நாம் இந்த வலைப்பூக்களில் எழுதுவதும் ,ஒருவருக்குஒருவர் தொடர்பு கொள்வதும் எதற்கு ? மனதிற்கு ஒரு இதம் ,சுவாரசியம் மற்றும் நம் ரசனைகளுக்கு அழகான வெளிப்பாடு . இதைத்தான் சுஜாதா அவர்கள் எழுத்து துறையிலே செய்தும் செய்யவைத்தும் வந்தார் .
கதையாகட்டும் , கட்டுரையாகட்டும் நம்பி வந்த வாசகனின் ஆர்வத்திற்கு கண்டிப்பாக செய்தி வைத்திருப்பார் . பல துறைகளிலும் உள்ள விஷயங்களை தமிழனுக்கு எட்டவைப்பதில் அவர்க்கு ஒரு தணியாத ஆவல் இருந்தது ..
படைப்புகள் சிலவற்றை பற்றி ஒன்றிரண்டு வரிகள்
சிலிக்கனின் சில்லு புரட்சி --- நாங்களெல்லாம் அப்பொழுதுதான் சில்லுக்கு புதிது ..தினமணி கதிரில் வரும் .. கோவை குப்பகோனாம் புதூர் நூலகத்தில் அந்த புத்தகத்தை எடுத்தவர் எப்பொழுது வைப்போரோ என்று சுற்றியும் ஐந்து பேராவது இருப்போம் .. அப்படியே அறிவியல் , கதை ஆர்வம் கூடி ஆர் .எஸ் புரம் மத்திய நூலகம் வரை சைக்கிளை மிதிக்க வைத்தது .
பிரிவோம் -சந்திப்போம் தலைப்பே கவிதையாக , ரகு, மதுமிதா , ரகுஅப்பா , ராட்.....அவர்களோடும் , அவர்களுக்கான உணர்வுகளோடும் சில காலம் வாழ்ந்தோம் என்று தான் சொல்லவேண்டும் . ரகுவோடு ஏங்கி, மதுமிதாவை ரசித்து ,ரகுவின் அப்பாவிடம் அறிவுரைகள் பெற்று அந்த பொதிகை மலையில் உற்சாகமாக இருந்தோம் . பின் அவளை திட்டி ,ரகுவோடு அமெரிக்கா சென்று , அவளின் அப்பாவித்தனத்திற்க்கு தலையில் அடித்து கொண்டு ஊர் முழுவதும் சுற்றினோம். அவளுக்கு ராட். முலம் கிடைத்த அடிக்கு ''அப்படித்தான் வேணும்'' என்று ஒரு சாரர் நினைத்தோம் , ரகு கண்டுகொள்ளகூடாது என்று ஒரு சாரரும் , அவளை எப்படியாவது ராட் டிடமிரிந்து காப்பாற்றவேண்டும் என்று ஒருசாராரும் , ஒருபடி மேல போய் ரகுவோடு அவள் மீண்டும் இணைந்து விடவேண்டும் ஒரு சாரரும் நினைத்தோம் ... கல்லூரி காலங்களில் எங்களுக்கு கிடைத்த மதிய வேப்பமரத்தடி உணவோடு பகிர்ந்துகொள்ளும் சுவாரசியம் . இன்று படித்தாலும் அதே புத்துணர்வு .
ஏன்? எதற்கு ? எப்படி? - அந்த காலத்திலேயே கூகிள் ஆண்டவரின் பணி. எல்லாவற்றிலும் ஆர்வத்தை கிளப்பியது . மயில் தொகை விரிப்பிலிரிந்து, குவாண்டம் ,ஐன்ஸ்டீன் தியரி என்று பலதுறைகளிலும் மேலும் மேலும் படிக்க வைத்தது. சில மிரண்டு ஒதுங்கிய விஷயங்கள் கூட நட்பாகியது . இன்று ''நேனோ''வ்வையும் ''எம்படட்'' தொழில் நுட்பத்தையையும் திகைப்பு இல்லாமல் நெருங்க முடிகிறது . வரப்போகிற டி.இ. டி ஆறாம் அறிவு ஜல்லியடிகளையும் எதிர் கொள்ளமுடியும்..
