Wednesday, August 10, 2011

தொடரும் முன்னுரை தொடர்

முன்னுரை தொடர்பதிவு ஒரு சுற்று வந்து அத்தொடர்க்கு முடிவுரை நெருங்கும் சமயத்தில் அருமை நண்பர் ஆர்.வி.எஸ்  அவர்களின் அன்பழைப்பு  நினைவுக்கு வர  , நேரமும் கூடிவர   சுருக்கமாய் ஒரு பதிவு…….

முன்னுரை பின்னுரை பற்றிய சிந்தனையே இல்லாமல் சுஜாதா எனும் எழுத்து தென்றல்  ஆ.வி.ஜு.வி..சாவி..குமுதம் கல்கி..குங்குமம் என எங்கெல்லாம் வீசியதோ அங்கு போய் வாசிப்பு காற்றாடிக்கொண்டோம்….பின்னாட்களில் மொத்தமாய் வந்த அவரது கதை புத்தகங்களை புத்தககடைகளில் எடுத்து திருப்பும் பொழுது முன்னுரை எனும் பெயரில் சுவாரசியமான ஒரு கட்டுரை கிடைக்கும் ..அதற்காகவே அந்த முழு புத்தகத்தை வாங்கிய நிகழ்வுகளும் உண்டு…. அதில் சில மலரும் நினைவுகளுக்குத்தீனியாக அமையும் …சில ஆச்சரியக்கேள்விகளுக்கு  விடையாக அமையும்……. அம்முன்னுரைகளை கொத்து கொத்தாக அப்படியே மறுபதிப்பதை காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த சுவாரசியங்கள்…..

 ’’இரத்தம் ஒரே நிறம் ‘’ சுஜாதா எழுதிய முதல் சரித்திரக் கதை  அந்த முன்னுரையை  அப்படியே எடுத்துப் போட வேண்டும்.. அவ்வளவு சுவாரசியங்கள் …. சுருக்காமல் அப்படியே கொடுத்தால் படிக்கும் எனது சக வாசக சொந்தங்களால் நிச்சயம் வாழ்த்தப் படுவேன் எனும்  உத்திரவாதம்  இருந்தாலும், வலைப்பூவின் மரபு கருதி சுருக்கமாக அந்த முன்னுரையின் சில முத்துக்கள்…

குமுதம் என்னை ‘ சரித்திர நாவல் எழுதி பாருங்களேன் ‘ என்று கேட்ட போது சற்றுத் தயங்கினேன்..சரித்திர நாவல் எழுதுவதற்கு என்று எழுதப் படாத விதிகள் இருக்கின்றனவாம்….சரித்திர நாவலில் சரித்திரம் மட்டும் இல்லாமல், சில தீப்பந்தங்களும் ,உறையூர் ஒற்றர்களும் வேண்டும், கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வர்ணிக்க வேண்டும்.அடிக்குறிப்புகள் தாராளம் வேண்டும்..சோழனாக இருந்தால் நல்லது. பாண்டியன் பரவாயில்லை. தமிழ்ச்சாதியின் மேம்பாடு, கடல்கடந்த நாகரிகம்…இவைகளைச் சொல்வது உத்தமம். குதிரைகளை தாங்கித்தேர்கள், முத்துக்கள் இறைந்திருக்கும் வீதிகள், யவன வியாபாரிகள், யாழ் , இன்னபிறவும் வேண்டும்.

