Monday, February 27, 2012

வாத்தியாருக்கு வந்தனம் ..

முதலில்  வாத்தியாரின்  ஒரு அருமையான  ஆல்பம்…. 




ஆல்பம் படங்கள்...ஆனந்தவிகடன்....ஆனந்தவாசிப்பின் நன்றி....

நம்ம வாத்தியார் பற்றி  ஒரு அருமையான கட்டுரை …
    இது புதிய தலைமுறை தீபாவளி மலரில் வந்த மனுஷ்யபுத்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை…..  தாம்பரத்தில்  வால்போஸ்ட் பார்த்தவுடன் வாங்கினேன் … படித்தவுடன்  வண்ண மென்நகல் எடுத்து வாத்தியாரின் எனக்கு தெரிந்த வாசக நட்பு வட்டங்களுக்கு மின்னஞ்சலினேன்… இப்பொழுது வலைப்பூ வட்டத்திற்காக….




 புதிய தலைமுறை இதழுக்கும், இக்கட்டுரையாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் நன்றி...


 இந்த வருடம் …புது வாசிப்பும் மறு வாசிப்புமாக பத்து புத்தகங்கள்,.வீட்டு அலமாரியிலிருந்தும் ஹிக்கிம் அலமாரியிலிருந்தும் இறங்கி  என்னுடன் கூடவே பயணம் செய்தன….உங்களோடும் பயணித்திருக்கும்….. அந்த பத்து புத்தகங்கள்…..பத்தில் பெரும்பாலனவை வலைப்பூ நட்புகள்..நினைவுபடுத்த எடுத்து படித்தவை….
                                                                                           வாரம் ஒரு பாசுரம்…..
             அவரே சொன்ன மாதிரி, சில பாசுரங்களை அடையாளம் காட்டும் பொழுது பல பாசுரங்களை தேடி படிக்கவைக்கும் …இந்த வருடம் மார்கழியில் பயணித்தது,, பாடல்..எளிதாக அதன் பொருள், விருத்தமென்றால் விருத்தம் வெண்பாவென்றால் வெண்பா எனப் பாடல்களை ஆழ்வார்கள் அமைத்தவிதம் பற்றிய சிறுகுறிப்பு என அமர்க்களப்படுத்தியிருப்பார்….. நாலாயிரத்திற்கும் இப்படி விளக்கம் எழுதி படிக்கவேண்டும் எனும் பேராசையில் நானும்  நண்பர் சந்திரமெளீஸ்வரன் அவர்களோடு சேர்ந்துகொள்கிறேன்….
இதில் ஒரு பாடல்..... இப்பாடல் இனிய நண்பர் அப்பாதுரைக்கு டெடிகெட்
(காரணத்தை பின்னூட்டத்தில் வைத்துக்கொள்ளலாம்)
அன்றே, நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்,
இன்றே, நாம் காணாது இருப்பதுவும்-- என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சு என்னும்
உட்கண்ணால் காணும் உணர்ந்து
                           இரத்தம் ஒரே நிறம்....
முன்னுரைக்காக படிக்க ஆரம்பித்து முழுக்க மீண்டும் படித்தேன்...என்பதுகளில் சர்ச்சையை கிளப்பிய இதன் முன் கதை ....அதன் பின் தலைப்பு மாறி சிறப்பாக வலம் வந்தது.. .இக்கதை அன்புக்குரிய பதிவர் ரத்தினவேல் அவர்களின் வலைப்பக்க தலைப்பை படித்தவுடன்  நினைவுக்கு வந்த கதை,,,,எம்லி...ஆஷ்லி..இவர்களுடன் முத்துக்குமரன் ,பூஞ்சோலை..
                        விபரீத கோட்பாடு..
   என்னுடைய சமிபத்திய காடம்பாறை நாட்களில் படித்தது.... பொள்ளாச்சியிலிருந்து காடம்பாறை செல்ல முன்று மணி நேரம்..ஆனால் பேருந்திற்க்கு நான்கு மணி நேரம் காத்திருக்கவேண்டும் (  வரு....ம் வராது )..காத்திருப்பை கதை எளிதாக்கியது... இக்கதை அப்பாதுரை அவர்களால் சுட்டி காட்டப்பட்டது... 
                       பதினாலு நாட்கள்.... 
                 எங்கள் ப்ளாக் ‘’ ஸ்ரீ’’ , வாத்தியார் கதைகளை தன்னுடைய நினைவகத்திலே ... ’’அந்த கதை மாலைமதியில் படித்தது’’ இது குமுதத்தில் வந்தது.. அது விகடனில் வந்தது என  அழகாக அடுக்கி வைத்திருக்கிறார். இந்திய -பாக் போர்பற்றி சுஜாதா எழுதியிருக்கிறாரே என அப்பாதுரை ஒரு பின்னூட்டத்தில் கேட்க உடனே பதினாலு நாட்கள் என ஸ்ரீ அடுத்த பின்னூட்டத்தில் சொல்ல , விமான சாகசங்கள் நிறைந்த இந்த கதையை மீண்டும் படிக்க ஆவல் கூடியது,, இக்கதையின் தாக்கம் வாத்தியார் வசனம் எழுதிய மணிரத்னத்தின் ’’ரோஜா’’ படத்தில் நிறைய இருக்கும்.
                             ஜே.கே
   வாத்தியாரின் ரசிகன் என இரட்டை விசிலடித்து சொல்லும் என் இனிய நண்பர் ஆர்.வி.எஸ் ஒரு அழகான கதையை எழுதிவிட்டு... ஜே.கே எனும் வாத்தியார் கதைதான் அந்த கதையை எழுத வைத்ததாக சொல்லி, உசுப்பி எனக்கு இக்கதையை நினைவு படுத்தினார். 1971ல் எழுதிய கற்பனை அதுபோல் சம்பவம் 1991ல் நம் நாட்டில் நடக்க, முழுக்க முழுக்க கற்பனை கதை எழுதும் சாத்தியமின்மை பற்றி வாத்தியார் பின் அட்டை குறிப்பு கொடுத்திருப்பார்.


