Sunday, September 11, 2011

பாரதி மொழிகள் பத்து


 

1 .எல்லா மதத்தினரும் ஒரே தெய்வத்தை தான் வணங்குறார்கள். லௌகிக விஷயங்களை போலவே மத விஷயத்திலும் ஒப்பு, விடுதலை, உடன்பிறப்பு இவை மூன்றும் பாராட்ட வேண்டும்.

2. அச்சம் இருக்கும் வரை நீ  அறிவாளியாக மாட்டாய்.

3. நீதி , சமாதானம், சமத்துவம் இவற்றாலே ,இவ்வுலகத்தில் தீராத தைர்யமும்  அதனால் தீராத அன்பும் எய்தலாம் ..

4. நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்னவென்றால் விடா முயற்சி.மனதிற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை சித்தியாகும்.

5. ஒரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் எற்படுகின்றன.அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைர்யம் எற்படுகிறது.. கூட்டம் கூட்டமாக நேர்மை வழியில் புக வேண்டும்….

6. புதர் கூட்டத்திலே தீப்பிடித்தாற்போல மனத்திலுள்ள மற்ற கவலைகளையும் எண்ணங்களையும் எரிக்கும் ஒரே ஜோதியாக விளங்கும் பெரிய விருப்பத்தைத் தியானமென்று கூறுகிறோம். உள்ளத்தில் இவ்வித அக்னி ஒன்று வைத்துக் கொண்டிருப்போமானால் , உலகத்து காரியாதிகளெல்லாம் நமது உள்ள நிலைக்கு இணங்கியவாறே மாறுபடுகின்றன..

7. மனிதனுக்குப் பகை புறத்திலில்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம் சோம்பல் முதலான குணங்கள் நம்மை ஜெயம் அடையவொட்டாமல் தடுக்கும் உட்பகைகளாம்.

8. விடுதலையே இன்பத்திற்கு வழி. விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமைடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கி பெருமை காண்பார்கள். துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்…


9. உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும். ஆகையால் உடம்பிலுள்ள நோய்களை தீர்த்து வலிமையேற்றுவதற்கு மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத்தகும்.

10. துணிவு, உள்ளத்தூய்மை, எதாவதொரு மகத்தான லட்சியத்தில் அறிவை ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நட்டங்களில் சிந்தனை இல்லாமை- இவைதான் யோகத்தின் ரகசியம்…

இன்று  பாரதி நினைவு நாள்…   நினைவு போற்றுவோம்…
பாரதியார் கவிஞர் என்பதையும் தாண்டி தத்துவதரிசனத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார் . இயற்கையின் ரகசியங்கள் அனைத்தும் அறிந்து அதன் முலம் எல்லையற்ற சக்தியை  தமிழர்கள்  அனைவரும்  பெற வேண்டும் என்பது அவரது  ஆவல். பாரதி பத்திரிக்கை ஆசிரியராக பல கட்டுரைகளையும்  கதைகளையும்  வடித்துள்ளார்… அதில் பல பொன்மொழிகள் உள்ளன. 

பாரதி பதிவு நினைவுகள்  இங்கே…. 

பாரதியின் பாடல்கள்  இங்கே  கேட்கலாம்..தீராத விளையாட்டு பிள்ளையோடும் கேட்கலாம்…  எங்கள் வலைப்பூவிலும் கேட்கலாம். தெவிட்டா தெள்ளமுது.

45 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
இன்று பாரதியாரை நினைவு கொள்வோம்.
உங்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரத்னவேல் சார்...

சென்ற பதிவில் சுஜாதா அவர்களின் முன்னுரை ( இரத்தம் ஒரே நிறம்) பற்றி எழுதுகையில் உங்கள் நினைவு வந்தது...

Aathira mullai said...

பாட்டுத்திறத்தால் இவ்வையத்தைப் பாலித்தவன். பாட்டுத்திறத்தால் வையத்து மாந்தர் மக்கள் மனங்களில் என்றும் வாசம் செய்பவன். அவன் நினைவு நாளை நினைவு படுத்தியமைக்கு நன்றி. அழகான பத்துக் கருத்துகள். தேர்ந்து எடுத்து பதிவிட்டமைக்கு நன்றிகள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாரதி பற்றிய பதிவுக்கு நன்றி

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஆதிரா...பாட்டுக்கொரு புலவன் பாரதி பற்றிய உங்கள் சமிபத்திய பதிவும் சிறப்பான நினைவூட்டல்...

