''திறமையே அதிர்ஷ்டம் '' இது நம் சிந்தனை எழுத்தாளர் எஸ் ..ரா , இந்த வார விகடனில் நம் மீது ''சிறிது வெளிச்சமாக '' அடித்த பெரிய வெளிச்சம் ....
இதை படித்து முடித்தவுடன் ,என் மின்னஞ்சலை நிரவியதில்.....நண்பரின் மின்னஞ்சல் ஒன்று 90 / 10 Principles - Written by Stephen covey
writer of 7 Habits of Highly effective people ...
ஸ்டிபன் கோவி , வாசிப்பவர்களின் இனிய நண்பன் , இழுத்து உட்கார வைத்து முழுதும் வாசிக்க வைப்பார் .. எஸ் ..ரா , மாதிரியே ....
ஸ்டிபன் கோவி, என்ன சொல்றார்னு பார்ப்போம் .....
முதல் திறமை , நிலைமையை எப்படி கையாள்வது ........
தொண்ணூறுக்கு பத்து விதி ... இந்த விதிதான் நம் தலை விதி என்கிறார் .
( இதை படிப்பது அதில் சேர்த்தி இல்லை )
நம் வாழ்க்கையை மாற்றும் , குறைந்த பட்சம், நிலைமையை சீராக
கையாளும் வித்தையை கற்று கொடுக்கும் இந்த விதி....
அதென்ன தொண்ணூறு ? அப்புறம் பத்து ?
நம் 100 சதவிகித வாழ்க்கையில் , 10 சதவிகிதம் நம் கட்டுப்பாட்டில் இல்லாத நம்மை தாக்கவரும் சம்பவங்கள், பிரச்சினைகள் ... 90 சதவிகிதம் நம் கட்டுப்பாட்டிலும் ஆளுமையிலும் உள்ள அதற்க்கான தீர்வுகள் , அதை கையாளும் முறைகள் .
போக்குவரத்தில் சிவப்பு விளக்கு எரிவது நம் கட்டுபாட்டில் இல்லை .. ஆனால் அதற்க்கு கட்டுப்பட்டு செல்வது நம் ஆளுமையில் தானே .....
ஸ்டிபன் கோவி சொன்ன உதாரணத்தை , நம்ம ஊர் பாணியில் பார்ப்போம் ...
ராம் , ராஜி , அவர்களது செல்லமகள் அபி சேர்ந்து காலை சிற்றுண்டிக்கு அமர்கிறார்கள் ....வேலைக்கு , பள்ளிக்கு செல்லும் பரபரப்பு ...
அபி , தண்ணீர் கோப்பையை எட்டி எடுக்கும் பொழுது , கை தவறுதலாக காப்பி கோப்பை தட்டி விட ராமின் அலுவலக சட்டையில் காப்பி சிந்தி வழிகிறது... வந்ததே ராமிற்கு கோபம் , கன்னாபின்னாவென்று அபியை திட்டி, அதோடு அடங்காத கோபம் , குழந்தைக்கு நான்கைந்து பளார் பளார் ... செல்லுமிடத்து சினம் .
குறுக்கே வந்த ராஜிக்கும் சரியான திட்டு ... நல்லா வளர்த்தியிருக்க ......வாக்கு வாதங்கள் ..... நிமிடங்கள் தொலைந்தன ... குழந்தை அழுது ஓயவில்லை ... உணவு மறுத்தாள்... பள்ளி பேருந்து போயே போய் விட்டது... ராம் பதட்டமாக மாடிக்கு ஓடிச்சென்று , அலமாரியில் எல்லாம் கலைத்து , மற்றொரு சட்டையை எடுத்து , பொத்தான்களை மாற்றி மாற்றி ஒரு வழியாக சரியாக போட்டு கொண்டு , அழும் மகளை காரில் போட்டு,, அலுவலகம் போகும் வழியில் பள்ளியில் விட்டான் .. அபி திரும்பி கூட பார்க்காமல் .... இவனும் வற்றாத கோபத்தோடு , 50 இல் செல்லும் வேக பாதுகாப்பு பகுதியில் 100 இல் செல்ல , போக்குவரத்து காவல் '' அதி வேகம் '' என்று தண்டம் வைத்தது.... அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்து விட்ட அலுவலகத்தில் இறங்கியவுடன் பார்கிறான் ... அலுவலக ''சுருக்'' பெட்டியும் , மடி கணினியும் வீட்டிலேயே மறந்து வந்துள்ளான் ... மோசம் .... தொடர்ச்சியாகி ---மிக மோசத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது ...
மோசங்களுக்கும் பின் தொடர்ந்த மோசங்களுக்கும் என்ன காரணம் ?
அ ... சிந்திய காப்பி .
ஆ ... தவறுதலாக தட்டிவிட்ட அபி .
இ ... ராம் ..ராமின் எதிர் வினை
எல்லோர்க்கும் தெரிந்த பதில் தான் '' இ ''
காப்பி தவற விடப்பட்ட சம்பவம் ராமின் கட்டுபாட்டில் இல்லை .
அப்படி இருந்தாலும், அன்று அவன் மீது திணிக்கப்பட்ட பிரச்சினையின்
தாக்கம் 10 சதம் தான் .. ஆனால் அப்பிரச்சினையின் தீர்வும் ,
பின்விளைவுகளுமான 90 சதம் முழுக்க முழுக்க அவன்
கட்டுப்பாட்டில் ,ஆளுமையில் தான் இருந்தது
என்ன செய்திருக்கலாம்? ....அதே சூழ்நிலையில்......
