Sunday, October 17, 2010

``பத்து`` விஷயங்கள்


சுய முன்னேற்றம்,  ஆளுமைத்திறன், நேர்மறை உணர்வு  இவைகளில் இன்றைய இளைநர்கள் சற்று பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்.... நடுத்தர வயதினரும் தாழ்வு மனப்பான்மையில் சடாரென சோர்வுக்குள்ளாகிறார்கள்.... கோடிக்கணக்கில் விற்பனையில் சாதனை படைத்த, நார்மன் வின்சென்ட் அவர்களின் ‘’ நேர்மறைசிந்தனையின் சக்தி’’  எனும் ஆங்கில புத்தகத்தில் கூறிய பல விஷயங்கள்,மேற்குறிப்பிட்டவைகளுக்கு தீர்வாக இருக்கும்.அதில் பத்து விஷயங்களை மட்டும் தமிழாக்கி, எனக்கும் உங்களுக்குமாக ஒரு பகிர்வு....


வித்தை தெரிந்த அளவுக்கு வியாபாரம் தெரியாமல் திக்கி, திணறிய காலத்தில் இந்த புத்தகம் எனக்கு மிக தெம்பைக் கொடுத்தது...
எனக்கு தெரிந்த வேலைகள் தேடி வந்தது. தெரியாத வேலைகளை கற்றுக் கொள்ள வைத்தது... நல்லதை நினைக்க நல்லது நடக்கிறது ...பத்துதானே, படித்து செயலாக்கித்தான் பார்ப்போமே.


      1 .``நான் வெற்றியாளன்`` எனும் பிம்பத்தை நன்றாக வடிவமைத்துக் மனதில் அழியாவண்ணம் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். அப்பிம்பத்தை மங்கவே விட வேண்டாம்.  தோல்வி எனும் சிந்தனையே ஒரு போதும் வர விட வேண்டாம்

   2.  எப்பொழுதெல்லாம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறதோ அப்பொழுதே, உரத்த குரலெழுப்பி ஒரு நேர்மறை எண்ணம் கொண்டு எதிர்மறை எண்ணத்தை அழித்து விடுங்கள்.

   3. கற்பனையில் கூட தடைக்கோட்டைகள் கட்ட வேண்டாம்.  தடைகளை பற்றிய எண்ணங்களை மட்டுபடுத்திக் கொண்டே வரவேண்டும்.  தடைகள் என்னவென்பதை திறம்பட தெரிந்து கொண்டு, தடைகளை பயம் கொண்டு ஊதி பெரிதாக்காமல் அறிவு கொண்டு தகர்த்த பார்க்க வேண்டும்.

   4. மற்றவர்களை ஒப்பிட்டு, பிரமிப்பதோ அவர்களை அப்படியே நகலெடுப்பதோ வேண்டாம். அப்படி பிரமிக்க வைப்போர்களில், பெரும்பாலனவர்களின் வெளித்தோற்றமும், செயல்பாடுகளும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு பயயுணர்வை மறைப்பதற்காகவே இருக்கும்..மற்றவர்களை க்காட்டிலும் நாம் திறமை மிக்கவர்களே எனும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

      5``கடவுள் நமக்காக இருக்கும் பொழுது , நமக்கு எதிர்ப்பாக யார் இருக்க முடியும் ```மனதிற்கு தெம்பளிக்கும் இந்த வார்த்தைகளை , ஒரு நாளைக்கு பத்து முறை சொல்லி வாருங்கள்  ( இப்பொழுதே ஆரம்பியுங்கள்...மெதுவாக..... அதே சமயத்தில்  நம்பிக்கையாக )

    6. எந்த செயலாகிலும், ஏன் செய்கிறோம்? எதற்கு செய்கிறோம் ? என்பதை புரிந்து செயல்பட நல்ல தரமான ஆலோசகர்களை வைத்துக்கொள்ள வேண்டும்... தாழ்வு மனப்பான்மையின் ஊற்றுக்கண்ணை அறிந்து கற்ற அறிவு கொண்டு கலைந்து விடவேண்டும்.

     7. இந்த பயிற்சியையும் தினம் பத்து முறைசெய்து பாருங்கள்.. முடிந்தஅளவுக்கு சத்தமாக,பிரகடனமாக சொல்லிப்பாருங்கள் .                எனக்கு பலம் அளித்து வரும் இறையெனும் பேராற்றலின்மூலம் என்னால் எதையும் சாதிக்க முடியும் ``
இந்த மந்திர சொற்றொடர் பூமியில் தாழ்வு மனப்பான்மையை தகர்க்க வல்ல அதி சக்தி வாய்ந்த சொற்றொடர். 
8.உங்களிடம் உள்ள திறமைகளை உண்மையாக மதிப்பிடுங்கள்.. அந்த திறமையை பத்து ,பத்து சதமாக கூட்டிக் கொண்டே வாருங்கள்.