பத்மநாபன் said...

மிக்க நன்றி பிரகாஷ்....

வெங்கட் நாகராஜ் said...

முண்டாசுக் கவிஞரின் நினைவு நாள் அன்று அவரின் பத்து மொழிகளுடன் கூடிய பகிர்வு.... மிக நல்ல பகிர்வு நண்பரே....

ஒவ்வொரு பாடலும் கேட்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வுகள்.... அப்பப்பா....

பத்மநாபன் said...

மிக்க நன்றி வெங்கட்ஜி...கவிஞன் பாடகன் நிலையிலும் இருந்து ராகத்தோடு இயற்றிய முதல் முத்தமிழ் கவிஞன் மூரட்டு மீசை முண்டாசு கவியின் நினைப்பே சிலிர்ப்பானது...

shanmugavel said...

ஆம்.தெவிட்டாத தெள்ளமுதுதான்.பகிர்வுக்கு நன்றி.

பத்மநாபன் said...

அமுதை பருக வந்தமைக்கு மிக்க நன்றி சண்முகவேல்..

RVS said...

பத்துவின் பா.பத்துவிற்கு நன்றி!!:-))

அவன் ஒரு யுகக்கவிஞன் ஜி! :-)

ஸ்ரீராம். said...

தேர்ந்தெடுத்த கருத்துகளை தேனாகக் கொடுத்திருக்கிறீர்கள். ஐந்தும் ஏழும் மறுபடி படிக்க வைத்தன. 'எங்கள்'க்கு சுட்டி தந்தமைக்கு நன்றி. '

அப்பாதுரை said...

பாரதியாராச்சே... ஏதாவது எழுதியிருக்கீங்களானு பாக்க வந்தா.. ஏமாறலை.
வித்தியாசமான பதிவுக்கு நன்றி.

பாரதியார் பாடல்கள் அருமை. அவருடைய அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகளும், சில கதைகளும் அருமை - அதிகம் படிக்கப்படவில்லையோ?

எல் கே said...

அண்ணா வழக்கம் போல் லேட் பாரதியை பற்றிய கொஞ்சம் வித்யாசமான பதிவு இது.

அப்புறம் பாரதி விரும்பிகளுக்கு அதீதம் இதழில் அவருடைய பாஞ்சாலி சபதம் உரை வந்துக் கொண்டிருக்கிறது. ஒருநாள் விட்டு ஒரு நாள் என்று அது தொடர்ந்து வரும்

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஆர்.வி.எஸ்… நீங்கள் பாட்டு போடுவீர்கள் என எதிர்பார்த்தேன். யூட்டியிலும் பாடல்கள் குறைந்துவிட்டது. ரீப்பிட்டக் கூடாது என்று உங்கள் சென்ற வருடத்தைய அழகான தொகுப்பை சுட்டினேன்.(நன்றி)
நடுவில் நீங்கள் போட்ட அருண் பாடிய ’’ஆசை முகம் மறந்து போச்சே’’ பாடலை இறக்கி வைத்துள்ளேன். அவ்வப்போது கேட்டு மகிழ்கிறேன் (நன்றி..நன்றி)

பத்மநாபன் said...

மிக்க நன்றி அப்பாதுரை…. பத்திரிக்கை ஆசிரியாராக தலையங்கங்கள் . மற்ற கட்டுரைகள், கதைகள் என பாரதி போட்டு தாக்கியுள்ளார். அதில் பெண்விடுதலை, ஜாதி ,கலைகள், அறிவியல் என சதிராட்டம் ஆடியுள்ளார்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஸ்ரீ… கவிஎழுத்தை போலே உரை எழுத்திலும் பாரதி சிறப்பு காட்டியுள்ளார்.. ஹிக்கிமில் நிறைய பாரதியார் கட்டுரைகள் புத்தகங்கள் பல பாகங்களாக அடுக்கி இருப்பதைக் கண்டேன்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி எல் கே…. இப்பொழுது அதீதத்தில் அதீதமாக நுழைந்து விட்டீர்கள் .. பாஞ்சாலியை பார்க்க வருகிறேன்…

ADHI VENKAT said...

