Thursday, March 31, 2011

பெயராம் பெயர் ....

இனிய  தம்பி   எல்கே யின்   தொடர் அழைப்பிற்கு  மிக்க நன்றியோடு  வி....ரை......வா........க  இந்த பெயர்ப்  பதிவு .......
ஆவணி மாதம் ஒரு முழு நிலவு நாளன்று  தென்னகத்து மலைகளின் ராணியான  உதகையில்  உதயமானேன்...

                              ( உருண்டு ஆடிய ஊட்டி கார்டன் )

ஆவணிமாதம் என்றாலே பண்டிகைக்கும்  விரதங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும்..வேறு பொழுது போக்குகளே இல்லாத அந்த கால கட்டத்தில்  வெகு சிரத்தையாக  விரதங்களை கடைப்பிடித்து  விழாக்களை கொண்டாடி மகிழ்வர் எங்கள் குடும்ப முன்னோர்கள் . இப்பொழுது அந்த வரிசையில் விநாயகர் சதுர்த்தி மட்டும் பரவலாக மிஞ்சி நிற்கிறது.

அன்றைய தினம்   அனந்தவிரதம் எனும் விஷ்ணுவை பூஜிக்கும் பண்டிகையன்று பிறந்ததால்  தாத்தாக்கள் பெயர் தேடும் படலத்தில் எந்த சிரமமும் படாமல்    அனந்தபத்மநாபன் எனும் பெயரை   தேர்வு செய்து விட்டார்கள் .   நெல்லில் பெயர் எழுதி  புரியாத சிசுவான  என்  காதில் மூன்றுமுறை பெரியவர்கள் ஓதியதாக அம்மா சொல்ல, சற்று புரியும் காது ஆனவுடன் கேட்டுக்கொண்டேன் ...

அந்த பெரும் பெயரின் இடைஞ்சல்கள்  முதலில் புரியவில்லை ..ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்  பதிவேட்டில் கையொடிய எழுதும் போதெல்லாம் திட்டித் தள்ளியிருப்பார்கள்..  பத்து வகுப்பு படிப்பதற்குள் பத்து பள்ளிகள்  . ( பள்ளிகளின் நினைவு கொசுவத்தியை  தனியாக பத்த வைத்துக்கொள்ளலாம் )


அனந்தன் , ஆனந்தன்  என இருவாறு  பள்ளி நாட்களில்  அழைக்கப்பட்டு  கொண்டிருந்தேன் . பத்மநாபன்  படத்துக்கே வராத பெயராக இருந்தது. பத்தாம் வகுப்பில் தான் பெயர்  கெஜட்டப்படும் .. விவரமறிந்து  அந்த சமயத்தில்  சுருக்குபவர்களுக்கு  நல்ல வாய்ப்பு . என்கதையில் நடந்தது  வேறு   மதிப்புக்குரிய எனது  அறிவியல்  ஆசிரியர்  பழனிசாமி  அவர்கள்  முன்று  H  களை அங்கங்கு  சொருகி  பெயரின் நீளத்தை இன்னமும் ஒருமைல் கூட்டினார்...   எழுத்துக்கள் கூட்டிய ராசி, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று  நெகமம் எம்.எல். ஏ அவர்களால்  பரிசு  கிடைக்கபெற்றது      

பாலிடெக் /  கல்லூரி காலங்களில்    அனந்து, பத்து  என சுருக்கமாக அழைக்கப்பட ,  ஆசிரியர்களுக்கும்  எழுத்தர்களுக்கும்  முதல் பெயராக  பெரிய பெயர் எழுதும் /  தட்டும்  சிரமத்திற்கு உள்ளாக்கினேன் .. 