இப்படியெல்லாம் இந்த நாவலில் எதுவும் இல்லை முதலில் என் தமிழ் நடை சரித்திர நாவலுக்கு ஒவ்வாது என்றுதான் தோன்றியது. அதனால் சமீபத்திய சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது  சிப்பாய் கலகத்தை தேர்ந்தேடுத்து அதைப் பற்றி படிக்க துவங்கினேன். சிப்பாய் கலகம் வடக்கே நடந்திருக்கிறது. தக்காணத்தில் அதன் பாதிப்பு அதிகம் இல்லை. இந்திய சர்க்கார் வழவழப்பான காகிதத்தில் சிப்பாய் கலகத்தில் செத்துப் போனவர்களின் பெயர்களை எல்லாம் பதிப்பித்திருக்கிறார்கள். அதில் தமிழ் பெயர் எதாவது இருக்கிறதா என்று தேடினேன். இல்லை. ஆனால் கர்னல் நீலின் தலைமையில் சென்னையிலிருந்து ராணுவம் , பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்களைக் கொண்டு கலகத்தை அடக்க வடக்கே போயிருக்கிறார்கள் என்கிற செய்தி கிடைத்தது. அவர்களுடன் ஒரு தமிழனை அனுப்பத் தீர்மானித்தேன். ஒரு வெள்ளைக்காரன் மேல் சொந்த வெறுப்பும் வைத்துக் கொண்டு அவனைத் தொடர்ந்து கலகத்தை நோக்கிச் செல்வதாக கதைக் கரு அமைத்துக் கொண்டபோது தமிழன் அங்கு போக எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

இந்த கதையில் வரும் பெரும்பாலன சம்பவங்கள் உண்மையானவை . சென்னை ராணுவம் கல்கத்தா சென்றது அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது  .  வெள்ளை க்காரப்பெண்கள் மாட்டிக்கொண்டது, நாநாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் , தாத்யா தோப்பேயின் வீரம் எல்லாம் நிஜம்தான். இந்த நிஜ சம்பவங்களுக்கு இடையில் என் முத்துக்குமரனையும்  பூஞ்சோலையையும் , பைராகியையும் உலவ விடுவது எனக்கு எளிதாக இருந்தது. அவர்கள் கற்பனைப் பாத்திரங்கள் என்றாலும் அவர்கள் பேச்சும் நடவடிக்கைகளும் அவர்கள் நாட்டு பாடல்களும் . அவர்கள் வடக்கே யாத்திரை செய்யும்பொழுது பார்க்கும் காட்சிகளும் சரித்திர ஆதாரமுள்ளவை . ஒரு முத்துக்குமரன் அங்கே போய் அல்லல் பட வாய்ப்புக்கள் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். கற்பனை பாத்திரங்களையும் நிசமானவர்களையும் ஊடாட வைப்பதில் எனக்கு தனிப்பட்ட சந்தோஷம் எற்பட்டது …

படிக்கும் நமக்கு அந்த சந்தோஷம்  நிச்சயமாக இருமடங்காக கிடைக்கும்.


ஸ்ரீரங்கத்துக்கதைகள்  என்பதுகளின் தொடக்கத்திலும்  எழுதியிருக்கிறார்  இருபது வருடம் கழித்து 2000ங்களின் தொடக்கத்திலும் எழுதியிருக்கிறார் இருவகைகளையும் சுடச் சுட படித்தவர்களுக்கு வித்தியாசம் தெரியும்  அவரே அவரது முன்னுரையில் எழுதியிருக்கிறார் படிப்போம்…..


இந்த கதைகளை ஒருமித்து நோக்கும்போது கால வேறுபாட்டினால் ஒரு விதமான சமனற்ற நிலை இருப்பதை கவனிக்கலாம்…இதை எந்த விதத்திலும் திருத்த முயற்சி செய்யவில்லை .


 ஒரு எழுத்தாளன் சிறுகதை எழுதும் போது மூன்றுவிதமான சக்திகள் பின்னனியில் செயல்படுகின்றன.ஒன்று ,அவனுடைய கதை சொல்லும் திறமை ,உத்தி,நடை போன்றவை. இரண்டு அவன் ஞாபகங்கள், மூன்று மாறி வரும் அவன் கவலைகள், எழுத்தின் முதிர்ச்சியால் கால ஓட்டத்தினால் இவைகளில் எற்பட்டிருக்கும் நிதானமான மாற்றத்தை வாசகர்கள் கவனிக்கலாம். கதாபாத்திரங்களின் பெயர்களும் குணாதிசியங்களும் கதைக்கு கதைக்கு மாறினாலும் ஆதாரமான பண்புகளான நட்பு,பாசம்,துரோகம், மோகம் போன்றவைகள் பெயர்களுக்கு அப்பாற்பட்டவை. 