பாரதியின் நினைவாய் நல்லதோர் பகிர்வு சகோ. பொன்மொழிகள் அனைத்தும் பொக்கிஷம்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி கோ. ச.கோ….. பாரதியின் கவிகளில் போலவே, கட்டுரைகளிலும் கருத்து பொக்கிஷம் நிரம்பியிருக்கும்….

மனோ சாமிநாதன் said...

பாரதியின் பத்து மொழிகளும் பாரதிக்கு அருமையான சமர்ப்பண‌ங்கள்!
அருமையான பதிவு!

Aathira mullai said...

//பாட்டுக்கொரு புலவன் பாரதி பற்றிய உங்கள் சமிபத்திய பதிவும் சிறப்பான நினைவூட்டல்...//

Aathira mullai said...

பாரதிக்காக என் எண்ண அலைகளில் எழுந்த கருத்துகளை ஒரு சிறு கவிதையாகவும் வடித்துள்ளேன் பத்மநாபன். அது பழைய கவிதையாக இருப்பதால் தங்கள் பார்வைக்குள் மாட்டியிருக்காது. அந்த இணைப்பைக் கொடுத்துள்ளேன். தங்கள் மேலான பார்வைக்காக..

http://tamizhnodigal.blogspot.com/2010/03/blog-post_14.html

பத்மநாபன் said...

மிக்க நன்றி மனோ மேடம்... பாரதி கட்டுரைகளிலும் மிளிர்கிறான் தத்துவங்களாகவும் பொன் மொழிகளாகவும்...

பத்மநாபன் said...

சுட்டியதற்கு மிக்க நன்றி ஆதிரா....தமிழ் நொடிகளில் கவி கொட்டுகிறது...வாழ்த்துகள்..

geetha santhanam said...

பாரதியாரின் கட்டுரை, கதைகளைப் படித்ததில்லை. அவர் தன் மகளுக்குத் திருமணத்தின்போது அறிவுரைகளாகக் கூறியதை மட்டும் படிக்க வாய்ப்பு கிட்டியது. பாரதியாரின் நினைவு தினத்தன்று வித்தியாசமாக அவரின் பாடல்களுக்குப் பதில் அவரின் கருத்துக்களைத் தொகுத்தளித்தற்குப் பாரட்டுக்கள்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி கீதா மேடம் ... நானும் இப்பதான் பாரதியின் கதை கட்டுரைகளை படிக்க ஆரம்பித்துள்ளேன் ...

இராஜராஜேஸ்வரி said...

பத்மநாபன் அவர்களின்
பாரதி மொழிகள் பத்து"
பகிர்வு சிறப்புக்குப்
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி ராஜி மேடம்.... ப..பா.. கருத்துக்கு சிறப்பு நன்றிகள்...

meenakshi said...

மிகவும் அருமையான பதிவு. அவரது பொன்மொழிகளை வெளியிட்டு அழகாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். மிக்க நன்று.
ஐந்தாவது பொன்மொழியை படித்த போது உடல் சிலிர்த்து விட்டது. அவரது பாடல்கள் பல நினைவில் இருந்தாலும் 'நெஞ்சுக்கு நீதியும், தோளுக்கு வாளும்' என்ற பாடலில் ' தெள்ளு தமிழ் கலைவாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன், எள்ளத்தனை பொழுதும் பயனின்றி இராதெந்தேன் நாவினிலே, வெள்ளமென பொழிவாய்' என்ற இந்த வரிகளை எம்.எஸ். அவர்கள் பாடி கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் வந்திவிடும்.

பத்மநாபன் said...

நேர்மையை வலியுறுத்தும் பாரதியின் பொன்மொழியையும்…. நெஞ்சுக்கு நீதியும் பாட்டையும் எடுத்து சொன்னதற்கு மீனாக்ஷி அவர்களுக்கு மிக்க நன்றி… இன்று எம்.எஸ் அம்மா அவர்களின் பிறந்த நாள் ..பாடலை எழுதிய பாரதி அதை பாடிய எம்.எஸ் அம்மா..இவர்கள் பிறந்த மண்ணும் மொழியும் நமது என்பதை தவிர வேறென்ன பெருமை வேண்டும்

இராஜராஜேஸ்வரி said...

