கவியரசன் பாரதி இந்த பூமியில் பிறந்த நாள் இன்று.. அந்த சக்திதாசனை, ஞானத்தை , பக்தியை, விடுதலை வேட்கையை, காதலை , யாமறிந்த தமிழில் வற்றாக்கவிகளாய் கொடுத்த கவிப்பேரரசனை மீண்டும் நினைவு பதிவாக்குவதில் மகிழ்வு...
பாரதி பிரபஞ்சத்தோடு கலந்த நாள் நினைவு போற்றி ஒரு பதிவு ஆனந்தமாக வாசிக்கப்பட்டது...
இன்று யுக கவியின் நினைவாக எழுத்தில் சில கவிகளும்,இனிய இசை பாட்டாக மாறிய சில கவிகளும்......
மெய்ப்பொருள்:
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாதிசையிலுமோ ரெல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியம்செய்தருள் நாயகன்
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி.....
சூரியன்
கடலின் மீது கதிர்களை வீசி
கடுகி வான்மிசை எறுதி யையா
படரும் வானோளி இன்பத்தை கண்டு
பாட்டு பாடி மகிழ்வன புட்கள்
உடல் பரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொரு நுண்டுளியும் விழியாகச்
சுடரு நின்றன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே........
தான்
தேடி ச்சோறுநிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடி துண்பமிக வுழன்று – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் –பல
வேடிக்கை மனிதரைப் போலே- நான்
வீழ் வே நென்று நினைத்தாயோ..
இனி பாரதியோடு இசைப் பயணம்...
நித்யஸ்ரீ அவர்கள் பாடிய சின்னஞ்சிறு கிளியே பாடல்..... உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரங்கொட்டுதடீ....
இனி பாரதியோடு இசைப் பயணம்...
நித்யஸ்ரீ அவர்கள் பாடிய சின்னஞ்சிறு கிளியே பாடல்..... உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரங்கொட்டுதடீ....
அடுத்து மஹாநதி ஷோபனாவின் குரலில் தீராத விளையாட்டுப்பிள்ளை..இந்த நிகழ்ச்சியில் முக்கிய எழுத்தாளர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் குறிப்பாக சுஜாதா அவர்களும் ........என்னப்பன் என்னய்யன் என்றால் அதனை எச்சிற்படுத்தி கடித்து கொடுப்பான்..
பாரதியும் தமிழும் யுகம் யுகமாய் இருக்கப்போகிறது..... அதில் பக்கத்து கொஞ்ச காலத்திற்கு நாமும் இருக்கிறோம் ... இருந்திருக்கிறோம் .