ஸ்ரீரங்கத்து தேவதைகள் -அத்தனையும் உற்சாகம் புரளும் கதைகள் , வரிக்கு வரி நகைச்சுவைகள், கடைசியில் தீர்க்கப்படும் மர்மங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் ..அதில் சோக ரசத்தையும் தவறவிடாமல் ஒருகதை (மாஞ்சு ) வரும் அதில் ஒரே ஒரு வரி அவ்வளவு கூட இல்லை அரை வரியில் படிக்கும் அனைவருடைய இதயங்களையும் ஒரு சுத்திகரிப்பு செய்வார் .. அங்குதான் நாம் '' கதைசொல்லி'' க்கான இலக்கணத்தை பார்ப்போம் .. ( கதை சொல்லி --- நன்றி - எஸ் . ரா வின் பதம் - இனிமையான சொல்லாட்சி)
இப்படி நிறைய இருக்கிறது ...... சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
மற்றவர்களின் சிறப்பான படைப்புகளை அடையாளம் கண்டு சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான் . அதனாலேய ஜெயகாந்தனை படித்தோம் அதன் தொடர்ச்சியாக பாலகுமாரன் அதே ஆர்வத்தில் எஸ் .ரா , முருகன் , என்று பிரபலமானவர்களையும் பின்னர் நன்றாக எழுதும் புதியவர்கள் படைப்பிலும் ரசனையான விஷயங்களையும் ரசிக்க முடிகிறது .
தனிமனித துதி என்று சொல்லிக்கொள்ளும் சுயஉணர்வு சற்று கூடியவர்களுக்கு சொல்லவிரும்புவது , சுஜாதா என்றுமே இயக்கமாகவே இருந்திருக்கிறார். அவரும் அவரை சுற்றிலும் தமிழின் பன்முக ரசனைகள் என்றுமே இருக்கும். அவரை பற்றி பேசுவதோ , எழுதுவதோ நிச்சயமாக நம் ரசனைகளுக்கு , தமிழார்வத்திற்கு போட்டுக்கொள்ளும் துதி.. அப்படியே தனிமனித துதித்தாலும் என்ன தவறு ?
தன் வாசகனின் ஆர்வத்திற்கு , அறிவிற்கு தீனி போட எத்தனையோ தூக்கத்தை இழந்து படித்து,எழுதி இருப்பார் .
கட்டம் கட்ட நினைத்தவர்களிடமும் , ஒரு கட்டத்திற்குள் மட்டும் சிக்க வைக்க முனைபவர்களிடமும் அவர் என்றுமே சிக்கியது இல்லை . சுஜாதா ''அந்த வானத்தை போல '' எல்லோருக்கும் பொதுவானவர் என்பதற்கு அவரை பற்றி வரும் பதிவுகளும் அதன் பின்னூட்டங்களுமே சாட்சி ( சற்றுமுன்னர் கிடைத்த உ -ம் நர்சிம் , ராதா கிருஷ்ணன் .....இன்னமும் வரும் )
வாசகனையும் எழுதவைக்கும் அவர் ஒரு மானசீக எழுத்தாசான் ... வாசிப்போம் ஆனந்தமாக ......
40 comments:
மிகவும் சிறப்பான பதிவு நண்பரே...
நிஜமாகவே ஆனந்த வாசிப்பு தான்!சமீபமாகத்தான் பிரிவோம் சந்திப்போம் படிக்க முடிந்தது! அது இவ்வளவு பிரபலமான நாவல் என்பது இப்போது தான் அறிகிறேன்!அம்மா நிறைய கதைகள் சொல்லி இருக்கிறார். ஒரு குதிரையால் ரேபீஸ் வருமே அது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருக்கும். நீங்கள் கூறுவது போல சயின்ஸை ஒரு சாமானியனுக்கு மிக எளிமையுடன் கொண்டு சேர்த்தவர் இந்த கதைசொல்லி! பகிர்வுக்கு நன்றி!
சுஜாதா பற்றிய வாசிப்பும் சுஜாதாவின் எழுத்து போலவே என்றும் இனிமையானது.
நல்ல தொகுப்பு நண்பரே
நன்றி பிரசன்னா முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் . உங்களின் '' சுஜாதாவால் கிடைத்த ஆளுமை'' பற்றிய கட்டுரையும் அருமை.
நன்றி அநன்யா ... உங்கள் எழுத்தோட்டதிலேயே தெரிகிறதே, உங்கள் அம்மா அவர்களும் சுஜாதா வின் எழுத்தை படிப்பவர் என்று ....
நன்றி யோகா .. உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் ... உங்கள் சிறப்பான பதிப்பை படித்தேன் .. இலங்கையில் நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள் என்றும் அங்கே இன்னமும் அனுபவித்து வாசிக்கிறார்கள் என்றும் அறிந்தேன் ..
ஏன்?எதற்கு?எப்படி? எத்தனை முறை படித்தாலும் எனக்கு ஒவ்வொறு முறையும் புதிதாகவே தோனுகிறது.