     9. இன்று செய்யக்கூடியதை, செய்யமுடிந்ததை நாளைக்கு தள்ளிப்போட வேண்டாம். முடிக்கப்படாத குவிந்த வேலைகள் தினத்தை இன்னமும் கடினமாக்கும்.

10.இந்த ஒரு சொற்றொடரை  அட்டையில் எழுதி அலுவலகத்தில் தொங்க விடுங்கள், சவர / அலங்கார க்கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளுங்கள்.மேசைக்கண்ணாடிக்கு அடியில் வைத்துக்கொள்ளுங்கள் .முடிந்தபோது படித்தும் வாருங்கள்.முக்கியமாக மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள்
எவ்வளவு உயரமாக இருந்தாலும் முதலில் உங்கள் ``மனதை`` அந்த குறுக்கு கம்பிக்கு மேலே முழுமையாக வீசுங்கள் ; உடல் எளிதாக பின் தொடர்ந்து, அழகாக வளைந்து அந்த உயரத்தை தாண்டி விடும்...



50 comments:

மோகன்ஜி said...

அடடா! வாராது போலும் வந்த மாமணியாய் உங்கள் பதிவு..
மிக்க மகிழ்ச்சி பத்மநாபன் !
எளிமையாக தமிழில் பதிவிட்டிருக்கிறீர்கள்.முத்தான கருத்துக்கள். சுய முன்னேற்ற நூல்களில் நார்மன் வின்சென்ட் பிலெ ஒரு பாலபாடம்..ஆதாரமான பல கருத்துக்களை, இறைநம்பிக்கை முலாம் பூசி அவர் கொடுத்ததெல்லாம் காலம் கடந்து வாழும்.
பதிவுக்கு நன்றி பத்மநாபன்!
இப்படிக்கு,
உங்கள் அடுத்த பதிவுக்காய் காத்திருக்கும்
மோகன்ஜி,ஹைதராபாத்

பத்மநாபன் said...

வணக்கம் மோஹன்ஜி ..நீங்கள் வெளியிட்ட பிரெட் பாட்டியின் ஆத்திசூடி -45 மனதில் இருக்கிறது..

ஆமாங்க ,நார்மன் அவர்களின் இறைமூலாம் பூசிய கருத்துக்களை அவரவர் நம்பிக்கைக்கு தகுந்த மாதிரி பொருத்தி சுகமாக படித்து பயன்பெறலாம்.

அடிக்கடி பதிவு போடும் சூட்சமத்தை , உங்களிடமும் ,ஆர்.வி.ஸ் அவர்களிடமும் தனியாக ட்யுஷன் வைத்து தெரிந்து கொள்ளவேண்டும்.

மோகன்ஜி said...

கண்ணு வச்சிட்டீங்க இல்லை? மூணு பாக்ஸ் ஆணி இப்போ கையில.. எனவே
நாலு நாள் லேப் டாப்பைக் கழுவி காயப் போட்டுறப் போறேன் பிரதர்!

பத்மநாபன் said...

நம்ம கும்மி கோஷ்டி மேல நாமளே கண்ணு வைப்போமா... வைத்த கண்ணு எடுக்காமா படிக்கவைக்கிற எழுத்துக்களாச்சே உங்களுது ...

எண்ணைக்காரங்க தான் இங்க ஆணிகளை சாக்கு சாக்கா அடிக்கவைக்கிறாங்கண்ண, பேங்க் காரங்களும் பெட்டிகள அடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா...
ஜாமாயுங்க பேராசிரியர் தானே உதவிக்கு துணைப்பேராசிரியர்களை வச்சு சாமளிச்சுட்டு வாங்க ....

Aathira mullai said...

பதிவு ஒன்றானாலும் முத்தான பத்து கட்டளைகள்..ஊக்கத்திற்கு நன்றி பத்மநாபன்.

கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றிதான் என்று என் கண்களில் வெற்றி தேவதை வந்து கன்சிமிட்டிச் சொல்லிவிட்டுப் போகிறாள். இருந்தாலும்..