’ஸ்ரீரங்கம் ‘ என்பது metaphor தான். இதை படிப்பவர் ஒவ்வோருவருக்கும் அவரவர் ஸ்ரீரங்கம் உண்டு  இதில் உள்ள மனிதர்களின் பிரதிகள் அவர்கள் வாழ்விலும் இருப்பார்கள். அவர்களை நினைத்து பார்க்க வைப்பதே இந்த கதைகளின் நோக்கம்…near equivalents என்பார்கள்.அந்த வடிவில் இக்கதையில் அத்தனை மாந்தர்களையும் நீங்கள் சந்தித்திருப்பீர்கள்…

ஒரு சிறுகதை தொகுப்புக்கு பல்சுவையோடு நகைச்சுவை கூடிய முன்னுரை….. எழுதுபவனுக்கு  காண்பதும்  கவனிப்பதும் முக்கியம் என்பது அவர் வரிகளில்.....

எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம் . எல்லோரும் கவனிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை யோசித்துப் பார்த்தால் கவனிக்க விரும்புவதைத் தான் கவனிக்கிறோம்- நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப , எப்படி?  சொல்கிறேன்.

      சின்ன வயசில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கர் சங்கீத கச்சேரி. அய்யங்கார் ரொம்ப ரசித்து , தோடி பாடிக்கொண்டிருந்தார்.மாமா என்னை ரகசியமாகக் கூப்பிட்டு ‘’ அவர் என்னத்தையோ அப்பப்ப வாயில் போட்டுக்கிறாரே டேய் அது என்னன்னு போய் பார்த்துட்டு வா’’என்றார் . மாமா கவனித்தது தோடியை அல்ல.


      இலக்கிய சிந்தனையில்  கதையின் கதை என்கிற தலைப்பில் தொல்காப்பியத்திலிருந்து துவங்கி மேற்கோள்கள் காட்டி , தீவிரமான ஆராய்ச்சி கட்டுரை போல் எனக்கே திருப்தி தரும் படியாக பேசினேன் பேச்சு முடிந்ததும் ஒரு எழுத்தாள அன்பர் என்னை அணுகி ‘’ உங்க பேச்சைக் கேட்டேன் ஏன் அப்பப்ப மூச்சிரைக்கிறது; உங்களுக்கு எதாவது ஹெல்த் பிராப்ளமா? என்றார் அவர் கவனித்தது பேச்சை அல்ல மூச்சிரப்பை மட்டும்.
         
        எனவே கவனிப்பது உடல் நிலையையும் மன நிலையையும் பொறுத்தது. காண்கின்ற எல்லாவற்றையும் கவனிக்க எனக்கு சில வருஷங்களாயின.. கவனித்தது அத்தனையையும் எழுத வேண்டும் என்பதில்லை .எழுதத் தேர்ந்தெடுக்கப்படும் விஷயத்தில் சில பொது அம்சங்கள்- முக்கியமாக  மானுடம் வேண்டும்...


பின்னுரை-1 : 
எங்கள் ஸ்ரீராம் சற்று நாட்களுக்கு முன், சமிபத்தில் படித்தது எதாவது எழுதினால் தான் ‘’ வாசிப்பு ’’இணையத்தில் நிற்கும் என்கிற வகையில் பின்னூட்டம் தட்டியிருந்தார்..அடிக்கடி படிப்பதை சமிபகணக்கில் வைத்து, அந்த மாங்கனியும் இந்த கல்லிலேயே... ....


