Monday, November 29, 2010

விடுப்பில்....வீட்டில்.....

கோவையில்  குடியிருந்த பொழுது பக்கத்து வீட்டு ஆறு வயது குட்டிப்பெண் யாழினி, எங்களிடம் ஒரு நாள் தன் மழலையில் ஏற்ற இறக்கமாக `` எங்க வீட்டுல எங்க அப்பா, அம்மா என்ன்ன சொல்றாங்களோ  அதை அப்ப்ப்படியே கேட்பாங்க...   ``அங்கிள்  எப்படின்னு தெரியல ```  இதை கேட்டவுடன் வெடிச்சிரிப்பு சிரித்தோம்.... இப்போழுது அவள் கணிப்பொறியாளினியாக சியாட்டில் செல்லவோ, கைதேர்ந்த மருத்துவராக மியாட்டிலில் பணி புரியவோ படித்துக்கொண்டிருப்பாள்...

அன்று அவள் சொன்னதை,சென்னையில் இந்த விடுப்பில் அப்படியே (இரண்டு முன்று `ப்` சேர்த்தே )கடைபிடித்தேன் .... காலையில் சுப்ரபாதம்  ஆரம்பித்து இரவு சூப்பர் சிங்கர் வரை  தங்கமணி சொல்வது தான் எல்லாம்.....

விஜய்யில் பக்தி பாடல்களோடு ஆரம்பிக்கும் கூடவே பக்தி சொற்பொழிவுகள் , அப்புறம் கலைஞரில் ரேவதி சங்கரன் அவர்களின்  வாழ்க வளமுடன் கேட்டு, மராத்தி சேனலில் மஹாலட்சுமி ஆரத்தி, சாய்நாதரின் ஆரத்தி , எதாவது கன்னட சேனலில் மந்திராலாய மஹானின் அபிஷேகம்  முடித்தால் அப்புறம் நேராக இரவு தான் விஜய்யில் சூப்பர் சிங்கருக்கு தொலைக்காட்சி அனுமதி..  பாட்டோடு பாட்டாக தொகுப்பாளினி திவ்யாவை ஜொள்ளிக்கொள்ள இலவச அனுமதி..அந்த தருணங்களில் என்னிடமுள்ள அசட்டுத்தனத்தை ரசிப்பதற்கு தங்கமணிக்கு அவ்வளவு அலாதி... 

மிகவும் ரசித்தவை இரண்டு .


செல்வி வர்ஷா புவனேஷ்வரியின் ``வள்ளி கல்யானம்`` பக்தி சொற்பொழிவு... 7 வயதுக்குள் தான் இருக்கும்.. மழலை மாறத தமிழில் ராகத்தோடு பாடி,  வள்ளியையும்  வேடமிட்ட முருகனையும் கண் முன் நிறுத்தினார் ... இடையிடையே மழலையில் வெளிப்பட்ட நகைச்சுவையும் இனித்தது... அதில் ஒன்றிரண்டு
         
என்ன தான் பிள்ளைகள் இருந்தாலும் , மாப்பிள்ளைன்னு கூப்பிட ஒருத்தர் வேணுமில்லையா ..மாப்பிளே ,மாப்பிளே சும்மா கூப்பிட்டா மாப்பிள்ளை  ஆயிடுவாரா ,பொண்ணை க்கொடுத்தா தானே மாப்பிள்ளை ....

விட்டுக்கு வந்தவர்களை வாங்க  வாங்கன்னு கூப்பிடனும்  அதான் வாசப்படி தாண்டி  வீட்டுக்குள்ள வந்துட்டாரே உள்ள வரத்தானே போறாருன்னு கூப்பிடாமா இருக்கக்கூடாது.

சில பாடல்களில்,அப்படியே அருணா சாய்ராம் அவர்களின் பாட்டும் சாயலும் அழகாக வருகிறது...கிடைத்த ஒரு தொகுப்பு கிழே...




அதே விஜய்யில் பக்தி பரவசமாக பிரம்மம் ஒக்கட்டே எனும் தெலுங்கு பக்தி பாடல், அர்த்தம் ஆரம்பத்தில் அவ்வளவாக புரியாவிட்டாலும் ரொம்பவே கவர்ந்தது.. தாள லயத்தில் மனதில் தெய்வீக ஆட்டம் போட வைத்தது.உடனே வலையிலிருந்து இறக்கி, மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது.. அப்பாடலின் அர்த்தம் தெரிந்தால் நன்றாக இருக்குமே என கூகிளாண்டவரிடம் முறையிட, அவரிடம் ஆங்கிலம் தான் கிட்டியது.யாராவது தமிழ்ப்படுத்தி தந்தால் நன்றாக இருக்குமே என தங்கமணி ஆசைப்பட ,`சுருக்`கமாக மொழிபெயர்த்தேன்.

பிரம்மம் ஒன்றுதான் பரபிரம்மம் ஒன்றுதான்....
உயர்வு தாழ்வு  எனும் ஏற்றத்தாழ்வே இல்லை ..இறைவன் குடியிருக்கும் உயிர்களனைத்திற்கும் உயிர் உணர்வு ஒன்றே.........
அரசனுக்கும் ஆண்டிக்கும்  தூக்கம் ஒன்றே தான்......
அறிவில் மேலோனோ கீழோனோ  மிதிக்கும் பூமி ஒன்றே தான்.....
பூச்சியோ மிருகமோ, புலனின்பம் என்பது ஒன்று தான்......
ஏழையோ, செல்வந்தனோ  இரவும் பகலும் ஒரே மாதிரி தான்....
ஒருவனுக்கு ஒருவன் நாவில் சுவை மாறினாலும் உணவு ஒன்றே தான்....
நாற்றமோ,  நறுமணமோ அதை எடுத்து வரும் காற்று ஒன்று தான்....
யானையோ நாயோ அனைத்திற்கும்  சூர்ய ஒளி ஒன்றுதான்...
நன்மை வழங்குவதும் தீமை ஒழிப்பதும்  வேங்கடவனே........
பிரம்மம் ஒன்றுதான் பரபிரம்மம் ஒன்றுதான்......


---------------------------------------------------------------------------------------------------------
அடுத்து இனிய நண்பர் ஆர்.வி.எஸ் அவர்களோடு அலைபேசியில் உரையாட வாய்ப்பு கிடைத்ததற்கு வேங்கடவனுக்கும் வலைபகவானுக்கும் நன்றி...மனிதர் எழுத்தோட்டத்தை போலவே பேச்சோட்டமும்..கிடைத்த கொஞ்ச நேரத்தில் நீண்ட நாள் பழக்கம்போல் வெகு எதார்த்தமாக பேசினார் ..தஞ்சைத்தமிழ் தாண்டவமாடியது... நேரில் பார்க்க வண்டி எடுக்கும்பொழுது அடைமழை தட்டி எடுத்துவிட்டது.... சென்னையில் பெய்யும் மழையை பார்த்தால் மக்கள் (அ)நியாயத்திற்கு திருந்தி விட்டது போல் தெரிகிறது.... ஆமாம் தப்புக்களை எல்லாம் டெல்லிக்கு கொண்டுபோய்ட்டதா பக்கத்து மாமா அரசியல் பேசுகிறார்....

---------------------------------------------------------------------------------------------------------

 என்னமோ தெரியலிங்க எங்க தங்கமணிக்கு ப்ளாக்குன்னா வெகு அலர்ஜியா இருக்கு...நானும் சொல்லி ப்பார்த்துட்டேன் , என்னோட ப்ளாக்குகளை விட்டுரும்மா...நல்ல கருத்தா எழுதறவங்க இருக்காங்க , கதை எழுதறவங்க இருக்காங்க...நகைச்சுவை எழுதறவங்க இருக்காங்க ....இதோ பார்ன்னு மெளஸ் எடுக்கறதுக்குள்ள `அடுப்புல பால்` ன்னு ஒரே ஒட்டம் ஒடி எஸ் ஆகிடறாங்க.... 

சக ப்ளாக்கர்களே ..உங்க துணைவ / துணைவியரும் இப்படித்தானோ......... 


46 comments:

எல் கே said...

விடுமுறை முடிஞ்சிடுச்சா ??

பத்மநாபன் said...

முடிஞ்சு திரும்பி பத்து நாள் ஆச்சு எல்.கே. அது தான் அனுபவங்களை மெதுவா அசை போட்டேன்...உங்களுக்கும் அந்த சொற்பொழிவும் , பாட்டும் பிடிக்கும் கேட்டிருப்பிங்க...

அப்பாதுரை said...

ஏழு வயசா இந்தப் பிள்ளைக்கு - ஆச்சரியம், அபாரம்! கூட இருக்குறவங்க அப்பப்ப சிரிச்சிருக்கலாம். கூட்டத்தில் சாருகாச தாடிக்காரர் ரொம்ப சீரியசா இருக்கிறார் - செட் அலங்காரத்தைப் பாத்து பயந்துட்டாரோ? (ஏன் இப்படி கோர அலங்காரம் தெரியவில்லை)

பிரம்மம் ஒகட்டே பாட்டு வரவில்லையே? பாட்டைப் படிச்சதும் கேக்கத் தோணுது. கொஞ்ச நேரம் பொறுத்து மறுபடி க்ளிக்கிப் பாக்குறேன். தமிழ்நாட்டுல மராத்தி சேனலா, வெளியூர்லயா?

அது சரி, யாழினி அன்னிக்கு சொன்னதை நீங்க இன்னிக்கு செய்றீங்களா? பரவாயில்லியே, டக்குனு புரிஞ்சிட்டிருக்கீங்களே..? (அப்டீனு வூட்ல சொல்வாங்க பாபு..).

யாழினி - இப்ப தான் கேள்விப்படுறேன், என்ன அருமையான பெயர்! (பெயர் சூட்டப்பட்ட குழந்தைகளுக்குப் பிடிக்குமா தெரியாது)

பத்மநாபன் said...

ஆமாங்க வர்ஷா வெகு ஆச்சர்யம்..கூட இருக்கறவங்களுக்கு குழந்தை நல்ல படியா பேசி முடிக்கணுமேங்கிற டென்ஷன் போல...
சாருகாசரையும் ஒரு இடத்தில சிரிக்க வச்சுருச்சு குட்டிப்பொண்ணு..முழுத்தொகுப்பில் இருக்கலாம் ..

பாட்டு இருக்குங்க .தட்டி கேட்டு பாருங்க..பெரிய தத்துவத்தை எளிமையா ஆடி பாடி தெரிஞ்சுக்கிற மாதிரி இசை அமைச்சிருக்காங்க....

நம்ம ஊர்ல செட்டப் பாக்ஸ் பணம் கட்ட கட்ட சேனல் காட்டுகிறார்கள்.

ஆமாங்க காலம் போன பின்னாடி ஞானம்..

யாழினி , குழலி எல்லாம் ஒத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க..யாழ், குழல் ன்னு சுருக்கவும் அனுமதிக்கிறாங்க...

ஆனா டிவியாயினிகள் தான் சிரமப்படுகிறார்கள்..யால் லிருந்து யாள் அளவுக்குத்தான் நெடும் பயிற்சிக்கு பின் வரமுடிகிறது..

RVS said...

வீட்டுக்கு அடங்கிய பிள்ளையாய் இருந்தீங்கன்னு எவ்வளவு மரியாதையா சொல்லியிருக்கீங்க.. உங்க நாசூக்கு யாருக்கு வரும்? வார்த்தை வித்தகர் ஆயிற்றே நீங்கள்.

அடுத்தமுறை எப்படியும் நீங்கள் வரவில்லை என்றாலும் உங்கள் வீடு தேடி வந்து கதவிடித்து பார்த்துவிட்டு போகிறேன். அந்தச் சின்னப் பெண் கச்சேரி நானும் கேட்டேன். அற்புதம். சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பிய குழந்தை அது.

நீங்கள் வந்த அதிர்ஷ்டம் சென்னையில் வானத்தை பிய்த்துக்கொண்டு மழை கொட்டியது. இப்போது தஞ்சாவூர் ஏரியாவில் தான் பொழிகிறது வானம். நாங்க இருக்குற இடத்தில் மழையா? வருணனுக்கு அவ்வளவு தெகிரியமா?

எல்லா மனைவிகளும் ( நான் சொல்வது பொதுப்படையான வார்த்தை!! கவனிக்க பொதுப்படையான! இதைப் படித்துவிட்டு எனக்கு எவ்ளோ மனைவி என்று கேட்கக்கூடாது) இப்படித்தான். எல்லோருக்கும் "ப்ளாகோபோஃபியா ". "என்னத்த தான் அப்படி எழுதி கிழிக்கிறீங்கலோ.." என்று தோள்பட்டையில் முகத்தை இடித்து நீட்டி முழக்குகிறார்கள். ஒன்றும் செய்வதற்கில்லை. ப்ளாக் தேவன் அவர்களை மன்னிப்பாராக!!!

RVS said...

பிரம்மம் ஒக்கட்டே.. தங்களின் தமிழ் படுத்துதலில் மிளிர்கிறது. சுதா ரகுநாதனின் பிரம்மம் ஒக்கட்டே ஒன்று இருக்கிறது. முடிந்தால் வலை ஏற்றுகிறேன். கேட்டு ரசியுங்கள். ;-)

அப்பாதுரை said...

டிவியில் தமிழே பேச வரவில்லையே யாருக்கும்? கமலகாசன், விஸ்வநாதன் பேட்டிகள் யூட்ல பார்த்தேன் - ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள் அனு, ஹரி போன்றவர்கள். கமலைப் பேட்டி கண்டவர் சாதாரண சொற்களுக்குக் கூட ஆங்கிலம் உபயோகிப்பது ரொம்ப நெருடலாக இருந்தது: "கமல் உங்க டேடி உங்களை பனிஷ் பண்ணுவாங்களா?"

RVS said...

நான் போட்ட ரெண்டு கமெண்டை காணோமே.. காக்கா தூக்கிண்டு போயிடுத்தா...

RVS said...

அப்பாஜி... அதுதான் தொகுப்பாளினிகளின் புது மொழி. தங்க்லீஷ். அப்படி பேசவில்லை என்றால் அது நாட்டுப்புறப் பேச்சு. ஸ்டைலா, மாடர்னா பேசணும்ன்னா தமிலும் இங்கிலீசும் கலந்து மிக்ஸ் பண்ணி பேசணும். அப்பத்தான் அது ஹை லாங்குவேஜ். ஓ.கே ;-)

பத்மநாபன் said...

ஆமாமங்க ஆர்.வி.எஸ் அடங்கிய பிள்ளையா நடிக்கிறது ரொம்ப கஷ்டம் தான் ..எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது..( எல்லாம் ப்ளாக்கோ போபியா இருக்கிற தைரியம் தான் )
அடுத்த முறை கதவு இடியாம பார்த்துக்கிறேன்...
மனைவிகள் சரி.... நம்ம ப்ளாக்கர்களோட கணவர்களும் மனைவியரின் ப்ளாக்கின் திசையில் தலை வைப்பதில்லையாம்..ப்ளாக் தேவன் வீட்டுக்கொருவர் போதும்னு முடிவு பண்ணிட்டாரா?
யாரோ ஒரு நண்பர் சுதா அவர்களின் பிரம்மம் ஒக்கேட்டே யுட்டில் ஏற்றியிருக்கிறார்...அது சரியான கச்சேரி பாடல்.. சுகமாக இருந்தது..
இது வேறுவகை .. ஆடிப் பாடி திருமலை ஏறும் சுகம்....

பத்மநாபன் said...

அப்பாஜி, என் பிரிய நடிகன் கமல்..இப்ப தமிழ் பேச விரும்புவதில்லை ..கவித..கவிதையா கொட்ட ஆரம்பிச்சுட்டாரு..கேட்டிங்களா மன்.. அம்பு ஆர்.வி.எஸ் விட்டிருந்தாரே அவரது பதிவில்..

அதிலும் பதில் கவிதை த்ரிஷாவை பாட வைக்கிறக்குள்ள மனுஷன் படாதா பாடு பட்டிருப்பாரு...முக்காவாசி தேர்த்தீட்டாரு..

எல் கே said...

பிரம்மம் ஒக்கடே என் அலைபேசியில் நான் தினமும் கேட்கும் பாடல்.


அப்புறம் நேத்து விடுபட்ட ஒரு விஷயம். என் மனைவிக்கும் ஒரு ப்ளாக் ஆரமிச்சு கொடுத்தேன். இப்ப என்னை எதுவும் அவங்க கேக்கறது இல்லை

பத்மநாபன் said...

ஆமாங்க எல். கே .. கேட்க ஆரம்பிச்சுட்டா விட முடியாத பாடல் ...

எப்படியோ வீட்டம்மாவை வலைப்பூ உலகத்திற்குள் கொண்டுவந்துட்டிங்க.. படித்துள்ளேன் ... வலைப்பூக்கள் ரசனைகளுக்கு நல்ல தீனி..

அப்பாதுரை said...

கமல் (பட்ட) பாட்டைக் கேட்டேன், ஒண்ணும் புரியலிங்க. (ஆர்வீஎஸ்சை எதுக்குப் பாக்கணும்னு சொன்னதா நினைக்கிறீங்க?).. அவரோட 'விக்ரம் விக்ரம்' நல்லா இருந்ததா தோணும். இந்த மஅ கவிதை ரொம்ப நீளம்.. ஆனாலும் கடைசி வரை கேட்டேன். நமோஸ்துதேயைத் தமிழிலயே சொல்லியிருக்கலாமோ?

பேட்டியில் கமல் தமிழில் பேசுவதும் பேட்டி கண்ட பெண் சில்லி ஆங்கிலத்தில் பேசுவதும் contrast. பேட்டியில் கமலின் உச்சரிப்பையும் சொல் தேர்வையும் மிகவும் ரசித்தேன் - அந்தப் பெண்ணிடம் கமல் நேரா கேட்டிருக்கலாமோ: "ஜில்லு ஜில்லு என்னைக் கொல்லாதே, தமிழ்லயே பேசுமா".

சிவகுமாரன் said...

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் இன்று முதல் திரு. பத்மநாபன் ஜி அவர்கள், " இனிமை விரும்பி இரண்டாம் ரசிகமணி" என்று அழைக்கப்படுவா.....ர். டன்டன்டன்டன்டண்டண்டன் டன் டன் டன்.

பத்மநாபன் said...

புரிஞ்சுதுங்க அப்பாஜி ..மன்னிச்சு விட்ருங்க ஆர்.வி.எஸ்ஸை..தமிழ்வலைப்பூவுலகம் அவரை நம்பித்தான் இருக்கு..

கமல் எதோ புச்சு புச்சா முயற்சி பண்ணுவாரு எங்கள மாதிரி காலகால ரசிகர்களை நம்பி...

நாத்திகர்களுக்கே உரித்தான ஸோ அண்ட் ஸோ கமலுக்கு சற்றுக்கூடவே... வரலட்சுமியும் தெரியும் நமஸ்துதேயும் தெளிவாத்தெரியும் அதை நக்கலடிக்கவும் தெரியும்ன்னு காட்டிக்கொள்வதற்காக..விடுங்க சில சதுரத்துக்குள்ள சிக்கிட்டா வெளிய வரமுடியாது...

அனு பேட்டிதானே.. பொண்ணும் சித்தப்பாவும் பேசறதுன்னு நினைச்சுட்டதால குடும்ப டச்சோட ரசிக்கமுடிஞ்சுது...அனு அதை தாண்ட முயற்சி பண்ணி முடியாம சிரிச்சே சமாளிச்சாங்க ..

பத்மநாபன் said...

நன்றி சிவா ... ரசிகமணி அளவுக்கு பெரிய ரசிகமணியெல்லாம் இல்லை..
ரசனையானவற்றை ரசிக்கும் தகுதியை வளர்த்து வருகிறேன் கவியாளரே..

அப்பாதுரை said...

அப்படியா விஷயம்?
>>பொண்ணும் சித்தப்பாவும்..

கமல் முன்பெல்லாம் சிறப்பாக உடையலங்காரம் செய்து கொள்வார்.. dress sense உள்ளவர் என்று நினைப்பேன்.. இப்போ அசிங்கமாக டிரஸ் செய்து கொள்கிறாரே? (மஅ பாட்டில் கண்றாவி டிரஸ்) ரஜனி கூட பரவாயில்லை போலிருக்கிறது. என்ன ஆச்சு?

பத்மநாபன் said...

ஆமாங்க அனுவோட பாட்டி, கமலின் அம்மா..பாட்டியோடு கடைசிபையனின் குறும்பு களை கேட்பதற்கு பேத்திக்கு சுவாரஸ்யம்..நமக்கு தீபாவளி பொழுதுபோக்கு....

கமல் டிரஸ் சென்ஸ் வாணியோட போயாச்சுன்னு நம்ம தங்கமணி சொல்வாங்க.....

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. வர்ஷா புவனேஸ்வரியின் சொற்பொழிவு நானும் கேட்டேன். இத்தனைச் சிறிய வயதில் அழகிய பேச்சாற்றல். நன்றி. ”ப்ரம்மம் ஒகடே” சுதா ரகுநாதனின் குரலில் கேட்டுப் பாருங்களேன், இன்னும் நன்றாக இருக்கும்...

வெங்கட் நாகராஜ் said...

சுதா ரகுநாதனின் குரலில் இந்த பாடலைக் கேட்க இங்கே செல்லுங்களேன்...

http://www.youtube.com/watch?v=YAbvlFw8mJo

பத்மநாபன் said...

வெங்கட்ஜி ....உங்க சதப்பதிவுக்கு வாழ்த்த வந்து வலைக்கோளாறில் திரும்பி வந்தேன் ...நீங்க முந்திட்டிங்க ..மிக்க நன்றி ...

சுதா அவர்களின் யூட்டி சுட்டிக்கு நன்றி ... கேட்பதற்கு இனிமையாக இருந்தது...

இளங்கோ said...

//சக ப்ளாக்கர்களே ..உங்க துணைவ / துணைவியரும் இப்படித்தானோ....//
எப்படி கண்டுபிடிச்சீங்க ?
:)

பத்மநாபன் said...

வருகைக்கு நன்றி இளங்கோ.... இடிகளின் அனுபவம் ...ஆறுதலுக்கு ஆள் சேர்த்துக்கிட்டேன் .

மோகன்ஜி said...

ஆஹா! மிஸ் பண்ணிட்டேனே இந்தப் பதிவை!அழகாய் அனுபவங்களை சொல்லியிருக்கிறீர்கள்.
"பிரம்மம் ஒகடே" பாடலை ரசம் குன்றாமல் தமிழ்ப் படுத்தியிருக்கிறீர்கள்.
அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகள் கவியின்பமும், பக்தியின் உச்சு வெளிப்பாடாயும் அமைந்தவை.
சிலபாடல்களை வேறொரு சந்தர்ப்பத்தில் அலசுவோம்.
"நானாடி ப்ரதுக்கு நாடகமு" எனும் எளியபாடல் கிடைத்தால் கேட்டுப் பாருங்கள். உங்கள் கோவைத் தெலுங்கை வைத்துக் கொண்டு கூட எளிதில் விளங்கும்!
இப்போது ஒரு பதிவு போட்டிருக்கிறேன்"வீட்டைத் துறந்தேன்" என்று.. பாருங்கள்.. உங்களுக்கு பிடிக்கும்.

பத்மநாபன் said...

மோகன்ஜி , இப்பாடல் அர்த்தம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தவுடன் தெலுங்கு தலைநகரில் இருக்கும் உங்கள் நினைவுதான் வந்தது... ``அண்ணாத்த கிட்ட சொன்னா தெளிவா வார்த்தைக்கு வார்த்தை விளக்கத்தோட தமிழ்படுத்தி கொடுத்துடுவார்``ன்னு சொன்னேன்..நீங்க பிஸியாயிருப்பதாலே, நானே கிடைத்த ஆங்கில மொழியாக்கத்தை வச்சு அடிப்படை சாரம்சத்தை வைத்து தமிழாக்கம் செய்தென்..

