்கள் தொடர்கிறேன்....

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி எஸ்தர் சகோ...

ஸ்ரீராம். said...

எதுவும் எழுதாமல் 'டேக்கா'க் கொடுக்கும் உங்களுக்கு தொடர்பதிவுக்கு அழைப்பு....! மோகன் குமார் யோசனையை ஏற்று 'சைக்கிள் அனுபவங்களை'த் தொடர.... வும்! :))

பத்மநாபன் said...

அழைப்பிற்கு மிக்க நன்றி Sri....( சும்மா இருந்த சைக்கிளை சுத்தி கெடுத்திட்டேன் ) மிக வி..ரை...வி.....ல் ஓட்டுகிறேன்

இராஜராஜேஸ்வரி said...

ஆனந்தவாசிப்பு !

பத்மநாபன் said...

மிக்க நன்றி ராஜி மேடம்......

Aathira mullai said...

இனிய நட்புக்கு நட்பு நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

இதையெல்லாம் படித்திருந்தால் அவர் கமெண்ட் என்னவாக இருக்கும்:)
வணக்கம் சார். எங்கள் நினைவில் எப்போதும் இருப்பீர்கள்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஆதிரா...

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அவர்களுக்கு...

தலைவர் கமெண்ட் தனியா இருக்கும்....

மோகன்ஜி said...

இரண்டு நாட்களாய் சென்னையில். லேண்ட் மார்க்கில் சுஜாதா புத்தகங்கள்
கடவுள்களின் பள்ளத்தாக்கு,எப்போதும் பெண் ,எழுத்தும் வாழ்க்கையும் வாங்கினேன்.

உம்மை நினைத்துக் கொண்டேன்..புரை ஏறியதா?

பத்மநாபன் said...

வணக்கங்ணா...ரொம்ப நாளாச்சு ..வலைக்கு வரவே முடியறதில்ல..
புரையெற வச்சதற்க்கு மிக்க
நன்றி.. நீங்கள் குறிப்பிட்டதில் வாத்தியாரின் எழுத்தும் வாழ்க்கையும் படித்ததில்லை நினைவூட்டலுக்கு நன்றி...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மிக்க நன்றி தங்கைமணி..வாத்தியார் எழுத்தில் கொடுத்த வாசிப்பு சுகத்திற்கு நன்றியாக எதாவது வலைப்பூவில் செய்யத்தோன்றுகிறது.. அது தான் முன்று வருடங்களாக நினைவுப் பதிவு//


அதுக்காக வருசத்துக்கு ஒரு பதிவு மட்டும் தான் போடறதுன்னு முடிவுல இருக்கறது ஞாயமில்லீங்ண்ணா...:)

பத்மநாபன் said...

ஞாயமில்லேன்னு சொல்றது ஞாயந்தா தங்கச்சி.... சரக்கு கெடைக்கறப்ப நேரம் கெடைக்கமாட்டிங்குது ... நேரம் கெடைக்கறப்ப சரக்குக்கு விட்டத்த பாக்கவேண்டியிருக்கு ... ரெண்டையும் சரிகட்டி சீக்கிரம் வெளிய வாரேன் ....... நன்றி ...நன்றி .....

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க...

தொடர்ந்து எழுதவும்... நன்றி...

பத்மநாபன் said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ....விரைவில் வருகிறேன் உங்கள் வலைபூவிற்கு....

மோகன்ஜி said...

நலம் தானா பத்மநாபன்?

அப்பாதுரை said...

என்னங்க ஆளையே காணோம்? நல்லா இருக்கீங்களா?

பத்மநாபன் said...

சுகம் அப்பாதுரை .... இந்த புது இடத்தில் நேரமும் , உருப்படியான வலைத்தொடர்பும் கிடைக்காததனால் இடைவெளி ஆகிவிட்டது ...

தொடர்ந்து வந்தால் தான் நன்றாக இருக்கும் என எனக்கு நானே கொள்கை வைத்து கொண்டு சோம்பி கிடக்கிறேன் ...

அவ்வப்பொழுது வலைப்பூக்களை (குறிப்பாக உங்கள் மற்றும் எங்கள் )ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து விட்டு மானசீக மாக நன்றி தெரிவித்துவருவேன்.. ..

( சில நேரங்களில் ஆற்றாமை ..பொறுக்கமுடியாமை எல்லாம் வரும் ).

விரைவில் குத்தித்தெழுந்து வருகிறேன்

அப்பாதுரை said...

நிதானமா வாங்க..
நலம் விசாரிக்கத்தான் வந்தேன்..

பத்மநாபன் said...

நட்பிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ....