Monday, January 4, 2010

முதல் பதிவு -சுஜாதாவிற்கு சமர்ப்பணம் .

    வலைப்பூக்கள் தொடுப்பவர்களின்  முன்னோடி
                              இணையத்தமிழ் இமயம் 

சுஜாதாவை  பற்றி, எழுத்தாளர் முருகன்,  ஒரு கட்டுரையில் .....(அப்படியே முடியாவிட்டாலும் சாராம்சம் )


'''''நான் இந்த அளவிற்கு கதை ,கட்டுரை, கவிதை எழுதுகின்றேன் என்றால் சுஜாதாவை வாசித்ததனால் தான் .. இதை நான் மட்டுமல்ல தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் 1000 பேர்களாவது, அவர்களது கட்டுரையில் எங்காவது ஒரு இடத்திலாவது மேற்சொன்ன வாசகத்தை ஒட்டியிருப்பார்கள் . ஒட்டவேண்டும் . ஒட்டவில்லை என்றால் அவர்களுக்கு வாத்தியார் பாணியில் சொன்னால் இன்று இரவு சாப்பாடு கிடைக்காது '''
என்று எழுதி இருப்பார் ...எனக்கு ரெண்டு சப்பாத்தியாவது வேண்டும் தூங்குவதற்கு முன் .... எனவே நானும் நன்றிகடனாக , சமர்ப்பணமாக , முதல் பதிவாக என் ''ஆனந்த வாசிப்பில்.........


' கதை, கட்டுரை ,கவிதை , சினிமா, அறிவியல் ,ஆன்மிகம் ...எதுவாகட்டும் அதை படிக்கும் ,பார்க்கும் ரசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது சுஜாதாவின் பணிகளை வாசித்ததினால் கிடைத்தது .... ஹைக்கூவாகட்டும் , சினிமா விமர்சனமாகட்டும் , புத்தகமாகட்டும் , நமக்கு ரசிப்புத்திறன் கூடியது .. சுவாரசியம் அதிகமாகியது.. 


நிறைய இளைநர்கள் இணையத்தில் பதிக்கிறார்கள் . அந்த உந்துதலின் உள் காரணத்தை யோசிக்கிறேன் .. நமக்குள்ளும் நல்ல தமிழ் உள்ளது , நவீனம் உள்ளது , நடை வருகிறது என்ற நம்பிக்கையை யாருக்கு சொல்லிக்கொள்கிறார்களோ இல்லையோ , தனக்கே தனக்கு சொல்ல விரும்புகிறார்கள் . அதை சிறப்பாக செயல் படுத்துகிறார்கள் . எனக்கும் அந்த உந்துதல் பளிச்சென்று வந்து விட்டது ... தமிழ்த்தாயே வணங்குகிறேன் என்று சொன்ன எனது மானசீக எழுத்து ஆசான் சுஜாதாவிற்கு நன்றி கூறி , பார்த்ததை , படித்ததை , ரசித்ததை பகிர்ந்து கொள்கிறேன் .... இனி வரும் பதிவுகளில் .....

2 comments:

goma said...

சுஜாதா கணையாழி ஆசிரியராக இருந்த சமயம் என் கவிதை அந்த பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அவர் வளர்த்த செடி என்று என்னை சொல்லிக் கொள்ளலாமா

பத்மநாபன் said...

@ கோமா....தாராளமாக சொல்லி கொள்ளலாம்... அவர் வளர்த்த, அடையாளம் காட்டிய செடிகள் இன்று பூத்து குலுங்குகின்றன.
அவர் எழுத்தை பார்த்த,படித்த, கற்ற, பெற்ற அனைவரும், தமிழ் கூறும் நல்லுலகத்தில் சிறப்பாகவே இருப்பார்கள்.
அந்த கவிதையை இங்கு பதித்து சிறப்பு செய்யலாம். நன்றி .

Powered By Blogger