வேலைக்கு வந்த காலத்தில்  முழு பெயராகவே உச்சரிக்கப்பட்டது .. சத்தம் மிகுந்த தொழிற்சாலை  பணிநாட்களில் சீனியர் எஞ்சினியர் ராமசந்திரன் அவர்கள்  தூரத்தில் இருந்து  ஜாடையில்   ஆட்களை  தேடி  விசாரிப்பது  வேடிக்கையாக இருக்கும் .  ஃபோர்மேனை தேட நான்கு விரல்களை காட்டுவார். என்னைத்தேட பத்து விரல்காட்டுவார். பத்து...பத்து

இங்கு வெளிநாட்டில் நானே சுருக்கி சொல்லும் பத்மநாபனை சுருக்கி Paddy, Padi, Pad , Padma, Padman. என அவரவர் நாட்டிற்கு தகுந்த உச்சரிப்பில் படுத்துவார்கள்... அலுவலக பதிவேடுகளில் பாஸ்போர்ட் உள்ளவாறு பெயரை விரிக்கவேண்டும் என அப்பா பெயரை சேர்த்து கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் ஆக்கி  பெரிதாக்கினார்கள்... இப்பொழுது புதிதாக பணிமாற்றத்தில் விசா அடிக்கும் பொழுது தாத்தா பெயரில் (லக்ஷ்மி நாராய  ணன்)  பாதியை சேர்த்து போட்டு கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மி என இன்னமும் பெரிதாக்கி விட்டார்கள்.. எங்க வீட்டு சென்டிமெண்ட் லக்ஷ்மி அப்படியே லக்ஷ்மிகரமாக இருக்கட்டும் என சொல்லிவிட்டார்கள்.. இந்த முழுப் பெயரில் அயல் நாட்டினர் எதை எடுத்து எப்படி சுருக்க போகிறார்களோ?

இந்த தொடர் கிட்டத்தட்ட ஒரு முழுச்சுற்று வந்துவிட்டது.  விடுபட்ட நண்பர்கள் தொடரலாம் ... பொறுமையாக படித்ததற்கு நன்றி ....அழைத்த தம்பி எல்.கேக்கு மீண்டும் நன்றி...








75 comments:

சிவகுமாரன் said...

அருமை. லக்ஷ்மி நாராயண கிருஷ்ணமுர்த்தி அனந்த பத்மநாபன் அவர்களே.( ஹப்பா).
நீங்கள் ஊட்டியில் பிறந்தவரா?
நீங்கள் ரசிகமணி ஆனதன் காரணம் இப்போதல்லவா புரிகிறது. எழில் கொஞ்சும் இயற்கையை ரசித்துக் கொண்டே வளர்ந்திருப்பீர்கள்.
பகிர்வுக்கு நன்றி ரசிகமணி சார் .

எல் கே said...

அப்பா பதிவு போட்டாச்சா ? சூப்பர்

RVS said...

கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மிநாராயணன்.... இருங்க கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்..
ஊட்டி ஆளா நீங்க... அதான் ரொம்ப புஷ்டியா இருக்கீங்க.. ;-))))

Pranavam Ravikumar said...

Lovely post. One of my relative got a lengthy name like this.

His name is "Vagakkulam Ananthapadmanabha Kalyanaraman"

Ofcourse yes eventhough the name is bit lengthy, its good. My wishes!

பத்மநாபன் said...

நன்றி சிவா... எங்கு நோக்கினும் மலர்களும் மரங்களும் நிறைந்துள்ள உதகையிலிருந்து, சிறு புல் பூண்டு கூட இல்லா பாலைக்கு..

பத்மநாபன் said...

நன்றி... ஒருவழியா போட்டாச்சு எல்.கே .. எல்.கே வோடு நிறைய பெயர் பொருத்தங்கள் . எனக்கும் இனிஷியல் எல்.கே... கோவையில் என்தம்பி நடத்தும் சிறு நிறுவனங்களின் பெயர் எல். கே பிரிண்டர்ஸ் ...எல்.கே ரியல் எஸ்டேட்ஸ்..
எனது அம்மம்மாவின் பெயர் உங்கள் வலைப் பெயர் .....பாகிரதி..