பின்பற்றுவது ஒன்றும் கஷ்டம் இல்லை என்று மூளை கூறினாலும் மன்மோ அதெல்லாம் பத்மநாபன் மோகன் ஜி போன்றோருக்குத்தான் சரியாக ஒர்க் அவுட் ஆகும் என்று அடித்துச் சொல்கிறது.

பத்மநாபன் said...

நன்றி ஆதிரா... உங்களாலும் நிச்சயம் கடைபிடிக்கமுடியும் ..... வரிசையாகவே கடைபிடிக்கவேண்டியதில்லை சற்று மாற்றிக்கொள்ளலாம் ..மனம் பற்றி குறிப்பிட்டிருப்பதால் நீங்கள் பத்தாம் குறிப்பிலிருந்து ஆரம்பித்துக்கொள்ளலாம். நான் எழாம் குறிப்பிலிருந்து ஆரம்பித்தேன்.

வாழ்த்துக்கள் உயரங்களை எட்ட...

அப்பாதுரை said...

Welcome back! Great post.

சுருளிராஜனின் எட்டாம் நெம்பர் முக்கியம்; அடுத்தது #2.

என் குறுகிய அனுபவத்தில் நான் அறிந்து கொண்ட சில:
- குறிக்கோள், இலக்கு ஏற்படுத்திக்கொண்டு விலகாதிருத்தல்; பாதை மாறினாலும் பயணத்தை முடிப்பது அவசியம். பூம்பும் மாட்டுத்தனத்தைத் தவிர்த்தல்; எட்டு வயசுக்குழந்தையிலிருந்து எண்பது வயது பெரியவர் வரை யார் என்ன சொன்னாலும் 'அட, நியாயமா படுதே!' என்று சொந்த எண்ணங்களையும் பாதைகளையும் விட்டு விலகாமலிருத்தல் (know when to proceed)
- சேதத்தைக் குறைத்துக்கொண்டு விலக வேண்டிய தருணத்தை அறிந்து நடத்தல் (know when to exit)

(எப்படிப்பட்ட முரண் பாருங்கள். life is a balancing act)

பத்மநாபன் said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி அப்பாஜி..

பல சமயங்களில இது மாதிரி குறிப்புகள் நன்றாக பயன்படுகிறது ..பாரதி சொன்ன ’’நல்லவே எண்ணல் வேண்டும்’’என்பதற்கெற்ப..

குறிக்கோள் கொள்வதும் ,அதை திறம்பட எடுத்துசெல்வதும்,சிறப்பாக முடிப்பதும் பற்றிய உங்கள் குறிப்பு அருமை..

அப்பாதுரை said...

சிலேடையான தலைப்பை இப்போது தான் கவனித்தேன்.. 'பத்து' மார்க். எட்டுக்கு.

பத்மநாபன் said...

கவனிச்சுட்டிங்களே..உண்மையில் பத்து பத்து பத்தில் வெளியிட நினைத்து ..வழக்கமான என்னுடய திட்ட செயலாக்க கோளாறில் முடியாமல் போனது...ஜவஹர் அவர்களிடம் ஒரு ’’சிக்மா’’ கோர்ஸ் அட்டெண்ட் செய்யவேண்டும் ..அப்புறமாவது திட்டசெயலாக்கங்கள் ‘’சிக்குமா’’ என பார்க்கவேண்டும் ..

8க்கு10 பார்த்தவுடன் ஒரு பழைய ஞாபகம்.
மார்க் விஷயத்தில் முதலில் வேடிக்கையாக நூறுக்கு மேல என்போம் எதிரில் இருப்பவர் எல்லார்க்கும் நூறுக்கு மேல தான் போடுவார்கள் உனக்கு எவ்வளவு என்பார்.

நிஜமாவே 100க்கு மேல் போட்டதற்கு நன்றி.

மோகன்ஜி said...

அப்பாஜி&பத்துஜி ,
//குறிக்கோள், இலக்கு ஏற்படுத்திக் கொண்டு விலகாதிருத்தல்//
சரியான வழி..
'பாதை வகுத்தபின்பு பயந்தென்ன லாபம், அதில் பயணம் தொடங்கிவிடு மறைந்திடும் தாபம்.."-கவியரசரின் வரிகள் ...

ஆனாலும் நான் ரசித்த ஹென்றி போர்டின் ஒரு சுவாரஸ்யமான வரி...
"Whether you think that you can, or that you can't, you are usually right."

அப்பாதுரை said...