பின்னுரை-2 :  சன்ன எழுத்து எனது...வண்ணம் வாத்தியாருடையது...
  


55 comments:

வெங்கட் நாகராஜ் said...

தொடரும் முன்னுரைத் தொடரில் முத்தான விஷயமாய் வாத்தியாரின் இரண்டு முன்னுரைகளைப் பொருத்தமாய் சொல்லியது நன்றாக இருக்கிறது....

இடைவெளி விட்டு வந்தாலும் நல்ல பகிர்வோடு வந்திருப்பது மனதிற்கு இனியதாய் இருக்கிறது....

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே....

பத்மநாபன் said...

சுறுசுறுப்பான உடனடி வருகைக்கு நன்றி வெங்கட்ஜி... எழுதிருவோம்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

முத்தான முன்னுரை பதிவு...

பத்மநாபன் said...

மிக்க நன்றி தங்கை மணி.... வாத்தியார் முன்னுரைகள் எடுத்தால் நிறுத்தமுடியாது...முடிந்தவரை சுருக்கி..

ஸ்ரீராம். said...

அருமை. உங்கள் கையைக் கட்டுப் படுத்திக் கொண்டுதான் இதோடு நிறுத்த எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பீர்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். சுஜாதா எழுத்தை எடுத்துக் காட்ட ஆரம்பித்தால் இதையும் சொல்லிடலாமோ, இது...இது...இது மட்டும் என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஸ்ரீ.தே.முன்னுரை, விஷயத்தை விட்டு மற்றவற்றை ஆப்சர்வ் செய்யும் கவனிப்பு ஆகியவை சுஜாதா முத்திரை. (பதிவில் என் பெயரை இழுத்ததற்கு ரொம்பத் தேங்க்ஸ்...!)

பத்மநாபன் said...

நன்றி ஸ்ரீ ... ஆம் ..ஒரு பதிவுக்குள் சொல்வது கடினம் தான் .வாத்தியார் முன்னுரைகளில் எழுத்து / எழுதுவது பற்றி தனிப்பட்ட விஷயங்களை சுவாரசியமாக சொல்லுவார் ....

ஸ்ரீராம். said...

ரத்தம் ஒரே நிறம் தலைப்பின் காரணமே சுவாரஸ்யம். சுஜாதா தலைப்பிலேயே எதிர்ப்புக்கு பதில் சொன்ன நேர்த்தி (முதல் கமெண்ட் அடித்த பிறகு உடனேயே ரெண்டாவது கமெண்ட் அடிக்க வந்தால் அப்போதிலிருந்தே பின்னூட்டப் பக்கம் திறக்காமல் சண்டி செய்தது. எப்போது திறக்குமோ.என்று காத்திருந்து....! எல்லா ப்ளாக்கிலும் இதே கதி!

பத்மநாபன் said...

இரத்தம் ஒரே நிறம் தலைப்பை பற்றி சொன்னது அருமை ஸ்ரீ. ஆமாம் முதல் கதையில் எதிர்ப்பு வந்ததும் அதை கையாண்ட விதமும் இரண்டாவது முன்னுரையில் சுவாரசியமாக சொல்லியிருப்பார்.... (குமுதம் ஆசிரியரிடம் ‘’ நிறுத்தி விடுங்கள் இடது கையால் எழுத வேறு பழக வேண்டும்..அடம் பிடித்து விளையாட இது ஏதும் பிரெஞ்சு புரட்சி அல்ல.. எழுத்தின் மேல் பிடிவாதம் பிடிப்பதோ, எழுதினது வேத வாக்கு , அதை வழி மறித்தால் உயிருள்ள வரை போராடுவேன் என்பதெல்லாம் விஞ்ஞானச் சூழலில் சிறுபிள்ளைத்தனம் என்று குறிப்பிட்டிருப்பார் )

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. தொடருங்கள்.

