என் இனிய வலை நட்பான சொந்தங்களுக்கு ஆனந்த மயமான புத்தாண்டு வாழ்த்துகள் .. புதியதாய் பிறக்கும் வருடத்தின் ஒவ்வொரு நாளும் இனியதாய் இருக்க நல் வாழ்த்துகள் ..
சென்ற ஆண்டில் பல மாதங்கள் வலைப்பக்கமே வர முடியாத அளவில் பணியும் பணி மாற்றங்களும் அமைந்தன ...அரசு பணியில் விடுப்பு எடுத்து அரபு நாடு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்தது......
அரசா? அரபா? ....அரபா?அரசா? என முடிவெடுக்க வேண்டிய நிலையில் முன்னின்ற சாதக பாதகங்களை கூட்டி கழித்து பெருக்கி வகுத்து பார்த்தேன் .. அரசு பணியில் விடுப்பில் இருந்த நாட்களை விட அரபு பணியில் கூடுதல் விடுப்பு எனும் கவர்ச்சியுடன் , தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்ட / பணியமர்த்தப்படும் பகுதிகளிலிருந்து பயணப்பட்டு வருவதை விட சென்னைக்கு ஓமன் நாட்டிலிருந்து விரைவில் வந்து போகலாம் எனும் வசதியும் சேர அரபே என முடிவான முடிவு எடுத்துவிட்டேன் .
கணிசமாக மலை பகுதிகளில் பணிபுரிந்த எனக்கு அப்பணியிலிருந்து விடுபடும் காலமும் மலைபகுதியிலேயே அமைந்தது இனிய நிகழ்வு .. என் வலைப்பூ நண்பர்களுக்காக காடம்பாறை மலைப்பகுதியில் எடுத்த படங்கள் படங்கள் கிழே...
அரசா? அரபா? ....அரபா?அரசா? என முடிவெடுக்க வேண்டிய நிலையில் முன்னின்ற சாதக பாதகங்களை கூட்டி கழித்து பெருக்கி வகுத்து பார்த்தேன் .. அரசு பணியில் விடுப்பில் இருந்த நாட்களை விட அரபு பணியில் கூடுதல் விடுப்பு எனும் கவர்ச்சியுடன் , தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்ட / பணியமர்த்தப்படும் பகுதிகளிலிரு
கணிசமாக மலை பகுதிகளில் பணிபுரிந்த எனக்கு அப்பணியிலிருந்து விடுபடும் காலமும் மலைபகுதியிலேயே அமைந்தது இனிய நிகழ்வு .. என் வலைப்பூ நண்பர்களுக்காக காடம்பாறை மலைப்பகுதியில் எடுத்த படங்கள் படங்கள் கிழே...
இவ்வாண்டு இனியதாய் பிறக்கிறது ... பாரதியின் பாடலோடு வரவேற்போம் '''பொழுது புலர்ந்தது '' ஐந்து நிமிடம் ஒதுக்கி கேட்டுபாருங்கள் இப்பாடலினால் நிச்சயம் புத்துணர்வு பெறுவீர்கள் ...
அண்ணன் அக்கா தம்பி தங்கையரே .. வரும் வருடமாவது வலைப்பூவிற்கு அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு கிடைக்க விழைகிறேன்.. ....மீண்டும் நல்வாழ்த்துகள் ...