Wednesday, February 10, 2010

ஒரு சுட்டி நரி குதித்து ஆடுகிறது .......சுவாரசியங்கள் ..... ரசியுங்கள்

அமெரிக்க நண்பர்  ஒருவர்   தெற்கு  பேரிங்டன்  நகரத்தில்  இருந்து   , மின் அஞ்சல் வழியாக கடவுள் , பிரபஞ்சம் ,  டி . என்.  எ  ,  பைனரி     என்று சில நாட்களாக எனக்கு  பாடம் நடத்தி வருகிறார் ... மிக மிக ஆழமாக போய்கொண்டிருக்கிறது .. பயப்படவேண்டாம்     இந்த பதிவு அதை பற்றியது அல்ல ... நேற்று அதில் ஒரு வாக்கியத்தை போட்டு சில குறிப்புகள் எழுதி இருந்தார் .

''The quick brown fox jumps over the lazy dog"

What are the chances of that sentence occurring by random  chance?
It's easy to find the answer. It has 43 letters and spaces.
Excluding things like apostrophes and semicolons and numbers,
there are 26 upper case letters and 26 lower case letters to
choose from. So there are 52 to the power of 43 possible
combinations of letters.
52^43 = 6.139652×10^73
Which means the chances of this sentence occurring randomly are 1 chance in
61,396,520,000,000,000,000,000,000,
000,000,000,000,000,000,000,000,
000,000,000,000,000,000,000,000.
(There are only 10^80 particles in the universe.)
இப்படி  போய் கொண்டே  இருக்கிறது .........  கவலை வேண்டாம்.. இதில் ஆழமான பகுதிக்கு செல்லவில்லை , அந்த வாக்கியத்தை மட்டும் பிடித்து கொண்டேன் .. .
 எந்த ஆங்கில சொற்றொடர் படித்தாலும் , அதை தமிழ் படுத்தி பார்ப்பது . மிண்டும் அதை முடிந்தவரை மிக அழகாக சுருக்கமாக தமிழில் மாற்றுவது எப்படி என்று யோசிப்பது, எனக்கு சிறு வயதில் இருந்தே தொடரும் ஒரு(ந/ கெ) பழக்கம்.. அப்படி இந்த வாக்கியத்தையும் மொழி பெயர்த்து பார்த்தேன் ..


''The quick brown fox jumps over the lazy dog"

'' ஒரு சுட்டி பழுப்பு நரி, ஒரு சோம்பேறி நாயின் மேல் குதித்தாடுகிறது '' இந்த வாக்கியத்தில் அவ்வளவு சுவாரசியம் பிடிபடவில்லை .. அப்படியே விட்டு விட்டேன் .
பின் சில மணி நேரம்      கழித்து , வலைபூக்களை , பார்வை இட்டு வரும்பொழுது ,ஒரு  ஆஸ்திரேலிய  பதிவர்  ,ஒரு பதிவில் ,கணினி  வித்தைகள் , மாய,மந்திரங்கள் என்று தலைப்பிட்டு சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தார் .... அத்தனையும் சுவாரசியமாக இருந்தது .

அதில் ஒன்று , நீங்கள்  பயன்படுத்தும்   word 2003  இல்  = rand ( 200,99 ) என்று தட்டி enter யை தட்டுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.  (   word 2007   காரர்களுக்கு  கிழே  )
அப்படி செய்தவுடன் ஒரு ஆச்சர்யம்... பக்கம் முழுவதும் , சுட்டி  பழுப்பு நரி , நாயின் மேல் குதித்து  ஆடி  கொண்டே இருந்தது .... ஆங்கில எழுத்துக்களில்

நீங்களும்  தட்டி பாருங்கள் .....

இந்த   ஒருசேர்  நிகழ்வு எனக்குள் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி, அந்த வாக்கியத்தின் சுவாரசியத்தை கூட்டியது .

அப்புறம் அந்த வாக்கியம் , ஆங்கிலத்தில் ஒரு பிரபல ''பாட போதிப்பு'' வாக்கியம் என்றும் , ஒரு ஆங்கில  அனைத்தெழுத்து  வாக்கியம் என்று வலையின் வாயிலாக அறிந்தேன் .... இதில் 26 ஆங்கில எழுத்துக்களும் வரும் . இது LKG ,UKG லேயே Pangram   என்று சொல்லிகொடுக்கிறார்களே என்றும் குறிப்பிட்டிருந்தார்கள் ... நான் தான் LKG ,UKG படிக்கவில்லையே.. நேராக அரசு ஆரம்ப பள்ளியில் ஒண்ணாம் வகுப்பு .ரெண்டாம் வகுப்பு  .................