பத்மநாபன் said...

நன்றிகோ.சகோ ...

அப்பாதுரை said...

முன்னுரை ரசமாக இருந்தது. இரத்தம் ஒரே நிறம் வாங்கிப் படிக்க வேண்டும். கதை மறந்து விட்டது.

Matangi Mawley said...

இதுல "ஸ்ரீரங்கத்து கதைகள்" தொகுப்பு- சமீபத்ல தான் தேடி பிடிச்சேன். என்னோட first சுஜாதா experience. Brilliant creation! உங்க முன்னுரை choices ரொம்ப "apt". Writer ஓட versatility ய ரொம்ப பிரமாதமா எடுத்து காட்டராப்ல அமைஞ்சிருக்கு...

பத்மநாபன் said...

அப்பாதுரை...ஆங்கிலேய காலத்தை ஒரு பெரிய பழிவாங்கும் கதையோடு சின்ன பழிவாங்கும் கதையை ஊடே வீட்டு தனக்கே உரிய நடையலங்கராத்தில் இரத்தத்தை சிந்த வைத்து அது ஒரே நிறம் தான் என்பதை நிலைநாட்டியிருப்பார்...

பத்மநாபன் said...

மாதங்கி...இந்த கதைகளால் அவ்வளவு பரிச்சயம் இல்லாத எங்களுக்கே ஸ்ரீரங்கம் ரொம்ப நெருக்கம் ஆகிவிட்டது... உங்க ஊர்ங்கறதனாலே இக்கதைகள் படிக்கும் அனுபவத்தில் சுவை இன்னமும் உங்களுக்கு நிச்சயம் கூடி கிடைக்கும் ..வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

வண்ணமயமான முன்னுரை தொடர் பங்களிப்புக்குப் பராட்டுக்கள்.

பத்மநாபன் said...

பாராட்டுக்கு மிக்க நன்றி இராஜ ராஜேஸ்வரி மேடம் ..

M.R said...

அழகான முன்னுரை பதிவுக்கு நன்றி நண்பரே

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி எம். ஆர்...

சிவகுமாரன் said...

படிக்க படிக்க சலிக்காத சுஜாதாவின் கதைகளைப் போலவே அவரது முன்னுரைகளும்.
மீண்டும் இரத்தம் ஒரே நிறம் படிக்க வேண்டும் என்ற ஆசையை தூணி விட்டது தங்கள் பதிவு

பத்மநாபன் said...

நன்றி சிவா , நாட்டு புற பாட்டும் கதையுமாக இருக்கும் நவீன சரித்திர நடையை மீண்டும் படிக்கலாம் ...

Aathira mullai said...

எனக்கு இவ்விரண்டும் அறிமுக உரை. சுவாரசியமாக உள்ளது. அதிகம் படித்திராத சுஜாதாவைப் படிக்கத் தூண்டும் தங்களின் முந்தைய ஒவ்வொரு பதிவும். இப்பதிவும். வருந்தியது உண்டு நேரமின்மை கருதி. இனி என் நேரம் சுஜாதாவின் நேரமாகத்தான் இருக்கும். வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் ஆனந்த வாசிப்புக்கு நன்றி..

பத்மநாபன் said...

நன்றி ஆதிரா .... சுஜாதா வாசிப்புக்கு முதன்மை கொடுத்ததுக்கு நன்றி ... நிச்சயம் பிடிக்கும் அவரது கதையும் நடையும் ...

அப்பாதுரை said...

பாகிஸ்தான் போரை ஒட்டிய கதை என்று நினைத்து எழுதினேன்.. இது வேறே கதை போலிருக்கு.

பத்மநாபன் said...

அப்பாதுரை இது சிப்பாய் கலகம்.... ஆங்கிலேயரின் அடக்குமுறை ...

Aathira mullai said...