கேட்காத கடி. சிரித்தேன். >>>எல்லார்க்கும் நூறுக்கு மேல தான் போடுவார்கள் உனக்கு எவ்வளவு

பத்மநாபன் said...

மோகன்ஜி , கவியரசரின் பாடலை அப்பாஜியின் குறிப்பு வரியோடு அழகாய் நினைவு கோர்த்தீர்கள்..

’கடி’ சிரிக்கவைத்ததில் மகிழ்ச்சி அப்பாஜி...

ரிஷபன் said...

இந்தப் பதிவை அடிக்கடி படித்தாலே போதும்.. தன்னம்பிக்கை பீரிடும்.

Matangi Mawley said...

inha book naan padiththullaen...

aanaal- padiththaal mattum positive thinking vanthuviduvathillai... ithai muraiyaaka pin patra vendum... ella samayngalilum athu mudivathillai...

பத்மநாபன் said...

நன்றி ரிஷபன் ..ஆரம்பத்தில் கொஞ்சம் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்..படிப்படியாக தன்னம்பிக்கை கூடும்.

பத்மநாபன் said...

பகிர்விற்கு நன்றி..ஆமாங்க மாதங்கி.படித்தால் மட்டும் போதுமா..அந்தந்த சூழலில் பயன்படுத்தினால் நிச்சயம் பயன் உண்டு.
ஒரே சமயத்தில் அத்தனையும் பயன்படுவதில்லை. குறிப்பா என்னை மாதிரி கிராம சூழ்நிலை க்காரர்களுக்கு மொழி ,தகவல் தொடர்பு எல்லாமே சவால் தான் ..இம்மாதிரி எழுத்துக்கள் தடைகளை தகர்க்கும்.

தக்குடு said...

//கடவுள் நமக்காக இருக்கும் பொழுது , நமக்கு எதிர்ப்பாக யார் இருக்க முடியும் //

ஆணித்தரமான உண்மை அண்ணா!

மோகன்ஜி said...

நீங்கள் இந்தியாவில் இருப்பதாய் அறிகிறேன்.. க்ஷேத்ராடனம் துணைவியாருடன் என்று..

முன்னமே தெரியாமல் போயிற்றே!
"பாலைவனச் செம்மலே! வருக வருக!" என பாதையெங்கும் பதாகை விரித்திருப்பேனே!
உங்கள் விடுமுறையை இன்னொரு
தேன்நிலவாக்கிக் கொள்ளுங்கள்!
வாழ்த்துக்கள் சகோதரா!

பத்மநாபன் said...

செல்லத்தம்பி தக்குடுக்கு நன்றி. அவனின்றி ஓரு சிறு அணுவிலும் அசைவில்லை எனும் நம்பிக்கையை கொண்டாலே மலையைக்கூட பிரட்ட பார்க்கலாம்..

பத்மநாபன் said...

மோகன்ஜி...எப்படியோ ஷேக்குகிட்டிருந்து 20 நாள் தப்பிச்சு வந்தாச்சு..

க்ஷேத்ராடனம் அளவிற்கு பெரியசுற்றில்லை..சென்னை புதிதான எங்களுக்கு அஷ்டலட்சுமி, வடபழனி ஆண்டவர் என போய்க்கொண்டிருக்கிறது..

உங்கண்ணன் என்னோமோ எழுதிருக்கிறார் படின்னதற்கு..பழைய ஞாபகம் வச்சு ஒரு இடி கிடைச்சு விங்கினதுதான் மிச்சம்

( ஒரிஜினல் தேனிலவை வேலைப்பார்த்த ஊரான ஊட்டி கார்டன் அதுவும் வாரவிடுமுறையில் இரண்டு மணி நேரம் மட்டும் அழைத்து சென்ற கடுப்பு குறைய வில்லை என்பது என் வீக்கத்தில் தெரிகிறது )

மோகன்ஜி said...

நீங்க செஞ்சது அநியாயம்! இடிச்ச என் தங்கையின் கைக்கு தங்கமாளிகையில் ரெண்டு ஜதை வளையல் வாங்கித் தரவும்!இது மைத்துனனின் அன்புக் கட்டளை. மீறினால் விளைவுகள் விபரீதமாய் இருக்கும்... சொல்லிட்டேன்!

RVS said...