எவ்வளவு தகவல்கள்.நல்ல பதிவு.தொடரட்டும் இது போன்ற பதிவுகள்
ரொம்ப சரி மின்னல் ..அவருடைய கதைகளிலும் மீண்டும் மீண்டும் படிக்க புதிய புதிய கோணங்கள் பிடிபடும் . ஏன்
நகைச்சுவையிலும் அப்படித்தான் ..... நன்றி
நன்று...
நன்றி..
''நன்று'' றிற்கும் நன்றிக்கும் நன்றி பிரகாஷ்
மிகவும் சிறப்பான பதிவு நண்பரே...
நற்பதிவு என்று வாழ்த்திய கவிஞர் ''நினைவுகளுடன் நிகே'' விற்கு நன்றி
சுஜாதா எழுதுவது மட்டும் இல்லை, சுஜாதாவைப் பற்றி எழுதுவதும் சுவாரஸ்யமாக இருக்கும். அதிலும் நீங்கள் தொகுத்து அளித்திருக்கும் விதம் கன கச்சிதமாகவும் சுவையாகவும் இருக்கிறது.
http://kgjawarlal.wordpress.com
ஜவஹர் அண்ணா...... ஜிவ்வ வைத்ததற்கு ரொம்ப நன்றி ... கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் , எழுதும் கலையை அவர்,
அவரை படித்தவர்களிடமும் பரவலாக்கியது ...அதை உங்கள் வலையில் நிரம்பவே உணர்ந்தேன்.. வாழ்த்துக்கள் .
இனிமையான பகிர்வுகள்!
அபூர்வமான கலவை சுஜாதாவின் எழுத்து!
எதிர்பாராத இடத்தில் ஜெர்க் மாதிரி ஒரு நகைச்சுவை வைப்பது அவர் ஸ்பெஷாலிட்டி.
நன்றி ஜகந்நாதன் .. சுஜாதா தமிழ் எழுத்துல தொடாத ஏரியாவே இல்லைன்னு சொல்லலாம் .. நகைச்சுவைல அவர் ஜெர்க் அருமையா இருக்கும்.
அப்புறம் ஹைக்கூ .........
வாத்தியார் பத்தி அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...அவர் ஒரு ட்ரண்ட் செட்டர்
டுபுக்காருக்கு ரொம்ப நன்றி .... அந்த டிரென்ட் யை நீங்களெல்லாம் அழகாக மெருகேற்றி வருவது மிகுந்த மகிழ்ச்சி .
என்றும் தொடர வாழ்த்துக்கள் .
நல்ல சிறப்பான பதிவு நண்பரே
தொடருங்கள்.....
!!!நம்ம பக்கமும் வர முயற்சியுங்கள்!!!
வருக விடிவெள்ளி .. . நம்ம வாத்தியார், ஈழத்திலிரிந்து வரும் தமிழை நன்றாக சிலாகித்து வாசகர்களுக்கு அறிமுக படுத்துவார் .
அவருடைய எழுத்திலேயே ஒரு அறிமுகம் செய்து வைத்ததை காண்போம்
/புதுக்கவிதை இன்று அலுத்துவிட்டதற்க்கு ஆதார காரணம் அதன் கவலைகளில் ஏற்பட்ட பாசாங்கு தான் . கவிதை பிறப்பதற்கு உணர்ச்சிகள் உண்மையானதாகவும் யோக்கியமானதாகவும் இருந்தால் போதும் . இதனால் தான் இன்று எழுதப்படும் நல்ல கவிதைகள் ஈழத்திலிரிந்து வருகின்றன ஒரு உதாரணம் .. ''சூரியனோடு பேசுதல் '' எனும் தொகுப்பில் '' ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள் .. என்று தொடங்கும் கவிதை.. / இப்படி பல அறிமுகங்கள்
வருகைக்கு நன்றி ...
//சுஜாதா ''அந்த வானத்தை போல '' எல்லோருக்கும் பொதுவானவர் என்பதற்கு அவரை பற்றி வரும் பதிவுகளும் அதன் பின்னூட்டங்களுமே சாட்சி//
உண்மை
virutcham
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விருட்சம் ..
அருமையான எழுத்தாளருக்கு, நல்ல சமர்ப்பணம்...
நன்றி..
நன்றி பிரகாஷ் .... வாழ்த்தியமைக்கு
சுஜாதா எழுதியபோது இணையமெல்லாம் இப்போது போல இவ்வளவு வசதியுடன் இல்லை என்பதையும் ஏஎஎ போன்ற விதயங்களை எழுதுவதற்கு அவர் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டிருந்திருப்பார் என்பதையும்,கூடியவரை அதை பிழையின்றியும் சுவாரசியமாகவும் எழுதினார் என்பதையும் அதற்கு பின்புறம் இருந்த ஆழ்ந்த படிப்பபையும் உழைப்பையும்...