பத்மநாபன் said...

நன்றி ஆர்வீஸ் .. புஷ்டியெல்லாம் இல்லை... இப்ப வெளிநாடு வருவதற்கு மெடிக்கல் டெஸ்ட் செய்ததில் ...அக்கறை எடுக்கவேண்டும் என அப்போலோ சொல்ல, ஓடி ஓடி பாதி குறைத்து விட்டேன் ( சென்ற முறை உங்களை சந்திக்காதற்கு இதுவும் ஒரு காரணம் ).. பெயர் மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டு, உருவத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் ....

பத்மநாபன் said...

நன்றி ரவி . ஆமாம் நம் ஊரில் அப்பா பெயரை சேர்த்து கொள்வோம் ....கேரளாவில் அம்மா பெயரையும் சேர்த்து ஊர் பெயரையும் சேர்த்துக் கொள்வார்கள் ....

ADHI VENKAT said...

நல்ல பெயர்க்காரணம். லக்ஷ்மி என்று கூப்பிடப் போகிறார்கள்! :))

பத்மநாபன் said...

நன்றி கோவை சகோ ... ஏற்கனவே பத்மா வோடு லக்ஷ்மியை யும் சேர்த்து விட வேண்டியதுதான் ...

எல் கே said...

என் அம்மாவின் பெயர் :)

பத்மநாபன் said...

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதற்கிணங்க வலைப்பூவிற்கு அம்மாவின் பெயர் இட்ட சிறந்த மகனாக விளங்குகிறிர்கள் எல்.கே ...வாழ்த்துக்கள் ...

அப்பாதுரை said...

"you got a name?"

"my name is william stevenson richard fernandez"

"i'll call you duke"

"now, you got a name. here's what you'd be doing.."

"what the.."
- ஒரு பழைய படத்தில் jack nicholson உரையாடல்.

பெரும்பெயர் பத்மநாபன் அவர்களே, ஊட்டியையும் சேத்துருங்க அடுத்த முறை :)

பத்மநாபன் said...

தொரை இங்லிஸ்ல சொல்லியிருக்கிங்க ... எதா இருந்தாலும் அப்பாதுரை சொன்ன நச்சுன்னு தான் இருக்கும் ... பிறந்தது ஊட்டியா இருந்தாலும் , ஊட்டி வளர்த்தது கோவை ...

இளங்கோ said...

//ஆசிரியர்களுக்கும் எழுத்தர்களுக்கும் முதல் பெயராக பெரிய பெயர் எழுதும் / தட்டும் சிரமத்திற்கு உள்ளாக்கினேன் .. //
hahahaa..

ஸ்ரீராம். said...

பெயர் விவரங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. இப்படி ஒவ்வொரு இடத்திலும் நீட்டிக் கொண்டே போனால் என்னாவது? உங்கள் குழந்தைகளுக்கு சுருக்கமாக பெயர் வைத்திருக்கிறீர்களா...!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பெயர்க் காரணம் பத்மா! என் அலுவலகத் தோழர் பெயரும் அனந்த பத்மநாபன் தான் – ஆனால் நாங்கள் அவரை பத்மா என்றே அழைப்போம்!! பகிர்வுக்கு நன்றி நண்பரே.

பத்மநாபன் said...

நன்றி தம்பி இளங்கோ...

பத்மநாபன் said...

நன்றி ஸ்ரீ.... பசங்களுக்கு சின்னதாகத்தான் பெயர் வைத்தோம் ஆதர்ஷ் ஆகாஷ் என்று... பள்ளியில் ஒரே பெயர் குழப்பம் நீங்க இனிஷியல் மட்டும் இரண்டு எழுத்து K.A சேர்க்கப்பட்டது..

பத்மநாபன் said...