மேலே அந்த சொற்றொடர் ஆராய்ச்சியில் (??) ஈடு பட்டபொழுது .இந்த சொற்றொடர் கணினியில்
 Word 2003 லும் அதற்க்கு முந்தைய word பதிப்பு களிலும் பத்தி / வாக்கியம் மென் பொருள் சோதனைக்கு , இந்த வாக்கியத்தை பயன்படுத்தி வந்தார்கள் / வருகிறார்கள்
Word 2007  இல்  வேறு புதியது புதியதாக வாக்கியங்கள் வந்து விழுகிறது .  Word 2007 லும்  சுட்டி  நரியை நாயின் மீது குதிக்க வைக்கலாம்.  அதற்க்கு    = rand.old ( ) பயன் படுத்த வேண்டும் .

இதை + 2 விலேயே படிக்கலாம் என்கிறார்கள் . கொடுமை நான் +2 வும் படிக்கவில்லை  பத்தாம் வகுப்பிற்கு  பின்   நேரே பட்டயம் , அப்புறம் பட்டம் .

ஆங்கில தட்டெழுத்து   கற்று கொடுக்கும் நிலையங்களும், இந்த வாக்கியத்தை பயன் படுத்தி வேகப்பயிற்சி கொடுப்பார்கள் என்றும் படித்தேன்.. ஆனால் என் போன்ற (வெட்டி) பந்தா பொறியாளர்கள் முறையாக தட்டெழுத்து  கற்றுக்கொள்ளாமல் கடைசிவரை ஒற்றை விரலிலேயே ஓட்டுவோம் .

எப்படியோ ''சுட்டி நரி வாக்கியம் '' எதேச்சையாக இரு வித்தியாசமான இடங்களில் வந்து என் ஆர்வத்தை தூண்டியது..
                                                                                                                                                                                                                                                                                                                    
என்  ஜோட்டு மக்களுக்கு  நிச்சயம்  ஆர்வமாக இருக்கும்...  ''The quick brown fox jumps over the lazy dog"  இந்தவாக்கியம்  பல  லட்ச கணக்கான    வலை தளங்களை ஆக்கிரமித்துள்ளது....  நிறைய  வியாபார  அடையாளமாகவும் , முத்திரையாகவும்    .......வாசிப்பது ஆனந்தம். அப்ப வாசிக்காம விட்டதும், இப்ப ஆனந்தம்.

ஆங்கிலம் போன்று , அனைத்தெழுத்து வாக்கியம் 247 எழுத்துள்ள தமிழில் சாத்தியமா ? ஏன் இல்லை ? நமது ஏதோவொரு கழக கட்சி பொது கூட்டத்திற்கு போனால் ,'' வட்டங்கள்'' சதா அனைத்தெழுத்து வாக்கியமாக உதிர்த்து  கொண்டே  இருப்பார்கள்....  சோடா  அடித்து  நீட்டும் வரை ..... என்ன? கொஞ்சம் நிறையவே '' பேட் வேர்ட்ஸ்'' இருக்கும் அவ்வளவு தான்.

இதில் மிகுந்த சுவாரசியப்பட்டவர்கள் நிஜமாகவே ஒரு பழுப்பு சுட்டி நரியை நாயின் மீது குதிக்க விட்டு படமும் எடுத்துள்ளார்கள் .. பாருங்கள் கிழே உள்ள  சுட்டியை தட்டி ...

15 comments:

Unknown said...

நல்ல தகவல்.அப்படியே windows7 கும் எதாவது இருந்தால் சொல்லுங்கள்.அப்புறம் நீங்கள் படித்த அதே வழியில் தான் நானும் படித்தேன்.ஆரம்ப கல்வி முதல் பட்ட படிப்பு வரை.

பத்மநாபன் said...

முதலில் பளிச்சென்ற தட்டிய மின்னலுக்கு நன்றி.. கணினியை பொறுத்தவரை, நான் கத்து தட்டிதான் ...தினம் , தினம் மாறிக்கொண்டே இருக்கிறது . அதனால் தானோ என்னோவோ புதியதாக பார்க்கும் பொழுது ஒரு துள்ளல் வருகிறது .. இந்த வாக்கியம் ஒரே நாளில் இரு இடங்களில் எதேச்சையாக கிடைத்தவுடன் , ஆர்வ மிகுதியில் உள்ளே போனால் .. நிறைய விஷயங்கள். windows 7 இன்னமும் பார்க்கவில்லை .. பார்த்தவுடன் பகிர்கிறேன் நன்றி .. நன்றி .

சாமக்கோடங்கி said...

இதே போன்று 26 ஆங்கில எழுத்துகளை உள்ளடக்கிய இன்னொரு வாக்கியத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.. கணினியில் font செலெக்ட் செய்வதற்கு அது உதவியது.. கணினியில் எங்கே உள்ளது என்பதை மறந்து விட்டேன்.. ஒரு font ஐ செலக்ட் செய்தால் அந்த ஸ்டைலில் அனைத்து எழுத்துகளையும் பார்க்க அந்த வாக்கியம் உதவியது..
நல்ல தகவல்.. தொடர்ந்து எழுதுங்கள்..

