வானத்தில் பல வர்ணஜாலம்..
நம்மை படைத்து காப்பவனுக்கு எப்பவுமே தீபாவளிதான் ..
இப்படி வர்ணங்களை பார்த்துக்கொண்டே இருப்பதனாலேயே நொடி பொழுதும் ஓயாம இருக்கிறான் .. விஷயத்துக்கு வருவோம்..........
மேலே நீங்கள் பார்க்கும் உடுமண்டலம் ....அண்டத்தீவு .... கேலக்ஸ்சி ... இப்போதைக்கு NGC 4522 என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ...
நம்ம பம்பரம் சுற்றும் உடுமண்டலத்திற்கு உள்ள அழகான பெயர் பால் வீதி ( இன்னமும் அழகா ஆகாய கங்கை ) என்று சொல்வது மாதிரி இந்த உடுமண்டலத்திற்க்கும் பெயர் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் ( எண் , சொல் கணக்கு ஜோதிடர்கள் முன் வரலாம் ).....
இந்த சுருள் உடு மண்டலம் நமது பால்வீதி மண்டலத்திற்கு மிக (??????) அருகில் இருக்கிறது அதிகமில்லை .. சற்றேறக்குறைய ஆறு கோடி ஒளி ஆண்டுகள் தூரம் தான்....அது அங்கு சும்மா இல்லை ...மணிக்கு ஒரு கோடி கி. மீ வேகத்தில் சுழன்று சுழன்று நகர்ந்து கொண்டே இருக்கிறது.... அந்த சுழலினால் அளவற்ற வாயுக்களும் , தூசிகளும் விசிறி அடிப்பதனால் ஒளிக்கீற்றுக்கள் மிகுந்து நமக்கு வர்ணஜாலமாக இந்த அற்புதமான படகாட்சி ஹப்பிள் விண் தொலைநோக்கி வழியாக கிட்டியது.
இந்த மண்டலத்தில் கவித்துவமாக சிதறும் விண்மீன் கூட்டங்களை , இவ்வருடம் நம் உலக வான் ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் தொலை நோக்கியில் நெருங்குவார்கள் ...... கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தான் .....