நன்றி வெங்கட்... இங்கு பிலிப்பைனிகளுக்கு பத்மா வெள்ளைக்காரர்களுக்கு `படி`

RVS said...

தல. 'படி'யா buddy-யா? ;-)

மோகன்ஜி said...

எங்களையெல்லாம் ஊட்டிதான் வளர்த்தாங்க.. நீங்களோ ஊட்டிலையே வளர்ந்திருக்கீங்க.
சுஜாதாவின் கதையில் ஒருத்தரை TEN ANNAS என்றே கூப்பிடுவாங்க. பத்மநாப ஐயங்காரை 'பத்தண்ணா' என்று அழைத்து விடலைகள் TEN ANNAS ஆக்கியிருப்பாங்க.உங்களுக்கு சுஜாதாகூட பேரு வச்சிருக்காரு போல.

எனக்கென்னவோ நீர் ரசிகமணி தான்

பத்மநாபன் said...

ஆர். வி . எஸ் ...padi....paddy...pad .... அவங்க அவங்க சவுரியத்துக்கு ...முழு பெயர் சொல்ல சொன்னால் வாய் குளறி, பெயரை குதறிவிடுவார்கள் ..

பத்மநாபன் said...

நன்றி மோகன்ஜி ..ஊட்டியின் அருமை சென்னையில் தெரியும் .....சுகந்தமான ஊர் ஊட்டி ...படிப்பு வேலைன்னு பட்டணம் வந்து நொந்து போகிறோம் .

என் பெயர் விஷயத்தில் ''பத்தண்ணா'' அதிகம் வரவில்லை .. அனந்தும் ஆனந்தும் காப்பாற்றி விட்டார்கள் ...

முத்தை திரு ...அருணகிரி நாதரை காண வந்து கொண்டிருக்கிறேன்

Matangi Mawley said...

haa ha! :) lovely read...

reminded me of a boy in my class when i was in 6th-

"mettuppalaya varadaraaja venkatraama sathyanarayana naidu" ... :D LOL!

பத்மநாபன் said...

நன்றி மாதங்கி .... நீங்க குறிப்பிட்ட பெயர் ஊர் ஜாதி எதையும் விட்டு வைக்காமல் பெரிய பெயராக இருக்கிறது ....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தென்னகத்து மலைகளின் ராணியான உதகையில் உதயமானேன்//
ஆஹா... மலையில் உதித்த ஒரு மாமனிதர்னு பில்ட் பண்ண நல்ல சான்ஸ்... மிஸ் பண்ணிட்டீங்களே... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங் அண்ணா...;))

// உருண்டு ஆடிய ஊட்டி கார்டன்//
ஹும்ம்ம்.... ஏதேதோ மலரும் நினைவுகள்...சரி விடுங்க... என் கொசுவத்தி என்னோட...:)

//ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பதிவேட்டில் கையொடிய எழுதும் போதெல்லாம் திட்டித் தள்ளியிருப்பார்கள்//
சேம் ப்ளட்.. ஒரு டீச்சர் கேட்டே உட்டுட்டாங்க... ஏன் பதிமூணு எழுத்தோடு நிறுத்திடாங்க உங்க அம்மா அப்பானு...:))

//என்னைத்தேட பத்து விரல்காட்டுவார். பத்து...பத்து//
தசாவதாரரோ...;)))

//கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மி//
சோடா ப்ளீஸ்... ஜஸ்ட் கிட்டிங்... நல்லா எழுதி இருக்கீங்க...

பத்மநாபன் said...

நன்றி தங்கைமணி ... இவ்வளவு ரஸ்க் பிஸியிலும் வந்து பெரிய கமென்ட் போட்டதற்கு .

உதகைன்னாலே ரஸ்க் பேமஸ் ....அந்த ரஸ்க்க வச்சுட்டு அப்பாவியின் அலப்பறை அட்டகாசம் ...

கே. பி. ஜனா... said...

அருமை.