அசல் பாட்டின் ரசம் குன்றாமல் இருந்தது என்று நீங்களே சொன்னது மகிழ்வு அளிப்பதாக உள்ளது....
அந்த பாட்டின் ஒலியினிமையில் தம்பதியராக மயங்கி விழுந்தோம்...

உங்கள் பின்னூட்டத்திற்கு முன்பே உங்கள் உருக்கும் பதிவை படித்தி பொல பொலந்தாய்ற்று.....

Aathira mullai said...

அருமையான பதிவு பதமநாபன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் லேசானது பொல உணர்ந்தேன். ஒன்று சிறுமி.. சிறுமியா அவள்.. பெரிய உருமி.. (இடி) கலைமகளின் பூரண அருள் கிடைத்த பெண்ணின் குரலை ரசிக்கச் செய்ததில் தங்களுக்கும் அவளருள் நிறைவக கிடைக்க வாழ்த்துக்கள்..

அடுத்து முழுமுதல் கடவுளை.. பிரம்மம் ஒகட்டே மொழிபெயர்ப்பு அருமை..

பத்மநாபன் said...

நன்றி ஆதிரா... நானும் மனம் லேசான உணர்வில் மழலையின் சொல்மொழியும்.. இனிய இறைஅதிர்வோடு பிரம்ம பாட்டையும் ரசித்ததனால் பகிர்ந்தேன்....

Dubukku said...

அருமையான பகிர்வு
ஆஹா செல்வி வர்ஷாவின் கதாகாலட்சேபம் படு பிரமாதம். பேச்சடைத்துப் போய்விட்டேன். கலக்கல். பகிர்ந்துகொண்டமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி.

பத்மநாபன் said...

டுபுக்காருக்கு மிக்க நன்றி...உங்க ஊர்ல சிக்கிரம் நடு நடுங்கும் குளிர் விடுவதற்கு வாழ்த்துக்கள்..

ஆமாங்க..வர்ஷா குட்டிப்பொண்ணு கலக்கல்.. நடத்திய முழு பதிவு கிடைக்கல ..

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. ”பிரம்மம் ஒக்கட்டே” எனக்கு மிகவும் பிடித்த பாடல். ப்ளாக் ஃபோபியால்லாம் யாருக்கும் கிடையாது. என்னவர் எழுதுவதை பார்த்த பின் தான் நானும் ப்ளாக்கில் எழுதுகிறேன்.

பத்மநாபன் said...

முதல் வருகைக்கு நன்றி கோவை2தில்லி...

அடுத்தவிடுப்பில் ..உங்க வலைப்பூவை வச்சு முயற்சி செய்து பார்க்கிறேன்..விட்டம்மாவிற்கு பிடித்த கோவில்கள் வருவதால் அந்த அலர்ஜி தணியலாம்...

எல் கே said...

அண்ணா, நீங்கள் அப்டேட் வரவில்லை என்று சொல்லி இருந்தீர்கள். unfollow from my blog and then follow back again... if not get solved mail me

பத்மநாபன் said...

நன்றி எல்.கே...வெளிய வந்துட்டு உள்ள போனவுடன் சரியாகிவிட்டது...அப்டேட்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு...

RVS said...

ஜாலிலோ ஜிம்கானாவில் பின் குறிப்பு சேர்த்திருக்கிறேன், படித்து தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்கும். நன்றி பத்துஜி!! ;-)

ரிஷபன் said...

சக ப்ளாக்கர்களே ..உங்க துணைவ / துணைவியரும் இப்படித்தானோ.........

கூப்பிட்டு படிச்சு பார்க்க சொல்லப் போக.. ‘அதெல்லாம் எவ்வளவு சூப்பரா இருக்கு’ன்னு எனக்கு பின்னூட்டம் கிடைச்சுது!

அப்பாதுரை said...

தங்கமணி பிளாக் எழுதறாங்களா?

பத்மநாபன் said...