பத்துவின் விஷயங்கள் சூப்பர். இந்த சுய முன்னேற்ற நூல்கள் பலது அறிவுரை சொல்லி தூக்கம் வரவழைக்கும். நல்ல தமிழில் அட்டகாசமாக பதிந்திருக்கிறீர்கள் பத்துன்னா. அப்பாஜி சொன்னாப்போல அனுபவம் தருவது ஏராளம். ஆனால் எந்த திக்கில் போக வேண்டும் என்று திசை கட்டுவது இது போன்ற நூல்களால் தான் முடியும். மறுப்பதற்கில்லை. ஆனால் குரங்கு மனம் தாவுவது ஒன்றையே பற்றுகிறது. ஒவ்வொன்றாக முயற்ச்சிப்போம். என்னைப் போல் எப்போதும் வாய் திறந்து முப்பதிரெண்டையும் காண்பித்துக் கொண்டே இருப்போர் முப்போதும் POSITIVE ஆக இருக்கிறார்கள் தானே!

அப்புறம் மோகன்ஜி அண்ணாவின் வார்த்தைகளை வழிமொழிகிறேன். இரண்டு ஜதைக்கு நான்கு ஜதையாக வாங்கி மாட்டுங்கள். குறைந்து போய் விட மாட்டீர்.
முதலில் FOLLOWER விட்ஜெட் போடுங்கள். இல்லையேல் நான் சுடச்சுட படித்திருப்பேன். ஆறினாலும் கஞ்சி சுவையாகத்தான் உள்ளது. நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவுங்க அண்ணா... நன்றி

பத்மநாபன் said...

மோகன்ஜி... இப்படியே பல நாட்களாக கப்பம் கட்டி வந்தாச்சு ..புடவை அளவில் இருந்தது..உங்க புண்ணியத்துல வளையல் அளவுக்கு உயர்ந்து விட்டது..இந்த அநியாயங்களை மறக்கடிப்பது எப்படி என ’’பத்து’’ விஷயங்களை யோசித்து வருகிறேன்.

பத்மநாபன் said...

நன்றி ஆர்.வி.எஸ் ..சுய முன்னேற்றசமாச்சாரங்கள் நூல் படிப்பில் மட்டும் கிடைக்காது.. பயிற்சியும் வேண்டும்.பிரச்சினைகள் வரும்பொழுது கற்ற பயிற்சியை பயன் படுத்தி பார்க்கவேண்டும்..

//முப்பதிரெண்டையும் காண்பித்துக் கொண்டே இருப்போர் முப்போதும் POSITIVE ஆக இருக்கிறார்கள் தானே!//
என்றுமே புன்னகையோடு பிரச்சினைகளை எதிர்கொள்வது நிச்சயம் பாஸிட்டிவ் தான். என்ன..’’இளிச்சவாயர்’’ என்று அழகு தமிழிலும் ’’புன்னகை மன்னன்’’ என்று கொச்சை த்தமிழிலும் என்று சொல்லத்தான் செய்வார்கள்..அதையும் புன்னகையோடு எதிர் கொள்ளவேண்டியதுதான்.

பத்மநாபன் said...

ஆர்.வி.எஸ் ..அப்புறம் நாலு ஜதையா?
இரண்டு ஜதைக்கே ஒவர்டைம் போட்டு ஒட்டகம் மேய்க்க வேண்டியிருக்கு.

ரொம்ப நாளா ஃபாலோயர் விட்ஜெட் உட்கார மாட்டேங்குது .. உங்கள மாதிரி விற்பன்னர்களின் உதவியை எதிர் பார்க்கிறேன்.

பத்மநாபன் said...

@அப்பாவி தங்கமணி ..படித்ததிற்கும் நன்றிக்கும் நன்றி தங்கச்சி....

அப்பாதுரை said...

சென்னையிலயா இருக்கீங்க, அடடா! ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதோ? (சீக்கிரமே பொறாமைப் பட்டிருக்கலாமேனு தான்). எஞ்சாய் பண்ணுங்க. இந்தாங்க என்னோட டிப்: 'நகைக்கு நகையேனடி, நகையே நகைதானடி'

இளிச்ச வாயர் ஈக்வல் டூ புன்னகை மன்னனா? என்ன ஒரே போடா போடுறீங்க. இடக்கரடக்கல் வகையா?

பத்மநாபன் said...

அப்பாஜி....எண்ணையிலே மூணு மாதம் ஊறினா, மூணு வாரம் போய் எண்ணையை காயவச்சுட்டு வர அனுப்புவாங்க.. அதுலயும் பாகுபாடு.. வெள்ளக்காரங்களை மாசமாசம் அனுப்பிச்சிருவாங்கா...