என்னவோ போங்க..ஏங்க அந்த ஆளு இப்படி சீக்கிரமா செத்துப் போனாரு?
நன்றி அறிவன் ... ''ஏன் எதற்கு எப்படி '' சுஜாதா அவர்களின் உழைப்பிற்கு தமிழ் கூறும் நல் உலகம் என்றென்றும் நன்றியாக இருக்கும் .உங்கள் ஏக்கம் புரிகிறது ..இது அவரது அனைத்து வாசகர்க்கும் உள்ள ஏக்க பெருமுச்சு ..
சுஜாதா ஒரு இமயம்..
உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் பத்மநாபன் சார்..ஆமா.. நீங்க எங்க ஊர்தானா?.. ரைட்..
நன்றி பட்டாபட்டியாரே ... வாத்தியார், தமிழ் எழுத்து என்ற துறையில், ஒரு இமயம் வரைக்கும் ஓர் டார்கெட் செட் பண்ணிவைத்து நம்மையும் அந்த அளவிற்கு அழைத்து செல்ல எத்தனித்தவர் .. படித்து கொண்டிருக்கவாவது முயற்சி செய்வோம் .. அமாங்க நம்மூர் தான்
முதல்ல சிறுவாணி ..அப்புறம் அத்திக்கடவு ..இப்ப பொழப்புக்கு பாலையில் மினரல் வாட்டர் . மீண்டும் நன்றி சக ஊர், சக ரசிகர், சக பதிவர்க்கு.
நல்ல இடுகை தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன் மலிக்கா....மிக்க நன்றி ..கிடைக்கும் நேரத்தை வாசிக்க பயன்படுத்திக்கொள்கிறேன் .. ஊக்க படுத்தியமைக்கு மீண்டும் மிக்க நன்றி ..
உங்களை என் பதிவில் அறிமுகப் படுத்தி உள்ளேன்
http://lksthoughts.blogspot.com/2010/05/i.html
நன்றி எல்.கே... ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...
நிச்சியம் அவர் ஒரு தொடரும் சகாப்தம் தான். அவர் எங்கும் செல்லவில்லை, நம் எல்லோர் நினைவிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
நான் ரெம்ப நாளா ஸ்ரீரங்கத்து தேவதைகள் தேடிகிட்டு இருக்கேன். இந்த வருஷம் ஊருக்கு போறப்பவாச்சும் கெடைக்கணும்.நல்ல நினைவு பதிவு
ஆமாங்க அப்பாவி தங்கமணி-- இந்த பேர் நிங்க வச்சுகிட்ட நகைச்சுவை உணர்வும்..அதை நாங்க தட்டுவதும் வாத்தியார் கிட்ட கற்று பெற்ற நகைச்சுவை உணர்வு தான்.. வருகைக்கும் வாழ்த்திற்க்கும் ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி..நன்றி...
nalla pathivu! mukkiyamaa enakku romba upayogamaa irunthathu.. 2010 jan-lernthey naan thamizhil ezhutha muyarchikkath thodangiyirukkiraen.. thamizh school-la laam padichchathu kidayaathu- kelvi gyanamey! athanaale ippo thamizh books padichchu koncham arivai valaththukkalaamnu nenachchindrukkarechche intha suggestions romba usefullaa irukkum..
thanks!
நன்றி மாதங்கி..உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் ...உங்கள் பதிவுகளை பார்த்தால் , புதிய பதிவர் போல் இல்லை.தேர்ந்த பதிவர் போலவே தமிழ் நடை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்...
சுஜாதா நிச்சயம் ஒரு தொடரும் சகாப்தம் தான். பகிர்வுக்கு நன்றி....
பால்ஹனுமன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பால்ஹனுமன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
//மற்றவர்களின் சிறப்பான படைப்புகளை அடையாளம் கண்டு சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்//
உண்மை!
//தனிமனித துதி என்று சொல்லிக்கொள்ளும் சுயஉணர்வு சற்று கூடியவர்களுக்கு சொல்லவிரும்புவது , சுஜாதா என்றுமே இயக்கமாகவே இருந்திருக்கிறார். அவரும் அவரை சுற்றிலும் தமிழின் பன்முக ரசனைகள் என்றுமே இருக்கும்//
உண்மை!உண்மை!உண்மை! :-)
Post a Comment