நன்றி..

பத்மநாபன் said...

பிரகாஷ் ,
நன்றி முதல் வருகைக்கு ...
பெரும்பாலானவர்கள் அறிந்த விஷயம் என்றாலும் , வலையில் இந்த வாக்கியம் .
பரவி நிற்பதை வியந்து பார்த்து இந்த பதிவு .
மீண்டும் நன்றி......

sathish said...

good information. I think you may be from EB correct!!!

பத்மநாபன் said...

நல்வரவு சதீஷ் ... எப்படி கண்டு புடிச்சிங்க ? eb ல '' கரண்ட் '' தான் தர்றாங்க .. இந்த மாதிரி தகவல்லாம் தருவது இல்லே :)
ஆமாம் , அங்கிரிந்து '' எஸ் '' ஆகி இங்கு வந்துள்ளேன் . அப்புறம் உங்க வலைப்பூவிற்குள் செல்லமுடியவில்லையே ?
மீண்டும் நன்றி வருகைக்கு .

Ananya Mahadevan said...

பத்மநாபன்,
இந்த பதிவை நான் எப்போவோ படிச்சுட்டேன். சுவாரஸ்யமான சுறுசுறுப்பு நரி பத்தி சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க. நல்ல பதிவு. கமெண்ட்ஸ் மாடரேஷன் ல போயி, word verification ஐ disable செய்துவிடவும். கமெண்டு எழுதுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும். :) அடுத்த பதிவு எப்போ?

பத்மநாபன் said...

ரொம்ப நன்றி அநன்யா, முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் ...
Word verification இவ்வளவு படுத்தும் தெரியாது ... its great
சொன்னது நல்லது ... மாற்றிவிட்டேன் ..
எல்லா மக்களோட பதிப்பையும் ஆனந்தமா வாசித்து
கொண்டிருக்கிறேன் ... அப்பப்ப பதிவும் போடணும் .

வடுவூர் குமார் said...

என்ன ஆச்சரியம்!!
நானும் 10வது படிக்கவில்லை இன்னும் ஒற்றை விரல் தான் தட்டச்சும் போது.

பத்மநாபன் said...

குமார் ,இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் ... என் ஜோட்டு மக்கள் கொஞ்சப்பேராவது இருக்கணுமே ...கற்காமல் தாண்டி
இப்பொழுது கற்கும் சுவாரசியம் .... உங்கள் முதல் வருகைக்கு நன்றி.. நன்றி .. எப்படியோ வண்டிய தள்ளிவிட்டுட்டிங்க ..
அதற்க்கும் நன்றி.

ரோஸ்விக் said...

//நமது ஏதோவொரு கழக கட்சி பொது கூட்டத்திற்கு போனால் ,'' வட்டங்கள்'' சதா அனைத்தெழுத்து வாக்கியமாக உதிர்த்து கொண்டே இருப்பார்கள்.... சோடா அடித்து நீட்டும் வரை ..... என்ன? கொஞ்சம் நிறையவே '' பேட் வேர்ட்ஸ்'' இருக்கும் அவ்வளவு தான்.//

அங்க இருக்குது மக்கா, உங்க பஞ் :-))

அங்க இருக்குது மக்கா, உங்க பஞ் :-))

அந்த நரி மேட்டர் முன்னாடியே நான் அறிந்தது... வலைத்தளம் மூலம் அறியாத மக்களுக்கு அறியச் செய்ததில் மிக்க மகிழ்ச்சி...

மொத்தத்துல உங்க தோட்டத்துல அறிவுப்பூர்வமான பல செடி கொடிகள்... தொடர்ந்து எழுதுங்க நண்பரே...

பத்மநாபன் said...

நன்றி ரோஸ்விக் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் ...
செடிக்கு தண்ணியும் பாய்ச்சி உரமும் வச்சிரிக்கிங்க ...
தொடர்ந்து வாங்க ..

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

பத்மநாபன் said...

அண்ணாமலையாருக்கு நன்றி , நன்றி .. தொடர்ந்து பின்னூட்ட சதம் - வாழ்த்துக்கள்

பாலராஜன்கீதா said...

http://www.google.com/#hl=en&source=hp&q=sentence+with+all+the+letters+of+the+alphabet&rlz=1R2SHCN_enSA356&aq=0&aqi=g10&aql=&oq=sentence+with+all+&gs_rfai=&fp=f4f27f35e3d0f27c - ல் தேடியபோது கிடைத்தது -

http://www.stumblerz.com/shortest-english-sentence-using-all-the-letters-of-the-alphabet/comment-page-2/#comments