காப்பி தவறுதலாக தட்டிவிடப்படுகிறது ,அபி குரலெடுத்து
அழ ஆரம்பிக்கிறாள் .. ராம் அரை வினாடிக்குள் சுதாரித்து ,
தன் மகளை '' செல்லம் , ஒண்ணும் இல்லடா ... கூல்..... கூல் ,
அப்பா பார்த்துக்கிறேன் , நீ சாப்பிட்டிட்டு,, ஸ்கூல் க்கு
கெட் ரெடி ... கெட் ரெடி ... '' எந்த நேர இழப்பும் இல்லை .
நிதானமாக , சட்டையை மாற்றிகொள்கிறான்... '' சுருக்'' பெட்டியும் , மடிக் கணினியும் எடுத்து கொண்டு ஜன்னல் வழியாக பார்க்கிறான் .
அபி மகிழ்ச்சியாக, தன் பள்ளி தோழிகளை பார்க்கும் உற்சாகத்தில் செல்கிறாள் ...எதேச்சையாக திரும்பும் அவள் , அப்பாவை பார்க்கிறாள்
அழகான கையசைப்பு .. இவனும் பூரிப்பாக மகளுக்கு, பறக்கும் பாச முத்தம் கொடுக்கிறான் ... கார் எடுக்கிறான் , இனிமையான இசையோடு
10 நிமிடம் முன்னமே அலுவலகம் வந்து சேர்கிறான் ... அலுவலகத்தில் சுகம் ... சுகம்... எல்லாம் சுகம் ..
ஒரே சம்பவம் , இரு வேறு அணுகு முறைகள்,
இரு வேறு முடிவுகள் ..
ஒன்று சிக்கலான மோசமான முடிவு,
மற்றொன்று சுலபமான சுகமான முடிவு.
எல்லா பிரச்சினைகளையும் 90 - 10 விதியில் புடம் போட்டு சுக தீர்வு காணலாம் ... சாதிப்போம்..
நம் கட்டுப்பாட்டில் இல்லா 10 சதம் வாழ்க்கை பிரச்சினைகள் , 90 சதம் நம் கட்டுப்பாட்டிலே உள்ள வாழ்க்கை தீர்வுகள்....
திறமையை வளர்த்து கொள்வோம் . அதற்கு பெயர் வேண்டுமென்றால் ''அதிர்ஷ்டம் '' என்று வைத்து கொள்ளலாம் ....
13 comments:
சார் தொடர்ந்து எழுதுங்க...
வாழ்த்துகள் நண்பரே .நிறைய எழுதுங்கள்.நானும் ஒமன் சலாலாவில் இருக்கிறேன்.
அண்ணாமலையார் .... இவ்வளவு பரபரப்பான சுழலிலும் ( உங்கள் 104 ++ தொடர்வோர்கள் ... பின்னூட்டங்கள் ) என் 1+ வலைப்பூவிற்கு வந்து ஊக்களித்தமைக்கு நன்றி ..
மீண்டும் மீண்டும் வருக
மின்னல் .... நன்றி வந்து வாழ்த்தியமைக்கு .. இன்று தான் உங்கள் பதிவுகளை பார்வையிட்டேன்
அழகான படங்களோடு அருமையாக பதிக்கிறீர்கள்.... சலாலா பதிவுகள் ''ஊ .. லலா.. ல'' போடவைக்கின்றன ..
நான் உங்கள் அருகில் தான் உள்ளேன் 600 கீ. மி வடக்கே ''முகைஸ்நா'' என்ற முழு பாலைவனம் .
உண்மையில் நீங்கள் இருக்குமிடம் தான் '' சோலை'' .. நீங்களும் தொடருங்கள் .. தொடர்ந்து வலையில் சந்திப்போம் .. வாய்ப்பு கூடினால் நேரிலும் .
இதே கருத்து திருமதி கற்பகவள்ளி மங்கையர் உலகம் மூலம் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலைஇவரது சொற்பொழிவுக்காகக் காத்திருப்பேன்.நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
வருகைக்கு நன்றி கோமா... அந்த நிகழ்ச்சியை அவசியம் பார்க்கிறேன் ..
காலை 7 மணிக்குத் துவங்கும் மங்கையர் உலகம்
சமையல்,மருத்துவம் என்று முடிந்து 7.20 ல் இவரது நிகழ்ச்சி...திங்கள் மட்டும்
அருமையான சொற்பொழிவாளர்.
வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் தான், ரசிக்க வைக்கிறது - பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. நல்லா தொகுத்து எழுதி இருக்கீங்க. பதிவு அருமை.
நன்றி சித்ரா ... வருகையோடு உங்கள் ஊக்கமளிப்புக்கும் .
90/10 நீங்களும் போட்டிருக்கீங்க.என்னதும் மெயில் மேட்டர்தான்.நல்ல விஷயத்தை எத்தனை பேர் சொன்னாலும் நல்லதுதானே?
பாலோயர்ஸ் விட்ஜெட் சேருங்க.நிறைய பேர் படிப்பாங்க.
கண்மணி அவர்களுக்கு நன்றி ... நீங்கள் சொல்வது சரி ..ஒவ்வொன்றாக வலைப்பூவை சீர் செய்யவேண்டும்.
மீண்டும் நன்றியும் வாழ்த்தும் .
90 சதம் நம் கட்டுபாட்டில் உள்ளது.நன்று பத்மனாபன்
வருகைக்கு மிக்க நன்றி சண்முகவேல்..
Post a Comment