Wednesday, September 1, 2010

திருவாளர் ஞொய்யாளு--நம்மாளு

மோகன்ஜி அவர்களின் அன்பான அழைப்பிற்கிணங்க ஞொய்யாளு வை பிரபலமாக்கும் முயற்சி.

முன்குறிப்பு :
ஞொய்யாளு நம்மாளு....  வடக்கு,தெற்கு, சாதி, மத இன மொழி இதற்கெல்லாம் சிக்காத ஜீவன். நம்மளை சிரிக்க வைக்கறது ஒன்னு தான் அவர் வேலை.
இனி அவர் படும் பாடு...நம்மை படுத்தும் பாடு.

ஒரு தடவை நம்மாளு ஞொய்யாளுவும் அவரது நண்பர் சிகாமணியும் பயணம் செய்ய டபுள் டெக்கர் பஸ்ல ஏறினாங்க . படிக்கட்ட பார்த்தவுடனே குஷியாகி நம்மாளு குடு குடு ன்னு மாடிக்கு போய்ட்டாரு. சிகாமணி கிழ் பகுதியில் உட்கார்ந்தாட்டாரு.  திடீர்னு ஞொய்யாளுக்கிட்டருந்து ஒரு `ஓ`ன்னு பெரிய சவுண்டு . சிகாமணி ஓடிப்போய் என்னன்னு கேட்க,  வெல வெலத்த நிலையில் ஞொய்யாளு ,சிகாமணியிடம், `` உனக்கென்னப்பா  கீழ வண்டிக்கு டிரைவர் இருக்காரு, மேல பாரு, டிரைவர் யாருமில்லாம தானா ஓடீட்டு இருக்குது. எப்ப எது ஆகுமோன்னு நான் பயந்துட்டு இருக்கேன்.. சமாதான படுத்தறதுக்குள்ள சிகாமணி ஒரு வழியாய்ட்டாரு.

சிகாமணி, நம்ம ஞொய்யாளுக்கு வாகனபயம் போக்கி , வண்டியெல்லாம் பயிற்சி கொடுத்து, டிரைவிங் லைசன்சும் வாங்கி கொடுத்துட்டாரு. டிரைவர் வேலைக்கு இண்டெர்வியு போன எடத்துல  அந்த முதலாளி ஸ்டார்ட்டிங் சேலரி முவாயிரம் , மீதி அப்பறம் பார்க்கலாம்னு சொன்னார்.உடனே நம்மாளு ஞொய்யாளு, ஸ்டார்டிங்க்கு ஓக்கே அப்பறம் ரன்னிங் எவ்ளோ தருவீங்கன்னாரு .. நம்மாளு சாதாரண ஆளா? அவ்வளவு சீக்கிரம் ஏமாறுவதற்கு. அந்த முதலாளி தலையில் அடிச்சிட்டே  கிளீநர் வேலை தந்தாரு.
வேலை கெடச்சவுடனே, சிகாமணி , ஞொய்யாளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிரலாம்னு முடிவு பண்ணி, ரெண்டு பேரும் பொண்ணு பார்க்க போனாங்க.. போன இடத்துல நம்ம ஞொய்யாளு, பொண்ணுகிட்ட வயசென்னன்னு கேட்க்க , அந்த பொண்ணு உங்கள விட ஒரு வயசு கூடன்னு சொல்ல, இதை கேட்ட சிகாமணி ,இது ஒத்துவராதுன்னுட்டு கெளம்ப , நம்ம நாணயஸ்த்தன் ஞொய்யாளு , ஏன் ஒத்துவராது? ஒரு வருஷந்தானே, அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிகிட்டா போச்சுன்னாரு. இனி அந்த பொண்ணு திரும்பி பார்க்குமா என்ன?

ஒரு நாள் நம்ம ஞொய்யாளு, பர்மா பஜார் போய் ஒரு டி.வி.டி பிளேயர் வாங்கிவர கெளம்பிட்டாரு, அதை பார்த்த சிகாமணி,  ``  பாத்துப்பா ஞொய்யாளு, அங்கெயெல்லாம் வெல கன்னாபின்னான்னு சொல்வாங்க,  என்ன விலை சொன்னாலும் பாதி வெலைக்கு கேளு`` வெவரமா கேட்டுட்ட பர்மா பஜார் போய் சேர்ந்தாரு. ஒரு கடையில்
        ஞொய்யாளு : இந்த டிவிடி பிளேயர்  என்ன 
                      வெலைப்பா....
        கடைக்காரர் : நாலாயிரம் ருபாய்.
               ஞொ : என்னப்பா இப்படி விலை சொல்ற, 
                     ரெண்டாயிரத்துக்கு தரமுடியுமா?
              க.கா :ம் ம் அதெல்லாம் முடியாது 
                    முவாயிரத்துக்கு வேணா தரலாம்.
             ஞொ : அப்ப ஆயிரத்து ஐநூறுக்கு தர முடியுமா.
              க.கா : என்னப்பா உன்னோட கொடுமையா
                     இருக்கு.. இது மொத போணி,      
                     சரி நீ முதல்ல கேட்ட 
                     ரெண்டாயிரத்துக்கே எடுத்துக்க.
             ஞொ :  அப்ப ஆயிரத்துக்கு தாப்பா..
              க.கா : உன்னோட ஒரே ரொதனையா
                    போச்சுப்பா காசே வேண்டாம் 
                    இதை சும்மாவே எடுத்துக்க .
                    எடுத்துட்டு எடத்த காலிபண்ணு சீக்கிரம்..
             ஞொ : அப்ப ரெண்டு குடுப்பா....
              நம்மாளு ஞொய்யாளு-  கணக்குல புலி..இது யாருக்குமே புரியமாட்டங்குது .... கடைசியில் கடைக்காரர், ``வசமா ரெண்டு குடுத்து `` அனுப்பிச்சாரு.