                          எப்போதும் பெண்..
   தென்றல் மாநகரிலிருந்து, இப்பொழுது தலைநகரில் இருக்கும் சகோ. ஆதிவெங்கட் சிறப்பாக பகிர்ந்த இக்கதை. எப்போதும் பெண் ..இதில் வாத்தியார் கதையாளராக மட்டுமில்லாமல்,பெண்ணிற்கு பலதரப்பட்ட சுழல்களில் நிலைகளில் எற்படும் விளைவுகளை கதைக்குள் கொண்டுவந்த மனோதத்துவ சிந்தனையாளாராக ஒவ்வொரு பக்கத்திலும் தெரிவார். 
                          ஸ்ரீரங்கத்துகதைகள்..
               நமது கவிப்பதிவர் ரிஷபன் அவர்களின் சில கதைகளை படித்தவுடன் ஸ்ரீரங்கம் நினைவுக்கு வர கூடவே ஸ்ரீரங்கத்துகதைகளும் நினைவுக்கு வரும் ..அவ்வப்பொழுது எடுத்துப் படித்து சிரிக்கலாம் பால்யத்திற்கு போய் வரலாம்.. அதில் உச்சகட்ட சிரிப்புக் கதை  எறக்குறைய ஜீனியஸ்....விழுந்து விழுந்து சிரிக்கலாம் .... மாஞ்சு படித்து நெஞ்சுருகலாம்......
                    திசைகண்டேன் வான் கண்டேன்… 
              தமிழில் அறிவியல் புனை கதைக்கு அருமையான உதாரணம் திசைகண்டேன் வான் கண்டேன்.    இக்கதையிலிருந்து  நிறைய விஷயங்கள் ’’எந்திரன் ‘’ படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும்.. கதையையே திரைக்கதையாக எழுதும் வித்தை வாத்தியாருக்கே உரித்தானது... மகத்தான கற்பனை என்று சொன்னாலும்...அடுத்த தடவை கொடைக்கானல் போகும்பொழுது சுடலை மாடன் கோவிலுக்கு போய் ஆண்ட்ரமீடா கேலக்சியிலிருந்து வந்து இங்கேயே தங்கிவிட்ட  உபகுப்தரையும் பேச்சிமுத்துவையும் பார்த்தே ஆக வேண்டும்.....


                          கண்ணீரில்லாமல்…
              ஒரு சின்ன தொகுப்பு .... அழகான ஒரு பாடப்புத்தகம் .. யாப்பு பற்றி ஒரு நீண்ட நெடும் விளக்கம் .. கொஞ்சம் கூட தொய்வில்லாமல் தமிழ் இலக்கணம்... நேர் நிறை என அசைகளை இசையாக மீட்டிருப்பார்.. கூடவே இசை வகைகளையும் எடுத்திசைத்திருப்பார்... கர்னாடக சங்கிதத்தில் பாடல்கள் இனிமையாக இருந்தாலும் முழுமையாக ரசிக்கும் இசையறிவு இல்லையே எனும் ஏக்கத்தை போக்கும் இசைப்பாடம்... இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது நினைவுக்கு வந்தவர் இனிய இயற்பியல் பதிவர் சமுத்ரா. அவருக்கு இப்பொழுது இயல்பாக வரும் வாத்தியார் பாணி எழுத்து அவ்வளவு எளிதாக வந்துவிட்டதாக நினைக்கவில்லை..வாத்தியார் அறிவுரைத்த மாதிரி.சமுத்ரா நிறைய படித்துக்கொண்டிருக்கிறார் , சிந்திக்கிறார்.. அந்த உழைப்போடு சலிக்காமல் எழுதவும் செய்கிறார் ..இந்த சந்தர்ப்பத்தில் சமுத்ரா மேன் மேலும் வளர வாழ்த்துவதில் மகிழ்ச்சி...
                       இன்னும் சில சிந்தனைகள்….
   தமிழ், இணையத்தில் இப்பொழுது நிறைய விளையாடுகிறது.... பல  வருடங்களுக்கு முன்னமே மின்னம்பலம் எனும் இணைய இதழ் நடத்தி அதில் பல சுவாரசியக் கட்டுரைகளை தட்டியிருக்கிறார் ... அதன் தொகுப்புதான் இந்த இ.சி.சி புத்தகம்... அதில்படித்தும் சிரித்தும் மகிழ நிறைய சுவாரசியங்கள்.. ’’க்ளுக்’ என்று உடனடியாக சிரிப்பு வரும் அவரது சின்ன வயது ப்ளாக் அனுபவக் கட்டுரையின் ஒரு பகுதியை வெட்டி ஒட்டியிருக்கிறேன் கிழே...
   
  வருகைக்கு நன்றி... இந்நாளில் நீங்களும் வாத்தியாரின் கதைகளை / எழுத்துக்களை பகிரலாம்

Powered By Blogger