பத்மநாபன் சார், அப்படியே சுஜாதாவின் படைப்புகளில் ஒரு வரிசை.. அதாவது எது முதலில் எது இரண்டாவது படிக்க வேண்டும் என்று பட்டியல் ஒன்று கொடுத்தால் நல்லது. முடிந்தால்...

அப்பாதுரை said...

பாகிஸ்தான் போரை ஒட்டி எழுதிய கதையின் பெயர் நினைவிருக்கிறதா?

பத்மநாபன் said...

ஆதிரா ,சுஜாதா அவர்கள் எழுத்தை பொறுத்த வரை எதில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் ... நான் ஆரம்பித்தது அறிவியலில் .. ஏன் எதற்கு எப்படி .....அப்படியே பிரிவோம் சந்திப்போம் தொடர் ...பின்னர் கைக்கு கிடைக்கும் எல்லாம் ... கற்றதும் பெற்றதும் தொகுப்புகள் கிடைத்தால் அதில் ஆரம்பிக்கலாம்
அதில் சிறு பத்தியை படியுங்கள் கிழே ...
ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்! ...

பத்மநாபன் said...

அப்பாதுரை ... படித்த ஞாபகம் இருக்கிறது சட்டென்று வரமாட்டேன் என்கிறது ... பிடித்து படித்து வருகிறேன் ....

ஸ்ரீராம். said...

பாகிஸ்தான் போரை ஒட்டி சுஜாதா எழுதிய கதையின் பெயர் பதினாலு நாட்கள்.

பத்மநாபன் said...

சுஜாதா என்சைகிளோபிடியாவே வச்சிருக்கிங்க ஸ்ரீ... நன்றி..நன்றி

Aathira mullai said...

மிக்க நன்றி பத்மநாபன் சார். இந்த சிறு பகுதியே சுவாரசியமாக இருக்கின்றது. சரி கற்றதும் பெற்றதும் தேடுகின்றேன்.கிடைத்துவிடும். நன்றி மீண்டும்.

Aathira mullai said...

தாங்கள் கொடுத்திருக்கின்ற லிஸ்டை குறிப்பு எடுத்துக்கொண்டேன். முதலில் கவும் பெவும்.

ஸ்ரீராம். said...

மேலும் ஒரு தகவல்....இந்தக் கதை (பதினாலு நாட்கள்) பாகிஸ்தான் போர் பற்றியல்ல, பங்களாதேஷ் போர் என்று ஞாபகம். ஸ்குவாட்ரன் லீடர் குமார், மஞ்சு, அப்புறம் ஒரு முஸ்லிம் ( எதிரணி ) கேப்டன்... நானும் மறுமுறை படிக்கப் புத்தகத்தைத் தேடுகிறேன்...மதுரையில் மாட்டிக் கொண்டுள்ளது அது!

பத்மநாபன் said...

தகவலுக்கு நன்றி ஸ்ரீ....கிழக்கு பாகிஸ்தான் என்று வைத்துக்கொள்வோம்...எனக்கு புத்தகமாக படிப்பதில் தான் சுகம் மானிட்டரை விட .. கிழக்கிலும் உயிர்மையிலும் பதிப்பு இருப்பதாக தெரிகிறது...இந்த முறை ஊர் வந்தவுடன் பிடித்து விட வேண்டியது தான்

ஸ்ரீராம். said...

கேள்வி கேட்டு விட்டு அப்பாதுரை அப்புறம் இங்கு வரவேயில்லையா...!!

பத்மநாபன் said...

வருவார்.... இப்ப பாட்டு புடிக்கிறதுல பிஸியா இருக்காரு....

அப்பாதுரை said...

பதினாலு நாட்கள்! duh!
நன்றி ஸ்ரீராம்.

அப்பாதுரை said...