பின் குறிப்பு :  முன் குறிப்பு போட்டா, கண்டிப்பா பின் குறிப்பும் போடனும்னு, நாமே போட்டுக்கிட்ட விதி. மேல குறிப்பிட்ட ஞொய்யாளுவின் லீலைகள்  வலையிலிருந்து சுட்டு எடுத்து வந்தாலும் , நம்ம வானலியிலும் நல்லா வணக்கித்தான் பரிமாறப்பட்டுள்ளது.  
இந்த பதிவின் சிறப்புகளை,  பதிவு போடச்சொன்ன 
அருமை நண்பர் வண்ணமயமான 
வானவில் மனிதனுக்கு உரித்தாக்குகிறேன். 
அடுத்து இந்த விளையாட்டை , 
தீராத விளையாட்டு பிள்ளை யிடம்
ஒப்படைக்கிறேன். 


13 comments:

மதுரை சரவணன் said...

அருமையான நையாண்டி .... வாழ்த்துக்கள்.

RVS said...

அட்டகாசம் ஆரம்பம்..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

மதுரை சரவணன் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..
இங்க நம்மாளு இருக்கறப்ப , எதுக்கு வடக்கு, கிழக்கு போகணும்னு ஒரு முடிவோட மோகன்ஜி தலைமையில் ஒரு சங்கம் கூடியிருக்கு..அப்பப்ப இந்த தலைப்புல கும்மி அடிச்சு கொண்டாடலாம்.

பத்மநாபன் said...

நன்றிங்க ஆர்.வி.எஸ்.. உங்க கையில கொடுத்தாச்சு.. பிரிச்சு மேயறதற்கு உங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்..கெளப்புங்க..

மோகன்ஜி said...

ஆ.. பத்மநாபன் ! நம்மாளு ஞொய்யாளு களைகட்டிட்டாருங்க
நல்ல அருமையான முதல் தொடர்வு.இப்பத்தான் ஞொய்யாளு போன் பண்ணாரு.நான் அவருக்கு நைனாவாம்.பத்மநாபன் தான் 'சித்தப்பூ'வாம். தாய் மாமா RVS அவரை செல்லம் கொஞ்சினாதான் வலைப்பூவுக்கே வருவாராம்.RVS வாங்க!
ஒரு குத்து ஆடிட்டு போங்க. ஆவலுடன்
காத்திருக்கும் நைனா

பத்மநாபன் said...

மோகன்ஜி, நையாண்டியா அவரை சித்தரித்து வலையில் சிருஷ்டித்ததால ``நைனா``ன்னா சொல்லிட்டாரு நம்ம ``ஞொய்னா``. தொடரவிட்டு சிரிப்போம். நன்றிங்னா .

அப்பாவி தங்கமணி said...

ஞொய்யாளு நம்ம ஊரு சர்தார்ஜி போல இருக்கே... சூப்பர்... ஹா ஹா ஹா... நல்லாவே வணக்கி பரிமாறி இருக்கீங்க...

பத்மநாபன் said...

வடக்கத்துகாரரை இழுத்து வம்பு பண்ணவேண்டாம்னு , நம்மாள புடிச்சிட்டோம்..

ரொம்ப நன்றி அப் தங்க்ஸ்.. வாய்ப்பு கிடைத்தால் , நீங்களும் வணக்கி எடுங்க.. நீங்க தான் சுடாமலே வணக்கிருவிங்கல்ல...

ரிஷபன் said...

ஞொய்யாளுக்கு ஆனந்த வரவேற்பு..

பத்மநாபன் said...

ரிஷபன் அவர்களுக்கு நன்றி ...நண்பர் கூட்டத்தோடு சின்ன சின்ன நகைச்சுவை முயற்சிகள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஹா ஹா ஹா...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

சிரி்த்ததை தெரியப்படுத்திக் கொள்கிறேன்,

ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா...

மீண்டும் மீண்டும் சிரிப்பு

பத்மநாபன் said...

நன்றி ஜெகதிஷ்...நாம் சிரித்து வாழவேண்டும் என்பதற்காக நம்மாளு ஞொய்யாளு சிரிக்கவைக்கிறார் .