நன்றி ரிஷபன்...

அது ரிஷபனாவே இருந்தாலும் தப்பிக்க முடியாது போல...

பத்மநாபன் said...

அப்பாஜி...அட நிங்க வேற ..எங்க அதைப்படி இதைப்படின்னு சொல்லிருவேன்னு மெயிலவும் சேட்டுவதற்கும் கூட இப்ப கணினி பக்கம் வருவதில்லை ...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எங்க வீட்டிலேயும் அப்படித் தான்!
உங்களுக்கெல்லாம் ஒரு பக்க இடி தான்..
எனக்கு இரண்டு பக்கமும் இடி!
தப்பா எடுத்துக்காதீங்க!என் பொண்ணுக்கும் ப்ளாக் பிடிக்காது.
திருடன் மாதிரி விடிகாலை இரண்டு மணிக்கு சமயத்தில உட்காருவேன்!
ஹூம்..என் பொழைப்பு அப்ப்டி!

பத்மநாபன் said...

மூவார் ஸார், சக ப்ளாக்கர்ங்கறது சரியாத்தான் இருக்கு.. கள்ளத்தனத்திலயும் அப்படியே ...பகிர்ந்துகிட்டதறக்கு நன்றி

...போன மாதம் ஒரு தடவை இப்படி கள்ள ப்ளாக்கில இருக்கறப்ப ,ஆர்.வி.எஸ் கள்ள ப்ளாக்கிலோ நல்ல ப்ளாக்கிலோ ராத்திரி 1.மணிக்கு ஒரு பதிவு போஸ்ட் பண்ண , நான் உடனே பின்னூட்டம் இட அவர் உணர்ச்சி வசப்பட்டு அர்த்த ராத்திரியில் என்னை போனில் அழைக்க . அழைப்புமணி சத்ததில் தங்கமணி எழுந்து டின்னு கட்டிட்டாங்க....

மோகன்ஜி said...

அட ராமா !? அங்கயும் விஷயம் அப்படித்தானா? வலைல விழுந்துட்டோமேன்னு கவலைல டின்னு கட்டுவாங்க தான். நாமதான் குழந்தை அக்கம்பக்கம் பாத்துட்டு மண்ண தின்கிற மாதிரி சாலாக்கா உலாவணும்.. ஹைய்யோ ஹையோ !

பத்மநாபன் said...

ஆமாங்க மோகன்ஜிசாமி, பாத்து சூதானமா இருக்கவேண்டியிருக்கு... மாத்து வாங்கி மாளமாட்டிங்கிது...

RVS said...

பொம்பளைங்க குளத்துல தண்ணி தூக்கும் போது "நேத்து உன் மாமியார் என்ன சொன்னா... நாத்தனார் இருக்காளே ஒரு சனியன்..."ன்னு பேசறா மாதிரி இப்படி கும்பல் கூடி அங்கலாய்த்துக் கொள்ள வேண்டியதுதான். பாரதி உயிரோடிருந்திருந்தால் ஆண் சுதந்திரம் வேண்டும்... என்று பாடியிருப்பானோ...
மொபைலின் ஊடுருவல் புரிகிறதா... பத்துஜி அவரின் தங்க்ஸிடம் வாங்கி கட்டிக்கொண்டார்... எல்லாம் ஒரு ஆர்வம் தான்...

இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. நான் சொல்லும் டூருக்கு காவி கட்டிக் கொண்டு வந்து விடுங்கள்.. தங்கமணிகள்.. "வேண்டாம்.. நீங்க ப்ளாக் பாருங்க... நான் வாயை தொறக்க மாட்டேன்..." என்று கப்சிப் ஆகிவிடுவார்கள்..

சாய்ராம் கோபாலன் said...

//சக ப்ளாக்கர்களே ..உங்க துணைவ / துணைவியரும் இப்படித்தானோ......... //

Hope you are not joking !!!

பத்மநாபன் said...

வீக்கத்தை வெளிய சொல்லிக்கமுடியுங்களா சாய் ...அப்படி ஜோக்காவே சமாளிக்க வேண்டியது தான் ...

Powered By Blogger