பங்களா தேஷ் உருவானதே இந்தப் போருக்கு அப்புறம் தானே ஸ்ரீராம்? கிழக்கு பாகிஸ்தான் விடுதலையோடு நிறுத்தாமல் இஸ்லாமாபாத் வரை போகலாம் என்ற மானெக்ஷாவை இந்திரா காந்தி தடுத்தாராம்.. அல்லது மாற்றிச் சொல்கிறேனோ?

ஸ்ரீராம். said...

ஆமாம்...ஆமாம்...

எல் கே said...

கலக்கல் . வழக்கம்போல் பின்னூட்டங்களில் அதிக விஷயம் தெரிந்தது


@அப்பாதுரை

அம்மையார் தடுத்தார் என்றுதான் நானும் கேள்விப்பட்டேன்

பத்மநாபன் said...

நன்றி எல் .கே ...

வரலாறு மறந்து விட்டது ... அம்மையார் குழப்பத்தை வளர விடாமல் தவிர்க்க, தடுத்திருக்கலாம் .பலம் இல்லாமல் இல்லை . வம்புக்கு போவதில்லை கார்கில் மாதிரி வந்த சண்டைகளை விடுவதில்லை எனும் கோட்பாடு தான் இந்த சுழலுக்கு சரி ..

RVS said...

அதுதான் எனக்கு நோபல் என்று சொன்னார் பாருங்க வாத்யார்... அது...அது... லட்சத்தில ஒரு வார்த்தை...

வாத்யாரோட கதைகள் நிறைய சொல்லலாம்...

கணையாழியின் கடைசிப் பக்கங்கள்ல... ஒரு வடக்கத்திய திருமணம் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் போது...

”இன்னும் ஒரு அரை மணியில் அங்கே ஒரு கல்யாணம் நடக்கப் போவதாக யாருக்குமே தெரியாது” என்று ஆரம்பித்து ஒரு பாராவில் ஒரு சிங் கல்யாணத்தை முடிப்பார்..

சொல்லிகிட்டே போகலாம்.. இருந்தாலும் நீங்க அவரோட பர்ஸ்ட் ரேங்க் மாணவன்.. நா கடைசி பென்ச்... அதனால இத்தோட நிறுத்திகிறேன்..

முன்னுரைகளைப் பற்றி சொல்லனுமே... ரசிகமணிக்கு கற்றுக் கொடுக்கனுமா? அற்புதமான செலக்‌ஷன்...


அப்பப்ப.. எழுதுங்க ஜீ.. அப்புறம் உங்க வெப்சைட் அட்ரஸ் உங்களுக்கே மறந்துடப்போவுது... :-)))))))

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஆர்.வி.எஸ்...

இப்படி வெளுத்து வாங்கற எழுத்தோட பின்னற நீங்க கடைசி பெஞ்சா..

வாத்தியாருக்கு முதல் ரேங்க் மாணவர்கள் நிறைய இருக்கிறார்..நானெல்லாம் நடு பெஞ்சில் ஒழிஞ்சு உட்கார்ந்து படிக்கும் பார்ட்டி...

இந்த ஆறிலிருந்து ஆறு வேலைப்பாட்டில் பொறுமையாக யோசித்து எழுத முடிவதில்லை ..எதாவது வாசிக்கத்தான் முடிகிறது...

மீண்டும் நன்றி..

ரிஷபன் said...

சுஜாதாவின் எழுத்துக்களில் உள்ளே போனால் மீள்வது கஷ்டம்.. அந்தச் சுழலில் மாட்டிக்கொண்டால் காவிரிப் பிரவாகம் போலத்தான்.. மற்ற வேலைகள் மறந்து போகும்.
நிஜமாகவே ஆனந்த வாசிப்புத்தான்..

பத்மநாபன் said...

மிக்க நன்றி ரிஷபன்.... உங்களை மாதிரி ஸ்ரீரங்கத்து எழுத்தாளர் / கவியாளர் தொடர்பில் இருப்பது சுஜாதா நினைவுகளை கூடுதல் உயிர்ப்பாக வைத்திருக்கிறது....