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஜனா ...மொதோ மொதல் வருகைக்கும் கருத்துக்கும் .......

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு நன்றி நல்ல பெயர்க்காரணம்.
...வாழ்த்துக்கள் ...

பத்மநாபன் said...

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ... உங்கள் பெயரும் பள்ளியில் ஆசிரியர்களிடமும் சக நட்புகளிடமும் வெகு புகழ் பெற்றிருக்குமே......

பத்மநாபன் said...

மிக்க நன்றி பிரகாஷ் .... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு .. அறிமுகப் படுத்தியவிதம் அழகாக இருந்தது .....

geetha santhanam said...

லேட்டாக வந்ததற்கு மன்னிக்கவும். பெயர் காரணப் பதிவு படிப்பதற்குச் சுவையாக இருந்தது.
ஒரு கற்பனை:
: 'க்ருஷ்ணமூர்த்தி அனந்த பத்மநாபன் லக்ஷ்மி' வாங்க
பத்ம நாபன்: நான்தான் சார்.
: என்ன சார், மத்தவங்கல்லாம் எங்க?

பத்மநாபன் said...

நகைச்சுவைக்கு நன்றி கீதா மேடம்.. ஒரு கூட்டத்துக்கு வைக்க வேண்டிய பெயரை ஒரே ஆளுக்கு அமைஞ்சாச்சு... ஓமன் விசா அடிப்பவர்கள் நாரயணனை விட்டு விட்டதால் நீளம்கொஞ்சம் குறைந்துவிட்டது...

போளூர் தயாநிதி said...

நல்ல பெயர்க்காரணம்
பகிர்வுக்கு நன்றி

பத்மநாபன் said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி போளூர் தயாநிதி ..... வணக்கம்

தக்குடு said...

ரசிகமணியோட பெயர்காரணமும் ரசிக்கும்படியா தான் இருக்கு, என்னோட கல்லூரி தோஸ்த் ஒருத்தன் பேர் லெக்ஷ்மி நரசிம்மன், நான் அவனை ஆசையோட எப்பிடி கூப்பிட்டு இருப்பேன்னு உங்களுக்கே தெரியும்....:))

பத்மநாபன் said...

நன்றி தக்குடு ... தக்குடு பாணியில் லக்ஷ்மி நரசிம்மன் ... லட்ச்சூ ....வாக அழைக்கப்பட்டிருப்பார் ... அப்படித்தானே ...

சிவகுமாரன் said...

நம்ம பக்கம் வாங்க ரசிகமணி சார்

பத்மநாபன் said...

ஓரு பதிவு கூட தவற விடக் கூடாது எனும் வலைப்பூக்களில் ஒன்று ''சிவக்குமாரன் கவிதைகள்'' .. சில சமயம் கண்ணை மறைத்துவிடுகிறது ... கவித்தேரை படித்துவிட்டேன்

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள் பத்மநாபன்.

!? கோவை சாட்டை ?! said...

ஆனந்த வாசிப்பை நானும் ஆனந்தமாக வாசிக்க போகிறேன்,

பத்மநாபன் said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஐயாவுக்கு மிக்க நன்றி..

பத்மநாபன் said...

வருகைக்கு மிக்க நன்றி கொங்கு சாட்டையாரே... பாரதியை முகப்பில் வைத்திருக்கும் நீங்கள், எனது இரு பாரதி பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தால் மகிழ்ச்சி....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_03.html

பத்மநாபன் said...

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அப்தங்ஸ் ..சர சரன்னு பதிவு போடுபவர்கள் மத்தியில் இந்த வலைப்பூவுக்கும் ஒரு அறிமுகம் வழங்கியதற்கு நன்றி......

சாய்ராம் கோபாலன் said...

//கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மிநாராயணன்.//

வெளி நாட்டில் ஏர்போர்ட்டில் பிளைட் மிஸ் செய்ய வைக்கும் முழு நிழ பெயர். அவர்கள் எந்த பெயரை சொல்லி அழைத்தாலும் பெயரை குதறுவார்கள் !!! இம்மாம்பெரிய பெயர் வைத்தால் ?

பத்மநாபன் said...

நன்றி சாய்..

அப்பாதுரை said...

மே மாதமாகி விட்டது ஊட்டி கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மி aka Pad. ஒரு பதிவு போடுங்க.

அப்பாதுரை said...

இல்லையின்னா காஸ்யபனோட பதிவுல பின்லேடன் அமெரிக்கா பற்றிக் கும்மியடிக்க வாங்க.

பத்மநாபன் said...

நன்றி அப்பாதுரை... மத்தியான சூரியன் கண்ணில் அறையும் வரையான தூக்கம் பதிவு போடும் விஷயத்தில்..தார் முள் தேவை...முதல்ல இரண்டாவது விஷயத்தை செஞ்சாச்சு.. விவாதம் சூடா போகுது ..

அப்பாதுரை said...

அதுவும் சரிதான். எண்ணுவதன் வேகம் எழுதுவதில் வரவில்லை - அதுக்கு ஏதாவது மிசின் வந்தா பரவாயில்லை.

பத்மநாபன் said...

//ஏதாவது மிசின் வந்தா பரவாயில்லை./ மூன்றாம் சுழிக்கான கரு இது...

இத அவங்க எழுதிட்டாங்க இவங்க எழுதிட்டாங்கன்னு புதுசா எதாவது எழுதலாமே மனதுக்குள் சுழற்சி நடந்துட்டே இருக்கு...நீங்க சொன்ன மாதிரி மெசின் இருந்தா அது கிட்ட சொல்லலாம்...இது தான் என் எண்ணம் யாராவது எழுதியிருக்காங்களா பாரு’’ மானே ,தேனே’’ சேர்த்தி ஒரு பதிவு குடுப்பா ன்னு கேட்கலாம்...

மோகன்ஜி said...

பத்மநாபன் ! நானும் லீவு எடுத்திருந்தேன்.. ஒரு சின்னக் கடுதாசியில வாய்ப்பாடாவது எழுதி போடுங்க ஜி! இப்படி ரொம்ப நாளா காக்க வச்சுட்டீங்க..இந்த வாரம் ஒழுங்கா ஒக்காந்து எழுதறீங்க.. நாங்க படிக்கிறோம்.. தெரியுதா!

பத்மநாபன் said...

அன்புக்கு நன்றி மோகன்ஜி.. விவிவிரைவில்

ஸ்ரீராம். said...

சரி....உங்களுக்கான தலைப்பு...ம்.....ம்..... ம்......"நான் முதன்முதலில் கண்கலங்கிய அனுபவம்".....அல்லது "நான் சமீபத்தில் படித்த புத்தகம்"................எப்படி? இப்போ எழுதுவீங்களா?

பத்மநாபன் said...

அன்புக்கு நன்றி மோகன்ஜி...விரைவில் ...உங்கள் பின்னூட்டமும் என் பதிலும் பிளாக்கர் சாப்பிட்டதால்... மீண்டும்

பத்மநாபன் said...

நன்றி ஸ்ரீ... தலைப்பும் கொடுத்து பதிவு போட தூண்டியதற்கு..

மனக்குரல் ( நன்றி அ.தங்கமணி) பிளாக்கா ( சொக்கா) காப்பாத்து பதிவெல்லாம் போடச் சொல்லி இப்படி நெருக்கராங்களே...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மனக்குரல் ( நன்றி அ.தங்கமணி) பிளாக்கா ( சொக்கா) காப்பாத்து பதிவெல்லாம் போடச் சொல்லி இப்படி நெருக்கராங்களே... //

ha ha ha...good one...:)
(hmm... ungalakku ippadi... enakku just opposite requests...ha ha)

பத்மநாபன் said...