புன்னகை மன்னன் படம் வந்தவுடனே இந்த சொல் அகராதி ஏறிருச்சிங்க..

நகையே கவிதை அருமை.. நாம ரசிச்சுக்கலாம்..அங்க செல்லுபடி ஆவதில்லை

Aathira mullai said...

தாங்கள் கூறிய அறிவுரைப்படி முயற்சி செய்கிறேன் நண்பரே.. முடியும் முடியும் என்று ஏதோ ஒலி என் காதிலும் விழுவது போல் இருக்கிறதே.. ஊக்கத்திற்கு நன்றி.

இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..தங்களுக்கும் தங்கள் சுற்றம் கிளைகளுக்கும் இனிய ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் நன்பரே..

மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...வேண்டுவோம்.

பத்மநாபன் said...

’’நம்மால் முடியும்’’ எனும் சொற்களே உற்சாகம் மிகுந்தது ...

இனிய நல் வாழ்த்துக்கள் ஆதிரா...

அப்பாதுரை said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

இன்னும் இந்தியாவுல சுத்துறீங்களா.. தொழிலைப் பாக்கக் கெளம்பியாச்சா?

பத்மநாபன் said...

சொன்னா காண்டு ஆயிருவிங்க... இன்னமும் ஒரு வாரம் இருக்க போகிறேன் ..அடுத்தவெள்ளி பயணம்...

கிராக்கி ரொம்ப கிராக்கி பண்ணுது...ஒன்னா சம்சாரம் இல்லன்னா மின்சாரம்..இருந்து கெடுப்பது ஒன்னு இல்லாமல் கெடுப்பது இன்னொன்னு

அப்பாதுரை said...

என்ன... ரொம்ப தான் தில்லா பேசறீங்க.. சம்சாரத்துட்ட சொல்லிட்டு தானே இதை எழுதினீங்க?

பத்மநாபன் said...

படிக்காதவரை தில்...படித்தால் திக்.. அப்புறம் சம்சாரம் சாஹரம்னு அட்ஜெஸ்ட் செய்ய வேண்டியது தான்...

அப்பாதுரை said...

இதுக்குத் தான் தமிழ் தெரியாதவங்களைக் கட்டிக்கணும்ன்றது (ஐ மீன் கல்யாணம்)

பத்மநாபன் said...

நமக்கு ப்ளாக்கோமேனியா இருப்பது போல் ..அவர்களுக்கு ப்ளாக்கோஅலர்ஜி..அதை அப்படியே மெயிண்டைன் பண்ணவேண்டியதுதான்...

பத்மநாபன் said...

மிக்க நன்றி ஜெஸ்வந்தி...

மோகன்ஜி said...

நலம் தானே நண்பரே? திரும்பி விட்டீர்களா? நாம் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் அல்லவா?

பத்மநாபன் said...

நலம் ..விசாரிப்பிற்கு நன்றி..எது திரும்புதல் என்றே எனக்கு தெரியாமல் போய் விட்டது இந்த அவசர உலகத்தில்.. கண்டிப்பாய் மின்னஞ்சல் தொடர்பில் இருப்போம் ...
எனது முகவரி உங்கள் வலை ப்பூவில் உள்ளது...

சிவகுமாரன் said...

Ver effective management thoughts pathma sir.

பத்மநாபன் said...

ஆமாம் சிவா... நார்மன் அவர்கள் அளித்த மேலாண்மை பயிற்சிகள் அனைத்தும் செயலாக்கத்திற்கு எளிய முறையிலேயே இருக்கும்...

அப்பாதுரை said...

உங்க இமெயில் வானவில்லந்து சொரண்டி எடுத்துக்கிட்டேன்... நன்றி.

பத்மநாபன் said...

அப்பாஜி சொரண்டி எடுத்தமைக்கு நன்றி ...மெயிலிக்கவும் செய்யலாம்...

Aathira mullai said...

அடுத்த பதிவு எப்ப? என்ன பதமநாபன் வேலை அதிகமா?

பத்மநாபன் said...

நன்றி ஆதிரா....

வேலைக்கு பாலைக்குள் வந்திட்டா வேலை தீராது ...

நாளைக்குள் ஒரு பதிவு போட தயார் செய்து கொண்டிருக்கிறேன்....

அப்பாதுரை said...

போடுங்க போடுங்க...

பத்மநாபன் said...

போட்டாச்சுங்க அப்பாஜி ... விடுப்பனுபவத்தை போட்டு கடுப்பேத்தறதா நினைக்காதிங்க.....

Powered By Blogger