அம்பாளடியாள் said...

அருமையான ஆரம்பம் மென்மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் நன்றி உங்கள் பகிர்வுக்கு ..............

பத்மநாபன் said...

மிக்க நன்றி அம்பாளடியாள் ...அன்பான வருகைக்கும் கருத்திற்கும் ....

மனோ சாமிநாதன் said...

இன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.
www.blogintamil.blogspot.com

Aathira mullai said...

அனைவரும் வாசிக்கக் காத்திருக்க... தாங்கள் ஆனந்தமாக ஓய்வு எடுக்கிறீர்களா பத்மநாபன்?

அடுத்த பதிவுக்காக கால் கடுக்கக் காத்திருக்கிறோம்..

பத்மநாபன் said...

வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியற்கு மிக்க நன்றி மனோ மேடம் ... முத்துச்சரத்திலிருந்து அறிமுகச்சரங்கள் வலைச்சரத்தை அழகூட்டுகிறது....

பத்மநாபன் said...

அடடா ஆதிரா உட்காருங்க.. மின் விசிறியை தட்டி விட்டுட்டேன் ...சீக்கிரம் பதிவு போட்டுர்வோம் ... கற்றதும் பெற்றதும் ஆரம்பிச்சிட்டிங்களா ....

மோகன்ஜி said...

அன்பின் பத்மநாபன்! ஒரு மாசமாச்சு வலைப் பக்கம் வந்து.. ஆந்திராவில் பெரிய சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டி வந்தது. எடுத்துச் சென்ற மடிக்கணனி தகராறு செய்ய இந்த இடைவெளி.

அழகான முன்னுரைகள்.
சுஜாதாவின் எளிமையான ஸ்வாரஸ்யம் மிகுந்த முன்னுரைகள்.ரத்தம் ஒரே நிறம் வந்த சமயத்தில் அந்தக் கதை பற்றி அவருடன் நேரில் பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ரொம்பவே டேக் இட் ஈஸி தொனிக்க பேசினார்.

நீங்கள் இந்தப் பதிவின் நீட்சியாக இன்னொரு பதிவும் போட வேண்டும்.. எது அன்புக் கட்டளை..
இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன் பாருங்கள்

பத்மநாபன் said...

அஹா மோகன்ஜி...தலைவரை பார்த்து கதை பற்றி பேசியிருக்கிறீர்களா.. கொடுத்து வைத்தவர்.. முதல் கதை வந்து நிறுத்தப்பட்ட சமயம் வாத்தியார் சற்று சங்கடத்திற்கு உள்ளானதாக கேள்வி பட்டேன்.. பின்னர் அதை சரி பண்ணி இரத்தம் ஒரே நிறம் என அழகாக வடித்தார்.

நன்றி மோகன்ஜி

இராஜராஜேஸ்வரி said...

அதில் சில மலரும் நினைவுகளுக்குத்தீனியாக அமையும் …சில ஆச்சரியக்கேள்விகளுக்கு விடையாக அமையும்…/

ஆச்சரியம்!

பத்மநாபன் said...

ஆமாங்க ராஜி மேடம் ... ஆச்சர்யம் ... இப்படித்தான் ஓரு முன்னுரையில் , எப்படி பல பத்திரிக்கைகளில் ஓரு சேர எழுத உங்களுக்கு நேரம் கிடைக்குது என வாத்தியாரிடம் கேட்டதற்கு ... மொத்தம் தொடர் நாவல் கட்டுரை எல்லாம் சேர்ந்து 150 பக்கங்கள் ஓரு மாதம் தேரும் .. ஓரு நாளைக்கு ஐந்து பக்கங்கள் தானே எழுதிவிடுவேன் என சுலபமாக சொல்லிவிட்டார் ... சிந்தனை எனும் வஸ்து அவருக்கு ஊற்றாக கொட்டியிருக்கிறது ....

Powered By Blogger