தெவிட்டா தெள்ளமுதாய் ஆனந்தவாசிப்பு அருமை.

பத்மநாபன் said...

மிக்க நன்றி இராஜி மேடம்...

ரிஷபன் said...

துணிவு, உள்ளத்தூய்மை, எதாவதொரு மகத்தான லட்சியத்தில் அறிவை ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நட்டங்களில் சிந்தனை இல்லாமை- இவைதான் யோகத்தின் ரகசியம்…

நினைத்தாலே சிலிர்க்கச் செய்யும் மந்திரச் சொல் ‘பாரதி’
அவர் வார்த்தைகளே சத்தியமாய்.

பத்மநாபன் said...

பாரதி எனும் முவ்வெழுத்தே மந்திர சொல்...கருத்திற்கு மிக்க நன்றி ரிஷபன்...

கே. பி. ஜனா... said...

பாரதி நினைவுகள் ... புல்லரிக்க வைக்கின்றன. நன்றி.

பத்மநாபன் said...

கருத்திற்கு மிக்க நன்றி கே.பி.ஜனா அவர்களே.. பாரதி கவிதை தாண்டியும் கலக்கியிருக்கிறார்....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப லேட்டா படிக்கிறேன், மன்னிக்கணும். நினைவு நாளுக்கு நினைவு கூறும் 'பத்து' மொழிகள். Nice

பத்மநாபன் said...

பாரதி பத்தை படித்தற்கு மிக்க நன்றி தங்கை மணி.....

மோகன்ஜி said...

தாமதமாய் வந்து சேர்ந்தேன்.. எனக்கு எல்லா நாளுமே பாரதியை நினைக்கும் நாளல்லவா?

அந்த யுகக்கவிஞனின் நினைவு மலராய் மணம் வீசுகிறது உங்கள் பதிவு பத்மநாபன்.

பத்மநாபன் said...

மிக்க நன்றி மோகன்ஜி.... கவிதை தாண்டி பாரதியை பார்த்தேன் .. தமிழின் எந்த கோணத்திலும் தரிசிக்க வைக்கிறார் பாரதி ....

Aathira mullai said...

//இது போன்ற நிகழ்வுகளை மிக ஈடுபாட்டோடு செய்யும் ஸ்டான்லி மருத்துவமனையை மனம் நிறைந்து பாராட்ட வேண்டும் .அங்கு பணிபுரியும் அனைவருக்கும், இந்த பதிவு அவர்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஊக்கமாக அமையும்.. //

என் கட்டுரைக்கு தாங்கள் இட்ட பின்னூட்டம் குமுதம் ஹெல்த் இதழில் ‘வாசகர் கடிதங்கள்’ வெளியாகியுள்ளது பத்மநாபன். மிக்க நன்றி.

ஏன் பதிவு எதுவும் இடாமல் இருக்கிறீர்கள்? அடுத்த பதிவை ஆவலோடு எதிர் நோக்கி..... அன்புடன்..

பத்மநாபன் said...

அச்சு எழுத்திலும் பின்னூட்டத்தை கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி ஆதிரா .. உண்மையில் ஸ்டான்லியின் செயல் பாடுகள் பாராட்டுக்குரியது ...பதிவு விசாரிப்புக்கு நன்றி ... விரைவில் பதிவேற்றம்

சிவகுமாரன் said...

பாரதியைப் படிக்கும் போதெல்லாம் , மனம் சொல்ல தெரியாத ஒரு உணர்வுக்குள்ளாகிறது.
என் தந்தையைப் பற்றிய நினைவுகளுக்கும் மேலான ஒரு உணர்வு அது.
நன்றி ரசிகமணி.

பத்மநாபன் said...

ஆம் சிவா...ஒரு நட்பான ஆசானாக நம்மை கட்டி வைத்துள்ளான். மிக்க நன்றி...

Powered By Blogger