நன்றி அப்ஸ்...இப்பதான் 18 படிக்கலாம் வர்றதுக்குள்ள 19 இறங்கிறிச்சு...சொன்ன மாதிரி பிளாக்கா காப்பத்து in different way.. just kindifying...keep rocking AT...

சாய்ராம் கோபாலன் said...

பத்மநாபன் - மக்கள் எல்லாம் ரொம்ப டென்ஷன் கொடுக்கறாங்களா ?

இருபது வருடங்களாக இப்படி தான் கம்ப்யூட்டர் இந்த எட்டு பத்து வருடங்களாக ப்ளாக்பெரி டைப் அடித்து அடித்து இப்போது வலது கை வேலை செய்யவில்லை - அறுவை சிகிச்சைக்கு நேரம் வரவில்லை. மனம் வரும்போது எழுதுங்கள் தலை.

பத்மநாபன் said...

சாய்..மனம் நிறைய இருக்கிறது ...நேரமும் கருத்தும் தான் கூடி வரமாட்டேன் என்கிறது.

//மக்கள் எல்லாம் ரொம்ப டென்ஷன் கொடுக்கறாங்களா ? // இதை டென்ஷன் என்று சொல்லக்கூடாது ..வலைப்பூ என்பது அன்பான உறவு /நட்பு வலை.இதை பேணுவது கடமை...

உங்கள் வலக்கை சீக்கிரம் சீராக வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நாங்கூட உங்க ஊட்(டி)டுக்குப் பக்கம் தான்...பைகாரா!

பத்மநாபன் said...

’’பைக்காரா’’ங்களா சார் .மிக்க சந்தோஷம் .எப்ப இருந்தீங்க... அந்த பச்சை சொர்க்கத்தில் நாலு வருஷம் உத்தியோகம் பார்த்திருக்கேன் ...

சமுத்ரா said...

நல்ல பெயர் தான்...

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி சமுத்ரா ... உங்கள் அ .அ. அ. அனுபவித்து ( பின்னூட்டம் இடவே மறந்து ) படித்துவருகிறேன்

ஸ்ரீராம். said...

ஹலோ....!

பத்மநாபன் said...

நன்றி ..ஸ்ரீ... பின்னூட்டத்தலேயே ஒருபதிவு போட்டுவிட தீர யோசித்துவருகிறேன்...

அன்புடன் மலிக்கா said...

கிருஷ்ணமூர்த்தி அனந்தபத்மநாபன் லக்ஷ்மிநாராயணன்....// ரொம்ப சின்ன பெயராக இருக்கே. [சும்மா சும்மா தமாஸ்] நல்ல சுவாரஸ்யமான இடுகை..பாராட்டுகள்..

இன்னும் இந்த பதிவை நான்போடலை அண்ண அடிக்கபோறார்..

பத்மநாபன் said...

நன்றி அன்புடன் மல்லிக்கா ... உங்கள் பெயர் பதிவையும் ஆவலோடு எதிர் பார்க்கிறோம் ...

ரிஷபன் said...

பெயர்க்காரணம் சுவாரசியம்..
‘இதுல உன் பேர் என்னப்பா’ என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்ட நீளப் பெயர் புதுமுகத்திடம் கேட்டேன்.. சிரிக்காமல் சொன்னான். ‘எல்லாமே என்பேர் தான்..’
ரெண்டு மூணு பேர் சேர்த்து வச்சா அதிர்ஷ்டம்பாங்க..

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி ரிஷபன் சார்... அதிர்ஷ்ட வாழ்த்துக்கு மிக்க நன்றி.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி உ .சி .ர . அங்கும் கதை பஞ்சமா ... வாத்தியார் கதை எடுத்தால் அவர்களுக்கு திரைக் கதை எழுதும் வேலை மிச்சம் என புரிந்திருக்கும் .

Powered By Blogger